Pages

Tuesday, February 9, 2010

உன் காலடி மட்டும் தருவாய் தாயே .. ஸ்வர்க்கம் என்பது பொய்யே...

உன் காலடி மட்டும் தருவாய் தாயே .. ஸ்வர்க்கம் என்பது பொய்யே...


லக்ஷ்மி என்ற பெண், மும்பயில், புதிதாக அந்த குடியிருப்பில் வந்திருந்தார். அக்கம்பக்கம் யாரையும் அவ்வளவாக பரிச்சயம் இல்லை.கணவரின் ஆஃபீஸ் குவார்ட்டர்ஸில், ஏழாவது மாடியில் அந்த பெரிய வீடு. டபுள் பெட்ரூம் வீட்டில் தனித்து இருந்த ஒரு மதிய வேளையில் வெளியில் அழும் குரல் கேட்டு கதவைத்திறந்து பார்த்தார். அங்கு அதே பக்கம் படிகளுக்கு அப்பால் இருந்த வீட்டின் பெண் மிகவும் பயந்து அழுதுகொண்டிருந்தார்.



மொழி தெரிந்ததால், என்ன ஏது என்று அந்தப்பெண்ணிடம் விசாரித்தார். அவருடைய 7 வயது மனநிலை குன்றிய மகனை வீட்டில் விட்டு விட்டு இவர் காய்கறி வாங்க இறங்கி இருக்கிறார். ஆனால் சாவியை உள்ளே வைத்து கதவை வெறுமனே சாத்தி இருக்கிறார்.அது ஆட்டோலாக் ஆகிவிட்டது. இனி அந்த சிறுவன் எழ வேண்டும். அவன் எழுந்தால் எழலாம், இல்லாவிட்டால் இல்லை, பால்கனி கதவு திறந்து இருந்தது. அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் நான் என்ன செய்வேன். அவனுக்கு ஒண்ணும் தெரியாதே என்று பரிதாபமாக அழுதார் அந்தப்பெண். இன்னொறு சாவி அவள் கணவனிடம் இருந்த்து அவர் மும்பாயின் இன்னோர் கோடியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் வரும்வரை இந்தச்சிறுவன் எழாமல் இருக்க வேண்டும். கதவை வெளிப்புறம் சாத்தி தவறு செய்துவிட்டேன் என்று அந்தப்பெண் அழுது புரண்டாள். அனைவரும் கூடி, வாட்சுமேனைக்கூப்பிட்டு என்ன செய்யலாம் என்று புலம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் லக்ஷ்மி மட்டும் எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய்விட்டார்.

தனது பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தார். ஏழாவது மாடியில் இந்தப்பக்கம் இவர் வீட்டின் பால்கனி, அந்தப்பக்கம் அந்த மனவளம் குன்றிய சிறுவன் தூங்கிக்கொண்டிருக்கும் வீட்டின் பால்கனி. இடையில் ஒரு அடி அகலமேயுள்ள ஒரு குறுகலான ஒரு கான்கிரீட் பாத்தி இணைத்தது. கீழே பார்த்தால் தலை சுற்றும், தடுக்கி விழுந்தால் கோவிந்தா தான். ஆனால் லக்ஷ்மியோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த சிறுவனை நினைத்தபடி அந்த குறுகலான பாத்தியின் மேல் நடந்து சென்று அவர்கள் வீட்டு பால்கனியில் இறங்கி, உள்ளே சென்று உட்புறமாக பூட்டி இருந்த கதவைத்திறந்தார்.

 வாசலில் குழுமி இருந்த அனைவரும் ஸ்தம்பித்தனர். அழுதுகொண்டிருந்த அந்த தாயின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ஓடி வந்து லக்ஷ்மியைக் கட்டித்தழுவினார். அந்தச்சிறுவன் அமைதியாய் உறங்கிக்கொண்டு இருந்தான். ஒரு ஆபத்தும் இல்லை. விஷயம் குடியிருப்பு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இந்த வீர பெண்ணின் கணவருக்கு வெவ்வேறு கிளைகளிலிருந்து போன்கால்கள் வந்தன. எல்லோரும் வீரப்பெண்ணின் புகழ் பாடினர். பில்டிங் முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் பக்கத்து வீட்டுப்பெண் கண்ணீர் விட்டார். நன்றியுடன் அவர் ஒரு அழகான ஒளிநீரூற்று (Light fountain) பரிசளித்தார்.


