Pages

Showing posts with label meet. Show all posts
Showing posts with label meet. Show all posts

Tuesday, May 4, 2010

துபாயில் ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம்



போன திங்கள் கிழமை தான் ஹூஸைனம்மா கூப்பிட்டு ஸாதிகா அக்கா துபாய் வந்திருப்பதாக சொன்னாங்க. எல்லாரையும் சந்திக்க ஆவலா இருக்கறதா சொன்னாங்க. வியாழன் மீட் பண்ணலாம்ன்னு ஒரு பேச்சு இருக்கறதா சொன்னாங்க.  நான் ப்ளாகுலகத்துக்கு புதுசு. எனக்கு இங்கே யாரையும் தெரியாதே. அதுனால எல்லாரையும் சந்திச்சு பரிச்சயப்பட்டுக்கலாம்ன்னு நினைச்சேன்.

ஆனா பாருங்க ரங்குவுக்கு ஏதோ மீட் அன்னிக்கி. ஸோ, சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவார்ன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு, நான் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். ஹூஸைன்னம்மா ரொம்ப பெருந்தன்மையா பிக்கப் பண்ணி ஷார்ஜாவில ட்ராப் பண்றேன்னு சொன்னாங்க. சரி பார்க்கலாம்ன்னு சொல்லி இருந்தேன்.அதுக்குள்ளே ரெண்டு மூணு கெஸ்டு வராப்ல எல்லாம் சொல்லி இருந்தாங்க. அப்படியே வேலையில மூழ்கிட்டேன். புதன் அன்னிக்கு ரங்கு கிட்டே விஷயத்தை சொன்னப்போ, துபாய் தானே? கூட்டிண்டு போறேன்னு சொல்லிட்டார். எனக்கு ஒரே குஷி.

புதன் அன்னிக்கு வல்லிம்மா ஜிங்குன்னு துபாய் வந்துட்டாங்க. அவங்க கிட்டே பேசினப்போ உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே தித்திப்பா இருந்தது. அழகா அன்பா அவங்க பேச்சு ரொம்ப ரிஃப்ரெஷிங்கா இருந்தது. எப்[படியும் இவங்களையும் இந்த மீட்ல சேர்த்துக்கணும்ன்னு ஹூஸைனம்மா கிட்டே தெரியப்படுத்தினேன். உடனே எல்லாரும் மெயில் மூலமா கோஆர்டினேட் செஞ்சு, பேசி, டேட், டைம், லொக்கேஷன் எல்லாம் ஃபைனலைஸ் பண்ணி ஹூஸைனம்மா தெரிவிச்சாங்க. நாங்களே வல்லிம்மாவை பிக்கப் பண்ணி மீட்டிங்குக்கு அப்புறமா ட்ராப் பண்றதா ஏற்பாடு. 7.30 ஆகும்ன்னு சொல்லி இருந்தேன்.

முதன் முறையா ப்ளாக் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் சில இணைய தோழிகளை சந்திக்கப்போறோம்ன்னு எனக்கு ரொம்ப குதூகலமா இருந்தது. இல்லையோ பின்னே? இங்கே வந்ததுக்கப்புறம் எனக்குன்னு இருக்கறது ஒரு சின்ன வட்டம் தானே. அதை விரிவு படுத்திய ஹூஸைன்னம்மாவுக்கு பல நன்றிகள்.

