Pages

Sunday, May 9, 2010

மனம் ஒரு குரங்கு - 13

ச்சும்மா கொஞ்சம் வம்பு!

வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு. அதான் ஒரு போஸ்டு வெட்டி வம்புக்கு டெடிக்கேட் பண்ணிடுறேன்.

எல்லா இடத்துலேயும் அன்னையர் தினம் ஸ்பெஷல் பதிவு போடுறாங்க. சாரி. எனக்கு இந்த அமெரிக்க கலாச்சார தாக்கம் கிடையாது. நான் டிப்பிக்கல் மருதைக்காரி. அதும் கிராமத்துக்காரி. ஸோ, நீங்க எதிர்ப்பார்க்குற அளவுக்கு எனக்கு சோஃபிஸ்டிக்கேஷன் எல்லாம் போறாது.

நான் காற்றை உணர்ந்து சுவாஸிக்கறது உண்மையானா, இனி வருங்காலம் நல்லா இருக்கும்ன்னு நான் நம்புறது உண்மையானா,  பகவத் ஸ்மரணையில் நான் சஞ்சரிக்கறது உண்மையானா, நிச்சியமா எங்கம்மாவை ஒரு க்ஷண நேரம் கூட மறக்கலைங்கறது தான் உண்மை. நான் மட்டுமில்லை எல்லோருமே அப்படித்தான்.  அவங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி செலெப்ரேட் பண்ணி கார்டு குடுக்கறது, பாட்டு டெடிக்கேட் பண்றது, பதிவு போடுறது இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை. வியாபார நோக்கோடு செய்யப்பட்ட இந்த மாதிரி முட்டாள்த்தனமான அமெரிக்க கலாச்சாரம் எனக்கு தேவையில்லை. இதை நான் நிராகரிக்கறேன்.  இன்னும் சொல்லப்போனா இதெல்லாம் எங்கம்மாவை நான் கேவலப்படுத்தற மாதிரி தோணறது. மேற்கத்திய கலாச்சாரம் என்னிக்கும் என்னை பாதிக்காது.
மாத்ருதேவோ பவ. சதாஸ்ம்ருதிஹி!


இப்பெல்லாம் அபுதாபி வாழ்க்கையே மாறிப்போச்சு. முன்னே மாதிரி வருத்தமோ வெறுப்போ இருக்கறதில்லை. அப்படி என்ன மாற்றம்ன்னு யோசிச்சப்போ ரெண்டு விஷயங்கள். ஒண்ணு புது நட்பு. புதுத்தோழிகள் கிடைச்சிருக்காங்க. ரெண்டு சென்னை ரேடியோ. ஆஹா.. ஹலோ எஃப்.எம். கேட்டுண்டே வேலையேல்லாம் நிமிஷமா ஆயிடுறது. சதா வளவள பேச்சுன்னு மக்கள்ஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் என் சுபாவத்துக்கு இந்த ரேடியோ ரொம்பவே பொருத்தம் தான்.குறிப்பா சென்னை விளம்பரங்கள் எல்லாம் வர்றது. ராஜா பாதர் ஸ்ட்ரீட் ரத்னா ஃபேன் ஹவுஸ்,லேட்டஸ்டு சினிமா, லேட்டஸ்டு பாட்டு  இதெல்லாம் கேக்கும்போது சென்னையில இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங்கி! ஒரு அஞ்சாறு வருஷம் முன்னாடி கார்த்தால சுசித்ரா குரல் கேக்காட்டி விடிஞ்சதா அர்த்தமே இல்லை. அந்த அளவுக்கு ரேடியோ கேட்டு இருக்கேன்.  அதுலேயும் அந்த நாலு மணி வாலு அலோஷியஸும் சாயந்திரம் ப்ரைம் டைம் ஷோ நடத்தும் சுரேஷும் சூப்பர். ரொம்ப நல்லா எனர்ஜிட்டிக்கா நடத்துறாங்க. குரல் மட்டும் நல்லா இருந்தா போறாது நல்லா சுவாரஸ்யமா நிகழ்ச்சி நடத்த தெரியணும். நிறைய விஷயங்கள் இருக்கு. இங்கே துபாயில் சக்தி எஃப்.எம். ஆர்.ஜேஸ் கேட்டப்போ நான் அப்ளை பண்ண ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அவங்க அலுவலகம் வேற ஊர்ல இருந்ததால அந்த எண்ணத்தை கைவிட்டுட்டேன்.
யாருக்காவது சென்னை ரேடியோ கேக்கணும்ன்னா இங்கே க்ளிக்கவும்.


