Pages

Thursday, April 8, 2010

மனம் ஒரு குரங்கு 12

புதிதாக ஏஷியானெட் மிடில் ஈஸ்ட் என்ற சானலை துவங்கி இருக்கிறார்கள். அதே மொக்கை நிகழ்ச்சிகள் தான். அதே சூப்பர் சிங்கர், வாக் வித் சுபைதா, 1000 முறை போட்ட திரைப்படங்கள், அடுக்களை. எல்லாம் அதே தான். பின்னே என்ன மிடில் ஈஸ்ட்? முக்கியமான காரணம், விளம்பரதாரர் செளகர்யம் தான். டைடு வாஷிங் பெளடர்,கம்ஃபோர்ட் ஃபேப்ரிக் சாஃப்ட்னர், ஜிஃப் கிரீம், இப்படி எல்லாமே இங்கே உபயோகிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்துகிறார்கள். வார இறுதி சினிமா இப்போ சனி ஞாயிறு ஒளிபரப்பபடுகிறது இல்லையா அதே மாதிரி இனிமேல் வெள்ளி சனியாக மாற்றப்படுமாம். புதிதாக கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஸ்டுடியோவில் நிகழ்ச்சிகள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இப்போது zee, சோனி மாதிரி இவர்களும் கிளம்பிவிட்டார்கள். பின்னே, இங்கே இருக்கும் இந்த இக்கானமியை கட்டியதே இவர்கள் தானே.



பழைய அலுவலகத்தில் வேலை செய்யும்போது, என்னிடம் ஒரு அரபி முதியவர் தொலைபேசியில் பேசும்போது, This Economy was built by you people. Indians. If you people hadnt worked so hard, it wouldnt have flourished ன்னு ரொம்ப பெருந்தன்மையோடு வாழ்த்தினார். அப்படி இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்மாணித்தவர்கள் இந்த மலையாளிகள். மற்றபடி இந்த மலையாள மிடில் ஈஸ்டு சானலினால் ஒரு உபயோகமும் இருக்கற மாதிரி எனக்கு தெரியலை.



நேத்திக்கி லூலு போயிருந்தோம். வழக்கம் போல லூஸுத்தனமா ஷாப்பிங் ஸ்ப்ரீ ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ எண்ணெய் நமக்கு x அளவு ஒரு மாசம் செலவாகும்ன்னு வையுங்களேன், திடீர்ன்னு எல்லாத்தையும் வித்து தீர்க்க, 5X அளவு இவ்ளோ தான்னு ஒரு விலை போடுறாங்க. நேத்திக்கி விலை கணக்கு போட்டு பார்த்தேன். ஒரு லாபமும் இல்லை. எல்லாத்துக்கும் மேல ஸ்டோர் பண்றதுக்கு இடமில்லை. 5 மடங்கு வாங்கி எங்கே வைக்கறதாம்? இருக்கற சாமானை வைக்கறதுக்கே கிச்சன்ல இடமில்லை! இந்த அழகுல கன்னா பின்னா ஆஃப்ர்ஸ் வேற! நிறைய நம்மூர்ப்பெண்கள் இந்த ஆஃபர்ஸைப்பார்த்து நின்னு குழம்புவதைப்பாக்கறேன். அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கறேன். தேவையானதை மட்டும் வாங்குறது தான் புத்திசாலித்தனம். பணத்தைப்போட்டு பல்க்கா ஆஃபரில் சாமான் வாங்குறதுல லாபம் இல்லை. இந்த நாலு வருஷ கல்ஃப் வாழ்க்கையில் ஆஃப்ர் போயிடுமேன்னு நான் நினைச்சப்போ எல்லாம், மறுநாளே வேற ஒரு ஆஃபர் போடுவான். அதான் உண்மை. எப்போ கடைக்கு போனாலும், முதலிலேயே லிஸ்ட் தயார் செஞ்சுண்டு தான் போவேன். இதனால் தேவையில்லாத பல பொருட்கள் வாங்குறதை தவிர்க்கலாமே. இருந்தாலும் பாருங்க, ஒண்ணோ ரெண்டோ எக்ஸ்ட்ரா சாமான் வாங்கிண்டு தான் வருவோம்!



