Pages

Wednesday, June 9, 2010

கிரேஸி கிச்சன் கில்லேடி!

அப்பாவி தங்கமணியின் இட்லி பதிவுக்கு முன்னாடியே இந்தப்பதிவு எழுத ஆரம்பிச்சு பிசுபிசுத்து போயிடுத்து. அதான் பிரசுரிக்காம விட்டுட்டேன்.

சில நாட்கள் சமையல் சமயம் சோதனை சமயம் ஆயிடுறது. ஆமா, என்ன பெரிய  சமையல் . இருக்கறது ரெண்டு பேர். என்ன பெருசா சமைக்க போறேன்?ஒரு சாம்பார் / ரசம் , ஒரு காய், கொஞ்சம் சாதம். ஒரு முக்கால் மணி நேர விஷயம். இதுக்கென்ன இவ்ளோ அலட்டல்ன்னு தானே கேக்கறீங்க?

நானும் அப்படித்தான் அலட்சியமா செய்யுற ஆளு. ஆனா பாருங்க ஒரு நாள் நல்ல ராஹூ காலம்+எமகண்டம் கூடிய சுபயோக சுபலக்னத்துல சமைக்க ஆரம்பிச்சுட்டேன் போல இருக்கு, எல்லாமே தலைகீழ்.


ரங்கு சுபாவம் என்னன்னா, திடீர்ன்னு ஒரு மணிக்கு வருவேன்னு ஃபோன் பண்ணி சொல்லிட்டு 3.30 மணிக்குத்தான் வருவார். லேட்டாகும்மான்னு சொல்லி இருந்தார்ன்னா, 100% நிச்சியமா 12 மணிக்கே வந்து ஈன்னு பல்லிளிச்சுண்டு நிப்பார். ”பசிச்சூடுத்தும்மா” அப்படீம்பார். பாவமா இருக்கும்.

அதனால் ஆஃபீஸிலிருந்து ஃபோன் பண்ணி சொன்னால் எனக்கு ஹைய்யா ஜாலின்னு சொல்லி குதூகலிக்கற அளவுக்கு நேரம் இருக்கும். அப்புறம்  சமையல் என்ன பெரிய  சமையல் புடலங்காய்! ஈஸி மேட்டர்!

எப்போவுமே அவசரமா இருக்கற அன்னிக்குத்தான் பல கஷ்டங்கள் வரும். ஒரு நாள் கண்டினூவஸா ஒரே கஷ்டங்கள். எல்லாம் விதவிதமான கஷ்டங்கள்.

பருப்பை குக்கர்ல வெச்சுட்டு புளி ஊறப்போடுறதுக்கு புளி டப்பா எடுத்தா டப்பா காலி. இன்னிக்கித்தானா இது காலி ஆகணும். ஸ்டோர் பண்ணி வெச்சு இருந்தாலும் மொத்த சாமான்ல இருந்து அதை தேடி எடுத்து பாக்கெட் பிரிச்சு போட்டு... சில சமயம் கடுப்பா இருக்கும். ஆச்சு எடுத்து போடுறதுக்கு 5 நிமிஷம் போயிடுச்சு. இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரெடி பண்ணி வெச்சுக்கவேண்டாமோன்னு கேக்கறவங்க மேற்கொண்டு படிக்கவேண்டாம். ஏன்னா நான் அந்த டைப்பு லேதண்டீ... :))

நெக்ஸ்டு புளி ஊறப்போட்டு வேக வேகமா பீன்ஸ் ஆய்ஞ்சு நறுக்கியாச்சு. நறுக்கிட்டு கொஞ்சூண்டு வெந்நீர் விட்டு காயைப்போட்டு உப்பு மஞ்சப்பொடி போட்டுட்டு பார்க்கறேன் சாந்தமா இருக்கு வாணலி. என்னாச்சுன்னு குனிஞ்சு பார்த்தா, காஸ் எரியலை! ஹய்யோ இந்த லைட்டர் தொல்லை தாங்கமுடியலைன்னு புலம்பிண்டே நேரா சுவாமி கிட்டக்க இருந்த தீப்பெட்டியை எடுத்துட்டு வந்து கேஸ் பத்த வெச்சா, கிணத்துல போட்ட கல்லு மாதிரி கம்முன்னு இருக்கு. கொஞ்சம் உத்து கவனிச்சப்போ உஸ்ஸ்ன்னு கேஸ் சவுண்டைக்காணோம். பேஷ்!!! கேஸ் தீந்து போயாச்சு. விசேஷம்!

