Pages

Monday, June 14, 2010

சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்

இந்த டாப்பிக் பத்தி நானும் ரங்குவும் எங்கள் நீளமான அபுதாபி - துபாய் பயணங்களின் போது விவாதிப்பதுண்டு.

முதல்ல சிச்சுவேஷன்னா என்ன? படத்தில் ஒரு முக்கிய நிகழ்வை காட்டும் ஒரு அட்டவணை மாதிரி. இப்போ வரும் படங்களில் பெரும்பாலான படங்கள் டெம்ப்ளேட் சிச்சுவேஷன்களை யூஸ் பண்ணிண்டு இருக்கு. லைக் ஹீரோ இண்ட்ரோடக்‌ஷன், லவ் சாங், லவ் சாங், லவ் சாங், இன்னோரு இத்துப்போன லவ் சாங் கடைசியில க்ளைமாக்ஸ் கிட்டக்க வரும்போது ஒரு அரை குறை குத்து சாங் இப்படி வெச்சுண்டு இருக்காங்க.

சில வருஷங்களுக்கு முன்னாடி வரை, வழக்கமான லவ் சாங், பெத்தோஸ் சாங், அம்மா செண்டிமெண்ட் சாங், நாட்டுப்புற ஃபோக் சாங், ஜெயமாலினி சாங், தத்துவ சாங் இதைத்தவிர தமிழ் சினிமாவுல வேற சாங்கே இல்லையா?ன்னு தமிழ்மக்கள் தவிச்சுண்டு இருக்கும்போது தான் சில வித்தியாசமான சிச்சுவேஷன்களிலும் சாங்ஸ் போடலாம்ன்னு ஒரு புதுமையான கான்செப்டு புகுத்தப்பட்டது.

மறுபடியும் சொல்லிடுறேன்.. இந்தப்பதிவு இசையைப்பத்தியோ பாடலாசிரியரைப்பத்தியோ, பாடகர்களைப்பத்தியோ இல்லை.. எந்த இடத்தில் பாட்டு புகுத்தப்படவேண்டும்னு இருந்த ஒரு விதிமுறையை தகர்த்தெறிஞ்சு, எங்களை கவர்ந்த சில பாடல்களைப்பத்தி மட்டுமே..

இப்படிக்கூட பாட்டுக்கள் சேர்க்கலாமோன்னு எல்லாருக்கு ஒரு ஞானோதயம் வந்ததுன்னு சொன்னா அது மிகையாகாது.தடுக்கி விழுந்தா பாட்டுன்னு இருந்த காலம் மாறினதே பெரிய பாடுதான்னாலும், கொஞ்சம் கூட மாற்றமே இல்லாம எல்லாப்படத்துலேயும் ஒரே மாதிரியான சிச்சுவேஷன் பாடல்கள் வர ஆரம்பிச்சப்போ கொஞ்சம் அலுப்புத்தான் தட்டித்து. ”வாத்யாரே, இப்போ பாட்டு வரும்பாரு”ன்னு ஜனங்க ஊகிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இந்தப்புதுமையான சிச்சுவேஷன் சினேரியோவுல அனேகமாக முக்கால்வாசி எல்லாமே பாலச்சந்தர் கமலஹாசன் கூட்டணியில் வந்திருக்கும் இல்லாட்டி பாலச்சந்தர் படங்களிலா இருக்கும்.

இங்கே இந்தப்பதிவுல் நான் சொல்ல விரும்புவது என்னை மிக மிக கவர்ந்த சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்

அடுத்தாத்து அம்பூஜத்தை பார்த்தேளா?
கம்ப்ளெயிண்ட் பண்ற நோக்கத்தோட எழுதப்பட்ட ஒரு அருமையான காமெடி பாட்டு. செளக்காரின துறு துறு நடிப்பும் ஸ்ரீகாந்தின் அசமஞ்சமான முகபாவங்களும் மிகவும் ரசித்தவை.


சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
சினிமாவுல ஒரு ம்யூசிக் டைரக்டரும் ஒரு கவிஞனும் எப்படி ஒரு பாட்டை உருவாக்குறாங்களோ அதே மாதிரி இப்படி ஒரு தீம் வெச்சு,அதன் மூலமா கதாநாயகன் தன் லவ்வை சொல்றா மாதிரி கே.பி இந்த பாட்டை வடிவமைச்சார். புதுமையிலும் புதுமை. ஸ்ரீதேவியின் சூட்டிகையும், கமலின் நிஜக்கவிஞனுக்குரிய கற்பனாசக்தி நடிப்பும் அபாரம்! யாருக்குத்தான் இந்த பாட்டு பிடிக்காது. குலதெய்வம் கமல் காம்பினேஷன்ல அல்ட்டிமேட் பாட்டு. என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்ஸ்ல இடம் பிடிச்சு இருக்கும்.


என்ன சமையலோ?
மறுபடியும் கே.பியின் உக்தி. சமையல் மட்டுமில்லாம அதுக்குள்ளே சங்கீதத்தையும் அழகா சேர்த்து அறுசுவை உணவா பரிமாறி இருப்பாங்க. அந்தந்த ராகம் பேர் வரும்போது அந்த ராகம் உபயோகிச்சு இருக்காங்க. அழகிய தமிழ் மகனில் வரும் வலயபட்டி தவிலே பாட்டுக்கு எல்லாம் இந்தப்பாட்டு தான் முன்னோடியா இருக்கும். இதே மாதிரி அகத்தியர் படத்துல ராவணன் வீணை வாசிச்சுண்டே பாடுற பாட்டு கூட சாலஞ்சிங் தான்னாலும் ஒரு வித ஜனரஞ்சகமான சிச்சுவேஷன் சாங் இது. இசைக்கு இசையாச்சு, காமெடிக்கு கமல் மனோரமா தாரா ஆச்சு. வரிகளை மட்டும் லேசுல விட்டுட முடியுமா என்னா? தன் பங்குக்கு கவிஞர் (வாலி???) புகுந்து விளையாடி இருப்பார். ம ஸ லா... கரம் மசாலா...  ப ப ப ப ப தா? பருப்பு இருக்குதா? த நி த நி த நி த நி தனியா இருக்கா? ஆஹா.. சூப்பர் வரிகள். சில சமயம் தேடி பார்ப்பதுண்டு. அவ்ளோ இஷ்டம். கமலின் வாழையிலை பெயிண்டு ஜோக்கு சின்ன வயசில ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்ச ஒண்ணு.


கனாக்காணும் கண்கள் மெல்ல...
இந்தப்படம் ரொம்ப சின்ன வயசுல பார்த்த படம். ஒண்ணும் நினைவில்லை. போன வருஷம் ராஜஸ்ரீயில டவுன்லோடு பண்ணி பார்த்தப்போ இந்த பாட்டு வந்த சிச்சுவேஷன் என்னை ரொம்பவும் பாதிச்சது. ஒரு மனச்சிதைவு ஏற்பட்ட பொண்ணோட எண்ணச்சிதறல்களை அப்படியே படம் பிடிச்சு சொல்லி இருப்பார். இதமான வெல்வெட் குரலில் குலதெய்வம் பாடி இருப்பார். ஒருவர் மற்றவரை மிஞ்சும் நடிப்பு. புகழ வார்த்தைகளே இல்லை.



கவிதை கேளுங்கள் - இது புன்னகை மன்னனில் வரும் இன்னொரு வித்தியாசமான சிச்சுவேஷன் சாங். ரேவதியின் நடனமும், இளையராஜாவின் இன்னிசையும் வாணியின் குரலும் மெய்மறக்கச்செய்யும். அடிக்கடி கெடியாரத்தை காட்டி ராத்திரி பூரா டான்ஸ் ஆடுறான்னு சொல்லி இருப்பாங்க. என்னுடைய மிக முக்கியமான ஃபேவரைட்.




இதே மாதிரி இன்னோரு பாட்டு அழகன்ல மரகதமணி இசையில குலதெய்வமும் சந்தியாவும் பாடிய சங்கீதஸ்வரங்கள் பாட்டு. டி.வி தான் தீம். சாயந்திரம் பேச ஆரம்பிச்சு டெல்லி அஞ்சல் (9.00PM) இத்துடன் நிறைவு 11.00? டீவியில் கிரெய்ன்ஸ், அப்புறம் காலை 7 மணிக்கு மீண்டும் தூர்தர்ஷன் லோகோ வரும் வரை இவர்கள் ஸ்வீட் நத்திங்க்ஸ் தொடருதாம். பாலச்சந்தரைத் தவிர வேற யாராலும் இந்த மாதிரி தின்க் பண்ண முடியாதுன்னு நினைக்கறேன்.