நேத்திக்கி இந்த மாதிரி ஆஃபர்ஸெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு வண்டியை திருப்பிண்டு வரும்போது இரு பெண்குழந்தைகள் என்னமோ தமிழில் அவங்கம்மாவை நச்சு பண்ணிண்டு இருந்தது. அவங்கம்மா ஏனோ தெரியல பயங்கர கடுகடுப்பா முகத்தை வெச்சுண்டு இருந்தாங்க நாங்க பில்லிங் முடிச்சுட்டு வெளீல வந்தப்போ அந்த பெண் குழந்தையின் பேச்சு என் காதுல விழுந்தது!” என்னிக்காவது ஒரு நாள் சோளம் சாப்பிடலாமாப்பா?” ஆம் அந்த மலேஷியன் கார்ன் கடை இப்பொ புதுசா திறந்திருக்காங்க. (Small Cup-6 Dhms, Medium-10, Large-12) பெரியவங்களுக்கே அந்த வாசனைக்கு வாங்கி சாப்பிடலாம்ன்னு தான் தோணும். சின்ன குழந்தை தானே. அது பல வாட்டி கேட்டு இருக்கு. அவங்கப்பா முடியாதுன்னு சொல்லிட்டார் போல இருக்கு. அதுக்குத்தான் அந்த குழந்தை அந்த மாதிரி சொல்லி இருக்கு. இதான் இந்த கல்ஃப் வாழ் இந்தியர்களின் நிதர்சனமான உண்மை நிலை. இந்தியாவில் வாழும் பலரும் வெளிநாட்டில் வசிக்கும்  எல்லோரும் கோடீசுவரர்கள் என்று நினைக்கிறார்கள். இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் என்ன பாடு என்று. ஏனோ தெரியவில்லை அந்த குழந்தையின் ஏக்கமான குரல் என் காதுகளில் ஒலித்த வண்ணம் இருந்தது. இதை நினைத்துக்கொண்டே காரில் வெளியே வந்த போது டாக்ஸிக்காக அந்த குடும்பம் காத்துக்கொண்டு இருந்தது. ப்ச்.. பாவம். நாமளாவது வாங்கிக்கொடுத்து இருக்கலாமோ?



புதிதாக ஒரு பொருள் லாஞ்சு செய்யும் கம்பெனிக்காரர்கள் ஒரு விளம்பர யுக்தியாக ஒரு காப்ஷன் வைப்பது வழக்கம். Ceat - Born tough, Dinesh - Take the world in your stride, Singer - Home makers for a life time, Onida- Neighbours envy, owners pride, SSI -Think Oracle, Think SSI இப்படி என் நினைவில் பல காப்ஷன்கள் பளிச்சிடுகின்றன. அட்லஸ் ஜூவல்லரி என்ற விளம்பர்த்தில் கடை ஓனர் ஒரு தாத்தா பளபளக்கும் வழுக்கை மண்டையுடன் வந்து ஜனகோடிகளின் விஷ்வஸ்த ஸ்தாபனம் என்று மலையாளத்தில் சொல்வது மிக பிரபலம். ஆச்சா.. இப்போ இந்த காப்ஷன்ங்கறது, அந்த பொருளுக்கு சம்பந்தமுடையதாத்தான் இருக்கணும். இல்லாட்டி படா டமாசா போயிடும். இங்கே இயங்கும் ஒரு பிரபல வங்கியின் காப்ஷனான Where the world Comes to bank என்பதை சற்றே மாற்றி அமைத்து, லூலூ,  Where the world comes to shopன்னு வெச்சுண்டாங்க. தப்பில்லை.இருந்துட்டு போகட்டும். ஃபாத்திமா சூப்பர்மார்கெட்டின் சமீபத்திய புதிய காப்ஷன் இது. Achieve, Aspire!  இதுக்கும் சூப்பர் மார்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லவும்.