மெதுவாக இங்கே வெயில் காலம் ஆரம்பமாயிடுத்து. பகல்லே ஃபுல் டைம் ஏசீ போட்டுக்க வேண்டி இருக்கு. போன மாசம் வெளியே போகும் போது ஈச்சமரத்தில துளிர் விட்டுண்டு இருந்தது. ஈச்சந்தளிர் (சொற்றொடர் சரியான்னு தெரியாது) முதல் முறையா ரொம்ப கவனிச்சு பார்க்க முடிஞ்சது. இங்கே சாலையோர குட்டை மரங்கள்ல இருந்து தென்னந்துளிர் மாதிரி பச்சையா வந்ததை கவனிச்சேன்.

இங்கே எல்லாம் இது சர்வ சாதாரணம். இந்த ஈச்சந்துளிர் வந்த உடனே, வலை கட்டி விட்டுடுவாங்க. பேரீச்சைப்பழங்கள் எல்லாம் அந்த வலையில கனிஞ்சு தானா சேர்ந்துடும்.உங்களுக்காக ஒரு 3டைமென்ஷனல் ஈச்சமரம்.



 நல்லா இருக்கு இல்லே? :-)


UAE யில் மட்டும் 4 கோடி ஈச்ச மரங்கள் இருக்காம்! ஜபலாலியில வேலை செய்ஞ்சப்போ எங்க ஆபீஸ் வாசல்ல ஒரு 10 மரங்கள் இருந்தது. எல்லா மரங்கள்ல இருந்தும் இந்த பழங்கள் கீழே விழுந்து இருக்கும். கனிஞ்சு தொங்கிண்டு இருக்கும் பேரீச்சை பழங்களை உயரமான ஒருத்தரை பறிச்சுத்தரச்சொல்லி க்கேட்டப்போ அவருக்கு பயங்கர ஆச்சரியம்! இங்கே இருக்கும் அரபியர்கள், மற்ற நாட்டவர்கள் எல்லோருக்கும் இந்த மாதிரி நான் பண்ணினதுல ரொம்ப ஆச்சிரியம். இவங்களுக்கு அப்படியெல்லாம் பண்ணனும்ன்னு தோணலை போல இருக்கு! நான் தான் ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயிலைக் குடிக்கிற கேஸு. அதுமட்டுமில்லை, ஆனஸ்டா சொல்லணும்னா,  ஃப்ரெஷ்ஷா பறிச்ச ஈச்சம்பழம் எப்படி இருக்குன்னு பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆர்வம். அதான் அப்படி கேட்டேன். ஹீஹீ.. என்னதான் நாம பூசி மொழுகினாலும் நம்ம உண்மை எல்லாம் வெட்ட வெளிச்சம்தானே?


சைனீஸ் சால்டு எனப்படும் அஜினோமோட்டோ (மோனோ சோடியம் க்லூடமேட்) பொட்டலத்துல கட்டி வாங்காதீங்கன்னு இப்போ விழிப்புணர்வு கொண்டு வந்திருக்காங்க. என்ன ப்ரயோஜனம்? நாள்பட அதை சாப்பிட்டா நல்லதில்லைன்னு படிக்கறேன்.ஏகப்பட்ட சைடு எஃபக்ட்ஸ் இருக்குன்னு பக்கம் பக்கமா எழுதறாங்க.

சைனீஸ் ஃபுட் சிண்ட்ரோம்ன்னு எல்லாம் சொல்லிக்கறாங்க. இவ்ளோ ரிஸ்க் எடுத்து அதை சமைக்கணுமா? அவாய்டு பண்றது தான் நல்லதுன்னு நான் அதையெல்லாம் உபயோகிக்கறதில்லை. நம்ம ஊர்ல இருக்கற ஸ்பைஸஸ் போறுமே.. என்னத்துக்கு நாடு விட்டு நாடு வந்ததெல்லாம் சமைச்சு பிரச்சினையை விலை கொடுத்து வாங்கணும்? தேவையா?  நல்லதுன்னு பரவலா விளம்பரப்படுத்தினாலும் வேண்டாம்ன்னு ஒரு சாராரும் சொல்றாங்களே? இப்படி ஒரு காண்ட்ரவர்ஷியல் ஐட்டத்தை சமைச்சே ஆகணுமா? உங்க கருத்தை சொல்லுங்க.