பீகாக் குரோஸரி நம்பர் தேடி எடுத்து அவனை புது சிலிண்டர் கொண்டு வரச்சொல்லிட்டு அதுவரைக்கும் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன்.

சரி புளி வெந்திருக்கும், கரைச்சுடலாம்ன்னு புளி கரைச்சு, அந்த கரைசலை ஈயசொம்பில் விட்டு பெருங்காயம், ரசப்பொடி, உப்பு, தக்காளி எல்லாம் போட்டு ரெடியா வெச்சேன். அப்போத்தான் பார்த்தேன் பருப்பு வெச்ச குக்கர்ல ஒரு விசில் கூட வரலை.அது எங்கேந்து வரும்? அதான் கேஸ் ஆஃப் ஆயாச்சே?

 சூப்பர். இன்னிக்கி  சமையல் பண்ணிடுவோமா?

ரைஸ் குக்கர்ல சாதம் வைக்கலாம்ன்னு பார்த்தேன்.ப்ளக் வெச்சு, தண்ணி விட்டு, செப்பரேட்டர் ல அரிசி கழுவி, ரெடி பண்ணிட்டு வெச்சு மூடினேன். ஒண்ணுமில்லாட்டி ஒரு வாய் தயிர்சாதமாவது சாப்பிட்டு போகலாமேன்னு ஒரு நப்பாசை.

அதுக்குள்ளே டிங் டாங் சத்தம். ஒரு நிமிஷம் ரங்கு தானோன்னு பயந்து நடுங்கி அப்புறம் இல்லே காஸ் சிலிண்டராத்தான் இருக்கும்ன்னு சுதாரிச்சுகிட்டு கதவைத்திறந்தேன். நம்ம ஹீரோ கடைக்கார பையன் வந்தாச்சு.

சிலிண்டரை மாட்டி கொடுத்தான். ஆன் பண்ணினப்போ கேஸ் சஞ்சீவனி மருந்து சாப்பிட்ட லக்ஷ்மணன் மாதிரி உயிர்த்தது! அப்பாடி நிம்மதி.

வேக வேகமா குக்கர் ஆன் பண்ணி ஹை ல வெச்சேன். ரைஸ் குக்கர் மேல ஸ்டீமரில் காயை வேகப்போட்டு, இன்னொரு கேஸில் ரசத்துக்கு கரைச்சு வெச்சு இருக்கும் ஈயச்சொம்பை ஏத்தினேன். இனி  சமையல் ஆயிடும்ன்னு திடமா நம்பினேன்.

பருப்புசிலிக்கி ஊறப்போட்ட து.பருப்பு நல்லா ஊறியாச்சு. சரின்னு எடுத்து மிக்ஸி ஜாரில இன்ன பிற சாமான்களுடன் போட்டு வெச்சு மிக்ஸி கேபிளை சொருகி, ஆன் பண்ணினேன். வழக்கமா டுர்ர்ர்ர்ர்ர்ர்னு சத்தம் வரும் மிக்ஸி அன்னிக்கீன்னு பார்த்து சன் பிக்சர்ஸ் எடுத்த படத்தை பார்த்து நட்டு கழண்ட புதுப்பைத்தியம் மாதிரி ”உய்ய்ய், உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்”ன்னு சத்தம். கஷ்டம்.. வெளியில எடுத்துட்டு அடியில ஒரு டிஷ்யூ வெச்சு சுத்தமா துடைச்சுட்டு மறுபடியும் ட்ரை பண்ணேன். ”உய்ய்ய்ய்ய்ய்ங்க்” தான்.. கூடவே மைக்கேல் மதன் காமராஜனின் திருட்டுப்பாட்டி க்ளைமேக்ஸ் ல சொல்ற மாதிரி என்னது? கரியற நாத்தம்?ன்னு சொல்ற அளவுக்கு அந்த ஜாரின் அடிப்பகுதியில் என்னமோ ஸ்மெல்! சந்தோஷம்.. ரொம்ப டாங்கீஸ்ன்னு கீத்தா மாத்தா மாதிரி சொல்லிட்டு,  பாதி அரைபட்ட பருப்பை கையால வழிச்சு வேற ஒரு நீளமான ஜாரில் போட்டு அரைச்சேன். சமர்த்தா அரைச்சு கொடுத்துடுச்சு. ஒரு கிண்ணத்தில போட்டு காய் வெந்துகிட்டு இருந்த ஸ்டீமரில போடலாம்ன்னு ரைஸ் குக்கர் மூடியைத்திறந்தா சில்லுன்னு அப்படியே இருக்கு குக்கர்!