சமீபமா டீவீயில ஒரு ஆட் வருது. ரொம்ப ரசனையா இருந்தது. ஒரு பாட்டி தன் கண்வரை ஏதோ கேலி செய்வதற்கு ஒரு பாட்டு பாடி டான்ஸ் ஆட, பேரன் குட்டிப்பையன் பார்த்துடுறான். பாட்டியை அந்த பாட்டை வெச்சே ஓட்டி, ஓட்டி ஐஸ்கிரீம், சாக்லேட்டு போல, எல்லா காரியமும் சாதிச்சுக்கறான். கடைசில அந்த வீட்டில எல்லோருக்கும் அந்த பாட்டைப்பத்தியும் இந்த பாட்டியைப்பத்தியும் தெரிஞ்சிருக்கு பல்பு வாங்குற அந்த பாட்டி, அந்த பேரனுக்கு லஞ்சம் தர்றதை நிறுத்திடுறாங்க. நிரந்தரமாக வருமானம் தருவது மாதிரி கான்செப்டுக்காக Metlife Insuranceசின் விளம்பர யுக்தி எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது!



இவரோடு வாக்கிங் போனால் ஒரு தொல்லை பாருங்கள், கார்களுக்கு நடுவில் தான் நடந்து போவார். முன்னும் பின்னும் வண்டிகள் பார்க்கிங் தேடிக்கொண்டு இருக்கும். எனக்கென்னமோ விசாலமான நடைபாதை இருக்கும்போது எதுக்கு கீழே இடுக்கில் நடக்க வேண்டும் என்று தோன்றும். ஜம்போ சிக்னலில் ரோட்டை கடந்து,  முரூர் ரோடில் நடக்க ஆரம்பித்தோம். வழக்கம் போல இவர் நடைபாதையில் இருந்து இறங்கி கார்களுக்கு இடையில் நடக்க ஆரம்பித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது. ”அது ஏன்னா அப்படி பண்றேள்? உங்களுக்கு ஏதோ சுகக்கேடு (வியாதி) இருக்கு. சினிமாவில் வரும் லாலாலா பாட்டை ஃபார்வார்டு பண்ணுங்கோன்னா பல்லவி முடிஞ்சு சரணத்தின் முதல் வரியில் நிறுத்திடுறேள். எவ்வளவு மோசமாக அந்த பாட்டு இருந்தாலும் பல்லவிக்கு அப்புறம் ஃபார்வார்டு மட்டும் பண்ண மாட்டேள். கொஞ்சம் கொஞ்சமா க்ளாக்வைஸ் ஒவ்வொரு டிகிரியா ஸ்க்ரூ டைட் பண்ற மாதிரி ஏதாவது குளிகை கிடைச்சா உங்களுக்கு வாங்கிக்குடுக்கணும்" என்றேன். ஒரு வினாடிக்குள் வந்தது பதில்!" எனக்காவது பரவாயில்லைம்மா, குளிகை கழிச்சா போறும், சிலவேருக்கு ஷாக் ட்ரீட்மெண்டு குடுக்க வேண்டி இருக்கு." என்று திருட்டு முழியுடன் தெரிவித்துவிட்டு, பார்க்கிங் லாட் கார்களுக்கிடையில் சிதறி ஓடினார்!

23 comments:

எல் கே said...

//தான் உண்மை. எப்போ கடைக்கு போனாலும், முதலிலேயே லிஸ்ட் தயார் செஞ்சுண்டு தான் போவேன். இதனால் தேவையில்லாத பல பொருட்கள் வாங்குறதை தவிர்க்கலாமே. இருந்தாலும் பாருங்க, ஒண்ணோ ரெண்டோ எக்ஸ்ட்ரா சாமான் வாங்கிண்டு தான் வருவோம்! //

உண்மையே. அங்க மட்டும் இல்ல, இங்கயும் எல்லாரும் இப்படி பண்ண நெறைய பணம் மிச்சம் ஆகும் ,.
\//ஃபாத்திமா சூப்பர்மார்கெட்டின் சமீபத்திய புதிய காப்ஷன் இது. Achieve, Aspire! //
அதான் இப்ப பேஷன்
//குளிகை கழிச்சா போறும், சிலவேருக்கு ஷாக் ட்ரீட்மெண்டு குடுக்க வேண்டி இருக்கு//
உன்னைத்தான் சொல்றாரோ

துபாய் ராஜா said...

