Pages

Friday, February 5, 2010

அத்திதி தேவோ பவ

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் என்றார் வள்ளுவர். அதாவது, விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா? என்பது பொருள்.

வீ.எம்.ஸீ ஹனீஃபா இறந்த செய்தியை மலையாள தொலைக்காட்சிகள் பரபரப்பாக ஒளிபரப்பிக்கொண்டு இருக்கையில் இடையிடையே ஜோஸ் ஆலுக்காஸ்,சுங்கத்,மலபார் கோல்டு,பீமா கோல்டு போன்ற சம்பந்தமே இல்லாத ஹைடெசிபல் விளம்பரங்களின் நடுவே என்னை மிகவும் கவர்ந்தன இந்தியா டூரிஸம் வழங்கிய இந்த அத்திதி தேவோ பவ விளம்பரம்.

முதலில் அத்திதி என்றால் என்ன என்று பார்க்கலாம். அ - த்திதி அதாவது அ =இல்லை, த்திதி-நாள், அல்லது டேட், முன்னறிவிப்பு இல்லாமல் வருபவர்கள் அத்திதி.(இங்கெல்லாம் ஃபோன் செய்யாமல் யாரும் யார் வீட்டுக்கும் வருவதில்லை- இன்னிக்கி வரலாமா?, உங்களுக்கு செளகரியப்படுமா? போன்ற சம்பிரதாயக்கேள்விகள் கேட்டு உறுதி செய்துகொண்ட பின்னரே வருவார்கள், நாமும் அப்படியே) அவர்களை உபசரிப்பது பொதுவாக இந்தியர்களின் ரத்தத்தில் ஊரிய ஒரு விஷயம். இருந்தாலும் வெளிநாட்டவரை கேவலமாக நடத்தியும் சமீபத்தில் நடந்த கோவா கற்பழிப்பு போன்ற முகம் சுளிக்கவைக்கும் வெட்கப்படவேண்டிய செயல்களினாலோ என்னமோ இந்தியா டூரிஸம் விழித்துக்கொண்டு நிறைய புதிய விளம்பரங்கள் போடுகிறார்கள்.

இங்கே காணும் வீடியோ அதில் ஒன்று தான்.

என்னைக்கவர்ந்த இவர்களுடைய இன்னொரு விளம்பரம், ஒரு வெளிநாட்டுப்பெண் ஏதோ ஒரு கடையில் பேரம் பேசுகிறாள், விலை ஒத்து வராத படியால் கிளம்பிப்போய்விடுகிறாள். பின்னாடியே ஓடிவரும் கடைக்காரரை எரிச்சலுடன் திரும்பிப்பார்க்கும் அப்பெண், அந்த கடைக்காரர் கையில் அவள் பை இருப்பதை பார்க்கிறாள். இதை தருவதற்காகத்தான் உங்களை பி்ந்தொடர்ந்து வந்தேன் என்று சினேகமாக சிரிக்கும் இந்த கடைக்காரருக்கு சிறப்பு விருது கொடுத்து கெளரவித்திருக்கிறார்கள்.

இதே போல இன்னொறு நெஞ்சைத்தொடும் விளம்பரம் சீன சுற்றுலாப்பயணி தன் பஸ்ஸை விட்டுவிட்டு தவிக்கும் நேரத்தில் ஒரு மேகாலய மூதாட்டி, அப்பெண்ணுக்கு அடைக்கலம் தந்து அவளை பத்திரமாக பார்த்துக்கொண்டு, உரிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, அந்த சுற்றுலாப்பயணியை பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறாள். ஆஹா, இதல்லவோ உண்மையான இந்தியப்பண்பின் பிரதிபலிப்பு!!ஐ ஆம் ப்ரவுட் ஆஃப் யூ பாட்டி :)

இங்கே இந்த வீடியோவில் காண்பதைப்போல நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். மிகவும் வெட்கி வேதனைப்பட வேண்டிய விஷயம் இது. அமீர் சொல்வது நிஜம் தான்.வெளிநாட்டவரை இப்படி நடத்தினால், அவர்கள் திரும்பி வரவே மாட்டார்கள்.

என்னாலான உபகாரம் முடிந்த வரையில் அவர்களுக்கு ஒரு நல்ல மொமெண்ட் ஆஃப் ட்ரூத் தர முற்படுவேன். குழப்பத்துடன் விழிக்குல் சிலரிடம் சென்று ஏதாவது உதவி தேவையா என்று கேட்டு செய்திருக்கிறேன். மகாபலிபுரத்துக்கு என் மாணவ மாணவியருடன் பிக்னிக் சென்ற போது, சில சுற்றுலாபயணிகளிடம் பேசி அவர்களுக்கு நம் நாட்டைப்பற்றி ஒரு பாஸிடிவ் உணர்வு தர முயற்சித்திருக்கிறேன். நான் எவ்வளவு தான் முயன்றாலும் நம் நாட்டில் இது போன்ற துஷ்டர்கள் இருக்கும்வரையில் அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கை வராது, வரவே வராது.

17 comments:

pudugaithendral said...

இப்படி நடப்பதை கண்ணார நானும் கண்டிருக்கிறேன். இதைப்பத்தி நிறைய்ய பேசனும். பேசி ஆகப்போவதில்லைன்னு நான் பேசாம இருந்தேன். உங்க பதிவு அருமை. வெள்ளைத் தோல்காரங்களைக் கண்டா மக்கள் நடந்துக்கும் விதம் பத்தி இப்ப ரீஜண்டா ஆனந்த விகடனில் ஒரு எழுத்தாளர் கூட எழுதியிருந்தார்.

