Pages

Friday, April 22, 2011

வாட் ஆஃப் எ பல்பு டே!!!

ஹாய் ஹாய் ஹாய்... நான் தான்.. மறுபடியும் வந்துட்டேன். ஹய்யான்னு சொல்றவங்களுக்கு நன்றி! அய்யய்யோன்னு கதறி தன் வருத்தத்தை தெரிவிப்பவங்களுக்கு ஒரு சின்ன ஐடியா - மூக்கு சிந்த கர்ச்சீப் உபயோகிக்கவும். :)) I am back guys!

எல்லாரும் சுகமா? ரொம்ப நாளாச்சு இல்லையா? நேக்கும் எழுத நேரமும் ரசனையும் இல்லாம போயிடுத்து. (எளுதிட்டா மட்டும்!!) இன் தி மீன் டைம், எழுதுங்க எழுதுங்கன்னு வந்த பல்லாயிரக்கணக்கான மடல்களுக்கு நன்றி ஹை! அதெல்லாம் எண்ணிப்பார்க்க கூடாது (ஒரு ரெண்டு மெயில் தானே இருந்துச்சுன்னு யாருங்க அங்கே சவுண்டு விடுறது?)

சென்னை வந்து சுமார் நாலு மாசம் ஆச்சு. இன்னும் முழுசா செட்டில் ஆகலை. நிறைய வேலைகள் இருக்கு. இருந்தாலும் இந்தப்பதிவு எழுத என்ன காரணம்?

நமக்கு ஒரு நேரம் பல்பு கிடைக்கலாம். சில சமயம் ஆஃபீஸ் சில பல பல்புகள் கிடைக்கலாம்.. சரி சரி... மேக்ஸிமம் ஒரு நூறு? சரி விடுங்க கரெக்டாவே சொல்லிடுறேன்.. நூத்தம்பது பல்பு அதான் எக்ஸாக்டு கவுண்ட்.(நம்பிட்டாங்களோ?) ஆனா... ஒரு நாள் பூரா பல்பா... கடவுளே.. என்ன  சோதனை?

டூவீலரில் ஆஃபீஸ் போகும் நான்,தினப்படி 100 ரூபாய்க்கு பெட்ரோலை முழுங்கும் அந்த வண்டியை தட்டிக்கொடுத்து ஓட்டுவதுக்குள்ளே பொன்னர் சங்கர் படத்துக்கு பத்து வாட்டி போயிட்டு வந்தாப்புல ஒரே சலிப்பு. ஒவ்வொரு வாட்டியும் எஞ்ஜின் ட்யூன் பண்றேன்னு சொல்லிட்டு 600 ரூபாய் பில் கொடுக்கும் மெக்கானிக் அப்படி என்னதான் பண்ணுவானோ தெரியாது.. இதுக்கு போடும் பெட்ரோல் எல்லாம் மெட்ரோ வாட்டர் லாரியில் இருந்து ஒழுகும் தண்ணி மாதிரி எங்கே தான் போகுமோன்னு ஆச்சர்யப்பட வைக்கும்.

சரின்னு இன்னிக்கி மனசைத்தேத்திண்டு,  (ஊழ்வினை தூண்ட), ஒரு நாளைக்கி பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல போய்த்தான் பார்ப்போமேன்னு தோணித்து. பஸ்டாப்புல போய் நின்னா ஒரு பஸ்.... ஒரு பஸ் இல்லை. நஞ்சுபுரம் ஓடும் தியேட்டர் மாதிரி பாஸஞ்சர் வறட்சியா ஒரே ஒரு ஷேர் ஆட்டோ நின்னுண்டு இருந்தது. நேக்கு தான் ஷேர் ஆட்டோவைக்கண்டா டாம் அண்டு ஜெர்ரில வர்றா மாதிரி தோளுக்கு பின்னாடி ரெண்டு இறக்கை முளைச்சுடுமே! என்ன ஒரு செளக்ர்யம்ன்னு பல்லிளிச்சுண்டே ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்துலே போய் அதுல ஏறி உக்காந்தேன், அவ்ளோதான்.


