ஸ்கூல்ல சேர பேரண்ட்ஸுக்கு இண்டர்வ்யூ வைக்காத ஒரு இனிமையான வெள்ளெந்தியான காலம் அது. வருஷத்தோட எந்த பகுதியானாலும் ஈஸியா எந்த குழந்தைக்கும் எந்த க்ளாஸ்லையும் சேர அனுமதி கிடைக்கும். இப்போ மாதிரி யாதொரு கெடுபிடியும் இல்லாத அழகான குழந்தைப் பருவத்தையும் மணமான நிறைய நினைவுகளையும் அள்ளித்தந்த காலகட்டம்.
எனக்கொரு ஆறு வயசு இருக்கும், சிவகாசியில யூகேஜியோ ஏதோ படிச்சுண்டு இருக்கேன்.
அது ஒரு கேள்ஸ் ஸ்கூல். பெரீய்ய்ய்ய்ய்ய்ய கேட் இருக்கும். நுழைஞ்சதும் மைதானம். ஏகப்பட்ட மரங்கள் கேட் கிட்டக்க.. குல்மொஹர்? ஸ்கூல் பேர் நினைவில்லை.
ஸ்கூல்ல க்ரூப் டான்ஸ்க்கு செலக்ட் பண்ணினா.
க்ரூப் டான்ஸ்ன்னா உடனே பத்மா சுப்ரமண்யம், யாமினி கிருஷ்ணமூர்த்தி ரேஞ்சுக்கு நினைச்சுண்டு கலாய்க்க ரெடியாகும் எனிமிக்களுக்கு ஒரு ச்சின்ன ஸ்பாய்லர் அலர்ட் - எனக்கு பெரூசா டான்ஸ் ஆட ஸ்கோப்லாம் இல்லை. சும்மா ஒரு குழலை இடது கைல வைச்சுண்டு கோபியர்கள் நடுவுல ஓடிண்டே இருக்கணும். குறும்புத்தனத்துடன் சிரிக்கணும். கோபியர் ஜடையை பிடிச்சு இழுக்கணும். இப்படி ரொம்பவே காம்ப்ளெக்ஸ் மூவ்ஸ். அப்போவே சேலஞ்சஸ் எடுத்துக்கணும்ங்கற மெண்டாலிட்டி பாருங்களேன், எனக்கு?ச்ச, மிடில! (இதைப் படிக்கற உங்களுக்குமா? அடடே!)
சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சு தினமும் ரிகர்ஸல். அப்போ, சொல்லப்பட்ட ஒரு குறிப்பிட்ட லைன் வரும்போது ஒரு வெண்ணெய் பானையை கீழே போடணும். ஆனா ரிகர்ஸல் அப்போ அது உடையக்கூடாது! அப்படி மெள்ள போடணும். சின்ன குழந்தைக்கு எப்படி அதெல்லாம் தெரியும்? ஏதோ போடுவேன். அது பாட்டுக்கு உருண்டு ஓடும் பாவம். நல்ல வேளை உடையாது. எல்லா ரிகர்ஸலப்போவும் அம்மா என் கூட இருப்பார். அக்காஸ் எல்லாம் தமிழ்ல சொல்ற இன்ஸ்ட்ரக்க்ஷன்களை அப்படியே எனக்கு தமிழ்ல சொல்லுவா. அம்மாவுக்கு இந்த ஆண்டுவிழா, டான்ஸ் இதிலெல்லாம் ஆர்வம் அதிகம். ஸ்டெப்ஸெல்லாம் சஜஸ்ட் பண்ணுவா.
ஃபைனலி, அந்த ஆண்டுவ்ளா டேயும் வந்தது. ப்ளூ கலர் பவுடர்ல்லாம் லைட்டா போட்டு விட்டா. தலையில மயில் பீலி வராப்ல ஒரு ஹேர் மேக்கோவர். அதைச்சுத்தி பூ. மத்தபடி பீதாம்பர வஸ்த்ரம். ஒரு அக்கா எங்கிருந்தோ ஏகப்பட்ட நகை (வாடகைக்கு?) எடுத்துண்டு வந்து எனக்கு போட்டு விட்டா.
இடுப்புல ஒட்டியாணம் மாதிரி ஏதோ ஒண்ணு, கழுத்துக்கு ஏகப்பட்டது (இன்க்ளூடிங் காசுமாலை! அப்பெல்லாம் அது ரொம்ப பெரிய விஷயம்)
குறிப்பா வலது பக்கம் நெத்திலேந்து அப்படியே தொங்கறாப்புல ஒரு நகை. ப்ரேஸ்லெட்டோ? தெரியலை.
”மா, கிருஷ்ணர் வளையல் ஜிமிக்கில்லாமா போட்டுபபார்?”ன்னு எல்லாம் கேட்க தெரியாத வயசு.
டான்ஸ் அப்போ ஒரு நெர்வஸ்னெஸ்ஸும் இல்லை. சொல்லிக்கொடுத்தாப்புலையே ஜாலியா ஆடினேன், ஓடினேன், ஜடையை பிடிச்சு இழுத்தேன், பானையை ஓங்கி போட்டேன், ஏற்கனவே பல வாட்டி கீழ போட்டதால வீக்கான பானை, நான் போட்ட போடுல சுக்கு நூறாக உடைஞ்சுடுத்து. ஷப்பா.. வாட்டெ ரிலீஃப்!
எல்லா அக்காக்களுக்கும் ஒரே சந்தோஷம். டான்ஸ் முடிஞ்சதும் ”இவளை இப்படியே ஒரு ஃபோட்டோ எடுத்தப்புறமா, நகைல்லாம் கழட்டிடலாமா?”ன்னு அம்மா அந்தக்கா கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணிண்டார். ரிக்ஷால ஸ்டுடியோ போனோம். ஒரு சின்ன ஸ்டூல் மேல நிக்க வைச்சு ”எங்கே ஃப்ளூட்டை வைச்சுண்டு போஸ் குடு பார்க்கலாம்ன்னு சொன்னதும், தப்புத்தப்பா வலது பக்கம் ஃப்ளூட்டை வைச்சுண்டு நின்னேன். சந்தோஷத்துல கவனிக்க மறந்துட்டார் போல்ருக்கு அம்மா. ஃபோட்டோகிராஃபரும் க்ளிக்க, அது ஒரு லெஜெண்டரி ஃபோட்டோ ஆகும்ன்னு அப்போ நினைக்கலை. கூகிளிருக்கும் வரை இந்த ஃபோட்டோவும் இருக்கும்!
இன்னிக்கும் இந்த ஃபோட்டோவின் அழகே தப்பு தப்பா ஃப்ளூட்டை மாத்தி வைச்சுண்டு நிக்கற அந்த இன்னொசென்ஸ் தான்.
3 comments:
அழகான கிருஷ்ணன்.... ப்ளூட்டை மாற்றி வைத்திருந்தாலும் கள்ளச் சிரிப்பில் கவரும் கிருஷ்ணன்.
ஒரிஜினல் கிருஷ்ணர் கூட இவ்ளோ அழகா இருந்திருப்பாரா தெரியலை... மீதியை மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு நீயே முடிச்சுக்கோ அக்கா... நீ இது மாதிரி போஸ்ட் போட்டினா தான் என்னால படிக்க முடியும்.
அருமை..
Post a Comment