சரி இப்போ விஷயத்துக்கு வர்றேன். அந்த வீரப்பெண் வேறு யாருமல்ல, என் அம்மா திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தான். யாரோ ஒரு சிறுவனுக்காக தாய்மையின் உந்துதலால் தன்னுயிரையும்  துச்சமாக நினைத்த இவர்,  பெற்ற குழந்தைகள் எங்களை எப்படி பார்த்துக்கொண்டிருப்பார்?

பதினாறே வயதில் திருமணம், வாழ்க்கையை ரசிக்கவேண்டிய வயதில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக சென்னையில் வாசம். தனியாக குடும்ப நிர்வாகம்,பொருளாதார தட்டுப்பாட்டிலும் ஒரு நிறைவு, இப்படித்தான் வளர்ந்தோம். சமயல்திறன்,பாட்டு, கோலம், தையல்,ஹிந்தி, இப்படி இவருக்கு பன்முகம். முழுக்க முழுக்க இவர் ஒரு செல்ஃப் மேட் வுமன். வாழ்க்கையில் தனக்கும் ஒரு மதிப்பு வேண்டும் என்று வயதுத்தடையின்றி பலவற்றைக்கற்றார். அதில் மிக முக்கியம் ஹிந்திப்பயிற்சி. எங்களுக்கு சொல்லித்தர படிக்க ஆரம்பித்தார். எங்களை விட முன்னேறி, பல குழந்தைகளுக்கு பிரியமான ஹிந்தி மிஸ் ஆனார். அம்மாவின் பயிற்சித்திறமையும் அன்பான கண்டிப்பும் பலரை கட்டிப்போட்டது.



இதே மாதிரி தன் போக்குவரத்தை பார்த்துக்கொள்ள தானே சைக்கிள் கற்றார். நான், என் தங்கை, அம்மா வீட்டைச்சுற்றி ஒரு ரவுண்டு போய்விட்டு வந்து அடுத்தவருக்கு தரவேண்டும். நாங்கள் மூவரும் இப்படித்தான் தெருவைச்சுற்றி ஓட்டி, சைக்கிள் கற்றுக்கொண்டோம். அது அம்மாவின் முறை. அம்மா போனார், இந்தப்பக்கமாக வருவார் என்று காத்திருந்தோம் அம்மாவைக்காணவில்லை. அபிரத்க்ஷிணமாகப்போய் தேடிப்பார்த்தால், அம்மா தெருவிற்கப்பால் இருந்த ஒரு மேட்டில் விழுந்து காலில் ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது. அப்படியாவது சைக்கிளை விட்டாரா? விழுந்துட்டா சைக்கிளை விட்டுடக்கூடாது, முயற்சி பண்ணித்தான் எல்லாம் கத்துக்கணும்ன்னு அட்வைஸ் பண்ணுவார்.மீண்டும் பயிற்சிதான். கலக்கோ கலக்கென்று கலக்கி, நான்கு வருடத்தில்  அம்மாவிற்கு பிரமோஷன் கிடைத்தது.அப்பா டிவிஎஸ் 50 வாங்கித்தந்தார்.

மற்றவர்களுக்காக பிரார்த்திப்பது, சிரித்தமுகத்துடன் இருப்பது, தைரியமாக எதிலும் களமிறங்குவது, எதுவும் சாத்தியம் என்ற தீவிர நம்பிக்கை வைப்பது,விருந்தினர் வந்தால் உபசரிப்பது இப்படி எல்லா விஷயங்களுக்கும் எங்கம்மா தான் எங்களுக்கு முன்னோடி.

நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன், அம்மா. என்னைப்பற்றிய என் கணவரின் புகழ்மொழிகளெல்லாம் உங்களைச்சார்ந்தவையே.