அவன் என்னடான்னா வொய்ட் போர்டு பஸ்ஸை விட மஹாக்கேவலமா ஓரஞ்சாரம், இண்டு இடுக்குல இருந்து பாஸஞ்சர் வெள்ளம் வந்து இவன் ஆட்டோவுல ஏறுவான்னு மைண்டு மில்க் குடிச்சுண்டே 10ல ஓட்டிண்டு வந்திருக்கான். மஹாபாவி, கடங்காரா, வேகமா போடான்னு உறக்க, மனசுக்குள்ளேயே திட்டிண்டு வந்தேன். என் BP ஏத்தறதுக்குன்னே மூணு சிக்னல், ஒரு ட்ராஃபிக் மாமா வேற கடக்க யாருமே இல்லாத ரோட்டை க்ராஸ் பண்றதுக்காக கைகாட்டி எங்களை நிக்க வெச்சார். சார், உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையான்னு கேட்கலாமான்னு தோணித்து.

வழக்கமா 10 நிமிஷத்துல போய்ச்சேரவேண்டிய கிண்டியானது சுமார் 25 நிமிஷமாச்சு. இருக்காதா பின்னே..

சரி அசட்டுத்தனம் பண்ணிட்டோம், எப்படியோ, பாதி தூரம் வந்தாச்சே இனி சீக்கிரம் போயிடலாம்ன்னு மனசை தேத்திண்டேன்.


PP21 போன்ற பல்லாயிரக்கணக்கான பஸ்கள் இருக்கும்போது “ ஏ அட்யார் அட்யார் அட்யார்”ன்னு காட்டுக்கூய்ச்சல் போட்டுண்டே ஒரு ஷேர் கார்(ச்சே ச்சே.. இவன் நல்லவன்.. ஷேர் ஆட்டோ தான் ஸ்லோன்னு என் உள்மனசு சொல்ல ஆரம்பிச்சுடுத்து)மூணு பேர் உட்கார்ந்திருக்க, நான் நாலாவதா போய் ஜாயின் பண்ணிண்டேன்.

என்ன கொடுமையோ, கஷ்டகாலமோ தெரியலை, அவன் அட்யார் அட்யார்ன்னு சவுண்டு கொடுத்த அளவுக்கு ஆட்கள் வந்து ஏறலை. அதுனால, தேர் கிளம்பலை பார்த்துக்கோங்க..10 நிமிஷம் நான் கிளம்பிடும்ன்னு பாசிட்டிவ்வா சிரிச்ச முகத்தோட உட்கார்ந்திருந்த சுப மூஹூர்த்தத்தில் 5 பஸ் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு வந்துட்டு போயாச்சு.. இஞ்சி தின்ன குறங்கு மாதிரி என் முகம் மாற ஒரு ரெண்டு மூணு நாலு ஐஞ்சு ஆறு வாட்டி வாட்சு பார்க்க ஆரம்பிச்சேன். (அப்புடி ட்ரைவருக்கு ஹிண்ட் கொடுக்கறேனாம்) அவன் எதையும் கண்டுண்டதா தெரியலை.
ஒரு நொடிப்பொழுதில் மனம் வெறுத்து, மெதுவாக யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்ன்னு விருட்டுன்னு இறங்கி வந்துட்டேன். அதான் சில நிமிஷங்களிலேயே 5 பஸ் வந்ததே.. இதோ இப்போ ஆறாவதும் வந்துடும் பாருன்னு என் உள்மனசு சொல்லிண்டே இருந்ததா... பார்த்தா ...வழக்கம் போல  வேற ஏதேதோ பஸ்கள் வந்துட்டு போயிடுத்து.

ஒரு மாதிரி பதபதைப்பா இருந்த என் மனசு, ஷேர்கார் இருக்கான்னு ஒரு செக்கண்டு செக் பண்ணிண்டது.. ஏன்னா இதுவும் இல்லாம, அதுவும் இல்லாம ஒரு மாதிரி ரெண்டுங்கெட்டானா போயிடுமே!