இந்த அக்ஷ்ய த்ருதீயை லொள்ளு தாங்க முடியலை! புதுசா காழியூர் நாராயணன் ரேடியோல வந்து ப்ளாட்டினம் நல்ல எனர்ஜியாக்கும் அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு எல்லாம் உதார் வுட்டு, இந்த அக்ஷ்யதிருத்தியைக்கு கண்டிப்பா எல்லோரும் ப்ளாட்டினம் வாங்குங்கன்னு சொல்லிட்டு எஸ் ஆயிட்டார். இந்த மனுஷனாலத்தான் சில வருஷம் முன்னாடி இந்த அக்ஷய த்ரிதியை இப்படி கன்னா பின்னான்னு பாப்புலர் ஆச்சு. ஜீ.ஆர்.டிக்குள்ளே கடுகு போட இடம் இல்லை!!!! மன்ச்சி யாவாரம் எல்லாருக்கும். மூணுவருஷம் முன்னாடி தமாஸ்ல கூட செம்ம கூட்டம். பேசாம வேற ஏதாவது டுபாக்கூர் ஜோஸியரை கூப்பிட்டு உப்பு, சர்க்கரை, தண்ணி இதெல்லாம் வாங்கினா வருஷம் பூரா மங்களகரமா இருக்கும்ன்னு  ஒரு திரியை கொளுத்தி போட சொல்லணும். எரிச்சல் தாங்க முடியலை! X-(

போன வாரம் ஷார்ஜா போயிருந்தோம். குழந்தைகளுடன் கீதா மன்னி வந்திருந்தார். ரங்குவுக்கு அங்கே போனா குளிர் விட்றும்ன்னு முன்னாடியே சொல்லி இருக்கேனே.. ஹீ ஹீ.. எனக்கும் தான்.. செம்ம கலாட்டா கச்சேரி நடக்கும். அதுலேயும் அண்ணா இருந்தா கொஞ்சம் அடக்கி வாசிப்பேன். அன்னிக்கி அண்ணாவுக்கு ட்யூட்டி. விடிய விடிய கலாட்டா கச்சேரி. ரங்கு என்னை ஓட்ட நான் ஓட்டப்பட.. (ஹிஹி) இப்படி தொடர்ந்தது.
“மன்னி ஹலோ எஃப்.எம் ல சாயந்திரம் 7-9 எனக்கு பிடிச்ச பாட்டா போடுவான் மன்னி, அது கழிஞ்சு இவருக்கு பிடிச்ச பாட்டு எல்லாம் வரும். அதாவது பி.யூ சின்னப்பா, எம்.கே.டீ, கே.பீ. சுந்தராம்பா, கிட்டப்பா இப்படி போடுவான் மன்னி” ”அப்படியா மோஹன், அவ்ளோ பழைய பாட்டெல்லாம் நோக்கு டேஸ்டுண்டா?-” இது மன்னி. ரங்கு, சதாரம், சாந்த சக்குபாய்,சிவகவி,ஹரிதாஸ், அரிச்சந்திரா இப்படி எது போட்டாலும் கேட்டுண்டு இருப்பார். கொஞ்சம் மிகைப்படுத்த நினைச்ச நான் சொன்னேன்,”
நீங்க வேற மன்னி, இவர் ஆலம் ஆரா பாட்டு போட்டா கூட விசில் அடிச்சுண்டு ரசிச்சு கேப்பார்” .(புரியலையா? ஆலம் ஆரா இந்தியாவின் முதல் டாக்கி - பேசும் படம்.)

சினிமா பாட்டுல இருந்து டிஸ்கஷன் மெதுவா எனக்கு பிடிக்காத டாப்பிக் பக்கம் வந்தது. என்ன டாப்பிக்கா? படிப்பு. அடுத்து என்ன படிக்கலாம்ன்னு லக்ஷ்மி கேட்டுண்டு இருந்தா. எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம், நம்ம மொக்கை ரங்கு மைக்கில்லாம பிரசங்கம் நடத்திண்டு இருந்தார். கடுப்புல நான் கேட்டுண்டு இருந்தேன். ”கோந்தே, காமர்ஸ் தான் இந்த காலத்துக்கு ஏத்த படிப்பு. காமர்ஸ் மெயின் கோர்ஸா படிச்சுட்டு மேற்கொண்டு எம்பிஏ, ஃபைனான்ஸ், ஸிஸ்டம்ஸ் இப்படி படிச்சா இந்த காலத்து சர்வைவலுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். மத்த படி வெறும் காமர்ஸ் மட்டும் படிச்சுட்டு சும்மா இருந்தா வேஸ்டுன்னு மெதுவா என் பக்கம் ஒரு திருட்டு முழி வீசினார். ருத்ர தாண்டவம் ஆட ஏதுவா ஒரு இடத்தை தேடிண்டு இருந்த நான், ”ஹான்?”ன்னு உரக்க கத்தினேன். உடனே அட்டேன்ஷன்ல நின்னுண்டு காமர்ஸ் படிச்சுண்டு ஹிந்தியும் படிச்சுண்டா சித்தி மாதிரி ஹைலி சக்ஸஸ்ஃபுல்லா ஆகலாம் கோந்தேன்னு மெதுவா ப்ளேட்டை திருப்பிட்டார்!
மன்னி & குழந்தைகள் தேடினேன் காணோம். பின்னே? கீழே விழுந்து புரண்டு சிரிச்சுண்டு இருந்தாளே!

