அன்புப் பெரியோர்களே, அருமை ப்ளாக் வாசகர்களே, புல்லுருவி நண்பர்களே,
இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நான் ஆன்னுவல் வெக்கேஷனுக்கு அடுத்த வாரம் கிளம்பி, ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்.
(பலத்த கைதட்டு) அமைதி அமைதி!
சென்னை ரசிகர்கள் ஏர்ப்போர்டுக்கு மாலை மருவாதியுடன் தாரை தப்பட்டை முழங்க என்னை ரிஸீவ் பண்ண வரவேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். , ஆளுயர பூமாலை, பொக்கே, ஃபோட்டோ ஃப்ளாஷுகள், ப்ரெஸ் பேட்டிகள் இது எதுவும் நான் விரும்புவதில்லை.ஏன்னா, சென்னை கமிஷனர் என்கிட்டே ஃபோன் பண்ணி கேட்டுண்டு இருக்கார். சமூக பணியில இருக்கறதுனால தான் இவ்ளோ பாப்புலாரிட்டி. என்ன பண்றது. பாப்புலாரிட்டி என்பது என் ப்ரைவஸிக்கு நான் கொடுக்கும் விலை! (சரி சரி.. அடங்கறேன்!)
சென்னை ரசிகர்களை கலைவாணர் அரங்கிலோ, காமராஜர் அரங்கிலோ சந்திப்பேன்.ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. கட்டாயம் எண்ட்ரி டிக்கெட் வசூலிக்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டி இல்லை. அதுக்காக பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகி இருக்கு. நிறைய ஸ்பான்ஸர்ஸ் முன்வந்துள்ளனர். பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்கேன். நேரம் கிடைக்குமா தெரியலை. ஆட்டோகிராஃப் கேட்டு வரும் அன்பர்களுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்பு சீல் ரெடி பண்ணிக்கணும். ஏன்னா டைப்படிச்சு அடிச்சு எனக்கு கையெழுத்தே மறந்து போயிடுத்து. ப்ளாக் காட் பாதுகாப்பு வேணுமான்னு இந்திய அரசாங்கம் கேட்டிருக்காங்க.. இப்போதைக்கு ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க ரெண்டு போலீஸ் கேட்டு இருக்கேன். (ஹய்யோ, என்னாலேயே தாங்க முடியலை)
என்னோட வெக்கேஷன் ப்ளான்ஸ் பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா டவிள்யோ டவிள்யோ டாட் பிச்சுமணி டாட் காமுக்கு மெயில் அனுப்புங்கள். கட்டாயம் தெரிவிக்கிறேன். (இதையே தானே ஃபேஸ்புக்லேயும் போட்டு பஜனை பண்ணினேன்னு சொல்றவங்களை நான் வன்மையா கண்டிக்கிறேன்)
ஆஹா ஒரு மாசம் இவ ரோதனையில இருந்து தப்பிச்சாச்சுன்னு, தாரை தப்பட்டை விசில் எல்லாம் அடிச்சுண்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடிச்சுன்னா, அவங்களுக்கு கீழ்க்கண்ட எச்சரிக்கை. அநன்யா ஒரு எழுத்தாளினி ஆயாச்சு. யாரு சொன்னா வா? ஹ.. எல்லாம் எனக்கு தெரியும். அதுனால சென்னை போனாலும் நான் முடியும் போது ஏதாவது போஸ்டு போட்டுண்டு தான் இருப்பேன். எழுதறதுக்கு ஏதாவது டாபிக்கி கிடைக்காமலா போயிடும்?
அப்புடியே நான் போஸ்டு போடாட்டியும் நீங்க எனக்கு மெயில் அனுப்பணும். உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்னு சொல்லி தெரிய வேண்டாமே.
இப்போ நான் மட்டும் தான் போறேன், ரங்கு அடுத்த மாசம் தான் வர்றார். நான் கிளம்பறதுனாலே சுமார் ஒரு வாரமா அவருக்கு மனசுல சந்தோஷம் கொப்பளிக்கறது, வாயெல்லாம் பல், அடிக்கடி பெருமூச்சு விட்டு அப்பாடீன்னு சொல்லிக்கறார். ஏர்ப்போர்டுல என்னை ட்ராப் பண்ணிட்டு என் போர்டிங் பாஸை அவர் கையில எடுத்துண்டு, ”என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா”ன்னு கத்திண்டே துபாய் பூரா ரவுண்டடிச்சாலும் ஆச்சிர்யப்படுறதுக்கில்லை!
இந்த நிலமையில நேத்திக்கி என் மச்சினருக்காக சில பெண்கள் ஜாதகத்தை பார்த்துண்டு இருந்தேன். அதுல 67ல பிறந்த சில பெண்கள் கல்யாணம் ஆகாம இருக்காங்கன்னு இவர் கிட்டே சொல்லி வருத்தப்பட்டுண்டே பாத்ரூம்ல மூஞ்சி அலம்பிண்டு இருந்தேன். உடனே ஓடி வந்து, தன்னுடைய பிறந்த வருடத்தை சொல்லி, பண்ணிப்பாளா கேட்டு சொல்றியான்னு கொஞ்சம் கூட சலனமே இல்லாம கேக்கறார். வந்த கோபத்துல மூஞ்சியில் இருக்கற சோப்பை அலம்பறதுக்காக ரெண்டு கைகள்ல எடுத்த தண்ணியை அவர் மேல கொட்டிட்டேன். இந்த அழகுல அந்த லேடி இவரை விட சில ஆண்டுகள் பெரியவங்க. பண்ணிப்பாளான்னு கேக்கணுமாம். நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு.
நீங்க என்ன சொல்றீங்க?