ச்சே.. என்ன ஒரு தப்பு பண்ணிட்டோம்ன்னு நினைச்சுண்டே இருந்தேனா.. 21G வந்தது. ஆஹான்னு அந்த ஷேர்காரை இளக்காரமா பார்த்துண்டே ஏறிட்டேன். ஒரு மிக முக்கியமான செய்தி, சின்னமலை போனப்போதான் உதயமாச்சு. 21G மத்யகைலாஷ் போகாதே. அவன் தான் கோட்டூர்புரத்துக்கு லெஃப்டு கட் பண்ணிடுவானே! என்ன ஒரு முட்டாள்தனம்! (இதுல நான் விட்டுட்டு வந்த ஷேர்கார்க்கு இளக்கார லுக்கு வேற) . கண்டக்டரிடம் கேவலமா திட்டு வாங்க மனசில்லாம ஒரு காந்தி மண்டபம்ன்னு டீஸெண்டா கேட்டு வாங்கிண்டேன். வண்டி மட்டும் இருந்தான் இன்னேரம் பார்க் பண்ணிட்டு ஆஃபீஸ் எண்டர் பண்ணியிருக்கலாமேன்னு வருந்திண்டே காந்தி மண்டபத்துல இறங்கினேன்.

பின்னாடியே 23ஸீ வந்ததா.. ஹைய்யான்னு குதிச்சு ஏறிட்டேன். மத்யகைலாஷூக்கு 2.50 ரூபாதானான்னு உச்சி குளுந்தேனோயில்லையோ... பஸ் நான் இறங்க வேண்டிய மத்யகைலாஷ் சிக்னல் தாண்டி (!!!) கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்டாப்பிங்கில் இறக்கி விட்டுடுத்து.

ஷேராட்டோ, ஷேர் கார், ரெண்டு பஸ், இப்போ நடராஜா சர்வீஸான்னு நினைச்சுண்டே திரும்பவும் மெகா பல்புடன் வந்த வழியே ரோடு க்ராஸ் பண்ணி நடந்து வந்து கஸ்தூர்பா ஸ்டேஷன் வாசல்ல நின்னா, வழக்கம்போல என் ராஜயோக ஜாதக மஹிமை, ஒரு பஸ் இல்லை.

இந்த 5C பஸ் இருக்கே அது, “ வரும். ஆனா வராது”  டைப்பு பஸ். கூட பணிபுரியும் தோழி ”நிறைய ஷேர் ஆட்டோ இருக்குங்க”ன்னு சொன்னதுமேல நேக்கென்னமோ அப்படி ஒரு அபார நம்பிக்கை! ஒரு ஷேர் ஆட்டோ எனக்கே எனக்கா காத்திண்டு இருந்ததா.. அதுல அசுர வேகத்துல ஏறி உக்காந்துட்டேன். (இன்னுமா நீ திருந்தலைன்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது) என் கூட இன்னும் ரெண்டு பெண்களும் அதுல வந்து உக்காண்டா.

ஆனா, அந்த ட்ரைவர் ப்ரும்மஹத்தி, வண்டி இன்னும் 5 பாஸெஞ்சர் இல்லாம போவாது மேடம்ன்னு சொல்லிப்புட்டாய்ன். எனக்கா செம்ம காண்டு. ஏ முட்டாப்பலே.. மணியாச்சுடா.. போகணும்டா.. வண்டி எடுறான்னு சத்தம் போட்டு மறுபடியும் மனசுக்குள்ளேயே திட்டிண்டேன்.

அப்புறம் ஒரு வழியா ரெண்டு எக்ஸ்ட்ரா பேஜஞ்சர் வந்தாங்களா, ஹப்பாடி எடுப்பான்னு ஒரு நம்பிக்கை பிறந்தது. திடீர்ன்னு பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பெண்கள் ஏய் இறங்குடீன்னு கத்திண்டே இறங்கிட்டாங்க.
எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.

இன்னும் இதை நம்பிண்டு உட்கார்ந்திருந்தா ஷிஃப்டு முடியுற சமயத்துல தான் ஆஃபீஸ் போய்ச்சேர முடியும்ன்னு தெரிஞ்சு நானும் அசுர வேகத்துல ஷேர் ஆட்டோவில இருந்து இறங்கிப்பார்த்தா 5T மெஜெஸ்டிக்கா வந்து நிக்கறது. ஓடிப்போய் அதுல ஏறிட்டேன்.