31 comments:

Ahamed irshad said...

தேர்தெடுத்த மொக்கை..

இருந்தாலும் "மதர் டே" வாழ்த்துக்கள்...

தக்குடு said...

ம்ம்ம்....

நாஸியா said...

நல்லாத்தான் வம்பிழுக்குறீங்க.. ஹிஹி..

எனக்கும் இந்த மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது.. ஸ்கூல் படிக்கும்போது ஃப்ரென்ட்ஷிப் டே மேல கொஞ்சம் க்ரேஸ் இருந்தது.. அதோட சரி..

Asiya Omar said...

அநன்யாவும்,நாஸியாவும் யங்கோ யங்,இல்லையா ?அதனால தான் அம்மாக்களை வம்புக்கு இழுக்கறேள்,சரி இந்த வருஷம் பிழைச்சுட்டேள்,அடுத்த வருஷம் பார்ப்போம்.கையில் ஒன்று வயிற்றில் ஒன்று.

ஸ்ரீராம். said...

FM ரேடியோ...? இந்த பேச்சுக்கு நடு நடுல கொஞ்சம் பாட்டு போடுவாங்களே...அதுவா?
அந்த ஒற்றை மரம் தமிழ் சினிமா சோகக் காட்சி மாதிரி இருக்கு.

முகுந்த்; Amma said...

Super Mokkai. Nallave irukku.

பத்மநாபன் said...

அம்மா ... யாருக்கும் மாற்றுக்கருத்தில்லா வரிகள் ...

ஈச்சந்தளிர் ... பதமும் ,படமும் நல்லாருக்கு ... சீனி புளியங்காய் அடிக்கிற பழக்கம் எங்க போனாலும் நம்மள விட்டு போகாது .

ஒழுங்கா சமைக்கறவங்களுக்கு அஜினோ ..கிஜினோ ..ஜிகினா ல்லாம் தேவைப்படாது ..

///அட்டேன்ஷன்ல நின்னுண்டு காமர்ஸ் படிச்சுண்டு ஹிந்தியும் படிச்சுண்டா சித்தி மாதிரி ஹைலி சக்ஸஸ்ஃபுல்லா ஆகலாம் கோந்தேன்னு மெதுவா ப்ளேட்டை திருப்பிட்டார்!// இந்த வரி ஒரு விஷுவல் எஃ பகட்டோட சிரிப்பு வர வைத்தது .. இதை படிச்சதனாலே தான் மாப்ஸ் பூ .போ என்று அன்பாக சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன் .

Geetha Sambasivam said...

அவங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி செலெப்ரேட் பண்ணி கார்டு குடுக்கறது, பாட்டு டெடிக்கேட் பண்றது, பதிவு போடுறது இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை//

ஹிஹிஹி, எனக்கும்,, பிடிக்காது,. அநன்யா அக்கா வாழ்க, பிடிக்காதுனு சொல்றதுக்கு ஒரு பதிவு போட்ட அக்காவுக்கு ஒரு ஜே! ஜிங்குச்சா, ஜிங்குச்சா! :P

Geetha Sambasivam said...

அப்புறம் அந்த அஜினோமோட்டோ பத்திச் சொல்லி இருக்கிறது ரொம்ப சரி, உங்களை மாதிரிப் பொண்ணுங்க தான் அதிகமா அதைப்பயன்படுத்தறாங்க. ஆகவே நீங்க இதை ஒரு லோகோவாவே வச்சுடலாம் உங்க ப்ளாக் டெம்ப்ளேட்ல! என்ன சொல்றீங்க???

Anonymous said...

///அட்டேன்ஷன்ல நின்னுண்டு காமர்ஸ் படிச்சுண்டு ஹிந்தியும் படிச்சுண்டா சித்தி மாதிரி ஹைலி சக்ஸஸ்ஃபுல்லா ஆகலாம் கோந்தேன்னு மெதுவா ப்ளேட்டை திருப்பிட்டார்!///

நீங்க ரங்கஸ்ஸை பயமுறுத்துறதில பி.எச்.டி. . அப்புறம் என்ன. ஹி ஹி.

அப்புறம், உங்க ஊரில எப்டினு தெரியாது. இலங்கையில் ஈச்சமரம் என்று ஒன்று இருக்கு. கிட்டத்தட்ட இதே மாதிரி மரம் தான். காடுகளில் / பற்றைகளில் (Woods?) வளரும். சிவப்பு காய், பழுத்ததும் கரு நிறத்தில் இருக்கும். ரொம்ப இனிப்பாகவும் ருசியாகவும் இருக்கும். அன்டிபயோடிக் காப்சூலை விட கொஞ்சூண்டு பெரிய சைசில் இருக்கும். ரக்பி Ball shape-ல.