கையில மாட்டுன மாமாவை கைமா பண்ணியிருப்பேளே.... :))

அது ஒரு கனாக் காலம் said...

நாங்கள் எல்லாம் , இலுப்ப சட்டியில் சாமானை எல்லாம் போட்டுட்டு , கருவேப்பலைக்கு போன் செய்ஞ்சா , அது மட்டும் கூட கொண்டு வரும் ...மதினா ஸ்டோர்ஸ் ஜிந்தாபாத், கொஞ்சம் விலை கூட இருக்கும் , ஆனா அவசிய்மிலாத சாமான் வீட்டுக்கு வரவே வராது.

அண்ணாமலையான் said...

நீங்க சொல்லிட்டீங்கள்ள? எல்லாரும் உடனே கேட்டுருவாங்க....

பனித்துளி சங்கர் said...

///////சமீபமா டீவீயில ஒரு ஆட் வருது. ரொம்ப ரசனையா இருந்தது. ஒரு பாட்டி தன் கண்வரை ஏதோ கேலி செய்வதற்கு ஒரு பாட்டு பாடி டான்ஸ் ஆட, பேரன் குட்டிப்பையன் பார்த்துடுறான். பாட்டியை அந்த பாட்டை வெச்சே ஓட்டி, ஓட்டி ஐஸ்கிரீம், சாக்லேட்டு போல, எல்லா காரியமும் சாதிச்சுக்கறான்./////

எங்க வீட்டிலும் ஒரு பட்டி இருக்கு ஒன்றுமே வாங்கித்தருவதும் இல்லை .எதுவும் பேசுவதும் இல்லை . ஆனால் எல்லோரையும் கூறு கூறு என்று பார்க்கும் . என்ன புரியலையா நான் சொன்னது போட்டோவில் தொங்க விட்டு இருக்குற பாட்டி பற்றி .

Prathap Kumar S. said...

பொதுவா ஏசியானெட் சேனல்ல எனக்குப்பிடிச்சதே நியுஸ் மட்டும்தான். எல்லாமே மொக்கை நிகழ்ச்சிகள்தான்... இதுல மிடில் ஈஸ்ட் வேற ...பல்லு இருக்கறவன் பக்கோட திங்கறான்..

பாத்திமா சூப்பர் மார்க்கெட்ல அந்த கேப்ஷன் போட காரணத்தை கடைக்கார்கிட்டவே கேட்டிருக்கலாமே...

உங்க ஆத்துக்காரர் கார்களுக்கு நடவில் நடந்து போக காரணம் நீங்கதான்...பின்ன வாக்கிங் போகும்போதும் மொக்கைப்போட்டு பாவம் அவரை கஷ்டப்படுத்துனா..?

Ananya Mahadevan said...

@ LK,
இந்தா வடை வெச்சுக்கோ.. வாழ்த்துக்கள்! :P
என்ன ஃபேஷன்? மடத்தனமா இல்லே இருக்கு?
//உன்னைத்தான் சொல்றாரோ?// ட்யூப்லைட்டு. இப்போவாவது உனக்கு புரிஞ்சதே?

@துபாய்ராஜா,
அதான் சொன்னேனே, கார்களுக்கு நடுவில் சிதறி ஓடிட்டார்ன்னு. ஸோ, நோ கைமா..