வியாழக்கிழமை சாயந்திரம் எப்போ வரும்ன்னு ஒரே ஆவலா இருந்தது. ப்ளாக்கர்ஸ் மீட்டுக்கப்புறமா நாங்க ரெண்டு பேரும் நேரே ஷார்ஜா போறதா ப்ளான். ரங்கு 5.30க்கு வரேன்னு சொல்லி இருந்தார். நான் 5 மணிக்கே ரெடி. துணிஎல்லாம் எடுத்து வெச்சுண்டு காத்துண்டு இருந்தேன். ரங்கு வழக்கம் போல 6.15க்கு வந்தார். அவர் அன்னிக்கு கார்த்தால 6 மணிக்கே கிளம்பி போனதுனால ரொம்ப களைப்பா இருந்தார். அதுனால போனாப்போகட்டும்ன்னு ட்ரெஸ் சேஞ்சுக்கு பெர்மிஷன் குடுத்தேன். ஒரு டம்ளர் ஜூஸ் குடிச்சுட்டு ஜிங்குன்னு கார் ஆக்ஸிலரேட்டரை அழுத்த, கார் ஆன்ந்தமா பறந்தது. முதல்ல எல்லாம் பேசிண்டே போனோம். போகப்போக ட்ராஃபிக் வேலையக்காட்ட ஆரம்பிச்சது. ஜபலாலி வந்தப்போ, மெதுவா ரங்குவை பிறாண்ட ஆரம்பிச்சேன். பின்னே, ரொம்பவே மெதுவா போக ஆரம்பிச்சது. 7.15 ஆயிடுத்து அப்போவும் நாங்க ஷேக் ஸாயத் ரோட்டில் தான் ஊர்ந்துண்டு இருந்தோம்.

வல்லிம்மா 9 மணிக்கு படுத்துக்கறவங்க.ரொம்ப லேட் ஆகிடுத்துங்கறதுனால அவங்களுக்கு அசெளகரியமா இருக்குமே. அதுனால அவங்களை மீட்டுக்கு கூட்டிண்டு போகாட்டியும் அட்லீஸ்டு பார்க்கணும்ன்னு எனக்கு ஒரே ஆவல். 8 மணிக்கு மக்தூம் பக்கத்துல இருக்கற அவங்க பில்டிங் வாசலுக்கு போனப்போ படபடப்பா இருந்தது. இதுக்குள்ளே ஹூஸைனம்மா அங்கே குரூப்பை குழுமப்படுத்திட்டாங்க. வல்லிம்மா கீழே இறங்கி வந்தாங்க. ரங்கு கார் பார்க்கிங் கிடைக்காம எமர்ஜென்ஸி போட்டுண்டு காத்திருக்க, நான் ஓடியே போய் வல்லிம்மாவை பார்த்து கட்டிண்டு அவங்க பொழிஞ்ச அன்பு மழையில நனைஞ்சேன். சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவங்களை பிரிய மனசே இல்லை. அவங்களை அபுதாபிக்கு அழைச்சுட்டு டைம் ஆயிடுத்துன்னு கிளம்பினேன். ஒரு தாயிடம் கிடைக்கும் அன்பும் ஆதுரமும் அவங்க கிட்டே கிடைச்சதுன்னா,  அது மிகையில்லை.

ஐஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்னு சொன்னேன் ஹூஸைனம்மா கிட்டே.அவசர அவசரமா ரங்கு ஓட்டினாலும் க்ளாக்டவர் கிட்டே நல்ல ட்ராஃபிக். ஆனா முன்னைக்கு இப்போ துபாய்ல ட்ராஃபிக் ரொம்பவுமே குறைஞ்சிருக்கு. அப்படி இப்படி புகுந்து லுலு கிட்ட வந்தப்போ ஹூஸைனம்மா கோசம் காத்துண்டு இருந்தேன். ரங்குவை கழட்டி விட்டுட்டுடலாம்ன்னு பார்த்தா என்கிட்டே வந்து நின்னுண்டே இருக்கார். க்ர்ர்.. அப்புறம் ஒரு பத்து நிமிஷம் காத்திருந்ததுக்கப்புறம் ஹூஸைனம்மா வேர்த்து விறுவிறுத்துண்டு வந்தாங்க. அந்த இடத்துல என்னமோ குழப்பம். எனக்கு அதெல்லாம் சந்தோஷத்துல பிடிபடலை! பின்னே? எல்லாரையும் பார்த்துட்டு ஒரே சிரிப்பு சந்தோஷம். நிறைய பேர் பர்தா போட்டுண்டு இருந்ததுனால எனக்கு யார் யார்ன்னு தெரிஞ்சுக்கவே ஒரு 45 நிமிஷம் ஆச்சு.