ஜெய்லானி said...

தலைப்புக்கு ஏத்த மாதிரி எல்லா விஷயத்தையும் போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சூப்பர்.....

Chitra said...

உடனே அட்டேன்ஷன்ல நின்னுண்டு காமர்ஸ் படிச்சுண்டு ஹிந்தியும் படிச்சுண்டா சித்தி மாதிரி ஹைலி சக்ஸஸ்ஃபுல்லா ஆகலாம் கோந்தேன்னு மெதுவா ப்ளேட்டை திருப்பிட்டார்!
மன்னி & குழந்தைகள் தேடினேன் காணோம். பின்னே? கீழே விழுந்து புரண்டு சிரிச்சுண்டு இருந்தாளே


.....ha,ha,ha,ha,ha..... very funny.
நல்லா சிரிக்க வச்சுட்டீங்க. கருத்தும் சொல்லி இருக்கீங்க.

malar said...

'''அவங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி செலெப்ரேட் பண்ணி கார்டு குடுக்கறது, பாட்டு டெடிக்கேட் பண்றது, பதிவு போடுறது இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை.'''

ரி...பீ...ட்..டீ...

malar said...

''யாருக்காவது சென்னை ரேடியோ கேக்கணும்ன்னா இங்கே க்ளிக்கவும்.''

நன்றி....

vetti said...

nalla post anans...paavam atthimber...

vadivel said...

அட்சய திருத்தி அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை
தங்கம் வாங்கினால் லக்ஷ்மி விட்டிற்கு வருவதாக அர்த்தம்
பச்சை அரிசியும் லக்ஷ்மிஇன் பொருளே.
தங்கம் வாங்க முடியாதவர்கள் ஒரு கிலோ பச்சை அரிசி வாங்கலாம்
தங்கத்தை கட்டிலும் பச்சை அரிசி வங்கி வைப்பது இன்னும் நல்லது.

பச்சை அரிசியுடன் சேர்த்து மஞ்சள் குங்குமல் சேர்ந்து வாங்கலாம்

நன்றி
வடிவேல்

ஹுஸைனம்மா said...

காலையில் உங்ககிட்டப் பேசணுன்னு நினைச்சேன். இந்தப் பதிவத் தெறந்தேன். பேசிட்டா மாதிரி ஒரு ஃபீலிங்!!

அந்த ”டே” கல்ச்சர் எனக்கும் பிடிக்கலை. “டாட்டர் டே”, “சன் டே”, “பேரன்பேத்தி டே”யெல்லாம்கூட சீக்கிரமே வந்துரும்போல!!

//இப்பெல்லாம் அபுதாபி வாழ்க்கையே மாறிப்போச்சு. முன்னே மாதிரி வருத்தமோ வெறுப்போ இருக்கறதில்லை.//

அப்படின்னா, சலாம் ஸ்ட்ரீட் திறந்துட்டாங்களா? இல்ல, அந்தப் பக்கம் போனா டிராஃபிக் ஜாம்ல இப்படித்தான் இருக்கும், அதான் கேட்டேன்!!

3டி படம் சூப்பர்!! சிவப்பா, மரத்துல பறிச்சு சாப்பிடும்போ ஒருமாதிரி கடுகடுன்னு இருக்கும்!!

ஐ, இப்ப பிளாட்டினமா அக்‌ஷ்யதிரியைக்கு!! அப்ப, தங்கம் விலைகுறைய வாய்ப்பு இருக்கு!!

ஆனாலும், ரொம்ப படுத்துறீங்க உங்க ரங்ஸை!! எனக்கே பாவமாருக்கு!!

மங்குனி அமைச்சர் said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.................... உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ? 142 லைன் எழுதி இருக்கீங்க , அதுல 4 போடோ வேற , ஒருவாட்டி நீங்களே படிச்சு பாருங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஃப்ரெஷ்ஷா பறிச்ச ஈச்சம்பழம் எப்படி இருக்குன்னு பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆர்வம். அதான் அப்படி கேட்டேன்//

இதே மாதிரி நான் ஒரு தரம் கேட்டு ரங்க்ஸ் என்னை விட்ட ஒரு unexplainable லுக் கொசுவத்தி சுத்துச்சு இதை படிச்சதும்

நீங்களும் JebelAliல வேலை செஞ்சதுண்டா... நானும் ஒரு வருஷம் அங்க FreeZone ஒரு distribution கம்பெனில வேலை செஞ்சேன்.... நல்ல எடம் தான்... பெரிய கொடுமை Pass எல்லாம் வாங்கிட்டு தான் அந்த ஏரியாகுள்ளயே போணும்... இப்ப எப்படின்னு தெரியல

Jaleela Kamal said...