தூக்கி வாரி போட்டது. அய்யோ என்ன இது? இப்போத்தான் கேஸ் தீந்து போச்சு, இப்போ கரண்டும் தீந்து போயிடுச்சான்னு அதிர்ச்சியில ப்ளக்கை சரி பண்றதுக்கு எக்ஸ்டென்ஷன் பக்கத்துல போய் இழுத்து பார்த்தேன். சுரீர்ன்னு தோள் வரைக்கும் ஷாக் அடிச்சுடுச்சு.. சரியான எமகண்டத்துல தான் நாம  சமையல் ஆரம்பிச்சு இருக்கோம். இன்னும் தாளிச்சு கொட்டறதுக்குள்ளே என்னெல்லாம் நடக்கப்போகுதோ, கடவுளேன்னு ஒரு ரூபா குலதெய்வத்துக்கு முடிஞ்சு வெச்சேன்னா பார்த்துக்கோங்க!

ரைஸ் குக்கர்ல கரெண்டெல்லாம் ஒழுங்காத்தான் வந்துகிட்டு இருந்தது. சுவிட்சு போடாட்டி அதெப்படி ஆன் ஆகும்? ஹிஹி..அடிக்கடி கிட்னி யூஸ் பண்ணாட்டி இப்படித்தான் ஆகும்ன்னு நினைச்சுகிட்டு, சுவிட்சு போட்டு ஆன் பண்ணி லைட்டு எரியுதான்னு பார்த்தேன். சமர்த்தா யெல்லோ லைட்டு வந்தாச்சு. அடுத்து என்னன்னு யோசிச்சேன்..

பருப்பு வெச்ச குக்கர் மெதுவா ரெண்டாவது விசில் வரவும், எப்படியாவது ரசம் நல்ல படியா அமையணுமேன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்த சமயம், டிங் டாங் சத்தம்! ரங்கு வந்தாச்சு!!  வயித்துல புளிக்கரைசல், அமிலக்கரைசல், பல வித பட்டாம்பூச்சிகள், போதாக்குறைக்கு பசியில எலிகள் எல்லாம் ஓடிச்சு. இவ்ளோ சொதப்பு சொதப்பிட்டு உனக்கென்ன பசி வேண்டிக்கெடக்குன்னு என் மனசாட்சி நாக்குல நரம்பில்லாம் நாக்கை பிடுங்கிக்கற மாதிரி திட்டினது.

ஓடிப்போய் கதவைத்திறந்தால் ஏதோ ஒரு அரேபியப்பெண் அரபியில் என்னமோ சொல்ல முயற்சி பண்ணிண்டு இருந்தா. வாடீம்மா உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்னு நினைச்சுகிட்டேன். அரபியில் பேசினப்போ திரு திருன்னு முழிச்சேன். நான் இருந்த நிலமையில அந்த லேடி,   தமிழ்ல பேசியிருந்தாக்கூட புரிஞ்சிருக்காது போல இருந்தது. இல்லைன்னு கையால ஏதோ ஒரு சமிக்ஞை பண்ணிட்டு கதவை சாத்திட்டு மறுபடியும் கிச்சனுக்கு ஓடினேன். இவங்க வர்ற நேரத்தைப்பாரு.. க்கும். உஸ்ஸ்,..