எனக்காக நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கும் சிந்திய கண்ணீருக்கும் நான் என்ன செய்துவிடப்போகிறேன் அம்மா? நான் இதுவரை தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னியுங்கள் மா. இதற்குமேல் என்னிடம் வார்த்தைகள் இல்லை மா. I love you ma, always..


பிறந்த்நாள் வாழ்த்துக்கள் மா...

31 comments:

butterfly Surya said...

அனன்யா, அம்மாவின் அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. உங்கள் வார்த்தைகளில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தெரிகிறது.

அருமையான பகிர்வு.

உங்கள் அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் வணக்கங்களும். பல நாள் வாழ பிரார்த்திக்கிறேன்.

துபாய் ராஜா said...

அம்மாவிற்கு இனிய மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Dubukku said...

நல்லா எழுதியிருக்கீங்க...அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்

உங்க கமெண்ட் பெட்டில பயர்பாக்ஸ்லேர்ந்து கமெண்ட் பண்ண முடியவில்லை...ரொம்ப இம்சை படுத்துகிறது கட் அன்ட் பேஸ்ட் ஆப்ஷனே இல்லாமல்..கொஞ்சம் பாருங்க

Porkodi (பொற்கொடி) said...

happy birthday to your dear amma! :) touching post! indha madhri self made women paatha enaku perumai thalai kolladhu! your mom rocks!

pudugaithendral said...

ஆண்டவன் எல்லா இடத்திலையும் இருக்க முடியாது என்பதால் தான் அன்னையை படைத்திருக்கிறான். வீர மங்கைக்கு என் வணக்கங்கள்

pudugaithendral said...

அட ஹேப்பி பர்த்டே சொல்ல மறந்துட்டேனே. அதையும் கண்டிப்பா சொல்லிடுங்க.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்..

settaikkaran said...

ஆண்டவன் அருளும், அம்மாவின் துணையும் கொடுத்து வைத்தவர்களுக்குத் தான் கிடைக்கிறது. அம்மாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தக்குடு said...

மாத்ரு தேவோ பவ// உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
அம்மாபுள்ளை

Annamalai Swamy said...

அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

raghu said...

லக்ஷ்மி அக்காவின் இன்னொரு சிறப்பு அவர் ஒரு சிறந்த ரசிகர். அவர் இருக்குமிடம் எப்போதும் சந்தோசமாகவே இருக்கும். எதையும் மிக ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொள்வார். சின்ன வயதில் நானும் முரளியும் எழுதிய படத்துடன் கூடிய சிறுகதை(!!!)யை (எழுமலையில் ) அவர் பாராட்டியதில் நிறைய சிறு நாடகங்களும் கதைகளும் எழுதினோம் . முரளின் படம் வரையும் திறமையை பாராட்டி அவன் வரைந்த மீனாட்சி கல்யாண படத்தை கையேடு பெரியாமவிற்கு காண்பிக்க போடிக்கு எடுத்து சென்றது எங்களுக்கு ஆஸ்கருக்கு பரிந்துரைத்தது போல அக்காலத்தில் இருந்தது. நாங்கள்தான் இந்த தமிழ்கூறும் நல்லுலகம் பிழைத்து போகட்டுமென்று கதை ஆசிரியர் வேலையெல்லாம் விட்டுவிட்டோம் . பெரியம்மாவிடம் இருக்கும் அதே ரசிகத்தன்மை இவரிடமும் அப்படியே இருக்கும் அக்கா ஒருமுறை அவரின் school ஆண்டுவிழாவில் நடித்த நாடகம்தான் நங்கள் பார்த்த முதல் நாடகம் அதில் அவர் மிக சிறப்பாக நடித்திருந்ததை அப்போது எங்கள் அப்பா மிகவும் சிலாகித்து சொல்லிகொண்டிருப்பர்... அவர் எழுதும் கடிதம் கூட மிக நேர்த்தியாக இருக்கும் (கையெழுத்தும் நன்றாக இருக்கும்).
அன்பு அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Ananya Mahadevan said...

