டிஸ்கி: இந்தப்பதிவு என் தங்கைமணிக்கு சமர்ப்பணம். ஏன்னா அது தான் இந்த மாதிரி ஸ்க்ரால் எல்லாம் தேடித்தேடி படிக்கும். மியூசிக் சானல்களில் வரும் ஒரு எஸ்.எம்.எஸ்ஸைக் கூட விடாமல் படித்து ’ரசிக்கும்’ அசகாய சூரி.
அன்புத்தங்கையே, என் ரத்தத்தால் எழுதிய (ஹீ ஹீ) இந்தப்பதிவை உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன். (சமர்ப்பிச்சுட்டு ஓடிடுறேன்)
ஜோக்ஸ் அபார்ட், இந்த பதிவை எழுதும்படி ஐ.எஸ்.டீ கால் பண்ணி சொல்லிய தங்கை மணியே, நீ ஒரு ஐடியா மணி. வாழி உன் புகழ்!
இந்த மியூசிக் சானல்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் கோஷ்டியில் நீங்கள் இருந்தால், தயவு செய்து இதற்கு மேல் படிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே கேக்கப்போறீங்க? இது கண்டிப்பாக உங்களைக் குறிப்பிட்டு எழுதியது இல்லை என்று ஆணித்தனமாக கூறிக்கொள்கிறேன். (அப்பா, தப்பிச்சாச்சு!)
ரிமோட் இல்லாத காலத்தில் எல்லாம் டீவீ ஆன் பண்ணினால் சானல் மாற்றுவதென்பதே இருக்காது. முதலில், வேறு சானலே இருக்காது. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நமக்கு தூர்தர்ஷன் மட்டும் தான். அதுவும் 9 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் டில்லி அஞ்சல். பகல் பூரா யூ ஜீ ஸீ போட்டுத்தாக்குவார்கள். மொக்கையாக இருக்கும். சில காலத்தில் சாட்டிலைட் டீவீ வந்தது. அத்துடன் ரிமோட் ராஜ்ஜியம். ஃபிஷ்க் ஃபிஷ்க் என்று சானலை மாற்றிக்கொண்டே இருப்போம். ஆனால் சானலை மாற்றினாலும் டீவீ ஸ்கிரீன் முழுவதும் படம் வருமே.
இப்போ பாருங்கள். டீவீயை ஆன் பண்ணினால், ஒண்ணு ஃப்ளாஷ் நியூஸ் ஸ்க்ரால் ஓடும் இல்லாட்டி வேலையத்த வெட்டி மக்கள்ஸ் அவங்கவங்க கேர்ள்பிரண்ட்ஸ் பாய்ஃப்ரெண்ட்ஸுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி நம்மளை டார்ச்சர் பண்ணுகிறார்கள். முதலில் இந்த மியூசிக் சானல்களில் வரும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளைப்பார்ப்போம்.
எழவெடுத்த மாதிரி இந்த கலாச்சாரம் 2004ல் தான் வந்த மாதிரி இருக்கு. யாருக்காவது சரியான வருஷம் தெரிந்தால் பின்னூட்டம் போடவும். நான் கவனிக்க ஆரம்பித்தது 2004ல் தான். வெட்டித்தனமாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்குற பாலன்ஸ் எல்லாம் ஸ்வாஹா பண்ணிவிடும் இந்த தண்ட மெஸ்ஸேஜூகளை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அனேகமாக ஸ்கூல் (அ) கல்லூரியில் (நிச்சியமாக படிக்காமல்) ஓபியடிக்கும் இனமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.
அந்த எஸ்.எம்.எஸ்ஸாவது ஒழுங்கா அனுப்புகிறார்களா? அதில் ஒரு 1008 தப்பும்தவறுமா தட்டி விடறது! யாரு திருத்தப்போறான்னு ஒரு தெனாவெட்டு! இந்த அழகுல கேர்ள்பிரண்டு வீட்டில் கண்டுபிடிக்க முடியாத படி கோடு வேர்டு வேற வெச்சுக்குவாங்க. ”டி.கே, ஐ லெள யூம்மா” ன்னு அடிப்பாங்க. அப்புடி தில்லாலங்கிடித்தனமா எஸ் எம் எஸ் லவ்வாம். ஐ மிஸ் யூ டா செல்லம், ப்ளீஸ் கால் மீ. இந்த இழவை நேரடியா அந்த பொண்ணு போனுக்கே அனுப்பக்கூடாதா? மொபைல் இல்லாத மாணவிகளா? எந்த ஏஜ் ல இருக்கீங்க?