மறுபடியும், இன்னிக்கி சமைச்சுடுவோமான்னு என்னை நானே கேட்டுண்டு அடுக்களைக்குள்ள புகுந்தேன். துளி எண்ணெய் விட்டு தாளிச்சுட்டு வெந்த காயும் பருப்பையும் வெதுப்பி எடுத்தாச்சுன்னா வேலை முடிஞ்சுடும். காய், பருப்பை எடுத்து வெச்சுட்டு, எண்ணெய்க்கிண்டியை பக்கத்துல எடுத்துண்டேன்.

அடுப்பை மூட்டிட்டு பின்னாடி திரும்பி அஞ்சரைப்பெட்டியை எடுக்கறதுக்குள்ளே, 'ட்டோய்ன்'னு ஒரு சத்தம். எண்ணெய்க்கிண்டி தானா குடை சாய்ஞ்சு ’ஞ’ன்னு கவுந்து கிடக்கு. கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு தோணினது. துக்கம் தொண்டையடைச்சு, எம்பெருமானே, ஏன் இவ்ளோ சோதனைன்னு கதறி, சொல்லடி அபிராமின்னு கத்தினேன். அதாவது பாடினேன்.

எண்ணெய்க்கிண்டியை என்ன பண்ணினேன்? அது எப்படி விழுந்திருக்கும்ன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ண நேரமில்லை. சீக்கிரம்  சமையல் முடிக்கணும்ன்னு பர பரன்னு டிஷ்யூக்களை உருவி துடைச்சுட்டேன்.

க்ளிங்க்ளிங்ன்னு எஸ்.எம்.எஸ் வந்தது. ஆமா, ரொம்ப முக்கியம் இப்போ.. இந்த ஜாய் ஆலுக்காஸ், தமாஸ் இவங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது, நேரங்கெட்ட நேரத்துல இவங்க பண்ற லொள்ளை கன்ஸ்யூமர் கோர்டுல கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேட்டே ஆகணும்ன்னு மனசுக்குள்ளேயே முணுமுணுத்துண்டு, தாளிச்சு காயைப்போட்டு, பருப்பையும் போட்டு திருப்பினேன். பீன்ஸ் பருப்புசிலி ஆச்சு,  சாதம் வெந்தாச்சு,  ரசம் நுரைச்சு, தாளிச்சுக்கொட்டியாச்சு.

ஒரு சொம்பு நிறைய தண்ணியை குடிச்சேன். மூச்சு வந்தது! அப்பாடீ! சோஃபாவுல போய் செளகரியமா உக்காந்து மொபைலை எடுத்துப்பார்த்தேன். ரங்கு தான்.
"Dear, Sudden client meeting , will have lunch outside with them. You have food on time. "

37 comments:

Vidhoosh said...

:)) சூப்பர் சமையல்

Ahamed irshad said...

படு சுவராஸ்யம்.. ஒரு வழியா சமைச்சுட்டீங்க...

எல் கே said...

//புளி வெந்திருக்கும்/
புளி ஊறி இருக்கும். எப்படி வேகும் ???

/சஞ்சீவனி மருந்து சாப்பிட்ட லக்ஷ்மணன் மாதிரி உயிர்த்தது/

என்ன ஒரு கம்பரிசன்

/ சுரீர்ன்னு தோள் வரைக்கும் ஷாக் அடிச்சுடுச்சு.//
அச்ச்சஹோ,

//. ரங்கு தான்.
"Dear, Sudden client meeting , will have lunch outside with them. You have food on time. //

இது இது இதுதான் சூப்பர்

அன்புடன் மலிக்கா said...

ஒரு சொம்பு நிறைய தண்ணியை குடிச்சேன். மூச்சு வந்தது! அப்பாடீ!//

எனக்கும்தான்..சூப்பரப்பூ.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.. இப்படித் தான் சமைக்கணும்.. அப்ப தான் சமையல்ல ஒரு கிக் இருக்கும். :)

settaikkaran said...

