Showing posts with label obituary. Show all posts
Showing posts with label obituary. Show all posts
Saturday, May 29, 2010
செல்லப்பன் பெரியப்பா..
சக்ரபாணி. அதான் அவர் பேர். இருந்தாலும் வீட்டுல செல்லப்பன்னு கூப்பிடுவாங்க. இன்னிக்கி கார்த்தால அவர் இறந்துட்டார்ன்னு செய்தி வந்தது. அதிர்ந்தோம். செல்லப்பன் பெரியப்பா ரங்குவின் சொந்த பெரியப்பா. ஜாலியான மனுஷர். அவர்கிட்டே ஏகப்பட்ட விஷயம் இருக்கும். பேசிண்டே இருப்பார். நிறைய புஸ்தகங்கள் படிப்பார். ஏகப்பட்ட மொழிகள் அத்துப்படி. 4-5 வாட்டி பார்த்திருக்கேன். கொட்டிவாக்கத்துக்கு போகும்போது பிரியமா உபசரிப்பார். எனக்கு மாமனார் இல்லாததால் அவர் மேல ரொம்ப மரியாதை. அதே ஜாடையிலும் இருப்பார். கொஞ்சம் பூசினாற்போல முகம். தீர்க்கமான கண்கள். சிவந்த நிறம். சின்ன வயதில் ரொம்பவும் ஸ்மார்ட்டாக இருந்திருக்கக்கூடும்.
78 வயதில் கொஞ்சம் உடல் உபாதைகள் இருக்கத்தான் செய்யும், செய்தது. இருந்தாலும் இவருடைய நகைச்சுவை உணர்ச்சியே இவருக்கு இத்தனை நாள் எக்ஸ்டென்ஷன் பெற்று கொடுத்ததுன்னு தான் நான் நினைப்பேன்.
செல்லப்பன் பெரியப்பாவுக்கு சிகரெட் பழக்கம் இருந்திருக்கு. ஒரு வாட்டி டாக்டர் கிட்டே போனப்போ டாக்டர், அவர் உடம்பை பரிசோதனை பண்ணிட்டு சொல்லி இருக்கார், "Mr Chakarapani, it is high time you stop smoking. you are slowly dying" கொஞ்சம் கூட யோசிக்காம செல்லப்பன் பெரியப்பா பதில் சொன்னாராம், “I am not in a hurry doctor"
இப்போ அவர் அவசரமா எங்க கிட்டே சொல்லிக்காம போயிட்டார்! We miss you பெரியப்பா.. May your soul rest in peace.
Labels:
obituary
Subscribe to:
Posts (Atom)