இந்த மாதிரி உங்களைக்கவர்ந்த சிச்சுவேஷன் பாட்டுக்களை பற்றி எனக்கு இங்கே பின்னூட்டமாவோ அல்லது அழகா ஒரு பதிவாவோ தெரிவியுங்களேன்.

25 comments:

எல் கே said...

different thinking and choice good one

SUFFIX said...

புன்னகை மன்னன் பாட்டு ரியலி சூப்பர்!! நல்ல தேர்வு.

தக்குடு said...

kalakkareley ananya akka!!..:) in the middle you r gvng some aacharyamss in ur blog...:) keep it up

Madhavan Srinivasagopalan said...

என்னங்க.. இப்படி ஏமாத்திட்டீங்க.. தலைப்பு மட்டும், 'எனக்கு பிடித்த பத்துப் பாடல்கள்' அப்படின்னு இருந்த..

"கல்யாண சமையல் சாதம்..." (மாயபஜார் -- old ) அப்படின்னு சொல்லியிருப்பேனே..

கௌதமன் said...

எழுபதுகளுக்கு முன் வந்த எத்தனையோ சிவாஜி படப பாடல்கள் எனக்குப் பிடித்த சிச்ச்வேஷன் சாங்ஸ்.
உதாரணம்:
உயர்ந்த மனிதன் - அந்த நாள் ஞாபகம்
பாலும் பழமும் - போனால் போகட்டும் போடா
தில்லானா மோஹனாம்பாள - நலம் தானா
கைகொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ,
கௌரவம் - பாலூட்டி வளர்த்த கிளி
படிக்காத மேதை - எங்கிருந்தோ வந்தான் இடை ஜாதி நான் என்றான்.
( இவைகள் உடனே ஞாபகம் வந்தவை. இன்னும் நிறைய ஒரு நாள் முழுவதும் சொல்லலாம் )

ஹுஸைனம்மா said...

சுவாரசியமான கண்டுபிடிப்புகள்!! (கிண்டல் இல்லை, நிஜமாப்பா!!)

’கனா காணும் காலம்’ தவிர மீதி எல்லாம் பாத்திருக்கேன். இது இப்பதான் பாத்தேன், கலக்கமடைய வைக்குது.

பின்னூட்டங்களில் வரப்போற பாடல்களையும் ரசிக்கக் காத்திருக்கேன்!!

Ahamed irshad said...

My Comment Missing..?

Anonymous said...

"அடுத்தாத்து அமுபுஜதே பார்த்தேளா "

இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு..தலைப்பு பார்த்து நான் வேறே எதோ தான் எழுத போறேன் என்று நினைச்சேன் . உங்கள்க்கு பிடிச்ச பாட்டுக்கள் எல்லாமே அருமை

Ananya Mahadevan said...

அஹ்மத் இர்ஷாத்,

உங்க கமெண்டு பப்ளிஷ் பண்ணிட்டேனே.. ஏனோ காணோம்!! :((( நீங்க சொன்ன விட்ஜெட்டை தூக்கிட்டேன்.. ரொம்ப நாளா பண்ணனும்ன்னு நினைச்சதை உங்க கமெண்ட்டை பார்த்த உடனே பண்ணிட்டேன். நன்றி!

Chitra said...

Situation Songs..... பாட்டு பிடிக்கிறதுல, உங்க situation வேற - என்னுடையது வேற போல..... ஹா,ஹா,ஹா,ஹா,.....

பத்மநாபன் said...

தகுந்த சுழல் பாடல் வைப்பதில் பாலசந்தருக்கு நிகர் அவர்தான்...அதிலும் கமல் + எஸ்.பி.பி கூட்டணி சிறப்பு.. உதாரணங்கள் பல, அவர்கள், அவள் ஒரு தொடர் கதை, உன்னால் முடியும் தம்பி , இப்படி நிறைய...
அப்புறம், கனா காணும் கண்கள் மெல்ல.....எஸ்.பி.பி யின் உச்சாணிப்பாடலை அளித்தமை அருமை...

ஜெய்லானி said...

(1) உன்ன நினைச்சே பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே !!!

(2) இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவினில் தொட்டிலை கட்டி வைத்தே அதில் ..!!

(3) மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலர்ந்த இளம்..!!

(4) யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை...!!