ரங்குவுக்கு ஏதாவது இன்டியூஷன் இருக்கா? எப்படி கரெக்டா அன்னிக்கு ’எஸ்’ஆயிட்டாரு? :-)

Ananya Mahadevan said...

@விதூஷ்,
ரொம்ப நன்றி!

@அஹ்மது இர்ஷாத்,
ரொம்ப நன்றி!

@மலிக்கா,
டாங்கீஸ் அம்முணி.

@LK,
ஹாட் வாட்டர் கெட்டில் தண்ணியை விட்டுத்தான் புளி ஊறப்போடுறது.. அது கூடவே ஊரி வெந்துடும், சீக்கிரம் கொதிச்சுடும். முன்னாடி எல்லாம் மைக்ரோவேவ் ல வெச்சுண்டு இருந்தேன்.. இப்போ அது ரிப்பேர் அதுனால கெட்டில் உபயம்.
நன்றிடாப்பா..

@சேட்டை,
அதான் எனக்கும் புரியலை! எப்புடி தெரிஞ்சது????

@வெங்கட் நாகராஜ்,
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. இல்லையோ பின்னே? ஒரு த்ரில் வேண்டாமா.. தேமேன்னு முன்னாடியே சமைச்சு வெச்சுண்டு அவர் வந்ததுக்கப்புறம் சூடு பண்ணி போடுறது போர்! ஆனா கொஞ்சம் சோதனைகள் எல்லாம் குறைஞ்சா பரவாயில்லை.

கௌதமன் said...

சமையல் டென்ஷனை - ரிலாக்சடா அழகா எழுதி இருக்கீங்க. நல்லா இருக்கு.

Harini Nagarajan said...

ROTFL! naan appave nenachen theva illaatha nerathula ellaam sms a paapom thevaya irukkum pothu paaka maatom! :) Ithaan ennoda first visit thodarnthu varuven! :)

Kousalya Raj said...

ம் நம்ம கஷ்டம் இந்த ஆண்களுக்கு எங்க தெரியுது?

BalajiVenkat said...

Mmm as usual ur narration and uruvagamum sooper...

Geetha Sambasivam said...

கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு தோணினது. துக்கம் தொண்டையடைச்சு, எம்பெருமானே, ஏன் இவ்ளோ சோதனைன்னு கதறி, சொல்லடி அபிராமின்னு கத்தினேன். அதாவது பாடினேன்.//

haiyo, haiyo, mudiyalai! :)))))))))))))))))))))))))))

ambi said...

Ohh my god..

படு சுவராஸ்யம், Nice narration. :)))

Jaleela Kamal said...

ஹா ஹா நேற்று எனக்கும் இதே கதை தான்

மிக்சி, + கேஸ் ஸும் போச்சு

காலையில் ஸ்கூலுக்கு, பூரி ஆலு சென்ன நல்ல வேலை ஆலி சென்னா வேலை , டீ வேலை முடிந்தது,
பிறகு பிர்ட்ஜில் வைத்து குபூஸ பையனுக்கும் ஹஸுக்கும் கொடுத்து அனுப்பிட்டேன் .


இந்த மேட்டர் எல்லோருக்க்ம் சகஜம் பா

அப்படியே வேலைய்ல்லாம் பாதியில் நின்று போச்சு

ஹுஸைனம்மா said...

என்ன நீங்க, படிச்சுகிட்டிருந்த எனக்கே சமையல் முடியுமா முடியாதான்னு ஒரு தவிப்பு வந்துடுச்சு!! க்ரைம் ஸ்டோரி மாதிரி திரில்லா போச்சு கதை!! வாசிக்க வாசிக்க உக்காந்திருந்த நாற்காலி நுனிக்கே வந்துட்டேன். நல்லவேளை கீழே விழ முன்னாடி, நீங்களும் உக்காந்துட்டீங்க!!

//கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு//

இந்த இடத்துல நான் நிஜமாவே அழுதுட்டேன் தெரியுமா? அவ்ளோ செண்டிமெண்ட்டல் டச்!!

