Pages

Thursday, December 24, 2009

Taxi Taxi

Taxi Taxi



என்னோட விசேஷ ஜாதக மகிமையைப் பத்தி போன பதிவுல சொல்லி இருந்தேன். அது எங்கே போனாலும் தன பெருமையைபத்தி எனக்கு ஞாபகப்படுத்திடும். நாங்க இருக்கறது சென்னை ஆற்காடு ரோடு மாதிரி அபுதாபியிலுள்ள ஒரு பிரதான சாலை. ஆமா இங்கே இருக்கறதே ஒரு 9  சாலைகள் தான். எல்லாமே intersecting at right angles. சிட்டி architecture  அப்படி. இதுல நாங்க பாஸ்போர்ட் ரோடு ல இருக்கோம். நான் எப்போ தனியா வெளீல போனாலும் எனக்கு வயத்தகலக்கிடும். ஏன்னா, போகும்போதும் சரி, வரும்போதும் சரி, டாக்ஸி கிடைக்காது. இவர் கொண்டுவிட்டு கூட்டிண்டு வந்தா ஈன்னு சிரிச்ச மூஞ்சியோட இருக்கும் நான், தனிச்சு விடப்படா, ஒரே ஙொய் ஙொய் தான். இன்னிக்கி நேத்திக்கி இல்லே, ஒரு 3 வர்ஷமா இதே கதை தான்.  துபாயை விட அபுதாபியிலே டாக்ஸி சீப். சரி ஒத்துக்கறேன். பட் டாக்ஸி கெடைச்சா தானே சீப்? கிடைக்காத டாக்ஸி சீப்பா இருந்தா எனக்கென்ன- இல்லாட்டி எனக்கென்ன? Does it make any difference.?


நிற்க. என்னடா இவ்ளோ ஹை வோல்டேஜ்ல புலம்பறாளேன்னு நினைக்காதீங்க. நேத்திக்கி நடந்த ஒரு world class நிகழ்ச்சிய வெச்சு தான் இந்த போஸ்டே எழுதறேன்.

இங்கே வந்த புதுசுல நான் தனியா வெளீல போய் பண்ணின சாஹசத்துல என் வீட்டுக்காரர், நொந்துட்டார். ப்ரஹஸ்பதி மாதிரி எங்கியாவது போயி மாட்டிண்டு, டாக்ஸி கிடைக்கலைன்னா, இப்போவே வந்து பிக்கப் பண்ணுங்கோன்னு போன் பண்ணி உயிரை வாங்குவேன். சரிம்மா வர்றேன்ன்னு சொன்னா,  அவன் பிழைச்சார். இல்லேம்மா, இப்போ வர முடியாது, மீட்டிங்ல இருக்கேன்னு எல்லாம் சொன்னா, சாயந்தரம், ருத்திர தாண்டவம் தான்.

இந்த மாதிரி ஒரு வாட்டி, ரெண்டு வாட்டி இல்லே, பல வாட்டி மாட்டிண்டு இருக்கேன். சில சமயம் அவர் official pressures புரிஞ்சுண்டு இருக்கேன். பலசமயம் சண்டை போட்ருக்கேன். பலப்பல சமயம்,  உர்ருன்னு மூஞ்சிய தூச்கிவெச்சுண்டு நடராஜா சர்வீஸ்ல ஆறு கிலோமீட்டேர் எல்லாம் நடந்து , சொங்கி மாதிரி வீடு வந்து சேர்ந்திருக்கேன்.

விசாகா (என்னோட தோழி) முன்னாடி எங்க வீட்டுக்கு கொஞ்சம் , சமீபமாத்தான் இருந்தா. ஒரு அரைமணி நேரம் நடை. கூப்டான்னா, நடந்தே போய்டுவேன். எதுக்கு அனாவச்யமா டாக்ஸி கோசம் நின்னுண்டு பொழுதை கடத்தணும்? எப்படியும் டாக்ஸி கிடைக்காது. நின்னு நின்னு Stress தான் ஜாஸ்தியாகும்னு நடந்தே போய்டுவேன்.