(5) உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா..!!

(6) இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்...!1
.>>
.>>
.>>
.>>
.>>


இந்த பாட்டில் வரும் சிச்சுவேஷன் சரியா பொருந்தி வரும்ன்னு என் நினைவு..!!

Swengnr said...

இவ்வளவு நன்றாக எழுதும் தாங்களா எனக்கு கமெண்ட் போட்டீர்கள்! மிக்க நன்றி!
உங்கள் பகிர்வுக்கு நன்றி! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.
http://kaniporikanavugal.blogspot.com

பனித்துளி சங்கர் said...

பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றும் இனிமையானதுதான் . அருமையான தேர்வுகள் . பகிர்வுக்கு நன்றி நண்பரே

ஸ்ரீராம். said...

நல்ல தலைப்பு...கற்பனைக்கு நிறைய வேலை வைக்கும்.... நிறைய வாய்ப்புகளும்...கேஜி கௌதமன் சொன்ன மாதிரி உடனே சொல்ல சிலவும், யோசித்து யோசித்துச் சொல்ல பலப்பலவும்...என் பங்குக்கு இரண்டு பாடல்கள் சொல்லிவிட்டு கமெண்ட்டை முடிக்கிறேன்...!! விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று பாடல், வளர்ந்தகலை மறந்து விட்டாள் பாட்டு...

ராகங்களைச் சொல்லியே இன்னொரு பாடல் வரும் கேட்டிருக்கிறீர்களோ? உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும் என்று தொடங்கும் பாடல்..படம் பெயர் நினைவு இல்லை...

Nathanjagk said...

அநன்யாஜி.. ஜி தான்!
பாடல்களை இன்னொரு வகையிலும் ரசிக்க முடியும் என்று புரிகிறது.
உங்களுக்குள் ஒரு கலைச்சிற்பி தூங்கிக் கொண்டிருக்கிறார். அதை மெதுவாத் தட்டி.. எழுப்பிட வேணாம்னு அகில இந்திய அநன்யா சிஷ்யக் கோடிகள் மன்றம் - பெங்களூர் கிளை சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

நீங்க படம் டைரக்ட் செய்தால் நன்றாக மொறுமொறுவென பொன்னிறமாக வரும் என்று அநன்யா சிஷ்ய கேடிகள் பேரவை - குற்றாலம் கிளை சார்பாக சொல்லப் படுகிறது.

எனக்கு நினைவுக்கு வரும் சிச்சுவேஷன் சாங்க்ஸ்:
வா வாத்யாரே வூட்டாண்ட (மனோரமா, சோ) - பேட்டைக் காதல்
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு; கவலைப்படாதே சகோதரா போன்றவையும் இவ்வகையறாவே.

நலந்தானா உடலும் உள்ளமும் (தில்மோ) - கலைக் காதல்
செளக்யமா கண்ணே செளக்யமா (சங்கமம்)
கண்ணோடு காண்பதெல்லாம் (ஜீன்ஸ்)

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் (மைமகாமராஜன்); மாடத்திலே கன்னி மாடத்திலே (வீரா) இதெல்லாம் அடுத்தாத்து அம்புஜம் வகையறா

ஊர்வசி டேக் இட் ஈஸி (காதலன்) நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது; ஓரங்கா ஸ்ரீலங்கா (சிங்காரவேலன்) பட்டிக்காடா பட்டணாமா; வாடி என் கப்பக்கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை); கட்டவண்டி கட்டவண்டி (சகலகலா வல்லவன்) - - காலேஜ் குசும்பு அல்லது ஈவ் டீஸீங்

ஸ்ஸ்ஸ்டாப்பிட்!!! வொய் நான் இதை என் ப்ளாக்கில் பாடக்கூடாது???

ஜிகர்தண்டா Karthik said...

அருமையான பாடல் தொகுப்பு.
என்ன இருந்தாலும் ‘கமலின் வாழையிலை பெயிண்ட் பார்த்து சின்ன வயசில் சிரித்து...’ இப்படி வயசை குறைத்ததை கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்.

pudugaithendral said...

பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். அருமையான தெரிவுகள்.

Matangi Mawley said...