@ பட்டர்ஃபிளைசூர்யா, நன்றி
@ துபாய்ராஜா, நன்றி
@ டுபுக்கு, நான் டெக்நாலஜிஊனமுற்றவள்.(Technically challenged ன்னு சொல்ல வந்தேன்) எப்படியாவது கூகிளாண்டவரை வேண்டி உங்க குறையைத் தீர்க்க பாடுபடறேன்.அப்படியும் விடாமல் பின்னூட்டம் போட்டு தெரிவித்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கும் நன்றி
@ பொற்கொடி, உங்க கமெண்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
@ தென்றல், அம்மா இந்த ப்ளாக்கை படிச்சாங்க, உங்க எல்லார் வாழ்த்தும் அம்மாவுக்கு டைரக்டா போயாச்சு. நன்றிகள் பல.
@ அண்ணாமலையான், வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்
@சேட்டை, நன்றிப்பா.
@சங்கவி, நன்றிங்க.
@தக்குடு, ’மாத்ரு தேவோ பவ’போன மாதமே நான் செலக்ட் பண்ணிட டைட்டில் இது. ஆனா பாரு, போன போஸ்ட் தான் அதிதி தேவோ பவ ஆயிருக்கு, திருப்பியும் மாத்ரு தேவோ பவன்னு போட்டா நல்லா இருக்காதுன்னு தான் இந்த வைரமுத்துவின் வைர வார்த்தைகளை போட்டேன். வாழ்த்துக்கு நன்றிடாப்பா.
@அண்ணாமலைசாமி, நன்றிப்பா.
@ரகுமாமா, இதுக்கு தான் உங்களை ப்ளாக் போடுங்க போடுங்கன்னு சொல்லிண்டு இருக்கேன். கேக்கறீங்களா? இப்போ எவ்ளோ பெரிய கமெண்டு எழுத வேண்டியதா போச்சு பார்த்தீங்களா? உங்க அழகான பின்னூட்டம் நிச்சயம் எங்கம்மாவுக்கு பழைய இனிய குழந்தைப்பருவ நிகழ்வுகளை நினைவூட்டி இருக்கும். ரொம்ப நன்றி. மீண்டும் எழுதறவேலையை ஆரம்பிங்க.

Unknown said...

நான் உங்கள் அம்மாவை சிறிது நேரம் தான் பார்த்திருக்கிறேன், எனினும் அவர் மனதளவில் மிக இளமையானவர் என்று தெரிந்தது. அம்மாவுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Porkodi (பொற்கொடி) said...

தக்குடுவை ஒருமையில் அழைக்கும் அந‌ன்யா, தக்குடுவின் சின்ன தங்கையான என்னை பன்மையில் அழைப்பதை கன்னா பின்னாவென வரையறையில்லாமல் கண்டிக்கிறேன்.

madDI said...

Hi its nice

வல்லிசிம்ஹன் said...

HEllo ANANYA, OH I am so happy. yr mom's birthday and my mother's birthday happens to be the same.
Congratulations and greetings to your mother.
when you have timme pl visit my house;)
Kudos and Namaskarams to a very brave woman.

HAPPY BIRTHDAY THIRUMATHI.LAKSHMI.

தக்குடு said...

//தக்குடுவை ஒருமையில் அழைக்கும் அந‌ன்யா, தக்குடுவின் சின்ன தங்கையான என்னை பன்மையில் அழைப்பதை கன்னா பின்னாவென வரையறையில்லாமல் கண்டிக்கிறேன்// thooda keedi,naama rendu peerumey orey age-uthaan...:)

manjoorraja said...

அனன்யா

இன்னிக்கித்தான் இந்தப் பதிவைபார்த்தேன்.
இப்படிப்பட்ட அம்மா கிடைக்க நீங்கள் கொடுத்துவைத்திருக்கணும். நல்லாவும் எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.

Ananya Mahadevan said...

நன்றி மஹேஷ், நிஜம்மாவே எங்கம்மா வயதளவுலேயும் இளமையானவங்கதான். ஹீ ஹீ.

பொற்கொடி, உங்களை தெரியாததுனாலத்தான் மரிகாதையா பேசினேன். மத்தபடி உங்க வயசு, பத்தி நான் யார் கிட்டேயும் ஒண்ணும் சொல்ல மாட்டேன் ஆத்தா.. அனாவஸ்யமா தக்குடு கமிட் பண்ணிட்டதால அவரும் இனிமே தக்குடுத்தாத்தா என்றே பிரியத்துடன் அழைக்கப்படுவார்.