Ananya Mahadevan said...

@கெளத்தம்ஜி,
மிக்க நன்றி. :)) ரிலாக்ஸ்டா வா.. அவூன்னு நான் அழுததெல்லாம் யாருக்கு சொல்ல முடியும்? :))

@ஹரிணிஸ்ரீ,
பஹுத் பஹூத் தாங்க்ஸ் ஹை. அடிக்கடி வாங்க.

@கெளசல்யா,
ரொம்ப நன்றிங்க.

@பாலாஜி,
ரொம்ப நன்றிடாப்பா.. ஏதோ கூல்ட்ரின்க் குடிச்சாப்புல ஜில்லுன்னு இருக்கு.. ஹிஹி..

@கீத்தா மாத்தா,
ஜெய் ஜெய் மாத்தா, ஜெய் ஸ்ரீ மாத்தா, மாத்தாவின் அருளே அருள்.. அருளே அருள்!

@அம்பி,
வாங்க தம்பி.. மிக்க மிக்க டாங்கீஸ்.. நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கலை.. பெருமையா இருக்கு..

@ஜலீலாக்கா,
நமக்கு ரொம்ப தேவையான நேரத்துல தான் இதெல்லாமே காலை வாரி விட்றும்.. உங்க பாடு இன்னும் திண்டாட்டம்.. புள்ள குட்டி எல்லாம் ஸ்கூலுக்கு போகணுமே.. :)

Ananya Mahadevan said...

//இந்த இடத்துல நான் நிஜமாவே அழுதுட்டேன் தெரியுமா? அவ்ளோ செண்டிமெண்ட்டல் டச்!!// நயவஞ்சகிகள் சாரி நயவஞ்சகர்கள் நிறைஞ்ச உலகம் இது.. :P :P :P

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

யப்பா... சிரிச்சு சிரிச்சு முடியல போ.... என்ன செய்ய? நம்ம சமையல் மேல எக்கசக்க கண்ணு அதான் இந்த பிரச்சனை எல்லாம். நீ என்ன பண்ற, அவர் கிட்ட சொல்லி தினமும் உன்னோட கிச்சனுக்கும் உனக்கும் சேத்து சுத்தி போட சொல்லு (அதுக்கே ஒரு நாள் ஆகுமேன்னு எல்லாம் சொன்னா கம்பெனி பொறுப்பில்ல கேட்டியா...?)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கடசீல வெச்சார் பாரு பஞ்ச்... இந்த ரங்க்ஸ்களே இப்படி தான்ப்பா.. சமயம் பாத்து எஸ்கேப்பிடுவாங்க... அதுலயும் "You have food on time " னு சொன்னார் பாரு... என்னால அவர பாராட்டாம இருக்க முடியல அனன்யா. இங்க தான் ரங்க்ஸ்கெல்லாம் தாங்க்ஸ்களோட சைக்காலஜிய கரைச்சு குடிச்சு இருக்காங்கன்னு prove பண்றாங்க. இப்படி சொன்னப்புறம் "ஏன் வரலை" னு நீ கேப்ப?. "அடாடா நம்ம மேல எத்தனை அக்கறை" னு அப்படியே LK கதைல வர்ற கேரக்டர் மாதிரி உருகிட மாட்ட. "எப்படிம்மா இப்படி எல்லாம் அனலிஸ் பண்றேன்"னு கேக்கறையா? எல்லாம் சொந்த நொந்த அனுபவம் தான்(ஹி ஹி ஹி.. ஏதோ நம்மால ஆன ஒரு விழிப்புணர்ச்சி கருத்து)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நன்று....

பத்மநாபன் said...

கிரேசி லேடியின் சமையல் அறை சரியான அலப்பறை எபக்ட்... நேர்முக வர்ணனை மாதிரியே இருந்தது .... இது எங்கள் பாச்சுலர் சமையலில் தான் அடிக்கடி நடக்கும் ...
///சாந்தமா இருக்கு வாணலி /// அந்த நிமிஷம் உங்க சாந்தம் எங்கேயோ ஓடிப்போயிருக்குமே .
//கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு தோணினது /// சோதனை மேல் சோதனை தான் ...
///Dear, Sudden client meeting , will have lunch outside with them. You have food on time. "/// இதற்கு வந்த எதிர் வினை , இதைவிட பெரிய பதிவாக உங்களிடமிரிந்து கூடிய சிக்கிரம் வரும் ........