வாயெல்லாம் 32முமாய் ஓடிப்போய் ஒரு பெண்ணைப்பிடித்தேன். இவங்க தான் ஜலீலான்னு யாரோ திரியை கொளுத்திபோட, கெக்கே பிக்கேன்னு ஒரு 10 வரி அவங்க ப்ளாக் பத்தி புகழ்ந்து பேசினேன். அவங்க திருதிருன்னு முழிச்சாங்க. அப்புறம் அந்த ’எட்டப்பி’ யாருன்னு தேடினேன். யார்ன்னு தெரியல. எட்டப்பியா என்ன சொல்றீங்கன்னு தானே கேக்கறீங்க? ஏன்னா இவங்க தான் ஜலீலாக்கான்னு காட்டப்பட்டது ஜலீலா இல்லையாம். சும்மாங்காச்சுக்கும் யாரோ சொல்லி இருக்காங்க. அவங்க ஆஸியாவாம். கஷ்டம்.வந்த உடனே ’அநன்யா ட்ரேட்மார்க் பல்பு’ வாங்கியாச்சு. இதே தானே வேலையா அலையுறேன். ‘சந்தோஸமா’ன்னு கஞ்சா கருப்பு மாதிரி கேட்டுண்டே அடுத்த ஆளை பரிச்சயப்படுத்திண்டேன்.

நான் யாருன்னு சொல்லுங்கன்னு ஒரு பெண் ரொம்ப அன்பா கையைப்பிடிச்சுண்டு கேட்டப்போ சத்தியமா தெரியாதுன்னு சொன்னேன். இல்லை உங்களுக்கு தெரியும். உங்க ப்ளாக் வந்திருக்கேன்னு சொன்னப்போ நாம் மறுபடியும் பழம் சாப்பிட்டேன்.  அவங்க ஸாதிகா அக்கா. ரொம்ப அழகு, வல்லிமா மாதிரியே ஒரு கருணையான கண்கள், சிரித்த முகம்.

ஹலோன்னு சொல்லி மலர் கை குடுத்தாங்க. இவங்க நம்ம ப்ளாக் வந்திருக்காங்கன்னு நினைச்சு புக்மார்க் பண்ணிண்டேன்.

பிரியாணி நாஸியா அறுந்த வாலு போல இருக்கு. சிரிச்சுண்டே ரொம்ப ஜாலியா பேசினாங்க. ஜலீலா அக்கா பயங்கர காஷுவல்.பொறுமையா ஏகப்பட்ட ஐட்டம்ஸ் பண்ணி சாப்பிட எடுத்துண்டு வந்திருக்காங்க.
மொத்த குரூப்பையும் ஆசுவாசப்படுத்திண்டு இருந்தாங்க. இடைக்கி அப்பப்போ வந்து  என்னையும் கவனிச்சுண்டாங்க. அவங்க அன்புல திக்கு முக்காடி போயிட்டேன். அந்த செயல்ல நம்ம நாட்டு விருந்தோம்பல் தான் தெரிஞ்சது.

(எனக்கும் தோணிச்சு, ஒரு க்ரூப் மீட்ன்னா, கண்டிப்பா ஏதாவது ’இன்புட்ஸ்’ இருக்கணுமே.  நானும் ஏதாவது பண்ணி எடுத்துண்டு போய் இருப்பேன். அன்னைக்கு ஃபுல்லா செம்ம தலைவலி, அதான் வெறுங்கையோடு போயிட்டேன்)

திருமதி மனோ சுவாமினாதனை பார்த்தது பெரும் பாக்கியம் தான். எவ்ளோ இன்ஃபர்மேஷன். நான் நினைக்கறேன் இவங்க விக்கிப்பீடியா மாதிரி மனோபீடியான்னு ஒரு சைட் ஆரம்பிக்கலாம். மல்டி ஃபேஸட்ட் பெண்மணி. ஏகப்பட்ட திறமைகளை வெச்சுண்டு இருக்காங்க.

ஹூஸைனம்மா எல்லாரையும் பத்து வாட்டிக்கு மேல காட்டிக்குடுத்தப்போ தான் எல்லாரையும் ஓரளவுக்கு அடையாளம் தெரிஞ்சது.

நம்ம காமெடி ஃப்ரீக்வென்ஸி வேவ்லெங்க்துக்கு ரொம்ப சூப்பரா ஒத்து போனது மலிக்கா தான். ஊசிப்பட்டாசு மாதிரி ஒரே பேச்சு.. சிரிப்பு.

