Pages

Sunday, April 5, 2015

The big robbery

”நாம எல்லாரும் போனா எடுத்துண்டு வந்துடலாம்”
”சரி”
”எப்போ போகணும்?”
”இன்னும் கொஞ்ச நேரத்துல”
”நானும் நீயும் போதுமே”
”இல்லே நிறைய பேர் இருந்தா இந்த ஆப்பரேஷன் ஒரு கேக்வாக்”
”ஓ”
”நீ போய் அவனையும் கூட்டிண்டு வா. நானும் போய் இன்னும் ரெண்டு பேரை கூட்டிண்டு வரேன்”
”சரி”
”மீட்டிங் பாயிண்ட்? மைதிலி ஸ்ட்ரீட் நம்பர் 5, மொட்டை மாடியில”
”நேரம்? ”
”பகல் 12.00 மணிக்கு”
”ஓக்கே”
இடம்: மைதிலி ஸ்ட்ரீட், நம்பர் 5 நேரம் 12.00 மணி
”இதோ பாருங்க, யார் யார் எதை எடுக்கறீங்களோ உங்க செளகரியம். 2 நிமிஷம் தான் ஆப்பரேஷன் டைம். அதுக்கப்புறம் ஒருத்தரும் இந்த ஏரியாவுலேயே இருக்கக்கூடாது. பறந்துடணும். எதுவா இருந்தாலும் நான் கம்யூனிக்கேட் பண்ணுவேன்”
(கோரஸாக) ”யெஸ் பாஸ்”
மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் உட்கார்ந்திருந்த எல்லாரும் மெதுவாக அந்தப்பக்கம் குதித்து வந்தார்கள். ரங்க நாயகி மாமி வடாம் வற்றல் அரிசி அப்பளம் எல்லாம் இட்டு வாயல் புடவையின் நாற்புறமும் கல் வைத்திருந்தாள்.
நாலா புறமும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரே கவ்வு, மூக்கில் கிடைத்த வற்றல், காலையில் பிழிந்த கருவடாம், பாதி காய்ந்த அரிசி அப்பளம் எல்லாவற்றையும் லாவகமாக கவ்விக்கொண்டு எல்லோரும் பறந்தார்கள்.

சாயங்காலம், ”இந்த காக்காக் கூட்டம் பண்ற ரகளை தாங்கலை!” என்று அங்கலாய்த்தவாறே ரங்க நாயகி மாமி மிச்சமிருந்த வடாம் அப்பளங்களை அள்ளி எடுத்துக்கொண்டு போனாள்.

4 comments:

sury siva said...

Nijamave naan ippa vandha neram rahu kalam thaan. But bad luck indeed nekku oru chinna vadam thunukkoondu kooda kidaikkalliye
Subbu thatha

வெங்கட் நாகராஜ் said...

முகப்புத்தகத்திலேயே படித்து ரசித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை படித்தேன்..... சிரித்தேன்!

aavee said...

அந்த படத்தை எடுத்துடுங்கோ.. சஸ்பென்ஸ் உடைஞ்சிடும்.. ஹஹஹஹா.. ஐ லைக்டு இட் எ லாட்..

Ananya Mahadevan said...

Thank you all!

Related Posts with Thumbnails