அன்புப் பெரியோர்களே, அருமை ப்ளாக் வாசகர்களே, புல்லுருவி நண்பர்களே,
இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நான் ஆன்னுவல் வெக்கேஷனுக்கு அடுத்த வாரம் கிளம்பி, ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்.
(பலத்த கைதட்டு) அமைதி அமைதி!
சென்னை ரசிகர்கள் ஏர்ப்போர்டுக்கு மாலை மருவாதியுடன் தாரை தப்பட்டை முழங்க என்னை ரிஸீவ் பண்ண வரவேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். , ஆளுயர பூமாலை, பொக்கே, ஃபோட்டோ ஃப்ளாஷுகள், ப்ரெஸ் பேட்டிகள் இது எதுவும் நான் விரும்புவதில்லை.ஏன்னா, சென்னை கமிஷனர் என்கிட்டே ஃபோன் பண்ணி கேட்டுண்டு இருக்கார். சமூக பணியில இருக்கறதுனால தான் இவ்ளோ பாப்புலாரிட்டி. என்ன பண்றது. பாப்புலாரிட்டி என்பது என் ப்ரைவஸிக்கு நான் கொடுக்கும் விலை! (சரி சரி.. அடங்கறேன்!)
சென்னை ரசிகர்களை கலைவாணர் அரங்கிலோ, காமராஜர் அரங்கிலோ சந்திப்பேன்.ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. கட்டாயம் எண்ட்ரி டிக்கெட் வசூலிக்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டி இல்லை. அதுக்காக பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகி இருக்கு. நிறைய ஸ்பான்ஸர்ஸ் முன்வந்துள்ளனர். பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்கேன். நேரம் கிடைக்குமா தெரியலை. ஆட்டோகிராஃப் கேட்டு வரும் அன்பர்களுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்பு சீல் ரெடி பண்ணிக்கணும். ஏன்னா டைப்படிச்சு அடிச்சு எனக்கு கையெழுத்தே மறந்து போயிடுத்து. ப்ளாக் காட் பாதுகாப்பு வேணுமான்னு இந்திய அரசாங்கம் கேட்டிருக்காங்க.. இப்போதைக்கு ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க ரெண்டு போலீஸ் கேட்டு இருக்கேன். (ஹய்யோ, என்னாலேயே தாங்க முடியலை)
என்னோட வெக்கேஷன் ப்ளான்ஸ் பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா டவிள்யோ டவிள்யோ டாட் பிச்சுமணி டாட் காமுக்கு மெயில் அனுப்புங்கள். கட்டாயம் தெரிவிக்கிறேன். (இதையே தானே ஃபேஸ்புக்லேயும் போட்டு பஜனை பண்ணினேன்னு சொல்றவங்களை நான் வன்மையா கண்டிக்கிறேன்)
ஆஹா ஒரு மாசம் இவ ரோதனையில இருந்து தப்பிச்சாச்சுன்னு, தாரை தப்பட்டை விசில் எல்லாம் அடிச்சுண்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடிச்சுன்னா, அவங்களுக்கு கீழ்க்கண்ட எச்சரிக்கை. அநன்யா ஒரு எழுத்தாளினி ஆயாச்சு. யாரு சொன்னா வா? ஹ.. எல்லாம் எனக்கு தெரியும். அதுனால சென்னை போனாலும் நான் முடியும் போது ஏதாவது போஸ்டு போட்டுண்டு தான் இருப்பேன். எழுதறதுக்கு ஏதாவது டாபிக்கி கிடைக்காமலா போயிடும்?
அப்புடியே நான் போஸ்டு போடாட்டியும் நீங்க எனக்கு மெயில் அனுப்பணும். உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்னு சொல்லி தெரிய வேண்டாமே.
இப்போ நான் மட்டும் தான் போறேன், ரங்கு அடுத்த மாசம் தான் வர்றார். நான் கிளம்பறதுனாலே சுமார் ஒரு வாரமா அவருக்கு மனசுல சந்தோஷம் கொப்பளிக்கறது, வாயெல்லாம் பல், அடிக்கடி பெருமூச்சு விட்டு அப்பாடீன்னு சொல்லிக்கறார். ஏர்ப்போர்டுல என்னை ட்ராப் பண்ணிட்டு என் போர்டிங் பாஸை அவர் கையில எடுத்துண்டு, ”என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா”ன்னு கத்திண்டே துபாய் பூரா ரவுண்டடிச்சாலும் ஆச்சிர்யப்படுறதுக்கில்லை!