Unknown said...

Oru vazhiya maappu escapuu... ;-)

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha.....

Really Crazy moments! :-)

Porkodi (பொற்கொடி) said...

//”பசிச்சூடுத்தும்மா” அப்படீம்பார். பாவமா இருக்கும். //

இதுக்கு தான் வீட்டுல இருக்கவே கூடாது, வேலைக்கு போயிடணும், இல்ல சும்மாவானும் எங்கேயாவது போயிடணும். :)

//இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரெடி பண்ணி வெச்சுக்கவேண்டாமோன்னு கேக்கறவங்க //

கேக்கறவங்க கொஞ்சம் முன்னாடி வந்து நில்லுங்க!

//பேஷ்!!! கேஸ் தீந்து போயாச்சு. விசேஷம்!//

ஹாஹாஹா!!! என் அம்மா சொல்றா மாதிரியே!! நல்ல வேளை இங்க சிலின்டர் கான்செப்ட் இல்ல.

//சுவிட்சு போடாட்டி அதெப்படி ஆன் ஆகும்? //
நல்ல வேளை, இது வரை ஒவ்வொரு தடவையும் நான் மறக்கும் போதெல்லாம் எபடியோ 1-2 நிமிஷத்துல பாத்துடுவேன்.. :D

//ஏதோ ஒரு அரேபியப்பெண் அரபியில் என்னமோ சொல்ல//

இப்படி எல்லாம் திறக்கலாமா?!

ஹாஹாஹா ஹையோ முடியல அநன்யா.. எப்புடி இப்புடி!!!! அத்திம்பேருக்கு ராகவன் இன்ஸ்டின்க்ட்! :P

Prathap Kumar S. said...

நான் ஒண்ணு சொல்லட்டுமா--??

பதிவு செம மொக்கை... :))

பனித்துளி சங்கர் said...

எழுத்தில் நகைச்சுவை ததும்புகிறது . அதர்க்கு தகுந்தாற்போல் புகைப்படங்களும் அருமை !

ஜிகர்தண்டா Karthik said...

அத எல்லத்தயும் மூட்டை கட்டிண்டு அவர் ஆபிஸ் போயி... சாயங்காலம் வரும்பொது என்ன பண்ணுவேளோ தெரியாது அப்படின்னு அவர் மேஜைல போட்ருகணும்.

ஜெய்லானி said...

//சாந்தமா இருக்கு வாணலி. என்னாச்சுன்னு குனிஞ்சு பார்த்தா, காஸ் எரியலை!//

நான் டீ போட அரைமனி நேரம் ஆச்சி கடைசியில பாத்தா கெட்டில் சுவிச்சே ஆன் பண்ணல ...அப்ப நா மட்டுமில்ல ...என்ன மாதிரி நிறைய பேரும் இருப்பாங்க போலிருக்கு.ஹி..ஹி..

vanathy said...

//கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு//


நானும் அழுதேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்...

pudugaithendral said...

அருமை. ரசித்தேன்

geetha santhanam said...

சமையல் கட்டில் எல்லாமே உங்களுக்கு எதிராகக் கூட்டணி அமைத்துவிட்டதே. சோர்ந்து போகாமல் போராடி ஜெயித்ததை போரடிக்காமல் சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர்.--கீதா

மங்குனி அமைச்சர் said...

ஹலோ , இவ்வளவு பெரிய பதிவெல்லாம் போடாதிக , மூச்சு வாங்குது அப்புறம் நான் SPB ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்

Admin said...

யக்கா.. உங்களுக்கே இப்பிடி தாவு தீருதே.. அப்ப இதே அபுதாயில பிரம்மச்சரியா குப்ப கொட்ற எங்களப்போல இருக்கிறவங்கட சமையல் அனுபவங்கள்.......... அது ரூம் போட்டு அழுவுற சமாச்சாரம்.... விடுங்க.. விடுங்க...