இப்போ அவ வீடு சலாம் Streetக்கு மாத்திட்டா, நெனச்சப்போ போகமுடியாது. ஏன்னா, அங்கே என்னமோ fly over வருதாம்(அபுதாபியிலுமா fly over தொல்லை, ஆமாம் பின்னே, ஜாதக விஷேஷமாச்சே, இத்தனை நாள் கிண்டி கத்திப்பாரா flyoverன்னு சொல்லி கழுத்தறுத்தாங்க, இப்போ சலாம் ஸ்ட்ரீட் flyover. நடத்துங்க நடத்துங்க) பாதசாரிகளுக்கு ஒரு சௌகரியமும் கிடையாது. எல்லா இடத்துலேயும் தட்டி போட்டு மறைச்சு வெச்சுருக்காங்க(பின்னே, கண் பட்டரும் இல்லே?) அதுனால அவ, என்னை, தன் வீட்டுக்கு கூப்பிடும் போதெல்லாம் ஏதாவது சாக்கு சொல்லி தப்பிசுண்டு இருந்தேன். இப்போ நேத்திக்கி அவ husband பர்த்டே. எதாச்சும் gift வாங்கணும், நீ வந்தே ஆகணும் அனந்யான்னு ஒரே தொந்தரவு. எனக்கு வேற வழி தெரியலை. பிள்ளையாருக்கு ஒரு ரூபா முடிஞ்சு வெச்சுட்டு வீட்டை விட்டு புறப்பட்டேன். நமக்காவது taxiயாவதுன்னு பில்டிங் வாசல்ல இருக்கற Taxi Drop off point ல போயி நின்னது தான் தாமதம். சர்ர்ன்னு ஒரு கிரே டாக்ஸி வந்து கிரீச்சிட்டு நின்னது.











(இங்கே ரெண்டு விதமான டாக்ஸி இருக்கு, பழைய பட்டாணி டாக்ஸி, புதிய கிரே டாக்ஸி. பழைய பட்டாணி டாக்ஸி விலை கம்மியாவும், பட்டாணிகளோட மொக்கை ஜாஸ்தியாவும் இருக்கும், புதிய கிரே டாக்ஸியில் விலை ஜாஸ்தியா இருந்தாலும் டிரைவர்ஸ் பேசாமல் professional ஆ ஓட்டுவாங்க.முக்கியமான விஷயம்: இந்த ரெண்டு வண்டியிலேயும் மீட்டருக்கு மேல காசு கேக்க மாட்டாங்க). அந்த கிரே டாக்ஸியைப்பார்த்துட்டு  என்னை நானே கிள்ளி பார்த்துண்டேன். அப்படியே புல்லரிச்சு போய்டுத்து. கண்கள்ல வழிஞ்ச ஆனந்தக்கண்ணீரை துடைச்சுண்டு வேகமா ஏறி உக்காந்தேன். டிரைவரிடம் சலாம் வழிய அபுதாபி மால் போகணும்னு சொன்னேன். அவனுக்கு சலாம் எப்டி போறதுன்னு தெரியலையாம். சரி நான் வழி சொல்ல்றேண்டா பேர்வழினு அடுத்த சிக்னல்ல left  எடுன்னேன். அந்த மண்டு, அவசராவசரமா முன்னாடி இருந்த ஒரு diversionல திரும்பி இங்கே தானேனு கேக்கறான்.வந்த கோபத்தை அடக்கிண்டு, சரி, இப்படியும் போகலாம் போன்னேன். எத்திசலாத் தாண்டி செம்ம பல்பு. அங்கே ரோடு closed due to construction work. சரி நீங்க வந்த வழி போங்கனு சொல்லிட்டு விசாகாவை எங்கே பிக்கப் பண்ணறதுன்னு கால் பண்ணி பேசிண்டு இருந்தேன். வந்த வழி  திரும்பினா, ஒரே சிக்னல்ஸ், டிராபிக். சுமார் 8  திராம் டாக்ஸி fare.
எனக்கு கண்ணை கட்டிடுச்சு. நான் இதுவரைக்கும் இங்கே குடுத்த maximum டாக்ஸி சார்ஜ் 6 திராம் தான். அதுக்குமேலே இல்லே. முக்கால்மணிநேரதுக்கு மேல ஆச்சு, டிராபிக் நகர்ராமாதிரி தெரீல.எனக்கோசம் சலாம் ஸ்ட்ரீட் ல வெயிட் பண்ணிண்டு இருந்த விசாகா, மண்டை காஞ்சு போயி, அனன்யா, நான் நேரே மால்க்கு போறேன், என்னாலே குழந்தையை வெச்சுண்டு சமாளிக்க பண்ண முடியலைன்னு சொல்லிட்டு ஈசியா அடுத்த டாக்ஸி பிடிச்சு (!!!) கிளம்பி போய்ட்டா. நான் தான் பேக்கு மாதிரி யு டுர்ன் எடுக்கரதுக்கோசம்  கிளம்பின இடத்துலேயே டாக்ஸில உக்காந்து இருந்தேன். ஒரு வழியா நாஜ்தா சிக்னல் தாண்டி சலாம் சிக்னல்ல மாட்டிண்டப்போ ஒரு மணி நேரம் கடந்தாச்சு. சரி, இந்த சிக்னல் மட்டும் தானே, சீக்கிரம் போய்டலாம்னு நினைச்சு   மனசத்தேத்திண்டேன். அதென்னமோ தெரீல சலாம் சிக்னல்ல ரெண்டு ரெண்டு வண்டியா தான் விடுவான் போல இருக்கு. ரெண்டு கார் போகும், மறுபடியும் சிக்னல் விழும். இப்பிடி தவணை முறையில என் நம்பர் வரதுக்கு இன்னும் ஒரு பன்னெண்டு நிமிஷம் ஆச்சு. ஹப்பாடா, 'இனி எண்டே நம்பர் ன்னு' நிம்மதி பெருமூச்சுவிட்டு, 'I am almost there' ன்னு உல்லு லுக்கு ஒரு டெக்ஸ்ட் விசாகாவுக்கு அனுப்பரதுக்குள்ள 'ட்டாம்' ன்னு ஒரு சத்தம். பயத்துல கத்திட்டேன்.என் டாக்ஸி டிரைவர், முன்னாடி போற வண்டிய கிட்டதெட்ட உரசர அளவுக்கு போயி பிரேக் போட்ருக்கான், பின்னாடி வந்த வண்டி, எங்க வண்டி மேல போகும்னு நெனச்சு accelarator அழுத்த எங்க வண்டிக்காரன் பிரேக் போட, செம்ம டிங்கு. ஆச்சு. Accident. இனி வண்டி புறப்படாது. ஏன்னா, போலீஸ் வந்து கம்ப்ளைன்ட் file  பண்ணி அவன் ரிப்போர்ட் குடுக்கரவரைக்கும் எந்த Garageலேயும் இந்த டாக்ஸியை ரிப்பேர்க்கு எடுதுக்கமாட்டாளாம். சோ எனக்கு புரிஞ்சு போச்சு.ஒரே அதிர்ச்சி பரபரப்புடன் இறங்கி வண்டிச்சத்தம் 15  திராம் (மூக்கால அழுதுண்டே) குடுத்தேன் .

