Pages

Monday, June 16, 2014

ஸ்லீப்பர் பஸ்

ஸ்லீப்பர் பஸ்

எனக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசை தான். ஸ்லீப்பர் பஸ்ஸில் போகணும். அதுவும் பெங்களூர் போகணுங்கறது மட்டுந்தான். வழக்கம்போல இருக்கற குழப்பங்கள்ல அதெல்லாம் அடுத்த ஜென்மாவுல போயிக்கலாம்ன்னு விட்டுட்டேன். இது ஒரு இனிய சர்ப்ப்ரைஸ் ஏன்னா அஃபிஷியலா ஒரு கல்வித்திருவிழாவுக்கு  தஞ்சாவூர் போக அவாளே டிக்கெட்லாம் வாங்கிக்கொடுத்து முடிஞ்சா ஆவின்ல ஹாட்மில்க் வாங்கிக்கொடுத்து, அஷோக்பில்லர்ல வந்து பஸ்ஸேத்தியும் விடுறோம்னு சொல்லியிருந்தா. டிட்டோ அண்ணாச்சி மாதிரி அஹோ பாக்யம்ன்னு எக்ஸ்க்ளெய்ம் பண்ணிண்டே பஸ்ஸில் ஏறினேன்.

செம ப்ளெஸண்ட் சர்ப்ப்ரைஸ்!ஏன்னா அஜு ஒரு ஸ்லீப்பர் பஸ். அதுவும் ஏஜி! அக்கா... அச்சரா...ன்னு நம்பர் தேடிண்டு போனா கட்டக்கடைஜீ ஜீட்டு. சாரி, bed! அஜுல பாருங்க பழைய  Non-Ac  1990ஸ் டைப் பஸ்களையெல்லாம் சமீப காலத்துல ஸ்லீப்பர் பஸ்களா மாத்தி பிராணனை வாங்கறா! ரெண்டு நடிகைகளின் பெயர்களை இணைத்த
பஸ்ஸு கொம்பேனி. ஏற்கனவே இவா பஸ்ஸுல சீட்டிருந்தா அதுக்கு ஹேண்ட் ரெஸ்டு இருக்காது. ஹேண்ட் ரெஸ்ட் இருந்தா உட்காரும் இடத்துல ஸ்ப்ரிங் துருத்திண்டு இருக்கும் இப்படி எக்கச்செக்க நச்சூஸ். ச்சே ச்சே.. இதுல அப்படி ஒண்ணும் இருக்காதுன்னு மனஜை தேத்திண்ட்டேன்.

எல்லா ஜன்னல்களையும் ஸெல்லோ டேப் போட்டு ஒட்டி வெச்சிருக்கா. சரி சரி, தின்க் பாஸிட்டிவ்.. ஏறின உடனே இதையா கவனிக்கணும்?ன்னு மைண்ட் வாய்ஸ் திட்டித்து. எனக்கே எனக்குன்னு ஒரு சிங்கிள் படுக்கை. அதுக்கு கர்ட்டன் வேற! அஹோ பாக்யம்!

நெக்ஸ்ட் சென்னை கத்திப்பாராவுலேந்து மடையன் வலது பக்கம் திரும்பாம இடது பக்கம் திரும்பி அடையாறு நோக்கி போக ஆரம்பிச்சுட்டன்! ஈஸீயார் ரூட்டாம்! அடபிரும்மஹத்தி! ரோடோ நன்னாயிருக்காதுடான்னு நான் இங்கேந்து(மனசுக்குள்ளே) சத்தம் போட்டது டிரைவர் காஜுல விழவேயில்லை! கொஞ்சம் படுத்துண்டு பார்த்தேன். என்னமோ கிணத்துக்குள்ளே படுத்துண்டாப்புல ஒரு பீலிங்கி! கருப்பாக போன சிவப்பு உறையணிவிக்கப்பட்ட ஒரு தலைகாணி இருந்தது. முடிஞ்ச வரையில் அதை தூ....................ரக்க வெச்சுண்டு அதுக்கு மேல இவங்க குடுத்த ஒரு ஷாலை போர்த்திவுட்டு மண்டையை அதில் வெச்சுண்டேன். புஸுக்ன்னு ஒரு புதை குழிக்குள் என் மண்டை போயிடுத்து!