வாட் டூயிங்ன்னு சில நாதாரிகள் கேட்கும். டீவீல பாட்டு பாக்க முயற்சி பண்ணறேண்டா எருமை, விடாம நீ இம்சை பண்றே, மவனே உன்னை.ன்னு நம்ம ப்ளட் பிரஷர் எகிறும்!
சில வானரங்கள் வீட்டுல இருக்கும் நெருங்கிய உறவினர்களை எல்லாம் பற்றி தம் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டு இருப்பார்கள்.” ஐ லெள மை மதர், ஐ லெள் மை டாட்டர் ” இந்த ரேஞ்சில் இருக்கும். இந்த எழவுக்கு 4 ரூபாய் செலவு பண்ணாம நேரடியா சொன்னா என்ன? அப்புடி எல்லாருக்கும் தெரியும் படியா அவங்க அன்பை வெளிப்படுத்தறாங்களாம்!!
சில கேனைகள் தம் நம்பரைக்கொடுக்கும்! ”கால்மீ, ஐ வாண்ட் டு ஃப்ரெண்ட்ஷிப் நியூ ஃப்ரெண்டு”ன்னு தப்புத்தப்பா ஸ்பெல்லிங் எல்லாம் எழுதி எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கும். உன் ஸ்பெல்லிங்கை பார்த்தாலே உன்னை எல்லாரும் ப்ளாக் பண்ணிடுவாங்க லூஸூன்னு நினைச்சுப்பேன்.
இதெல்லாம் பத்தாதுன்னு கம்பேட்டபிலிட்டி (compatiability) பார்த்து சொல்றாங்களாமா. நாம பேரும் நம்ம பார்ட்னர் பேரும் எழுதிவிட்டா, அவங்க நமக்குள்ள பொருத்தம் எப்புடீன்னு பார்த்து சொல்லுவாங்களாம். எல்லாம் நம்ம நேரம்.ஒரு ஜோஸியர்கிட்ட ஜாதகத்தை எடுத்துண்டு போனாலும் உபயோகமா இருக்கும். அந்த பிரடிக்ஷன்ஸ் எல்லாம் பார்க்கணுமே! மஹா அபத்தமா இருக்கும். ”நீங்கள் இருவரும் ஒருவருக்கோசம் ஒருவர் பிறந்தவர்கள்”ன்னு பேத்தும்!.அதுவும் ரெண்டாவது வாட்டி இதே பேர்களை அனுப்பினா, அது இப்போ ”உங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா ஒர்க்கவுட் ஆவாது, அனேகமா இந்த மெஸ்ஸேஜ் படிக்கறதுக்குள்ளேயே பிரிஞ்சுடுவீங்க”ன்னு சொல்லித்தொலைக்கும்! அதுவும் புருஷன் பொண்டாட்டியா இருந்தா கேக்கவே வேண்டாம். இவங்க சொல்ற எந்த ஒரு பிரடிக்ஷனுமே வேலை செய்யாது. காசைக்குடுத்து இப்படி குடும்ப மானம் கப்பல்ல போகணுமா? இதுக்கெதுக்கு மாங்கு மாங்குன்னு உக்காந்து பாலன்ஸை தொலைக்கணும்?
சில ப்ருஹஸ்பதிகள் போஸ்டு பெயிட் கனெக்ஷன்ல இருந்து மெஸ்ஸேஜுகளை ஃப்ள்ட் பண்ணிண்டு இருக்கும்! இல்லே, தெரியாமத்தான் கேக்குறேன், நாங்க டீவீ பாக்குறதா இல்லே நீ அனுப்புற டுபாக்கூர் எஸ்.எம்.எஸ் படிக்கறதா?