@சுந்தர் சார்,
கருத்துக்கு நன்றி. ஆமாம். மதீனா பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். இங்கே மதீனா லேது. ஒன்லி பகல் கொள்ளை அடிக்கும் ஈரானி க்ரோஸரி கடைகள். ஒரு கிலோ வெங்காயம் சூப்பர்மார்கெட்டுகளில் 1.95ன்னா, இவன்கிட்டே அவசரத்துக்கு 3 வெங்காயம் எடுத்துண்டுவாடான்னு சொன்னா, 4 திராம் வாங்கறான். அதுனால ஹோம் டெலிவரி நான் இங்கே யூஸ் பண்றதில்லை.

@அண்ணாமலையான்,
கேட்டுட்டாலும்.. புரியுது உங்க லொள்ளு. நன்றி. யார் யார் கேக்கறாங்களோ, அவங்களுக்கு நல்லது. கேட்காட்டி போகட்டும்.

@பனித்துளி,
நல்ல ஜோக்கு. கருத்துக்கு நன்றி.

@நாஞ்சில்,
நான் என்ன ஃபாத்திமா க்ரூப்பாஃப் கம்பெனீஸ் மார்கெட்டிங் டிப்பார்ட்டுமெண்டிலேயே வேலை செய்யுறேன்? கடைக்காரர்ட்ட சொன்னா, உடனே சரி பண்ணிடுவாங்களா? (தில்லானா மோஹனாம்பாள் வைத்தி ஸ்டைலில் படிக்கவும்- வெக்கப்பட்டா, விட்டுடுவாளா?) நல்ல கதையா இருக்கே?ரெண்டு மூணு நாளா புது விளம்பரம் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பா வருது. அதான் எல்லார்கிட்டேயும் சொன்னேன்.

நடக்கும்போது அட்லீஸ்டு நான் அவரை தொந்தரவு செய்யுறதில்லை. மத்தவங்களை மொக்கை போடுவதைப்பத்தி தான் தீவிரமா யோசிப்பேன்.

Porkodi (பொற்கொடி) said...

yen post podalainu oru varthai vijarikka aal illai! :( agaiyal naan idhu varai potta 4 postaiyum niragarikiren!

sriram said...

//இதுக்கும் சூப்பர் மார்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லவும்//

அப்போ உபதேசமெல்லாம் ஊருக்குத்தானா??

//இதுக்கும் சூப்பர் மார்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லவும்//

பின்னூட்டம் வாங்க என்னென்ன டகால்டி வேலையெல்லாம் செய்ய வேண்டியிருக்கு??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

தொடர்ந்து எழுதத் தெரியலன்னா, உண்மையை ஒத்துக்கவாவது தெரியணும் கேடி, மேடை கோணல்னு சொல்ல்க் கூடாது..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Nathanjagk said...

சாம்பு பாய்...
ஷாப்பிங்.. marketing, captions பற்றி நீங்க எழுதியிருக்கிறதுக்கு ந​டைமு​றையை அப்படி​யே ​சொல்றது. very nice!
shock treatment... lol...!!!

Chitra said...

நிறைய விஷயங்களை ஒரே பதிவில், நல்லா சொல்றேள்.....!!! கலக்கிண்டே இருங்கோ!

Unknown said...

என்னடா கொஞ்ச நாளா டாம் & ஜெர்ரியை காணோமேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்... இந்த பதிவு வந்திருக்கு...

Porkodi (பொற்கொடி) said...

//என்னடா கொஞ்ச நாளா டாம் & ஜெர்ரியை காணோமேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்... இந்த பதிவு வந்திருக்கு...//

இவுக டாம் -ஜெர்ரினு ஆர சொல்லுறாக?! :-/

hayyram said...

நல்லா எழுதீருக்கீங்க. நல்ல பதிவு. தொடருங்கள்.

anbudan
ram

www.hayyram.blogspot.com

Geetha Sambasivam said...

ஒருவழியா உங்க பதிவுகளைக் கண்டு பிடிச்சாச்சு, மெதுவாப் படிச்சுட்டு வரேன், பிடிச்சவங்க லிஸ்ட்லே என்னோட பதிவே இல்லையே?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போகட்டும், விருதுக்கு வாழ்த்துகள்.