இந்த நிலமையில நேத்திக்கி என் மச்சினருக்காக சில பெண்கள் ஜாதகத்தை பார்த்துண்டு இருந்தேன். அதுல 67ல பிறந்த சில பெண்கள் கல்யாணம் ஆகாம இருக்காங்கன்னு இவர் கிட்டே சொல்லி வருத்தப்பட்டுண்டே பாத்ரூம்ல மூஞ்சி அலம்பிண்டு இருந்தேன். உடனே ஓடி வந்து, தன்னுடைய பிறந்த வருடத்தை சொல்லி, பண்ணிப்பாளா கேட்டு சொல்றியான்னு கொஞ்சம் கூட சலனமே இல்லாம கேக்கறார். வந்த கோபத்துல மூஞ்சியில் இருக்கற சோப்பை அலம்பறதுக்காக ரெண்டு கைகள்ல எடுத்த தண்ணியை அவர் மேல கொட்டிட்டேன். இந்த அழகுல அந்த லேடி இவரை விட சில ஆண்டுகள் பெரியவங்க. பண்ணிப்பாளான்னு கேக்கணுமாம். நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு.
நீங்க என்ன சொல்றீங்க?
Wednesday, June 23, 2010
Friday, June 18, 2010
ஹரா பரா டெர்ரர் கபாப்
ஆடிக்கொரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி இங்கே ரெஸ்டாரண்டுகளுக்கு போனால் ஸ்டார்டருக்கு இதான் ரங்குவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அடைக்கு ஊறவைத்து அரைத்தது போக கொஞ்சம் பாசிப்பயறு ஊறவைத்து வெள்ளி மாலை இந்த கபாப் பண்ணிக்குடுத்துடலாம்ன்னு ப்ளான் பண்ணி வெச்சிருந்தேன். எல்லாம் சுய ரெஸிப்பீ தான். கொஞ்சம் ரெஸிப்பீஸ் பார்த்தா ஐடியா கிடைக்கப்போகுது!
கபாப்ன்னா நம்ம தமிழ்ல வடைன்னு அர்த்தம் போல இருக்கு. பச்சையா இருக்கும் இந்த ஹரா பரா கபாப். பாலக்கீரை, கொத்தமல்லி, ப.மிளகாய் எல்லாம் போட்டு ஜீரக வாசனையா இருக்கும். என்ன பெரிய பிரமாதம், வீட்டுலேயே பண்ணிக்குடுத்துடலாம்னு நினைச்சு தான் வேலையை ஆரம்பிச்சேன். காஃபியுடன் வடையை வெச்சு தந்தால் சந்தோஷப்படுவார்ன்னு மெதுவா கிச்சனுக்குள்ளே நுழைஞ்சுட்டேன். ஈஸ்வரோ ரக்ஷது!
முதல்ல லாப்டாப்பை கிச்சன்ல செட் பண்ணி ஒரு ரெசிப்பீ தேடி எடுத்துட்டேன். பார்த்தா, கீரையை சுடுதண்ணியில போட்டு, ஜில் தண்ணியில அலசி , பிழிஞ்சு, நறுக்கி மிக்ஸியில போட்டு அரைக்கணும். ஜிம்பிள்! அதுல பாருங்க ஒரே ஒரு ஸ்டெப் தான் மிஸ் பண்ணி இருக்கேன், மொத்தமும் கந்தரகோளம்!
எந்த ஸ்டெப்பா? அதாங்க அந்த பிழியற ஸ்டெப்தான். சுடுதண்ணீயில அலசிட்டு, ஜில்தண்ணியில போட்டு , வெளியில எடுத்து, நறுக்கி மிக்ஸியில போட்டு அரைச்சாச்சு. அரைச்சுட்டு எட்டிப்பார்க்கறேன், கீரை மசியல் மாதிரி இருக்கு! செம்ம ஷாக்! சரி பார்க்கலாம். இன்னும் பாசிப்பயறு இருக்கே.. அதையும் கெட்டியா அரைச்சு பிசைஞ்சுட்டா கெட்டி பட்டுடும்ன்னு நம்பினேன்.