இது மாதிரி நிறைய்ய எழுதுங்க

Unknown said...

வருத்தப்படவேண்டிய உண்மை... நம்மவர்களுக்கு நம்மை பற்றிய பெருமை இருந்தால் விருந்தாளிகளை நல்லபடியாக நடத்துவார்கள். ஆனால் நமக்கு சுயமரியாதை இல்லாத காரணத்தினால் வந்தவர்களிடம் இருந்து பிடுங்குவதையே (பொருளாகவோ இல்லை செக்சகவோ) சிலர் தொழிலாக கொண்டுள்ளனர். முதலில் நம்மவர்களுக்கு நம்முடைய பாரம்பரியத்தை புரியவத்தாலே போதும்... விருந்தாளி வெளிநாட்டவர்களை மரியாதையாக நடத்தி நம்முடைய பெருமையை அவர்களுக்கு தெரிவிக்க முற்படுவோம்.

settaikkaran said...

வெளிநாட்டுப்பயணிகளிடம் விஷமிகள் நடந்து கொள்வதால் இந்தியாவின் நற்பெயர் கெடுவதே மிகப்பெரிய கொடுமை. நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!!

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்... தாய்நாட்டின் சார்பாக

sriram said...

அதிதியை ஏன் இவ்வளவு அழுத்தறீங்க (அத்திதி), பாத்து ஒடஞ்சிடப் போகுது...

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Ananya Mahadevan said...

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! ஓட்டு போட்ட அன்பு நெஞ்சங்களுக்கும் அநேக நன்றிகள்.

Ananya Mahadevan said...

ஸ்ரீராம் அண்ணா, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. அத்திதின்னு ஏன் போட்டேன்னா, அதிதினு போட்டா adidi ன்னு தமிழ்ல படிச்சுடுவாங்க. அதான் த் போட்டா atthithi ன்னு கொஞ்சம் சரியா சொல்லுவாங்க இல்லையா? வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. btw, விடியோ எம்பெட் பண்ணினதுனாலயா என்னன்னு தெரியல, பிளாக்கர் என்னை எடிட் பண்ண விடமாட்டேங்கறது.

துபாய் ராஜா said...

இந்தியராய் பிறந்ததற்கு பெருமைப்படுவோம். இந்தியாவை பெருமைப்படுத்துவோம்.

ஜெய் ஹிந்த்...

Ananya Mahadevan said...

நன்றி துபாய் ராஜா. ஜெய்ஹிந்த்!

Unknown said...

I seriously think we must treat guests from other states in India (people without the knowledge of local language) with respect first as this is the first phase of this slogan Athithi Devo Bhava. I am a resident of Tamil Nadu and I experienced these things in Kerala and Karnataka. We see the same thing in Tamil Nadu with auto rickshaw vaalas too!!!So let us be the change we wish to see in this country..Jai Hind

Ananya Mahadevan said...

I do agree with your statement. Thankyou Balaji for your comment.

தக்குடு said...

எங்க ஊர்ல எல்லாம் வீடு சரியா இருக்கோ இல்லையோ! ஒரு திண்ணை சூப்பரா எல்லா வீட்லயும் இருக்கும் யாராவது நடந்து போரவா கொஞ்ச நேரம் உக்காச்சுண்டுட்டு போகர்துக்காக! நல்ல பதிவு...

SurveySan said...

பரவால்லையே இந்த மாதிரி விளம்பரங்கள் போட்டு, ஜனங்களுக்கு நல்ல சேதி சொல்றாங்களே. நல்லது. அமீரின் பேச்சில் ஒரு உண்மையான உணர்வு இருக்கு. குட்.

கானகம் said...

நல்ல விஷயம். மதுரையில இதுபோன்ற ஆளுங்களைப் பாக்கலாம்.. ஆனால் இவ்வளவு மோசமா நடந்துக்க மாட்டாங்க.. நம்மைப் பற்றியும், நமது பாரம்பரியத்தைப் பற்றியும் பெருமித உணர்வு இருக்கனும். நம்ம யாருன்னு நமக்குத் தெரியாதவரைக்கும் மத்தவங்களை எப்படி மரியாதையா நடத்துவோம்? சுற்றுலாத்துறை இவ்வளவுதூரம் முழிச்சிருக்குங்கிறதே தேனா வந்து காதுல பாயுது.. நல்ல பதிவு.. சும்மா ஒரு வீடியோவ பாத்துட்டு நல்லா இருக்கு அப்ப்டினு தாண்டிப்போயிடாம பதிவாவும் போட்டதுக்கு வாழ்த்துக்களும்.. அதிதி தேவோ பவ

Ananya Mahadevan said...

@ தக்குடு, நன்றிகள்
@ சர்வே, நம்ம ப்ளாக் பக்கமும் கொஞ்சம் அடிக்கடி வாங்க, பின்னூட்டத்துக்கு நன்றி
@ ஜெயக்குமார், கருத்துக்கு நன்றி. அடிக்கடி வாங்க.ஏன்னா, அதிதி தேவோ பவ, என் வலைத்தளத்துக்கு நீங்கள்ல்லாம் அதிதி தானே. :)நன்றி மீண்டும் வருக.

BalHanuman said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்...

Smruthi Kalyanaraman said...

kalakureengala..? illa.. kalaaikireengala?

Related Posts with Thumbnails