”இத்தனை நாள் நாம ஆஃபீஸ் வந்திருக்கோமே, என்னிக்காவது இந்த 5T யை பார்த்திருக்கோமோ? அடக்கடவுளே, இது வேளச்சேரி வழியா போயிடுமோ? அய்யய்யோ, இன்னிக்கி ஆஃபீஸ் போகவே முடியாதா? ”ன்னு கவலைப்பட்டுண்டே, பின்னாடி ஒரு க்ளான்ஸ் திரும்பிப்பார்க்கறேன்.. 5C!!!! ”சார் ப்ளீஸ் நெக்ஸ்டு ஸ்டாப்புக்கு அர்ஜெண்டா ஒரு டிக்கெட் குடுங்க”ன்னு கேட்டு அவசரமா டிக்கெட் வாங்கி ஸ்டாப்புல இறங்கி ஓடி வந்து அந்த பஸ்லே ஏறிண்டேன். ஹப்பாடி.. என்ன ஒரு நிம்மதி!

ஒரு வழியா ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன்.

” எப்படி விஜி நீங்க தினசரி நம்ம ஏரியாவுல இருந்து இங்கே வர்றீங்க?சரவணபவனில் சொத்து முழுவதும் கொடுத்து மினி மீல்ஸ் சாப்பிட்ட மாதிரின்னா வயத்தெரிச்சலா இருக்கு?”ன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொன்னேன். சிரிச்சுண்டே கேட்டுட்டு மெதுவா சொல்றா,” 5T இங்கே நிக்குமே!!!!!!” அப்போ நான் தான் கேக்கலையா? கேன மாதிரி ஒரே ரூட்டுக்கு போற ரெண்டு பஸ்ஸுல அதி தீவிர வீர ஸாஹஸம் எல்லாம் பண்ணி .. ச்சே.. என்ன ஒரு பல்பு! ரெண்டு ரூபாயில போக வேண்டிய டிக்கெட்டுக்கு 4 ரூபாய்.

ஆச்சா.. இன்னும் முடியலை. இருங்க. மதியம் சாப்பிடலையா.. செம்ம பசி. சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது வெற்றிக்கொக்கரிப்போட 5Cயை பிடிச்சு, மத்யகைலாஷ் வந்து இறங்கி, CIT நகர் போகலாம்ன்னு நினைச்சு 5S - சைதை தி நகர்ன்னு போட்ட ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். இது எப்படியும் தப்பாதுன்னு மனசுக்குள்ளே ஒரு பரிஹாஸ சந்தோஷம் கொப்பளித்தது.
கோட்டூர்புரம் வரையில் நல்லாத்தானே போயிகிட்டு இருந்துச்சு. திடீர்ன்னு பஸ் கோட்டூரில் திரும்பிடுத்து. அய்யய்யோ.. இன்னும் கொஞ்சூண்டு முன்னாடி போய் வலது பக்கம் திரும்பினா சைதாப்பேட்டை.. இவன் எங்கே போறான்ன்னு ஒரே யோசனை. இங்கே திரும்பிடுவானா இருக்கும், அங்கே திரும்புவான்னு பார்த்துண்டே இருக்கேன்.. கழுதை பரதேசம் போனாப்புல பஸ் காந்தி மண்டபம் ரோடு முழுவனும் போய், ஊரெல்லாம் சுத்தி கடைசியில் நந்தனம் சேமியர்ஸ் ரோடு வந்து, சைதை வந்து சீஐடி நகர் வந்தது! ஸ்ஸ்ஸபா.. ஒரு நாலு நிமிஷத்துல வரவேண்டிய CIT நகர், சுமார் 25 நிமிஷம் கழிச்சு வந்தது! என்னே ஒரு அதிநவீன ரூட்டு. இதை அப்படியே மெயிடயின் பண்ணிக்கோங்கப்பான்னு சொல்லலாம் போல வந்தது.


ஆக மொத்தம்.. ரெண்டாயிரத்தி முன்னூறு பல்பு. வாட் ஆஃப் எ பல்பு டே!



இதுல இருந்து நாம கத்துக்கும் பாடம் என்னான்னா, கேட்டாலும் பல்பு, விவரம் தெரிஞ்சவங்க  கிட்டே விஷயம் கேட்காட்டாலும் பல்பு தான். 