நான் எப்போதும் பின்னூட்டத்துக்கு கடைசி பெஞ்சு, தான்

Jaleela Kamal said...

உங்க பீலிங்க இபப்டி பக்கம் பக்கமா எழுதினா எபப்டி படிப்பது, இரண்டு பத்தியா பிரிச்சி எழுதுரது.

ஆமாம் பேரித்தம் பழம்,ரொம்ப நல்ல இருக்குன்ம். ஹஸ் ஆபிசில் அரபிகள் வீட்டு தோட்டத்தில் இருந்து வருவதி கொண்டு வருவார்.


அஜினமோட்டா எப்போதுமே நான் பயன் படுத்தவே மாட்டேன் , நல்ல்ல தகவல்.

ரேடியோ கேட்டுண்டே வேலையா ம்ம் நடக்கட்டும் நட்கட்டும்.

DREAMER said...

ரேடியோவை அவ்ளோ ரசிச்சு கேப்பீங்களா! நான் நைட் தூங்கும்போது மட்டும், எதுல பழைய பாட்டு ஓடுதோ... அந்த ஸ்டேஷனை வச்சிட்டு தூங்கிடுவேன். அதுக்காக, பேசும் படங்களில் வரும் பாட்டையெல்லாம் கேட்டதில்லை... (download link இருக்கா..?)

இதுவரை ஒரு Friendship Band-டும் நான் கட்டிக்கொண்டதில்லை... அதனால் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் இல்லையா என்ன..? அதுமாதிரிதான், இந்த Friendship Day, Mother's Day, Cousin Sister Day! இதெல்லாம்... ம்ஹ்ம்ம்... ச்சும்மாதான்.

அஜினாமோட்டோ...? ஹி ஹி.. எனக்கு ஃபாஸ்ட் புட் உணவுகள் பிடிக்கும். ஆனால், சமீப காலமாக வெகுவாக குறைத்துக்கொண்டேன். காரணம், டயட்டெல்லாம் இல்லை, வேலை சரியாக இருப்பதால் போய் சாப்பிட முடிவதில்லை! அந்த வகையில் நான் இப்போது அஜினமோட்டோவிலிருந்து ரொம்ப விலகி இருக்கிறேன்.

-
DREAMER

Ms.Chitchat said...

Enjoyed ur write-up as usual, never thought of hearing tamil fm in my wildest imagination. A BIG thanks to u, I am listening to Aahaa FM now, feeling as if I am in Chennai :):)

ஸாதிகா said...

அநன்யா.இது கொத்துபரோட்டாவா?மிக்சரா?அஞ்சரைப்பொட்டியா?காக்டெய்லா?நல்லாவே மிக்ஸ் பண்ணி இருக்கீங்க.இடுகைஐப்படிக்கும் பொழுது உங்களையே நேரில் பார்ப்பது போல் ஒரு பிரம்மை

Ananya Mahadevan said...

@அஹமது இர்ஷாத்,
நன்றி! மதர்ஸ் டே வேண்டாம், வேணா மொக்கைச்சாமிஸ் டேன்னு ஒண்ணு நாம கொண்டாடலாமா? க்ர்ர்...

@நாஸியா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீஸ் டாலு.. சேம் பின்ச்ச்.. ஃப்ரெண்ட்ஷிப் டே எல்லாம் நான் படிச்ச காலத்துல கிடையாது. ஆனா நான் யூத்துலே.. அதை மறக்காதே..

@தக்குடு..
என்ன ம்ம்ம்... பாட்டா பாடிண்டு இருக்கேன்?

@ஆஸியா அக்கா,
வாழ்த்துக்கு ரொம்ப நன்றீஸ், ஆனா பாருங்க அம்மா ஆனாலும் இந்த நாள் கொண்டாடுறதுக்கு என் குழந்தைகளுக்கு பெர்மிஷன் குடுக்க மாட்டேனாக்கும்.

@எங்கள் அண்ணா,
அதே அதே.. பேச்சுக்கு நடுவுல பாட்டு. சேம் ப்ளட். ஒற்றை மரம் உங்களுக்கு அவ்ளோ தான் தோணிச்சா? அது 3D அண்ணா.. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. அதான் ஷேரிங். கருத்துக்கு நன்றீஸ்

@முகுந்தம்மா,
டான்க்கீஸ் டாலு..