சுந்தராங்கர பதிவரை தான் சந்திக்க முடியல. அடுத்த வாட்டி எப்படியும் மீட்டிடுவோம்ல?

நீங்க கமெண்டுக்கு பதில் போடவே மாட்டேங்கிறீங்கன்னு மலர் என்னை சாடினாங்க. உண்மைதான். நான் ரொம்ப டிலே பண்றேன். பதிவு போடுறதுல இருக்குற சுறுசுறுப்பு கமெண்ட்ஸுக்கு ரெஸ்பாண்டு பண்றதுல இருக்க மாட்டேங்கறது. ஹ்ம்ம்.. பாயிண்டு நோட்டட் மேடம்.

அப்படியே டெம்ப்ளேட்ஸ், போஸ்ட்ஸ், அவார்ட்ஸ் & ரிகக்னிஷன்ஸ் இதைப்பத்தி எல்லாம் ஒரு பத்து நிமிஷம் விவாதிச்சோம். (பின்னே ப்ளாக்கர்ஸ் மீட்னா டெக்னிக்கலா ஏதாவது பேச வேண்டாமா?ஹீ ஹீ, மேற்கொண்டு விவரம் அறிய மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்கி நம்ம ஹூஸைன்னம்மாவை கேட்கவும்.)

ஆஸியாக்கா வந்ததுல இருந்து ஒரே டென்ஷன். அதுனால சீக்கிரம் கிளம்பிட்டாங்க. எல்லாரும் அந்த கனோபிக்குள்ளே உக்காண்டு பேசலாம்ன்னு செட்டில் ஆறதுக்குள்ளே நம்ம ரங்ஸ்”ஆச்சாம்மா”ன்னு ஃபோன் பண்ணிட்டார். ”இருங்கோன்னா, இப்போத்தான் எனக்கு முகங்கள் அடையாளம்  தெரிஞ்சு இருக்கு இனிமேத்தான் பேச ஆரம்பிக்கணும்”ன்னு சொல்லிட்டு திரும்பினா எல்லாரும் கொல்லுன்னு சிரிக்கறாங்க. ரெம்ம்ப வெக்கமா போச்சு

யாரும் யாரையும் அக்கான்னு கூப்பிடக்கூடாதுன்னு ஒரு நடுவுநிலையுடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்புறம் அவங்க சமைச்சு கொண்டு வந்ததெல்லாம் சுடச்சுட சேல்ஸ் ஆச்சு. நானும் வேக வெச்ச வேர்க்கடலையும் சுவையான மசால் வடையும் சாப்பிட்டேன். ”அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?” வருந்தி வருந்தி ஜலீலாக்கா பண்ணின உபச்சாரத்துல அசந்துட்டேன்.

இப்பிடியா சிரிச்சு சிரிச்சு பேசிண்டு இருக்கும்போதே ரங்கு ஃபோன் பண்ணியாச்சு. 9.53ன்னு பாழாப்போன மொபைல் மணி காட்ட ஒரே பதபதைப்பு. மனசே இல்லாமல் பிரிஞ்சேன். அந்த சிரிப்பும் கும்மாளமும் இன்னும் மனசுக்குள் எதிரொலிச்சுண்டு இருக்கு. காருக்குள்ளே ரங்கு அரைத்தூக்கத்துல உக்காந்து இருந்தார். பாவம் அவருக்கும் பசிச்சு இருக்குமே.

மறக்கமுடியாத இந்த சந்திப்பை ஏற்படுத்தித் தந்த ரங்குவுக்கும், இதை கோ-ஆர்டினேட் செய்த ஹூஸைனம்மாவுக்கும், மூல காரணமான ஸாதிகா அக்காவுக்கும் பலப்பல நன்றீஸ். இல்லாட்டி இங்கே நான் பாலைவன ஒட்டகமாகவே இருந்திருப்பேனே. பின்னே எத்தனை நாளைக்கு தான் கிணற்றுத்தவளைன்னு சொல்லிண்டு இருக்க? அதான் ஒரு சேஞ்சுக்கு. ஹீ ஹீ!
Related Posts with Thumbnails