Pages

Sunday, June 8, 2014

Sun Suit

"ஏய் கிளம்பிட்டியா? "
"ஆச்சும்மா"
"ப்ரேக்ஃபஸ்ட்?"
"வேண்டாம்மா லேட் ஆச்சு"
"லஞ்ச் பேக் பண்ணி வெச்சிருக்கேன் பார் டேபிள்ல"
”Ok Thanks மா”
”கொஞ்சம் பாலாவது குடிக்கறியா?”
”டிஸ்கஸ்டிங்ம்மா.. கொஞ்சூண்டு கோக் வேணா தா”
”என்ன எழவோ கோக்.. எங்க காலத்துல எல்லாம் கார்த்தால காஃபி தான் குடிப்போம்... இந்த கோக்கெழவை ban பண்ணனும்ன்னா பேசிண்டு இருந்தா.. என்ன பண்ணினாலும் அழியாது போல்ருக்கு கரப்பான் பூச்சியாட்டம்!”
”யக்!”
”சரி bookpad? palmy?”
”எல்லாம் எடுத்துண்டாச்சு”
”என்ன palmy யோ? எங்க காலத்துல எல்லாம் ஃபோன்ல தான் எல்லாம் பார்ப்போம் பேசிப்போம் சோஷல் நெட்வொர்க்கிங் எல்லாம். இப்பிடியா.. ”
”ohh! Come on Mom, how old fashioned!”
”சரி சரி. ’அதை இங்கேயே போட்டுண்டுடு.. இப்பெல்லாம் தான் கார்த்தால 6 மணிக்கே 48 டிகிரி வெயில் கொளுத்தறதே. எங்க காலத்துல எல்லாம்.... ”

stop it Mom..I am late already...  bye!

அந்த sun suitஐ எடுத்து லாவகமாக நம்ம காலத்து ரெயின் கோட் போல அணிந்து சீல் செய்து கொண்டாள். உள்ளே இன்ஸ்டண்ட் கூலிங் ஆரம்பம் ஆகியது.முதலில் முதுகில் ஜில்லென்று பரவியது. பின்னர் அக்குள்களில் தாக்கி வயிற்றில் குளுமை படர்ந்தது.  தலையிலும் ஹெல்மெட் போன்ற சாதனத்தை மாட்டிக்கொண்டு க்ளக் என்று கழுத்துடன் சேர்த்து சீலிட்டுக் கொண்டாள். ஹெல்மெடின் பனி கண்களை மறைக்காமல் இருக்க ஒரு வைப்பர் உட்புறமாக ஆட்டோமேட்டிக்காக துடைத்துக்கொள்ளும்.  இனி முகத்தில் மேக்கப் போகாது, வியர்க்காது, எண்ணெய் வழியாது, தூசி படியாது. பேசுவது மற்றவர்களுக்கு கேட்க வேண்டுமானால் மைக்கை ஆக்டிவேட் செய்ய வேண்டி வரும்! அவ்வளவே.

நீரஜா போன சில நிமிடங்களில் யாரோ ஒரு டிரைவர் தனது sun suit micகிலிருந்து சத்தம் போட்டார்.” ஏம்மா வூட்டுல சொல்ட்டு வந்திட்டியா” என்று fading outல் கேட்டது! இந்த டயலாக் மட்டும் ஃப்யூச்சரிலும் உண்டு போலும்!

பின்குறிப்பு: படு பயங்கரமன சூட்டில் சிக்கி சின்னா பின்னமாகும் ஒவ்வொரு நாளும் நான் கற்பனை பண்ணிப்பார்க்கும் ஃப்யூச்சரிஸ்டிக் இன்னோவேட்டிவ் சமாச்சாரம் இந்த சன் சூட். என்னிக்காவது இது உண்மையாகும். அன்னிக்கி என்னை சரித்திரம் போற்றும். என் கற்பனைக்கு complimentary ticket குடுத்தது இந்த ஃபோட்டோ.. நல்லாருக்குல்ல?

3 comments:

அமுதா கிருஷ்ணா said...

சமைக்கும் போதும் போட்டுகிட்டா நல்லாயிருக்குமே!!!

Ananya Mahadevan said...

ஆஹா.. ஆஹா... என்ன ஒரு ஐடியா சொன்னீங்க! அற்புதம். எஸ்பெஷலி அடுப்புகிட்டே நிக்கும்போது சன்சூட் ஒரு வரப்பிரசாதம்! அருமையான ஐடியா..

வெங்கட் நாகராஜ் said...

தில்லியில் அடிக்கும் 46, 47க்கு மிக்வும் உபயோகமாக இருக்கும்!

சீக்கிரமே தயாரிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்! :)))

Related Posts with Thumbnails