@பத்து அங்கிள்,
//சீனி புளியங்காய் அடிக்கிற பழக்கம் எங்க போனாலும் நம்மள விட்டு போகாது//அதே அதே.. சரியா சொன்னீங்க.
ஒழுங்க சமைக்கறவங்களுக்கு.. ஹீ ஹீ.. ஜிங்கு சா பேக் டு ட்ராக் போல இருக்கே? நடக்கட்டும்.. பேமெண்டு விஷயம் பின்னே பார்த்துக்கலாம்.
அந்த பூலோக போங்கை பத்தி இப்போ ஏன் நினைவு படுத்தறீங்க.. கர்ர்... பேமெண்டு கான்ஸல் போங்க.. இந்த மாசமும் ஃப்ரீ சர்வீஸ் தான்.. உங்களுக்கு பனிஷ்மெண்டு

@கீதா மாத்தா,
பிடிக்காதுன்னு ஸ்டாண்டு அலோன் பதிவு போட்டா அது தப்பு..
பிடிக்காதுன்னு கவுஜ போட்டு இருந்தா
அது தப்பு..
நான் பிடிக்காதுன்னு மத்த கருத்துக்களோடு தானே சொல்லி இருக்கேன்.. அதைப்போயி ... சரி விடுங்க..
சிங்கு சா.. கொஞ்சம் அடக்கி... சின்.சா.. அப்டி வாசிங்கோ. நான் பலம்மா வாசிப்பேன்.. ஜெய் ஜெய் மாத்தா ஜெய் ஸ்ரீ மாத்தா...

@அனாமிகா,
வாம்மா.. மின்னல்.. நான் எங்கே பயமுறுத்தினேன்? அவரா என்னை பத்தி தப்பா பேசினார், தன் செஞ்ச தவறை நினைச்சு வருந்தி, திருத்திக்கிட்டார். இதுல நான் எங்கே பயமுறுத்தினேன்?
அதே தான் இங்கேயும் இருக்கு. ஆனா லயன் டேட்ஸ் மாதிரி கருப்பா இருக்காது. வெளிர் பிரவுனா இருக்கும். லேசா கடுக்கும். ஜோர்டானியன் டேட்ஸ்ன்னு கடைகள்ல லூஸ்ல விப்பாங்க.

@ஜெய்லானி,
கருத்துக்கு மிக்க நன்றிங்க

@சித்ரா,
தாங்கீஸ் டாலு..

@மலர்,
வாங்க மலர், என் கருத்துக்கு ரிப்பீட் சொன்ன தெய்வமே.. நீ வாழ்க.. !!!

மோஸ்டு வெல்கம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

@வெட்டி,
நன்றி டாலு. உன் அத்திம்பேரை கட்டிண்ட நான் தான் பாவம்.

@வடிவேல்,
அருமையான கருத்து. எல்லாரும் கேட்டுக்கோங்க. அரிசி வாங்கினா போறுமாம். எல்லாரும் ஒரு கிலோ அரிசி வாங்கிட்டு கூட்டத்துல இருந்து எஸ் ஆயிடுங்கோ. காழியூர் நாராயணன், கோழுயூர் கோவிந்தாச்சாரி சொல்றதை எல்லாம் கேக்காதீங்கோ..
சில வருஷங்களுக்கு முன்னாடி எங்கம்மா வெள்ளை நிற பொருள் ஏதாவது வாங்குன்னு சொன்னாங்க. நான் போய் உப்பும் சர்க்க்ரையும் வாங்கிண்டு வந்தேன். ஒரு குறையும் ஏற்படலை.

@ஹூஸைனம்மா,

ஹா ஹா.. பேரன் பேத்தி டே.. ரொம்ப அபத்தமா இருக்கு! அதுனால நிச்சியம் இதை விரைவில் எதிர்பார்க்கலாம்ன்னு நினைக்கறேன்!!!
ஹாஹா.. சலாம் ஸ்ட்ரீட்டா.. அதுக்குள்ளேயா.. இப்போத்தான் ப்ளாக் பண்ற கட்டையெல்லாம் முழுசா போட்டு ரோட்டை தடுத்து இருக்காங்களாம். இனி இவங்க ரோட்டை செப்பனிட்டு.. அது ஆகும் ரெண்டு மூணு வருஷம்!

ப்ளாட்டினம் வெள்ளை வஸ்து. நல்ல எனர்ஜி காஸ்மிக் பவர் அது இதுன்னு உளறி கொட்றார் அந்த க்ராக்கு. என்ன பண்ண தலையெழுத்து!

Ananya Mahadevan said...

@மங்குனி,
உங்க கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்ளோ பெரிய இடுகைக்கு மன்னிக்கவும். அதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை மனம் ஒரு குரங்கு மட்டும் எழுத எழுத அஞ்சனேயர் வால் மாதிரி நீண்டுடறது! நெக்ஸ்டு மீட் பண்றேன்.
ரொம்ப நாளாச்சோ இந்த பக்கம் வந்து???