ஸ்ரீராம். said...

இதோட ரெண்டாம் பாகம் பாக்கின்னு நினைக்கிறேன்...எஸ் எம் எஸ் படிச்சுட்டு சாப்பிடப் போகும் போது பருப்புசிலி சாம்பார், புளி சாதம், புளிக்கறி என்று இருந்ததா...

Matangi Mawley said...

ரொம்ப கஷ்டம்! நல்ல காலம்.. எனக்கு maggie தவிர ஒண்ணுமே பண்ண தெரியாது!

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2010/06/blog-post_14.html

viruthu waiting

Ananya Mahadevan said...

@அப்பாவி,

டாங்கீஸ் மா.. //அதுக்கே ஒரு நாள் ஆகுமேன்னு எல்லாம் சொன்னா கம்பெனி பொறுப்பில்ல கேட்டியா// க்ர்ர்ர்ர்ர்.. நீ உருப்படுவியா?
உன்னோட விழிப்புணர்ச்சிக்கருத்து படிச்சுட்டு... உஸ்ஸ்... இப்போவே கண்ணைக்கட்டிடுச்சு.. முடியல!

@பத்து அங்கிள்,
// அந்த நிமிஷம் உங்க சாந்தம் எங்கேயோ ஓடிப்போயிருக்குமே .// இதெல்லாம் உங்களால மட்டும் தான் முடியும். :))) இதுக்கு மேல நான் இந்த டாபிக்கை பேச விரும்பலைன்னு தானே கட்டுரையை இத்தோட முடிச்சுட்டேன்? நீங்க என்னன்னா வளத்துண்டே போறீங்களே? நோ!

@மஹேஷ்,
யெஸ்ஸு, தி மாப்பு எஸ்க்கேப்பூ..

@சித்ரா,
நன்றி அம்மிணி..

@பொற்ஸ்,
அருமையான கருத்துக்கள்.
அந்த அரேபியப்பெண்ணுக்கு முழுசா திறக்கலை.. சேஃப்டி லாக் வழியாத்தான் பார்த்தேன்.

@நாஞ்சில்,
என்னப்பா பண்றது.. ஒவ்வொரு போஸ்டுமே இண்ட்ரெஸ்டிங்கா போடுற அளவுக்கு என்கிட்டே சரக்கில்லையே!

@பனித்துளி,
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீஸ்.

@ஜிகர்தண்டா,
நல்ல ஐடியாவா இருக்கே?

@ஜெய்லானி,
அதே அதே.. பலவாட்டி இந்த மாதிரி பண்ணி இருக்கேன். அவசரம் மறதி!

@வானதி,
நன்றிங்க. :))

@புதுகை தென்றல்,
நன்றிக்கா..

@கீதா சந்தானம்,
ரொம்ப நன்றிங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் கூட..

@மங்குனி,
பதிவு நீளமா இருந்தா ஸ்கிப் பண்ணிட வேண்டியது தானே? சின்னப்புள்ளத்தனமா என்னை சின்னதா போஸ்டு போட சொன்னா இதெல்லாம் நல்லா இல்லே!

@சர்ஹூன்,
ஓஹோ நீங்க அபுதாபியா?? உங்க கிச்சன்லியுமா? வீட்டுக்கு வீடு வாசப்படி..

@ஸ்ரீராம் அண்ணா
இந்தப்பகுதியோடு இந்தக்கட்டுரை முற்றும்.. இந்த மொக்கையே சில பேரால தாங்கமுடியலையாம்.. நீங்க வேற..

@மாதங்கி ,
உனக்கு புருஷனா வரப்போறவன் ரெம்ப்ப குடுத்து வெச்சு இருக்கான்.. ஹ்ஹிஹி

@தென்றல்
யக்கா... டாங்கீஸ்க்கா.. ரொம்ப புல்லரிக்க வெச்சுட்டீங்க...

Related Posts with Thumbnails