27 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

me the first....vadai petru michatha padichuttu solren...:)))

Porkodi (பொற்கொடி) said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. நீங்க பல்ப் வாங்கிருக்கீங்க, எனக்கு இவ்ளோ பெரிய‌ கொசுவத்தியை வித்துட்டீங்க.. :))

எல்லா இடத்துக்கும் திருப்பி போகணும் போல இருக்கு! வலையுலக ஆதிகால மாநாடு ஒண்ணு திராச அங்கிள் வீட்ல நடந்த அப்புறம், பதிவர் ஒருத்தர் பீச்சுக்கோ நண்பரையோ பார்க்க பெசண்ட் நகர் போகணும்னு சொல்ல, நான் சும்மா இல்லாம அட எங்க வீடு அங்க தானே இருக்கு, என் கூட வாங்கன்னு சொல்ல, அன்னிக்குன்னு பார்த்து 20 நிமிஷம் ஆகியும் 15 20 ரூட் பஸ் ஒண்ணு கூட மத்ய கைலாஷ்ல வரல‌!!!!!! இன்னிக்கு வரை அதை சொல்லி ஓட்டப்படுகிறேன்.

Porkodi (பொற்கொடி) said...

அப்பாவி, படிக்காம வர்றதுக்கு எல்லாம் வடை கிடையாது. வெறும் அல்வா தான்.

Hariharan said...

Hi, Ananya welcome back. Hariharan (coimbatore). Just read ur post good, due to such a horrible experience i too left chennai and settled in coimbatore

அகல்விளக்கு said...

நோ... நோ...

இதுக்கெல்லாம் பீல் பண்ணக்கூடாது...

நாம வாங்காத பல்பு லோகத்துல எதாவது இருக்கா என்ன...

பி ஹேப்பி...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//Porkodi (பொற்கொடி) said... அப்பாவி, படிக்காம வர்றதுக்கு எல்லாம் வடை கிடையாது. வெறும் அல்வா தான்//கிடைக்கற வரை லாபம்... அல்வா கூட ஒகே தான்...ஆனா என்ன எங்களுக்கு அல்வா வாங்கி பழக்கம் இல்ல யு சி...:))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஹாய் ஹாய் ஹாய்... நான் தான்.. மறுபடியும் வந்துட்டேன்//

என்னமோ mummy returns ரேஞ்சுக்கு ரவுஸ பாரு லொள்ள பாரு... (கௌண்டர் ஸ்டைல்'இல் படிக்கவும்...ஹி ஹி...)



//நூத்தம்பது பல்பு அதான் எக்ஸாக்டு கவுண்ட்//

எண்ணற அளவுக்கு தான் பல்பு'ஆ? உன் பாடு தேவலை அனன்யா... இங்க கவுன்ட் பண்ணவே முடியல... நிமிசத்துக்கு நிமிஷம் நம்ம மக்கள் தொகை மாதிரி ஏறிட்டே இருக்கு...அவ்வவ்வ்வ்வ்....



//ஒவ்வொரு வாட்டியும் எஞ்ஜின் ட்யூன் பண்றேன்னு சொல்லிட்டு 600 ரூபாய் பில் கொடுக்கும் மெக்கானிக் அப்படி என்னதான் பண்ணுவானோ தெரியாது//

ஒரு வேள டியூன் பண்ணி fm ரேடியோ கேட்டு இருப்பானோ... ஜஸ்ட் அ டவுட்... நோ கொல வெறி... ஒகே...:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பஸ்டாப்புல போய் நின்னா ஒரு பஸ்.... //

ஆஹா... என்ன ஒரு கவிதை என்ன ஒரு கவிதை... :))))



//ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்துலே போய் அதுல ஏறி உக்காந்தேன், அவ்ளோதான்//

என்னாச்சு ஆட்டோ கவுந்துடுச்சா... டென்ஷன் ஆகாதே அனன்யா... ஒரு அக்கறைல தான் கேக்கறேன்...::))



//அப்புடி ட்ரைவருக்கு ஹிண்ட் கொடுக்கறேனாம்//

இதுக்கு தான் மணிரத்தினம் படம் ரெம்ப பாக்க கூடாதுங்கறது... :)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//வண்டி இன்னும் 5 பாஸெஞ்சர் இல்லாம போவாது மேடம்ன்னு சொல்லிப்புட்டாய்ன்//

நான் ஒருத்தி வந்தா நூறு பேரு வந்த மாதிரினு தலைவர் டயலாக் சொல்ல வேண்டியது தானே அனன்ஸ்...:)))



//ரெண்டு ரூபாயில போக வேண்டிய டிக்கெட்டுக்கு 4 ரூபாய்.//

பின்ன... நமக்குனு ஒரு வேல்யு இருக்கில்ல...:)))

வெங்கட் நாகராஜ் said...