இது ஆச்சா, இப்போ நியுஸ் சேனல்களில் வரும் இம்சைகளைப் பார்ப்போம்! சில சானல்களில் 3 ஸ்க்ரால்கள் ஓடிக்கொண்டு இருக்கும். அடியிலிருந்து ஏதாவது ஒன்று பங்குச்சந்தை நிலவரமா இருக்கும். ஒண்ணு ஏதாவது ஒரு இ.வா ஸ்பான்சர் பிடித்து அவர்கள் கொம்பேனி விளம்பரமா இருக்கும். (இதுவே சன் தொலைக்காட்சின்னா தீராத விளையாட்டுப்பிள்ளையாத்தான் இருக்கணும்!)மேல் மோஸ்டு ஸ்க்ரால் வில் பீ ஃபார் ஃப்ளாஷ் நியூஸ். இப்போதைக்கி ஹாட் செல்லிங் நம்ம சாமியார் சங்கதி தான். சோ, பை டீஃபால்ட் அதான் ஓடிட்டு இருக்கும். தெரியுதோ தெரியலையோ புரியுதோ புரியலையோ, உண்மையோ பொய்யோ, இருக்கோ இல்லையோ, ராப்பகலா ‘சாமியார்’ என்ற கீவேர்டு கொண்ட ஃப்ளாஷ் நியூஸ் மட்டும் தான் சாஸ்வதம். மற்றபடி ஒரு வாரத்தில் சாமியார் விஷய்ம் ஓய்ந்தவுடன், ராயபுரத்தில் குழாயடி சண்டை!!! 2 பெண்கள் காயம்! விவரம் 8மணி செய்திகளில்! காணத்தவறாதீர்கள்!!! அப்படீன்னு போட்டு தாக்குவாங்க!
மேலே டாப் ரைட்ல டைம் அண்டு டேட். ஏன்னா நியுஸ் சானலாச்சே! நம்ம வீட்டுல காலெண்டரோ கெடியாரமோ கிடையாதே.. அப்புறம் லெஃப்டு சைடு பெரும்பாலும் இவர்கள் லோகோ, ராட்சத அளவில் இருக்கும். மற்றபடி சைடில் கொஞ்சூண்டு இடம் இருந்தால் அது, ஜோடி நம்பர் 1 சீசன் 3 , தங்கம், வெள்ளி இந்த மாதிரி மூக்குறிஞ்சிங் நெடுந்தொடர்களின் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்படும். ஆச்சா? இதுவே சன் நியூஸா இருந்தா, 4 ஸ்க்ரோலிங் பக்கத்துலேயே தீ.வி.பி படத்தின் ரிலேடட் ஐட்டம்ஸ் எல்லாம் போட்றுவாங்க. இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் கட், செகண்டு கட், தர்டு கட், கழுத்து கட்ன்னு போட்டு வெட்டித்தனமா அந்த நடிகரின் வீர தீர சாஹஸங்களைப்பத்தி போட்டுண்டே இருப்பாங்க! பரபரப்பாம்! தீ.வி.பி ரசிகர்களிடம் அமோக ஆதரவு.. அபார சாதனைன்னு நீண்டுண்டே இருக்கும்! அப்போ சம்மரைஸ் பண்ணி பார்த்தா, கீழ 4 ஸ்க்ரால், மேல லோகோ, டைம், டேட், சைடுல ரியாலிட்டி ஷோ, மூக்குறிஞ்சி எல்லாம் போக, சுமார் 3 செ.மீ இடம் பாக்கி இருக்கும். இதில் செய்தி வாசிக்கும் பெண்ணோ பையனோ இடம் பெறுவார்கள். மிகவும் நெருக்கடியில் உட்கார்ந்து நியுஸ் வாசித்துவிட்டு போவார்கள் பாவம்! எல்லாத்துக்கும் மேல பார்வையாளர்களுக்கு எவ்வளவு கவனச்சிதறல்? தொல்லையா இருக்கே. எதை எடுக்க எதை விடுக்கன்னு குழம்பிட மாட்டாங்க?
இந்த கண்றாவிக்கு நம்ம பழைய தூர்தர்ஷன் ஒலியும் ஒளியும் & சோபனா ரவி / தமிழ்ச்செல்வன் செய்திகளும் எவ்வளவோ பரவாயில்லைன்னு தான் எனக்கு தோணுது! நீங்க என்ன சொல்றீங்க?
39 comments:
:-) riteuuu
உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன அநன்யா. அது என்ன, செல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் டீ.வீ யில் தெரியுமா? இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே?
