”ஏய் என்ன?”
மெளனம்.
”நேத்திக்கு ஏன் வர்ல?”
அதுக்கும் மெளனம்.
”காத்தாலேயே சாதம் போட்டேனே? சாப்பிடலையா?”
அவன் மெளனமா வாணலியையே பார்த்துண்டு இருந்தான்.
”என்ன அப்படி உனக்கு? சாதமே சாப்பிடாதே! எப்போப்பாரு, தோசை, பஜ்ஜி, வடை, மிக்ஸர்ன்னு எண்ணெயிலேயே மிதப்பியா?”
மெளனம். இப்போ இன்னும் உத்து வாணெலியையே பாத்தான்.
”பூரி வேணுமா?”
மீண்டும் மெளனம்.
”சரி கொஞ்சம் வெயிட் பண்ணு, தரேன்.”
சமர்த்தா பக்கத்துல உக்காந்தான்.
வேகமா மாவை திரட்டி அவசர அவசரமாக பண்ணி, பொறிச்சு எடுத்து, ஒரு நிமிஷம் கழிச்சு, அந்தப் பூரியை சுக்கு நூறாய்க் கிழிச்சு அவன் திங்க செளகர்யமா போட்டேன்.
தான் மட்டும் திம்பான்னு பாத்தா, சத்தம் போட்டு ஊரைக்கூட்டி, பூராப்பய புள்ளையையும் கூப்பிட்டு, அப்படி ஒரு அழிச்சாட்டியம்.
தனக்கு வேண்டிய ஒரே ஒரு பீஸ் பூரியை வாய்ல கவ்விண்டு ஏதோ ரொம்ப அர்த்தமா என்னைப் பாத்துட்டு, தலையை சாய்ச்சுட்டு கிளம்பிப் பறந்து போயிட்டான் அவன்.

அவனை எனக்கு இப்போ சமீபமாத்தான் பரிச்சயம். ஜூன்ல வீட்டை மாத்தினோம் இல்லியா? அப்போந்து தான். டெய்லி நான் கிச்சன் ஜன்னலில் வைக்கும் ஐட்டங்களுக்கு முதல் விசிறி- என் டிஃபன் ஐட்டம்ஸ், பட்சணங்கள், மம்மு எல்லாத்தையும் முதலில் அவனுக்கு தான் ஆஃபர் பண்ணுவேன். நான் பேசுறதையெல்லாம் அமைதியா நின்னு கேட்டுப்பான். சில சமயம் திட்டுவேன். சில சமயம் கொஞ்சுவேன். இப்பெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறான். அவனும் என்கிட்டே ஏதோ சொல்ல வராப்ல தோணும். சில சமயம் பறந்து வருவான். ஜன்னலில் ஒண்ணும் இல்லாட்டா ஏமாற்றத்தோட கிளம்பிடுவான். சில சமயம் ஜன்னல் க்ரில் வழியா மூக்கை விட்டு பார்ப்பான். சத்தம் குடுப்பான் எனக்கு. அவன் பசியைப் பொறுத்தது.
மை டியரஸ்ட் காலியா - the crow!
6 comments:
dearest kalia! :)))
ரசித்தேன்.
அந்த ராபரி ஸ்டோரி படிச்சிட்டதாலே காலியா சஸ்பென்ஸ் இல்ல அக்கா.. பட் எப்பவும் போல சுவாரஸ்யம் இருந்தது.. காக்கைக்கு எல்லாம் பூரி போடறேள். ரெண்டு முறை ஆத்துக்கு வந்தேன்.. பூரியெல்லாம் கண்லயே காட்லையே!! ;)
மிக மிக மிக மிக ஆச்சர்யம். கிட்டத்தட்ட இதே போல ஒரு பதிவு எழுதி டிராஃப்ட்ல வைச்சிருக்கேன். போன வாரமே பப்ளிஷ் பண்ணியிருக்க வேண்டியது! இந்த வாரம் போடுவேன்!
Sriram anna, this was written last year. 2013 March :) would love to read your post.
Hello Avi, neeyna kaakkaavaa? erumai. unakku pullu porum! :P
Thank you Venkat Nagaraj anna!
interesting post...
Post a Comment