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

நல்ல பதிவு.
asia net ல மொக்கை நிகழ்ச்சியையும் விடாம பக்க்ரதில ஒன்னும் கொறச்சல் இல்லை, இதுல அஆவ்வ்
எல்லா எடத்திலயும் மார்க்கெட்டிங் போலித்தனம் இறுக்கும், நாம தான் சூதனமா மாமா purse அ காப்பத்தனும் ( அது கொஞ்சம் கஷ்டம் தான் hahahahah )
///கார்களுக்கு நடுவில் சிதறி ஓடிட்டார்///, அவரும் ரொம்ப நாள் ட்ரை பண்றார் போல இர்ருக்கு, all the best மாமா( uncle நு கூப்ட்டுடேன் உங்களுக்கு கொஞ்சம் சந்தோசம் தானே) .hahahaha :)

தக்குடு said...

//திருட்டு முழியுடன் தெரிவித்துவிட்டு, பார்க்கிங் லாட் கார்களுக்கிடையில் சிதறி ஓடினார்// oru safetykkuthaan...:)LOL

சாமக்கோடங்கி said...

//இதான் இந்த கல்ஃப் வாழ் இந்தியர்களின் நிதர்சனமான உண்மை நிலை. இந்தியாவில் வாழும் பலரும் வெளிநாட்டில் வசிக்கும் எல்லோரும் கோடீசுவரர்கள் என்று நினைக்கிறார்கள். இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் என்ன பாடு என்று. ஏனோ தெரியவில்லை அந்த குழந்தையின் ஏக்கமான குரல் என் காதுகளில் ஒலித்த வண்ணம் இருந்தது.//

ஏன் அவ்வளவு கஷ்டப் பட்டு அங்கே ஏழைகளாக(!!!??) வாழ வேண்டும்.. கஷ்டம் என்ற சொல்லின் அர்த்தம் ஆளுக்கு ஆள் மாறுவது அபத்தம்..

குழந்தையின் ஏக்கக் குறல்----- ஏன்.. உங்களின் கண்களுக்கு இந்தியக் குழந்தைகளின் ஏக்கம் தெரியவில்லையோ..? ஒஹ்.. நீங்கள் தான் இந்தியாவில் இல்லையே... ஆனால் ஏழையோ, பணகாரனோ, அவனவன் அளவில் பிரச்சினைகளை அவனே உருவாக்கிக் கொண்டு அலைவது தான் நிதர்சனம்.. உங்கள் வரிகளின் ஓட்டம் அழகாக இருந்தது.. ரசித்தேன்.. வாழ்த்துகள்.. நன்றி..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

LuLu செண்டர்ல இன்னும் அப்படியே தானா... நல்லா சொன்னிங்க அனன்யா. நல்ல பதிவு

kargil Jay said...

நானும் சில சமயம் சோளம் போல 'வேறு வாங்கிக் கொடுத்து இருக்கலாமோ? டிப்ஸ் ஒரு டாலர் அதிகம் கொடுத்து இருக்கலாமோ?' என்று நினைப்பேன். கொஞ்சம் பீலிங்க்ஸ் வர வச்சுட்டேள்.. சுஜாதாவின் எழுத்துக்கள் போல் இயல்பானவற்றை வித்தியாசமாகவும் லாவகமாகவும் எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். (ஆமாம் வெட்டியா நிறைய நேரம் கிடைக்குதா? -- இந்த சிந்தனை ஏற்படக் காரணம் என்னை 'சித்தப்பு' என்று வாஞ்சையுடன் அழைக்கும் ஒரே ஜீவன் ஜிகர்தண்டா கார்த்திக் தான். திட்டரதுன்ன அவனையே திட்டுங்கோ.. இது நாங்கள் இருவரும் கலக்கியது : http://kozhi-kargil-jay.blogspot.com/ ).

Ananya Mahadevan said...