படுக்கையில படுத்துண்டப்போ எனக்கு  இதுல ராத்திரி பூரா போயாகணுமான்னு ஒரே மலைப்பு. ஏன்னா என்னமோ ட்ரெக்கிங் மாதிரி இருக்கு படுத்துண்டா. தலையில் ஒரு குழின்னா இடுப்புப் பகுதியிலேயும் சம்திங் ராங். குழின்னு எக்ஸாக்ட்டா சொல்ல முடியலை ஆனா இட் வாஸ் அப்நார்மல்!

எந்தப்பக்கம் படுத்துண்டாலும் அதன் எதிர்ப்பக்கம் தள்ளப்பட்டேன். இப்போ, வலது பக்கம் படுத்துண்டா இடது பக்கமா நாமளே ஆட்டோமேட்டிக்கா திரும்பப்படுவோம். பஸ்ஸின் ஆட்டம் அப்படி. க்ளாக்வைஸ் & ஆண்ட்டி க்ளாக்வைஸ் ரத்த ஓட்டம் இருக்கறாப்புல மோஷன் & ஸ்விங் இருக்கும்.2 டைமென்ஷனில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படுத்த வாக்கில் சுத்திண்டே இருப்போம். அடித்து துவைக்கப்பட்டாப்புல ஒரு ஃபீலிங்!

இதுக்கு நடுவுல ஏசி பிடுங்கல் வேறு. சுத்தமா எஃபக்டே இல்லை. வேர்த்து விறுவிறுத்துண்டு கர்ட்டனையெல்லாம் இழுத்து விட்டுண்டு இதென்ன இப்படி ஒரு செல்ஃப் டார்ச்சர் தேவையா? இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அனன்யான்னு மை மைண்ட் வாய்ஸ் எள்ளி எள்ளி நகையாடித்துன்னா பாருங்களேன்!

நல்ல வேளை ஒரே ஆறுதல் அந்த பஸ்ஸில் படுக்கட்டு இரும்புல வெச்சிருந்தா. அந்தப் படிக்கட்டு இருந்ததோ நான் எதிர் திசையில போய் விழாமல் இருந்தேன். அப்படியே எதிர் திசை bedக்கு கீழே தூக்கியெறிப்பட்டாலும் அந்த எதிர் bedக்கும் பஸ்ஸின் தரைக்குமிடையேயான இடைவெளியில் சிக்கிண்டு ரொம்ப கஷ்டமாயிருக்கும்.ஸ்பீட் பிரேக்கர்ன்னா அப்படி ஒரு ஸ்பீட் ப்ரேக்கர்! தூக்கித்தூக்கி போடுறது! நாம பஸ்ஸில இருக்கோமா இல்லே பஸ் நம்ம மேல ஏறிப்போறதான்னு தெரியாத அளவுக்கு உடம்பு உபாதை பண்றது!

இப்படீ முழிச்சுண்டும் இல்லாம தூங்கவும் இல்லாம நானாவித சிந்தனைகள் என்னை ராத்திரி பூரா ஆட்டிப் படைச்சது! சில சமயங்களில் cliff hanger படம் மாதிரி எதையோ பிடிச்சுண்டு தொங்கறேன். சில சமயம் ஸ்பைடர் மேன் மாதிரியோ குறங்கு மாதிரியோ அங்கிட்டும் இங்கிட்டும் தவ்விண்டு இருக்கேன். ஆட்டம் மட்டும் நான்ஸ்டாப்! கண் திறக்கவேயில்லை ஆனா மூளை மஹா ஆக்டிவா ”ஏய் பத்திரம் விழப்போறே, ஜாக்கிரதை”ன்னு எச்சரிக்கை விடுத்துண்டே இருக்கு!

ஏதோ ஒரு அண்டிஸைரபிள் மொமெண்டில் மாயவரம் மாயவரம்ன்னு கத்திண்டே பஸ் பையன் வந்துட்டன். அட ராமா. இன்னும் தூங்கவே ஆரம்பிக்கலை அஜுக்குள்ளே மாயவரமா!ன்னு நினைச்சுண்டேன். அதிகாலை 3.30 மணி ! இன்னும் கொஞ்சம் அவஸ்த்தையின் எக்ஸ்டென்ஷனில் சேஃபாக தஞ்சாவூரில் இறங்கி கடவுளுக்கு நன்றி சொன்னேன்!

என்னது உங்க ஊர்ல கல்வித்திருவிளாவா? நானே தான் வரணுமா? என்னது ஸ்லீப்பர் பஸ்ஸா? சாரி, ஐயாம் நாட் கேம் ஃபார் திஸ்!

9 comments:

Ranganathan said...

Choo choo.. First experienceae ippdi aiduthu .... Next time try pannunga ....