TV Channels paarthu romba pbathikaptrukapa pola iruku,. makkale ithanala teriyarathu ennana, invanga ulaga maha vetttti
யாத்ரீகன்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.
அமர பாரதி,
அப்போ நீங்க டீவீ பார்த்து பல்லாண்டுகள் ஆச்சுன்னு சொல்லுங்க. இப்பெல்லாம் மியூசிக் சானல்கள்ல ஒரு நம்பர் குடுக்கறாங்க. அந்த நம்பருக்கு நாம எஸ் எம் எஸ் அனுப்பினா, நம்ம செய்தியை இந்த பூலோகமே பார்க்கும்.
டியர் எனிமி எல்.கே,
நான் வெட்டீன்னு நீ சொல்றதுக்கு முன்னாடியே நான் ஒத்துண்டாச்சு. என் பழைய போஸ்டைப் பார்க்கவும். http://ananyathinks.blogspot.com/2009/12/blog-post_1485.html
எனிமியா இருந்தாலும் எனிவே, உன் பின்னூட்டத்துக்கு நன்றி!
சூப்பராச்சொன்னீங்க... நீங்க எஸ்எம்எஸ் மட்டும்தான் வெட்டித்தனம்னு சொல்றீங்க. நான் அந்த மியுசிக் சேனலுக்க போனைப்போட்டு பேசுறானுங்களே ...அதையே வெட்டித்தனம்ங்கறேன்.
என்ன இருந்தாலும் நம்ம பழைய தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை அடிச்சுக்க முடியாது...
ஆஹா, ஆஹா, அடுத்த பதிவுக்கு ஐடியா குடுத்த நாஞ்சில் தம்பி, தங்கக்கம்பி!
நாஞ்சில் எக்ஸ்பிரஸ் வாழ்க
நாஞ்சில் எக்ஸ்பிரஸ் வாழ்க
நாஞ்சில் எக்ஸ்பிரஸ் வாழ்க! :)
அசத்தலான ரிப்போர்ட்..
இவங்க அநியாயத்தைக் கேக்க யாருமில்லையான்னு நினைச்சிட்டிருந்தப்ப தட்டிக்கேக்க அநன்யா வந்திருக்கீங்க. இப்படியே நீங்கதான் அடுத்து போன் போட்டு பேசற நிகழ்ச்சிக்களையும் கேக்கனும்..
என்ன அப்படி பாக்கறீங்க..
”இனி எல்லாம் அப்படித்தான்”
(தமிழ்படம்)
சரி இதனால டிவி, செல் கம்பெனிக்கு வர வருமானம் எத்தன கோடின்னு தெரியுமா? மெசேஜ்க்கு கொடுக்கற 3 ரூவால எல்லாருக்கு பங்கு...
//டிஸ்கி: இந்தப்பதிவு என் தங்கைமணிக்கு சமர்ப்பணம். ஏன்னா அது தான் இந்த மாதிரி ஸ்க்ரால் எல்லாம் தேடித்தேடி படிக்கும். மியூசிக் சானல்களில் வரும் ஒரு எஸ்.எம்.எஸ்ஸைக் கூட விடாமல் படித்து ’ரசிக்கும்’ அசகாய சூரி.//
Adi kraadhagi.....edho paattu paarkka vidaama kaduppadichadhunaala indha sms patthi unkitta polambina kadaisiyila enakku ippadi oru ava peyara yerpaduthittaye....inimey naan net-la purdah pottuttu vandhu dhaan mail kooda check pannanum pola irukku....oorukku vaa....unnai gavanichukkaren...
அநன்யா, உங்க போஸ்டை படிச்சு சிரிச்சேன், உங்க தங்கை(?) கமெண்டை படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன் :D
அக்காவும் தங்கையுமா நல்ல புண்ணியம் தேடிக்கறீங்க, எல்லாரையும் சிரிக்க வெச்சு! ;)
சரி காண்டு ...அப்புறம் எப்பவுமே அரை டிவி தான் தெரியும் ... மீதி எல்லாம் இந்த ஸ்க்ரோலிங்க் கழுத்தறுப்பு தான்
அது சரி ..... வந்து கும்மிட்டு போனது தங்கச்சியா .... இப்போதைக்கு ஊரு பக்கம் போற ஐடியா இருக்கா ?