நன்றி மது உன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

Ananya Mahadevan said...

வல்லிசிம்ஹன் மேடம், உங்க வருகையால என் பிளாக் மகிழறது. என்ன ஒரு coincidence. நம்ம அம்மாக்களோட பிறந்தநாள் ஒரே டேட். சூப்பர்.
உங்கள் வாழ்த்து அம்மாகிட்டே சொல்லிடறேன். கண்டிப்பா சென்னை வந்தா உங்களை சந்திக்கிறேன். :-) உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Ananya Mahadevan said...

மஞ்சூர் ராஜா,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிச்சயம் நான் அதிர்ஷ்டக்காரி தான் எங்கம்மா கிடைச்சதுக்கு. :-) மிக்க நன்றி.

Ananya Mahadevan said...

வல்லி மேடம், சொல்ல விட்டு போயிடுத்து. உங்கம்மாவுக்கும் என் நேரம் கடந்த வாழ்த்துக்கள்

sriram said...

ஓவர் செண்டி ஒடம்புக்காகாது அநன்யா..
ஓவர் செண்டி ஓவரா வெயிட் போட வைக்குமாம் ஊர்ல சொல்லிக்கறாங்க..

jus kidding, நல்ல பதிவு..

//தக்குடுவை ஒருமையில் அழைக்கும் அந‌ன்யா, தக்குடுவின் சின்ன தங்கையான என்னை பன்மையில் அழைப்பதை கன்னா பின்னாவென வரையறையில்லாமல் கண்டிக்கிறேன//

எங்கடா இன்னும் இங்க கேடி தன் வேலையை ஆரம்பிக்கலயேன்னு பாத்தேன்..
கேடி ஆண்டி ஏன் இன்னும் இந்த கொல வெறி, அதான் வயசாயிடிச்சில்ல, பெரிசுன்னு ஒத்துக்கோங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

dondu(#11168674346665545885) said...

உங்கள் அன்னைக்கு எனது வாழ்த்துக்கள். எந்தையும் தாயும் லேபலில் எனது தாய் தந்தை பற்றி நான் போட்ட இரு பதிவுகளையும் இங்கே பார்க்கலாம்.

http://dondu.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

அன்புடன்,
டோண்டு ராகவன்

கண்மணி/kanmani said...

உங்கள் அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் வணக்கங்களும். பல நாள் வாழ பிரார்த்திக்கிறேன்.

அத்துடன் பதிவிட்டு இப்படி முமறியா பல அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களைப் பெற்றுத் தந்ததே அம்மாவுக்கான உங்கள் நன்றி.

தக்குடு said...

//எங்கடா இன்னும் இங்க கேடி தன் வேலையை ஆரம்பிக்கலயேன்னு பாத்தேன்..
கேடி ஆண்டி ஏன் இன்னும் இந்த கொல வெறி, அதான் வயசாயிடிச்சில்ல, பெரிசுன்னு ஒத்துக்கோங்க
//....LOL :)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்லா இருக்கு பதிவு..வாழ்த்துக்கள் உங்க அம்மாவுக்கு....

சாந்தி மாரியப்பன் said...

இப்பத்தான் இந்த இடுகையைப் பார்க்கும் பாக்யம் கிடைத்தது அனன்ஸ். போட்டோவைப் பார்த்ததும் அட!!.. அனன்ஸ் புடவையிலான்னு ஆச்சரியப்பட்டேன். உண்மையிலேயே உங்க அம்மா ஓர் அற்புதப்பிறவி. அவங்க கிட்ட என் வணக்கங்களையும் சொல்லுங்க.

ரிஷபன் said...

நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன் !

என் அம்மா ஞாபகம் வருது.. அவங்க செஞ்சதுல.. பெருமைல.. துளிக்கூட எனக்கு இல்லை.. அவங்க மகன்கிற ஒரே பெருமை மட்டும்.. அது போதுமே எனக்கு !

Anonymous said...

Omg! என்ன எழுதறதுன்னு தெரியல! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Related Posts with Thumbnails