@ஸ்ரீராமண்ணா,
அதான் பாருங்களேன். பின்னூட்டம் வாங்குறதுக்கு என்னென்ன டகால்டி வேலையெல்லாம் பண்ணவேண்டி இருக்கு! :உங்க கருத்துக்கு நன்றி!

@பொற்கொடி,
இப்படி எல்லாம் பேசப்படாது. அளுதுருவேன். நானே ஒரு வாரம் களிச்சு போஸ்டு போட்டு இருக்கேன். மருவாதியா படிச்சுட்டு கருத்து சொல்லி கடமை செஞ்சுட்டு போ ஆத்தா..

@ஸ்ரீராமண்ணா,
எதுக்கு அனாவஸ்யமா பொற்ஸை திட்டுறீங்க?

@ஜெகன் தம்பி,
ரொம்ப நன்றிங்க

@சித்ரா,
ரொம்ப நன்றிங்க.

@மஹேஷ்,
நன்றி. அதே அதே.. டாம் அண்ட் ஜெர்ரி ஆர் பாக்!

@பொற்ஸ்,
எங்க ரெண்டு பேரையும் தான் டாம் & ஜெரின்னு சொன்னான் மஹேஷ். .கவலை படாதே..

@ராம்,
முதல்வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!

@கார்த்திக்,
விருதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி!

@கீதா சாம்பசிவம் அவர்களே,
மிக்க நன்றி! நீங்கள் வந்து பின்னூட்டம் போட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி. என் ப்ளாக் சாபல்யம் அடைந்தது!

@குட்டிசாத்தான்,
வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

@தக்குடு,
மிக்க நன்றி

@பிரகாஷ்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி
//ஏன்.. உங்களின் கண்களுக்கு இந்தியக் குழந்தைகளின் // சூப்பர்மார்கெட்டில் பார்த்தது, இந்தியக்குழந்தை தான். அதுவும் தமிழ்ப்பேசிய குழந்தை. எல்லோரும் இங்கே எக்கசெக்கமாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஒரு கொடுமையான நிலமை. எல்லாம் ரிஷசன் தான் காரணம். இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படும் ஒரு குடும்பஸ்தனின் நிலமையை விளக்கவே இந்த பகுதியை எழுதினேன்.
//ஏழையோ, பணகாரனோ, அவனவன் அளவில் பிரச்சினைகளை அவனே உருவாக்கிக் கொண்டு அலைவது தான் //நூற்றுக்கு நூறு உண்மை. வேறு யாரும் பொறுப்பாக முடியாது.

@அப்பாவி தங்கமணி,
ஆமாம், இன்னும் அதே நிலமை தான். கருத்துக்கு நன்றி.

@கார்கில் ஜெய்,
தங்கள் வருகைக்கும் இந்த பதிவுக்கும், பழைய பதிவுகளுக்கான பின்னூட்டங்களுக்கு அநேக நன்றிகள். உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஆனால் தெய்வத்தை எல்லாம் இதுல இழுத்து இருக்க வேண்டாம் சார். நான் முன்னமே சொன்ன மாதிரி அவர் தெய்வத்திண்ட தெய்வம். கால் தூசி கூட பெறமாட்டேன். ஆமாம் வெட்டியே தான். ஜிகர்தண்டாவுக்கு உங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல. கண்டிப்பா உங்க ப்ளாக் பக்கம் வர்றேன். :)

ஹுஸைனம்மா said...

//இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் என்ன பாடு என்று//

சூப்பர்மார்க்கெட்களின் ஆஃபர்க்கான டார்கெட்டுகளே (நானும்) இவர்கள்தான்!! ஆஃபர் போடும் 50 அயிட்டங்களில் ஒன்றிரண்டு நிஜமாகவே சீப்பாக இருக்கும்; ஆனால் அதன் எக்ஸ்பயரி டேட் அடுத்த வாரமாக இருக்கும்; அல்லது நாம் அத்தனை தூரம் போய்வர ஆகும் செலவு லாபத்தை நஷ்டமாக்கிவிடும்.

Related Posts with Thumbnails