wow where is my popcorn.. let me enjoy the fight show
ஹலோ மேடம் உங்க பீலிங்க்ஸ் புரியுது, அநேகமா உங்களுக்கு 2004 முன்னாடியே கல்யாணம் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன், ரொம்ம்ம்ப பீ...ல் பன்ரிங்க, என்னா பன்றது நமக்கு....சே சாரி டக்கு சிலிபாயிடுச்சு உங்களுக்கு அந்த கொடுபின இல்லை. வுடுங்க , வுடுங்க நம்ம... சே மறுபடியும் டக்கு சிலிபாயிடுச்சு நீங்க அடுத்த ஜென்மத்தில ட்ரை பண்ணுங்க ( ஹலோ மேடம் தமிழ்ல டைப் அடிக்கிறதே பெரிய இம்ச , இதுல தப்பு இல்லாம அடிக்கணுமாம், நல்ல கதைய இருக்கே ?)
// நீங்க என்ன சொல்றீங்க? //
நீங்க வேலை வெட்டி இல்லாம நிறைய நேரம் டீ வீ பார்க்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். நாங்க இதை எல்லாம் கவனிப்பது இல்லை, அதிலையும் அந்த காம்பியர் துக்குனூண்டு கவுனில் அழகாக தமிழைக் குழறித் துப்பிப் பேசும் அழகே தனி. அதைப் பார்த்து ஜொள்ளு விடுவதை விட்டுட்டு இந்த எஸ் எம் ஏஸ் பார்க்குற அளவுக்கு நாங்க என்ன இளிச்சவாயர்களா? என்ன அம்மினி நான் சொல்றது சரிதானுங்க.
(இதுவே சன் தொலைக்காட்சின்னா தீராத விளையாட்டுப்பிள்ளையாத்தான் இருக்கணும்!)மேல் மோஸ்டு ஸ்க்ரால் வில் பீ ஃபார் ஃப்ளாஷ் நியூஸ். இப்போதைக்கி ஹாட் செல்லிங் நம்ம சாமியார் சங்கதி தான். சோ, பை டீஃபால்ட் அதான் ஓடிட்டு இருக்கும். தெரியுதோ தெரியலையோ புரியுதோ புரியலையோ, உண்மையோ பொய்யோ, இருக்கோ இல்லையோ, ராப்பகலா ‘சாமியார்’ என்ற கீவேர்டு கொண்ட ஃப்ளாஷ் நியூஸ் மட்டும் தான் சாஸ்வதம். மற்றபடி ஒரு வாரத்தில் சாமியார் விஷய்ம் ஓய்ந்தவுடன், ராயபுரத்தில் குழாயடி சண்டை!!! 2 பெண்கள் காயம்! விவரம் 8மணி செய்திகளில்! காணத்தவறாதீர்கள்!!!
கலக்கோ கலக்கல். அதெப்படி அபுதுபாயிலிருந்தே சன் டிவி24 மனிநேரம் பார்க்க முடியுது.
/நீங்க வேலை வெட்டி இல்லாம நிறைய நேரம் டீ வீ பார்க்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்/ without any doubt...:) LOL
@ முத்துலெட்சுமி அக்கா,
சினிமா விஷயங்களுக்கு ”சிவா, நீ எங்கே இருக்கேடா? காப்பாத்து”ன்னு கத்தலாம். ஆனா டீவி நச்சுக்கு என்னிக்கிமே இந்த அநன்யா தான்! கத்தம் கத்தம்.
@அண்ணாமலையான்,
அது சரிங்க, நீங்க வியாபாரிகள் சார்பா பாக்கறீங்க. நான் வாடிக்கையாளர்கள் சார்பா பேசுறேன். அந்த பிரும்மஹத்திகளுக்கு கந்துவட்டியில் கடன் வாங்கி கைப்பேசி வாங்கிக்குடுத்தா இதுகள் இப்படி பாலன்ஸ் காலிபண்றதுன்னு நான் ஆதங்கப்படுறேன். கஸ்டமர் எக்ஸ்ப்ளாயிட்டேஷன்.