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... இனி எந்த ஜென்மத்திற்கு இந்த ஆசை வராது...!

sury siva said...

தஞ்சாவுருக்கு ஏ சி பஸ்ஸா ?
விநாயகா டிராவல்ஸ் ஆ ? கே பி. என்னா ?

அடுத்த தடவை போகும்போது, ஒரு நாலஞ்சு பஞ்சு தலைகாணி எடுத்துகொண்டு போனேள் அப்படின்னா இந்த பக்கம், அந்த பக்கம், தலைமாட்டுக்கு ஒன்னு, கால்மாட்டுக்கு ஒன்னு அப்படின்னு வெச்சுண்டு சமாளிக்கலாம்.

ரூட் தஞ்சாவூர் அதுவும் நெய்வேலி டு சேத்தியா தோப்பு வரைக்கும் படா பேஜார் மாமி.

உங்காத்து காலீஸ் லேயே போயிருக்கலாமே !!

அது சரி. அடுத்த தரம் தஞ்சாவுருக்கு வரும்போது சொல்லுங்கோ.
நம்மாத்துலே
டிகிரி காபி போட்டு வச்சிருக்கேன்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.subbuthatha72.blogspot.com

இராய செல்லப்பா said...

ஸ்லீப்பர் பஸ்ஸில் போகவேண்டுமென்றால் பெங்களூரிலிருந்து மங்களூருக்குப் போகவேண்டும். பஸ்கள் நனறாகவே இருக்கும். மலைப் பாதையானதால் இருபுறமும் அதுவே உங்களைத் தாலாட்டும். அடுத்தமுறை விண்வெளிப்பயணத்திற்கு முன்னேற்பாடுகள் இல்லாமல் செல்வதற்கான தகுதி கிடைத்துவிடும்.உங்கள் பெட்டிகளோ அல்லது ஏதாவதொரு உடைமையோ காணாமல் போய்விடும்.

அப்பாதுரை said...

ஸ்லீபர் பஸ் அப்பர் பர்த்துனு ஒரு நரகம் இருக்கு பாருங்கோ..

அப்பாதுரை said...

ஸ்லீபர் பஸ் அப்பர் பர்த்துனு ஒரு நரகம் இருக்கு பாருங்கோ..

வெங்கட் நாகராஜ் said...

Sleeper Bus - ஒரு மரண் அவஸ்தை..... என்ன மாதிரி ஆறு அடி ஒரு அங்குலம் உயரமான ஆசாமிகளை ஐந்தரை அடி படுக்கையில் உள்ளே நுழைக்க ஆசைப்படுகிறார்கள்.....

சீ எனக்கு படுக்கையே வேண்டாம் - உக்கார்ந்தே வரேன்னு சொன்ன கதையெல்லாம் நடந்திருக்கு!

sury siva said...

//என்ன மாதிரி ஆறு அடி ஒரு அங்குலம் உயரமான ஆசாமிகளை ஐந்தரை அடி படுக்கையில் உள்ளே நுழைக்க ஆசைப்படுகிறார்கள்.....

சீ எனக்கு படுக்கையே வேண்டாம் - உக்கார்ந்தே வரேன்னு சொன்ன கதையெல்லாம் நடந்திருக்கு! //

ஆசைப்பட்டது சாதாரண மனுஷி அல்ல. "அதெல்லாம் சரி இல்லை. நீ படுத்துண்டு தான் இருக்கணும்" அப்படின்னு பெட்டர் ஹால்ப் கட்டளை இட்டது ,மட்டும் அல்ல, ஒரு நாப்பது மீட்டர் நீட்டத்துக்கு ஒரு நாகப் பாம்பை எடுத்து கடல் லே வீச அது என்ன நடக்குதுன்னே தெரியாம, சுருட்டிண்டு படுக்க, நீங்க அதுக்கு மேலே ஜாலியா படுத்துக்கங்க என்றாளாம் .தாயார். பயப்படாதீங்க, நான் உங்க மார்பு மேலே உட்கார்ந்துக்கறேன் என்றாள்.

அதான் அனந்த சயனம்.

அது எப்படி வேங்கடவான் நாகராசனுக்குத் தெரியாம போச்சு !!!

சில சமயம் டிரைன் அப்பர் பெர்த் லே கூட இந்த பாற்கடல் பீலிங் வரத்தான் செய்யும்.

சுப்பு தாத்தா.
www.kandhanaithuthi.blogspot.com

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

http://blogintamil.blogspot.in/2015/01/ch.html

முடிந்த போது வந்து கருத்திடுங்களேன்.

Related Posts with Thumbnails