Welcome Back... Good count :))))

நாஞ்சில் பிரதாப் said...

எல்லாம் நல்லாத்தானே போய்கிட்ருந்துச்சு...யாரு இப்போ உங்களை புதுசா பதிவுலாம் போடச்சொன்னது....
ஓடுங்க ஓடுங்க...ரொம்ப கோவமா இருக்கு....நம்மளை நோக்கித்தான் வருது....:))

திவாண்ணா said...

welcome to chennai!
இதெல்லாம் புதுசே இல்லையே சென்னைவாசிகளுக்கு! அப்புறம் என்னோட அட்வைஸ்...பொடி நடையா நடந்து ஆபீஸுக்கு போயிடலாம்.

திவாண்ணா said...

//வாட் ஆஃப் எ பல்பு டே!//
அது சரி, பல்பு எத்தனை வாட்?

Asiya Omar said...

வாங்க அநன்யா,நலமா?அபுதாபியை மறந்திட்டீங்களே? பகிர்வு விறுவிறுன்னு இருந்தது,

க்ருபா said...

அது ரெண்டாயிரத்தி முன்னூறு பல்பு இல்லை, ரெண்டாயிரத்தி முன்னூத்தி ஒரு பல்பு.

அதாகப்பட்டது, அதே 5Tயில் மறுபடியும் ஏறி இருந்தா, நேரா CIT nagarக்கு வந்துருக்கலாம். மதியகைலாஷுக்கு 5C புடிச்சு வந்ததே கொஞ்சம் நேர விரயம்தான்.

மற்றபடி, சரவணபவன்ல மினிமீல்சுக்கே சொத்தெல்லாம் போய்டும்னு ஃபீல் பண்றீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்? சரவணபவன்ல இதைத்தவிர வேற எதுவுமே நீங்க சாப்டதில்லயா, இல்ல phase Iல சரவணபவன்ல மட்டும்தான் சாப்டுருக்கீங்களா?

நீங்க அரங்கநாதன் சப்வேக்கு அந்தப்பக்கமா? நான் இந்தப்பக்கம். அதனால, எனக்கும் ஆரம்பக்காலங்கள்ல இதே ரேஞ்ச்ல பல பல்பு இல்ல, சீரியல் செட்டே கிடைச்சுருக்கு. அப்பறம் பார்த்தேன், பேசாம ஒரு நல்ல சைக்கிளா பாத்து வாங்கிட்டேன். கட்டின கரன்ட் பில் கைவிட்டாலும், செட்டான சைக்கிள் என்னிக்கும் நம்பளைக்கைவிடாது. Ascendas போறதுக்கு அதுதான் வசதி.

-க்ருபா

Ananya Mahadevan said...

இந்த மொக்கையை படிச்சு கமெண்டிய அன்புள்ளங்களுக்கு மை நன்னி ஹை! டாங்கீஸ் எவ்ரிஒன்.
@ அப்பாவி, ஒரே ஒரு டவுட்டு, நீ அடங்குவியா மாட்டியா?
@ பொற்ஸ் , அப்புடி போகுதா மேட்டர்?
@ ஹரி, நன்றிங்க.
@அகல், :)) அதானே?
@ வெங்கட், நன்றிங்க.
@திவாண்ணா, நல்ல ஐடியா.. வருகைக்கு நன்றி அண்ணா.
@ஆஸியா, : எல்லாரும் எப்படி இருக்கீங்க? வருகைக்கும் கருத்துக்கும் நன்னி ஹை!
@க்ருபா, அதாகப்பட்டது, எங்க ஆஃபிஸ் நேரத்துக்கு கரெக்டா கோயின்ஸைடாகி வருவது 5C மட்டுமே. அதான் அந்த பஸ் மேல எனக்கு லவ்வு. மத்தபடி, இது வரைக்கும் நிஜம்மாவே 5T யை நான் பார்த்ததேயில்லை.
சரவணபவனில் எது சாப்பிட்டாலும் வயத்தெரிச்சல் தானே? :)) என் வீடு CIT Nagar ல இல்லை. அதுனால தினப்படி தொல்லையில்லை. ஒரு வேலையா அந்தப்பக்கம் வந்தேன். இனிமே பேர் கேள்விப்படாத பஸ்ல எல்லாம் ஏறுவதில்லை!:)வருகைக்கும் கருத்ஸுக்கும் நன்னி ஹை!