@தங்கைமணி,
ஏன் இந்த கோபம்? அலை அடிச்சு நீர் விலகுமா? (இப்போ எதுக்கு இந்த டயலாக் எல்லாம்? ஞ)உன் பெயர் ஏழேழு லோகத்துலேயும் எதிரொலிக்கணும்ன்னு தான் நான் சதா சர்வ காலமும் பாடு படறேன். அதை நீ புரிஞ்சுக்கணும்.
@பொற்கொடி,
யெஸ்ஸு, சிஷ்டர் (ஐயோ சாமியார் சம்பந்தப்பட்ட வாக்கியம் இல்லேப்பா, சிஸ்டர்ர்ர்னு சொல்ல வந்தேன்)ஊரே சிரிப்பா சிரிச்சு போயிறும்ன்னு மனோபாலா சொல்லுவாரே அதே மாதிரின்னா இருக்கு?
@பத்மநாபன் சார்,
அதே அதே! என்னை நொங்கெடுக்கும் என் விரோதி.
@LK,
அப்பப்போ ஆஃபீஸ் வேலையும் பார்க்கணும்ப்பா, சம்பளம் வாங்குறோமே?
@மங்குனி,
உங்களுக்கு, சாரி டங்கு சிலிப், சிலருக்கு ஒரு டிஸ்கி போட்டு இருக்கேனே? மேற்கொண்டு படிக்கவேண்டாம்ன்னு? அவனா நீய்யீ?ன்னு வடிவேலு சொல்லுவாரே அதே டயல்லாக் தான் வந்திச்சு.
@ பித்தனின் வாக்கு
நன்றிங்க கருத்துக்கு. (இதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்றது, எல்லாம் வயசுக்கோளாறு சரியாப்போயிடும்)
@TRC அவர்களே,
மிகவும் நன்றி சார். இங்கே சன் மட்டும் தான் வரும், மியூசிக், நியூஸ் வராது. சன்னும் பார்ப்பதில்லை. எரிச்சல் படுத்தும் சானல்களை நான் தவிர்க்கிறேன்.
@தக்குடு,
யூ டூ புரூட்டஸ்?
நல்ல அலசல் பதிவு. வீட்டில டீவி பார்த்து ரொம்ப வெறுத்திருப்பீங்க போல. டீவி பார்த்து கடுப்பாயி (குறிப்பா நியூஸ் சேனல்) என் ரூம்ல இருந்த டீவியையே வித்துட்டேன் நான், நம்மால முடியல சாமி.
டிவியில எஸ் எம் எஸ் தொந்தரவு, ஏதோ ஒரு பாட்டைக் கேட்டுட்டு அதை 'டெடிகேட்' வேற பண்ற கொடுமை தனி. பேசியே கொல்ற எஃப் எம் ரேடியோ தொந்தரவு தனி பேஜார்...
என் ரத்தத்தால் எழுதிய (ஹீ ஹீ) பின்னூட்டத்தை உங்கள் காலடிக்கு அனுப்பறேன்.
எனக்கு மிகப் பிடித்த விஷயத்தை எழுதியிருக்கிறீர்கள். அது:
டிவியில் பார்வையாளர்களுக்கு ஏற்படுகிற கவனச்சிதறல். இதை சுருக்கமா absurd visualization என்று சொல்லலாம்.
நம்மூர் NDTV, CNN-IBN, Sun News வகைகளைப் பார்த்துவிட்டு BBCயைப் பாருங்கள். எளிமையாக வித்யாசம் புரியும்.
எல்லா விஷயமும் கொடுக்கிறோம் என்ற உத்வேகத்தில் சானலை சாக்கடையாக்கிக் கொள்கிறார்கள்.
நீங்களும் இது போன்ற உங்கள் கவனத்துக்கு எட்டிய விஷயங்கள் பற்றி எழுதுங்கள்! வாழ்த்துகள்!
அப்புறம் 1:
டிவிக்கு sms அனுப்பறவங்களைத் திட்டாதீங்க.. பலபேர் காதல் அதிலதான் horizontalஆ ஓடிக்கிட்டு இருக்கு. Love-meterன்னு இப்ப டிவிக்கள் பண்றவேலைய முன்பு ஸ்கூலில் flamesவிளையாட்டாக இருந்தது.