என்ன தான் 15 திராம் taxiக்கு செலவு பண்ணினாலும் According to my grand horoscope,அதெப்படி நான் சௌகர்யமா அதும் கிரே Taxiல போகலாம்? நான் நடந்து தான் போகணும் . பின்னே, நல்ல உச்சி வெயில் வேற.. எதுக்கு மிஸ் பண்ணனுங்றேன்? சொல்லி சொல்லி மாளலை.
ஜாதக மகிமையே மகிமை.. ஜெய் ஜாதகஸ்ய.

5 comments:

அண்ணாமலையான் said...

இதுக்கு பேர்தான் யோக ஜாதகமா?

Ananya Mahadevan said...

Well, I guess so, Annamalaiyaan.:)

dondu(#11168674346665545885) said...

துபாயில் சைக்கிள் விட தோதாக போக்குவரத்து இருந்தால் அதை செய்யலாமே. ஏதோ தோணித்து சொன்னேன்.

எனது சைக்கிள் அனுபவம் இங்கே. http://dondu.blogspot.com/2006/04/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ananya Mahadevan said...

மிக்க நன்றி சார். எனக்கு சைக்கிள்ன்னா கொள்ளை இஷ்டம். இந்த வாட்டி கூட பாலக்காட்ல சஞ்சய் சைக்கிள் வாங்கி ஓட்டிப்பார்த்தேன். ஆனா இங்கே எனக்கு பயம் கார் எல்லாம் கன்னா பின்னா ஸ்பீடு. நாங்கள் இருக்கறது அபுதாபி. உங்க பதிவுகளை கண்டிப்பா படிக்கறேன் சார். கருத்துக்கு நன்றி

Asiya Omar said...

டாக்ஸி அனுபவம் அருமையாக எழுதிருக்கீங்க.

Related Posts with Thumbnails