நான் யோசித்த வரையில்-
சொன்னது நீ தானா (நெஞ்சில் ஓர் ஆலயம்), பன்னீர் புஷ்பங்களே (நிழல் நிஜமாகிறது), முடியுமென்றால் படியாது(மிஸ்ஸியம்மா), கா கா கா(பராசக்தி), கண்ணும் கண்ணும் கலந்து(வஞ்சிக்கோட்டை வாலிபன்), குற்றம் செய்தவன் (ரத்தக்கண்ணீர்), அடிக்கிற கை தான் அணைக்கும்(dont know )

very interesting post!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

- சௌகார் ஜானகி பழிப்பு காட்டுற அழகுக்கே நூத்துக்கு நூறு போடலாம்

- சிப்பி முத்து பாட்டு எப்பவும் என் favourite ... அதுவும் தலைவர் கமல்னா சொல்லவே வேண்டாம்... போதாததுக்கு ஸ்ரீதேவி... சூப்பர் சூப்பர் சூப்பர்...

- ஆல் டைம் சமையல் பாட்டு அது... again கமல்....

- //கனாக்காணும் கண்கள் மெல்ல...// அதிகம் கேட்டதில்ல

- //கவிதை கேளுங்கள்// கேட்டுகிட்டே இருக்கலாம்

- //சங்கீதஸ்வரங்கள்// சான்சே இல்ல போ...

சூப்பர் பதிவு...

Porkodi (பொற்கொடி) said...

எருமை சீ சாரி அருமை அருமை அருமை எனக் கூறிக் கொண்டு வாய்ப்பு தந்தமைக்கு பெரியோர்களுக்கும் தாய்மார்களுக்கும் அன்பு சகோதர சகோதரிகளுக்கும் சரி சரி இறங்கிடறேன்.

ஆர்.வேணுகோபாலன் said...

சிச்சுவேஷன் சாங்க்ஸ் என்ற கான்சப்டை முதலில் தமிழ் சினிமாவுக்கே அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர் தான்! உதாரணத்துக்கு ’நெஞ்சிருக்கும் வரை,’ படத்தில் வரும் ’பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி,’ மற்றும் ’எங்கே நீயோ நானும் அங்கே,’ இரண்டு பாடல்கள்!

அப்புறம் ’உன்னால் முடியும் தம்பி,’யில் வரும் ’சமையல் பாடமே!’ என்ற பாட்டு இளையராஜா இசையமைத்து, பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியும் படம் வெளிவராத ’மணிப்பூர் மாமியார்,’ படத்தில் இடம்பெற்ற பாடல்! அதே படத்தில் மலேசியா வாசுதேவன் (சி.எஸ்.ஜெயராமன் குரலில்) ஜென்சியுடன் இணைந்து பாடிய "ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே!" என்ற பாட்டும் மிகப்பிரபலம்! கே.பி. அப்படத்தின் பாடலை புத்திசாலித்தனமாக ’உ.மு.த’வில் உபயோகித்துக்கொண்டார்.

ஆனால், ’கவிதை கேளுங்கள்!" வாணி ஜெயராமின் மாஸ்டர் பீஸ்! நல்ல பதிவு!

Unknown said...

:-)

Ananya Mahadevan said...

@LK,
ரொம்ப நன்றி!

@சஃபிக்ஸ்,
ரொம்ப நன்றிங்க!

@மாதவன்,
அதுக்கென்ன பத்து பாடல்கள்ன்னு ஒரு பதிவு எழுத வேண்டியதுதானே?

@தக்குடு கண்ணா,
ஹிஹி..அப்படீன்னா நான் எழுதற பாக்கி எல்லாமே கொடூர மொக்கைன்னா சொல்றே?

@கெளத்தம்ஜி,
உங்க சாய்ஸ் சூப்பர். போனால் போகட்டும் எல்லாம் தத்துவ பாட்டு,பாலூட்டி வளர்த்த கிளி pathos song, நான் வித்தியாசமான situation பாடல்களை சொன்னேன்.

@ஹுஸைனம்மா,
கனாக்காணும் கண்கள் மெல்ல பார்த்ததில்லையா? ஆச்சரியமா இருக்கே! சூப்பர் சாங், சூப்பர் ஆக்டிங், சூப்பர் சிங்கிங் எல்லாமா சேர்ந்த கலவை!

@அஹமத்,
என்னாச்சுன்னு தெரியலைப்பா. நான் உங்க கமெண்ட் பார்த்து பப்ளிஷ் பண்ணேன் ஏனோ வரலை! மன்னிக்கவும்.