காசுக்கேத்த பணியாரம் மாதிரி, காலத்துக்கேத்த வியாபாரம்! அஷ்டே :))
@அண்ணாமலை சாமி,
நியூஸ் சானல் லொள்ளுனால டீவீ வித்துட்டீங்களா? சாதாரணமா நியுஸ் சானல் பார்த்தா, நொந்தே போயிடுவோம். அதுலேயும் இந்த ஹிந்தி நியுஸ் இருக்கு பாருங்க, ரொம்ப ஹாரிபிள்!ஐஸ்வர்யா ராய் வீட்டின் குப்பைத்தொட்டியைக்கூட தீவிரமாக ஆராய்ச்சி பண்ணுவார்கள். பக்கிகள்!
@ஸ்ரீராமண்ணா,
ரொம்ப ரொம்ப சரியாச்சொன்னீங்க!
முன்னாடி எல்லாம் சுச்சி பேசறதை ரசிச்சுண்டு இருந்தேன். இப்பெல்லாம் ரொம்ப தலைவலி. சகட்டுமேனிக்கி பேசறாங்க. டெடிக்கேட் பண்ற விஹாரம், எம் டீவீயிலிருந்து ஆரம்பித்ததாக நினைவு.
@ஜெகநாதன்,
:)
இவ்ளோ டெக்னிக்கல் ஆராய்ச்சி எல்லாம் பண்ணத்தெரியலை எனக்கு. நீங்களா இருந்தா இன்னும் டீடெயில்டா எழுதி இடுப்பீங்க.
காதல் ஹாரிசாண்டலா ஓடிக்கிட்டு இருக்குன்னு சொல்றது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத்தெரியல?அய்யா, ஃப்லேம்ஸ்ல ஒரு 5 பிரடிக்ஷன்ஸ் தான் வரும். இவங்க தாருமாறா அடிச்சு விடறாங்களே?இவங்க சொல்ற பிரடிக்ஷன்ஸ் பாத்துட்டு சொல்லுங்க.
ரொம்ப சிம்பிள்.
தொலைக்காட்சிப்
பெட்டியை
அணைத்திடுங்க.
அதுதான் ஒரே வழி.
//அப்பப்போ ஆஃபீஸ் வேலையும் பார்க்கணும்ப்பா, சம்பளம் வாங்குறோமே?//
echuz me athellam nanga panrom
@mathu
good idea
-LK
http://vezham.co.cc
@மதுமிதா,
உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
கருத்து டீவீ பார்த்து நொந்தவர்களுக்கு அனுப்பப்படும். என் வீட்டில் டீவி போடுவதே இல்லை. ஏன்னா சன் டீவீ மட்டும் தான் இருக்கு. பாக்கி எல்லாம் மலையாளம்.
மக்களே, டீ வீ ஆஃப் பண்ணுங்க, சந்தோஷமா இருங்க! (கோப்பால் பல்பொடி விளம்பர ஸ்டைலில் படிக்கவும்)
//” ஐ லெள மை மதர், ஐ லெள் மை டாட்டர் ” இந்த ரேஞ்சில் இருக்கும். இந்த எழவுக்கு 4 ரூபாய் செலவு பண்ணாம நேரடியா சொன்னா என்ன? அப்புடி எல்லாருக்கும் தெரியும் படியா அவங்க அன்பை வெளிப்படுத்தறாங்களாம்!! //
:))) ரொம்ப கரெக்ட்...ஆனா பாருங்க இந்த பொண்ணுங்களுக்கு டி.வி. மூலமா எஸ் எம் எஸ் பண்ணுறவன்லாம் அப்ரசண்டியா இருப்பான்..ஆரம்பத்துல கொஞ்சம் ஆர்வக் கோளாறு இருக்கத் தானே செய்யும் :)) ஆனா எனகென்னம்மோ இதுலபாதி டி.வி சேனலே நமக்கு நாமே திட்டத்துல போட்டுக்கறாங்களோன்னு தோனும்.
நல்லா எழுதியிருக்கீங்க அநன்யா. படிச்சு சிரிச்சேன்.
இதெல்லாம் கூட பரவாயில்லிங்க அநன்யா, சன் ம்யூஸிக்ல லேடீஸ் சாய்ஸ் நிகழ்ச்சியில் வரும் போன் கால்ஸ் பெரிய காமடி.