@அப்பாவி தங்கமணி,
//இதே மாதிரி நான் ஒரு தரம் கேட்டு ரங்க்ஸ் என்னை விட்ட ஒரு unexplainable லுக்// நாமெல்லாம் ஒரே ரத்தம் இல்லையா? நான் இதெல்லாம் ரங்க்ஸ் கிட்டே கேக்கறதில்லை.பிச்சு எனக்கு குடுக்காம தானா சாப்பிட்டுடுவார். அதான். ஹீ ஹீ..

இப்போவும் பாஸ் வாங்கணும். ஏகப்பட்ட கெடுபிடி. ஜபலாலி ஏர்ப்போர்டு கூட வருதாமே..


@ஜலீலா அக்கா

ச்சாரி பார் தி டிஸ்ட்டபன்ஸ். கொஞ்சம் பெரிய பதிவா போயிடுத்து. ஆ மன்ச்சிக்கபா.. கருத்துக்கு டாங்கீஸ்ஸ்ஸ்


@ட்ரீமர்..
வாங்க.. எனக்கு ரொம்ப இஷ்டம் ரேடியோ.. ரொம்ப பழைய பாட்டு டேஸ்டு இல்லை. டவுன்லோடு தேவை இல்லை ஆன்லைன் ல கேக்கலாமே.. பிரவுசர்ல லின்க் ஓப்பன் ஆச்சுன்னா போறும் அது பாட்டுக்க பாடிண்டு இருக்கும். பகல்ல ஃபுல்லா ரேடியோ தான்.

ஹீ ஹீ.. பார்த்து.. திருப்பியும் அஜினோமோட்டோ கூட சேர்ந்துரப்போறீங்க!

@மிஸ் சிட்சாட்,
கருத்துக்கு நன்றீஸ். எனக்கென்னமோ இங்கே ஆஹா எஃப்.எம் வேலை செய்யலை. ஒன்லி ஹலோ எஃப்.எம். தான். ஸ்டேஷன் ஆஃப்லைன்னு காட்டுறது.
//feeling as if I am in Chennai// அதுக்கு தானே ஷேர் பண்ணினேன். ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. கருத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி!

@ஸாதிகா அக்கா,
நல்வரவு. முதன் முதலா மனம் ஒரு குரங்கு எழுத ஆரம்பிச்சதுக்கு மெயின் காரணம் என்னால ஒரு விஷயத்தை பத்தி மட்டும் பதிவு போட முடியாதுங்கறது தான். இங்கே நடக்கற விஷயங்களை பத்தி எங்கம்மா தெரிஞ்சுக்கணும்ன்னு தான் இதை எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் மத்த ப்ளாக்ஸ் படிக்க ஆரம்பிச்சப்போ தான் தெரிஞ்சது இதுக்கு பேர் கூட்டாஞ்சோறு போஸ்டுன்னு. ஹ்ம்ம்.. மிக்ஸர் கொத்து பரோட்டா, அஞ்சரைப்பெட்டி.. எல்லாமே சூப்பரா இருக்கு. ஆனா பாருங்க என் மனசு அலை பாய்ஞ்சுகிட்டே இருக்கறதுனால தான் இதுக்கு மனம் ஒரு குரங்குன்னு பேர்.
ரொம்ப நன்றி. என் உள்ள வெளிப்பாடு தானே.. அதான் அப்படி இருந்திருக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

வருஷத்திலே 364 நாளும் அம்மா சாப்பிட்டாளா இருக்காளான்னு கூட பார்க்காமே ஒரு நாள் மட்டும் போன் போட்டு மதர்ஸ் டே வாழ்த்துச் சொல்லர கல்சர் எனக்கும் பிடிக்கலை.
ச்ரி ரங்கத்திலே எங்கு சுத்தினாலும் ரங்கனை சேவிக்கனும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி எப்போப் பார்த்தாலும் ரங்குவ குட்டாம எழுத முடியாத என்ன. நான் ரங்கு பக்கம்

Kanchana Radhakrishnan said...

நல்லா சிரிக்க வச்சுட்டீங்க.

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்...

திவாண்ணா said...

அக்ஷய த்ருதியைலே செய்யற தான தர்மத்துக்குக்கூடத்தான் பல மடங்கு பலன். தினம் /அப்பப்ப செய்யாதவங்க இப்போவாவது செய்யுங்கப்பான்னு யாரும் எழுதறாங்களான்னு பாத்தா....ஹும்!

எல் கே said...

akshaya tritiyahila thanam panna namaku nallathunu solluva. vangarthu ellam katti vitta kathai

Related Posts with Thumbnails