@சந்தியா
வாங்க, எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு சேம் பின்ச்! ரொம்ப நன்றி!

@சித்ரா
கருத்துக்கு நன்றி

@பத்து அங்கிள்,

இன்னும் சில வித்தியாசமான பாடல்கள் - இருமனம் கொண்ட திருமண வாழ்வில் - வெண்ட்ரிலோக்விஸம் சாங் , சதன் மிமிக்ரி பண்ணிய கடவுள் அமைத்து வைத்த மேடை - ரொம்பவும் சூப்பர்.
நீங்க சொன்னாப்ல கேபி கோணங்கள் வித்தியாசம்.

@ஜெய்லானி,
உங்க செலக்‌ஷன் எல்லாமே சூப்பர் சாங்ஸ்! மலர்ந்தும் மலராத - என் ரங்குவின் ஆல் டைம் ஃபேவரைட்டாம். அடிக்கடி சொல்லுவார்.

@சாஃப்ட்வேர் எஞ்ஜினீயர்,
வாங்க, நன்றி! உங்கள் கருத்துக்கும் வோட்டுக்கும். உங்க வலைப்பக்கம் வந்தேன். வெரி இம்ப்ரெஸிவ்! நிறைய எழுதுங்கள்.

@பனித்துளி,
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹை!

@ஸ்ரீராமண்ணா,
டாங்கீஸ். ரெண்டு பாட்டும் எனக்கு புதுசு. கேட்டதில்லை. ராகங்களை சொல்லி நீங்கள் குறிப்பிடும் பாட்டும் தெரியலை. :( நாங்கள் எல்லாம் யூத்து! :)))

Ananya Mahadevan said...

//அநன்யாஜி.. ஜி தான்!
பாடல்களை இன்னொரு வகையிலும் ரசிக்க முடியும் என்று புரிகிறது.
உங்களுக்குள் ஒரு கலைச்சிற்பி தூங்கிக் கொண்டிருக்கிறார். அதை மெதுவாத் தட்டி.. எழுப்பிட வேணாம்னு அகில இந்திய அநன்யா சிஷ்யக் கோடிகள் மன்றம் - பெங்களூர் கிளை சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.// ஓ இதான் கிவ்வண்டு டேக் பாலிஸியா? நான் ஏற்கனவே தொடங்கி இருக்கற ஜகன் ரசிகர் மன்றப்பணிகள் எல்லாம் என்ன ஆகுறது. உங்க லொள்ளுக்கு ஒரு அளவே லேதா? அதென்ன குற்றாலம் கிளை? ஜகன் ர.மன்றம் ஏர்வாடியிலிருந்து அவசரமாக உங்களை ஒரு கதை எழுதச்சொல்லி இருந்தாங்களே அதென்ன ஆச்சு? :))

உங்க செலக்‌ஷன் பாட்டுக்களும் சூப்பர் ஜகன். ஒரு பதிவு போடுறது!

@ஜிகர்தண்டா
உனக்கு இப்போ என்ன வேணும்? பேமெண்டு கிடைக்காட்டி, பேசி தீத்துக்கலாம்.. இந்த மாதிரி கலாயிக்கறவேலை வேணா.. ஆங்..

@புதுகை அக்ஸ்,
நன்னி ஹை! டாங்கூ...

@மாதங்கி,
வருக, உங்கள் செலக்‌ஷனும் சூப்பர்!
ஏன் எல்லாமே ரொம்ப பழைய பாட்டா இருக்கு? வொய்?

@அ.த,
யா யா, மீ டூ செளக்கார் ஜானகி ஃபேனு! பஹுத் பஹூத் தான்க்ஸ் ஹை!

@பொற்ஸ்,
நேரே செம்மொழி மானாட்டுக்கு போற வழியில இறங்கி கருத்து சொன்னே போல இருக்கே? எனிவே டாங்கீஸ். இன்னா செய்தாரை ஒருத்தர்.. அதே அதே.. ஓடு!

@தமிழன் வேணு அவர்களே,
அருமையான தகவல்கள் சொன்னதுக்கு மிகவும் நன்றி! வேறு படத்துக்காக அமைத்த பாடல்ன்னு நீங்க சொல்லித்தான் தெரியும். மிக்க நன்றி

@பேநா மூடி அவர்களே,
நன்றிங்க.

Related Posts with Thumbnails