தண்ணி விடாம கரகரப்பா பாசிப்பயிறை அரைச்சாச்சு. பச்சை பட்டாணி கீரை விழுதோட பருப்பை போட்டுட்டு பார்த்தா மொத்தத்துல அது என்னமோ அடை மாவு மாதிரி இருக்கு!!!
சரி போனாப்போறது வேணா ஹரா பரா அடைன்னு பண்ணி கொடுத்துடலாமேன்னு நினைச்சேன்! ரங்கு ஒத்துக்க மாட்டார்.
கவனமா எல்லா மசாலாவும் சேர்த்தேன். உப்பு போட்டு கடைசியா கரண்டி போட்டு கிண்டி பார்த்தேன். அதே அடை மாவு கன்ஸிஸ்டென்ஸியில இருக்கு! சூஃபர்!
இனி இதை எப்படி கெட்டியாக்குறது? மெள்ளமா கொஞ்சம் அரிசி மாவு சேர்த்தேன். அடை மாவு ரெண்டு கரண்டி அரிசி மாவை விழுங்கிட்டு கள்ளூளிமங்கன் மாதிரி அப்படியே இருந்தது. சரி வேணா கொஞ்சம் சுவைக்கு கடலைமாவு போட்டா என்ன? எப்படியும் பருப்புக்கள் தானே சேர்த்திருக்கோம்.. ஒரு டேஸ்டு என்ஹான்ஸரா இருக்காது? இந்த மாதிரி ஐடியாவுக்கெல்லாம் இன்னொருத்தி பொறந்துதாண்டீ அநன்யா வரணும். உன்னை மிஞ்ச முடியுமா?ன்னு சந்தோஷமா க.மாவையும் கலந்தாச்சு.. மறுபடியும் கள்ளூளிமங்கன் ஹரா பரா அடைமாவு விழித்தது.. ஒரு நிமிஷம், என்னை விட்டூடு அநன்யான்னு கெஞ்சித்து! ஹ.. என்னிடமா நடக்கும்ன்னு வீர வசனம் பேசிண்டே ஒரு ஸ்பூனால அடை மாவை எடுத்து அரிசிமாவில் போட்டு பிரட்டி, எண்ணெயில் ஸ்ஸொயீன்னு போட்டு பொறிக்க ஆரம்பிச்சுட்டேன்.
அசப்புல பார்க்க அது பச்சை அடை உருண்டை மாதிரியே தான் இருந்தது. ஆனா கரகரன்னு இருக்கவேண்டாமோ? அதென்னமோ சவுக் சவுக்ன்னு இருந்தது. பார்த்தாலே பூலோக பக்கியான தக்குடு கூட வேண்டாம்ன்னு சொல்லிடுவான்னா பாருங்களேன்! (ஹிஹி, இவனை வம்புக்கு இழுத்து ரொம்ப நாளாச்சு!)ஹாம்.. அதுக்கு கொடுத்த வெச்சது அவ்ளோதான்னு மனசைத்தேத்திண்டு பாக்கி எல்லாத்தையும் இதே மாதிரி பொறிச்சுடலாம். இனி இதுக்கு அலங்காரம் பண்ணி மாளாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.
இதுக்குள்ளே ரங்கு மூக்குல வேர்த்து கிச்சனுக்கே வந்துட்டார். என்னம்மான்னு ரொம்ப ஆதரவா கேட்டார். எனக்கு அழுகை முட்டிண்டு இருந்தது. இவ்ளோ ரகளை பண்ணினதுனால கிச்சன்வேற குருக்ஷேத்திரம் மாதிரி ஒரே களேபரமா இருந்தது! வடையும் சொதப்பல் கிச்சனும் கொடூரமா இருந்ததுனால ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். அவர் கிட்டே நடந்ததை சொன்னேன்.