தெய்வசுகந்தி said...

:-))

கௌதமன் said...

மீண்டும் பதிவு இட ஆரம்பித்ததற்கு வாழ்த்துகள். பதிவைப் படிக்கும்பொழுது,
உங்களோடு சேர்ந்து நானும் எல்லா பயண அல்லல்களும் பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
நான் எப்பொழுதும் சென்னையில் ஏதாவது ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், அந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு இரயில்வே ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில் அங்கு போய் இறங்கியவுடன், செல்லவேண்டிய இடத்திற்கு நடந்து சென்றுவிடுவேன்.

ஸ்ரீராம். said...

மீண்டு(ம்) வருக அநன்யா...

சென்னை டிராஃபிக் படுத்திய பாட்டில் புண் பட்ட மனதை பதிவிட்டு ஆற்றிக் கொண்டீர்களா...

சாந்தி மாரியப்பன் said...

உங்களுக்கு பல்பு கொடுக்கறதுன்னு முடிவானப்புறம் ஒண்ணே ஒண்ணு கொடுத்தா நல்லாருக்குமா.. அதான் எல்லோரும் சொல்லிவெச்சமாதிரி நாள்முழுக்க பல்பு கொடுத்திருக்காங்க :-))

தி. ரா. ச.(T.R.C.) said...

கேன மாதிரி ஒரே ரூட்டுக்கு போற ரெண்டு பஸ்ஸுல அதி தீவிர வீர ஸாஹஸம் எல்லாம் பண்ணி
இந்த மொக்கைக்கு கேன மாதிரிலே மதிரியை எடுத்தறலாம்

sury siva said...

//மனசைத்தேத்திண்டு, (ஊழ்வினை தூண்ட), //

புதுசா ஏதாவது செய்யணும்னு நினச்சு கொதிக்கற எண்ணைலே கைய விடுவாளோ ?
ஷேர் ஆடோ நிஜமா ஸ்கேர் ஆடோ .

உங்க த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ் ஃபாலோட் பை மொமன்டரி டிஸிஷன்ஸ் எனக்கு
சமீபத்திலே நடந்த வேர்ல்டு கப்லே வழ்க்கமா 6 அல்லது 7 வதா அனுப்பவேண்டிய‌
பாட்ஸ்மான் ஆல் ரவுன்டர் பதானை நாலாம் இடத்துலே அனுப்பி தோனி சொதப்பின‌
நினைவு வருகிறது.

மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com

settaikkaran said...

//அய்யய்யோன்னு கதறி தன் வருத்தத்தை தெரிவிப்பவங்களுக்கு ஒரு சின்ன ஐடியா - மூக்கு சிந்த கர்ச்சீப் உபயோகிக்கவும். :)) //

அடடா, காதி கிராப்டுலே தள்ளுபடி-ன்னு போட்டிருந்தாங்க! ரெண்டு டஜன் அள்ளிட்டு வந்திருக்கலாமோ? :-)

settaikkaran said...

//நேக்கும் எழுத நேரமும் ரசனையும் இல்லாம போயிடுத்து//

ஐ! இதுதானே வேணாங்குறது. முகநூலிலே கலக்கோ கலக்குன்னு கலக்கிட்டிருக்கீங்கன்னு தெரியுமே! :-)

வெல்கம் பேக்! அடிச்சு ஆடுங்க! :-))

R. Gopi said...

When it rains, it pours:-)

குணசேகரன்... said...

நீங்க வாங்கின பல்பு பீஸ் போனதா?....

http://zenguna.blogspot.com

...αηαη∂.... said...

நோ நோ.. அழக்கூடாது .. :)

Related Posts with Thumbnails