இதில் ரெகுலர் காலர்ஸ் வேற. அதில் ஒரு அம்மா பேசும் பாருங்க. ஏண்டா கண்ணு, அம்மா மேல கோபமா? ரெண்டு நாளா கால் பண்ணலேன்னு கோபமா? இந்தாடா நீ அக்கா கிட்ட பேசுடா.. என்று ஓவர் டு அனதர் பாட்டி.
இது மாதிரி நிறைய இருக்குங்க.
அசத்தலான ரிப்போர்ட்
அன்புள்ள எல்.கே,
நீ? ஆபீஸ் வேலை? சரி நம்புறேன். (ஆனா ஒண்ணு மட்டும் புரியலை. அதெப்படி யாரு பின்னூட்டம் போட்டாலும் கண்டுக்க மாட்டேங்கற? ஒரு லேடி போட்டா மட்டும் ஓ....டி வந்து ரிப்ளை பண்ணுறே? :P
டியர் குருவே,
உங்கள் தாள் பணிந்து நமஸ்கரிக்கறேன். //ஆரம்பத்துல கொஞ்சம் ஆர்வக்கோளாறு இருக்கத்தானே செய்யும்// அப்படீன்னா? இருக்குடீ உங்களுக்கு.. வாடீ, வா..திரி எந்தப்பக்கம் கொளுத்தினா வாகா இருக்கும்ன்னு பாக்கறேன்.
// இதுலபாதி டி.வி சேனலே நமக்கு நாமே திட்டத்துல போட்டுக்கறாங்களோன்னு// ஹ்ம்ம்.. இருக்கலாம். ஆளு பிடிச்சு, சும்மாங்காச்சுக்கும் எஸ் எம் எஸ் தட்டி விடச்சொல்றது.அப்படி வர்ற SMS எல்லாம் கணக்குல வராது! இந்த தண்ட கண்றாவியைப்பார்த்து மோட்டிவேட் ஆயி பல் பிரும்மஹத்திகள் அனுப்புற SMS மட்டும் தான் நான் சொல்வது.
ada rama thangaimani narmadha thaan andha narmadhava.. hihi naan thaan bulb ache.. enaku therinja 4 narmadhavai vechu yosichu yosichu moolai kuzhambi poiten.. :)
@அனுஷா சித்ரா,
உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க.
நீங்க சொல்றது ரொம்ப கரக்ட். காலர்ஸ்பத்தி அடுத்து எழுதணும்ன்னு நினைச்சுண்டு இருக்கேன். நீங்க சொன்ன நிகழ்ச்சி செம்ம காமெடி போங்க. இப்படியும் சில காலர்ஸ்!
@ராதாகிருஷ்ணன் சார்,
உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக நன்றி சார்.
@பொற்ஸ்,
யெஸ்ஸு, திஸ் நர்மதா, மை சிஸ்டரு. ஷீ லெளஸ் ரீடிங் தி ப்ளாக் மூன் பை பொற்ஸ்! :)
இப்ப தாங்க உங்க தளத்துக்கு முதல்ல வர்றேன். TV ல வரும் SMS இம்சையை நல்லா எடுத்து சொல்லி இருக்கீங்க. superங்க.
டியர் முகுந்தம்மா,
வெல்கம் டூ மை ப்ளாக். தேங்க்யூ ஃபார் யுவர் நைஸ் கமெண்ட்ஸ்.
ஜூப்பரு.
//இந்த கண்றாவிக்கு நம்ம பழைய தூர்தர்ஷன் ஒலியும் ஒளியும்//
repeattei..
akka.... eppidika... ivalo periya research... adhuvum indha vishayathila.... lol
chuppper akka... vaalga valamudan (naan blogs ku pudhusu.. adhu eppadi tamil la type panraanga :(( )
mmm good blogg for some relaxation continueeee.........
அரதப் பழசான இந்தப் பதிவை, இப்போ பொதிகை தூர்தர்ஷனில் கச்சேரி கேட்டுக் கொண்டே படிச்சேன்னு சொல்லிக்கிறேன். :))))) ஹாஹாஹா, ரொம்பவும் தொலைக்காட்சி பார்த்தா இப்படித்தான் ஆயிடும். :))))
தொடர, அது சரி, நர்மதா உங்க தங்கையா?? அவங்க எழுதறதில்லையா?
Post a Comment