உடனே நம்ம ரங்க்ஸ், இதுக்கெல்லாமா கவலைப்படுவாங்க? ச்சீ அசடுன்னு(உண்மையைச்) சொல்லி, ஒரு ஹைலி அப்ஸார்பண்ட் டிஷ்யூவை கிழித்து ஒரு தட்டுல வெச்சு அ.மாவை அதில் கொட்டினார். ஏதோ ஒரு படத்துல போண்டா மணி,”மாப்ளை சீப்பை திருடிட்டேன், அவர் எப்படி தலை வாருவார், எப்படி தாலி கட்டுவார்”ன்னு கேப்பாரே அதே பீலிங்கி தான் வந்தது! உஸ்ஸ்ன்னு நினைச்சுண்டே, ”வேற உருப்படியா ஏதாவது ஐடியா தர்றேளா”ன்னு கேட்டேன்.
உள்ளே போய் ஒரு பத்து நிமிஷம் தேடி ஒரு பழைய மயில்கண் வேஷ்டியை கொண்டு வந்து கோமணம் மாதிரி நீளவாக்கில் கிழிச்சார். என்னத்துக்கு இப்படி கிழிக்கறேள்ன்னு கேட்டுண்டே இருக்கேன், உஷ்.. உனக்கு தெரியாது.. இப்போ பார்ன்னு கோ. துணியை சின்க் கிட்டே விரித்து, ஒரு சல்லடையையும் எடுத்துண்டு இந்த அடைமாவை மொத்ததையும் அதில் கொட்டி, அதை சுருட்ட ஆரம்பிச்சார்.
மெதுவா என் ப்ளட் பிரஷர் ஏற ஆரம்பிச்சது.. அதிக தண்ணியை பிழியும் முயற்சியில் ஒரு கரண்டி மாவு சல்லடையில் விழுந்தது. அந்த துண்யின் விளிம்பு ஓப்பன் ஆகி, மாவு வெளியில் பிதுங்க, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டாப்பிட்”ன்னு காதலன் நக்மா மாதிரி கத்திட்டு, அவர் கிட்டே இருந்து அந்த துணியை மாவுடன் வாங்கி அவரை சபை நீக்கம் பண்ணினேன்.
மெதுவா பார்த்து தேங்காய்ப்பால் எடுக்கறமாதிரி எக்ஸஸ் வாட்டரை எடுத்தேன். அந்யாய பொறுமை வேணும் இதுக்குன்னு தோணித்து.. யப்பா.. எவ்ளோ நேரம் மாவும் வெளியேறாம கர்ம சிரத்தையா பண்றது! அப்புறம் கட்லெட் மாவுமாதிரி கெட்டியா கிடைச்சது. அந்த கபாப்ஸை பொறிச்செடுக்கறதுக்குள்ளே என் தாவு தீந்துடுச்சு!
கிச்சனை க்ளீன் பண்ணிட்டு, எடுத்த 108 பொருட்களை யதாஸ்தானம் பண்ணிட்டு கபாப்ஸுடன் சூடான காப்பியை எடுத்துண்டு ஹாலுக்கு வந்து மணி பார்த்தா 7.15! நான் ஆரம்பிச்ச நேரம் 6! என்ன ஒரு சோதனை!
இவர் உடனே, ”உனக்கு எப்போ என்ன டவுட் இருந்தாலும் உடனே என்னைக்கேளு.. நான் மட்டும் இன்னிக்கி இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!”ன்னு ஓவரா பில்டப்பு ஸ்டார்ட் பண்ணிட்டார்! இங்கே ஒரு முக்கியமான பாயிண்ட் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த ரங்கு கிச்சனுக்கு வர ஒரே ஒரு காரணம் - விபூதி பாடி பேக் (Body pack) போட்டுக்கத்தான். இதுல பெரிய பெரிய டயலாக்ஸ் கற்பனை பண்ணி சொல்ல ஆரம்பிச்சுட்டார்!
“இந்த விஷயத்தை இன்னிக்கி நீ மறக்க நினைச்சாலும், இன்னும் ரெண்டு நாள்ல எப்படியாவது நினைவு வந்துடும்”ன்னார்.” ஏன்னா”ன்னு அப்பாவியா கேட்டேன்.. ”எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல இதே மாதிரி ஏதாவது சொதப்பாமலா போவே நீ?”ன்னு கேக்கறார்..
கீத்தாமாத்தா சும்மாவா சொன்னார்? சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே புரூட்டஸ்களான்னா இருக்காங்க!

Labels:
hara bhara kabab,
kitchen goofups
Subscribe to:
Posts (Atom)