Pages

Tuesday, April 13, 2010

விக்ருதி ஆண்டு ஸ்பெஷல் - வாழ்த்துக்கள்!

புத்தாண்டு போஸ்டு போடணும்ன்னு நினைச்சுண்டு இருந்தேன்.. ஏற்கனவே நான் சங்கல்பிச்சு வெச்சிருந்த குறையொன்றுமில்லை பாட்டை கார்த்திக் புத்தாண்டு போஸ்டுக்கு போட்டுட்டான்.. இனி நான் என்ன பண்ண? இப்படி யோசிச்சுண்டு இருக்கும்போது தான் ரகு மாமா ஒரு ஜாலி ஃபார்வார்டு மெயில் அனுப்பி இருக்கார். சரி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ன்னு தான் இதையே போஸ்ட்டா போட்டுட்டேன். எல்லாமே செம்ம மொக்கைஸ். மக்களே, எஞ்சாய்!



1) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?



2) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....

ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.



3) ஒரு முறை நியூட்டனுக்கு 17 வயதாக இருக்கும்போது, வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பாம்பு, அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்டபோது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய மனதி'ல் அல்ல" என்றார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....



4) நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....



5) மூன்று புத்தாண்டு மொக்கைகள்: (பாக்கி எல்லாம் எந்த வகைன்னு எல்லாம் கேக்கப்படாது!)



a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்போ, பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

c) எல்லா ஸ்டேஜ்லேயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்லே டான்ஸ் ஆட முடியுமா?



6) ஒன்றுமே தெரியாத மாணவன் கிட்டே கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடுமை சார் இது?....(பொற்கொடி, அமைதி அமைதி!)



7) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது....



8) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிட்டுதான் கிளம்பணும்...



9) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...

சொல்லட்டுமா?

பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...

ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....



11) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !

அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!





12) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் சிரிச்சுகிட்டு இருக்கீங்க பாருங்க. கை குடுங்க...சூப்பருங்க



13) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.



14) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....



15) தத்துவம் 2010

"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


16) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!


17) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?

?

?

?

?

?

?

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாலும்" ஒரே மாதிரி இருக்கா?...........

நெஸ்டு, மீட் பண்றேன்...



எல்லோருக்கும் இனிய விக்ருதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

டிஸ்கி: இன்று இடம் பெறும் சன் டீவீ சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே என் பதிவை படித்துவிட்டு (ரத்தக்கொதிப்பு அதிகரித்து, மண்டை காய்ந்து) கண்டபடி கோபத்துடன் பின்னூட்டினால் அதற்கு கொம்பேனி பொறுப்பேற்காது என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

18 comments:

கானகம் said...

Good.. புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

எல் கே said...

மீ தி பிரஸ்ட் ...
புத்தாண்டை உன் மொக்கையோட துவங்க வைக்கற..

சூப்பர் மொக்கைஸ்.
உங்கள் வீட்டார் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அண்ணாமலையான் said...

கடவுளே இந்த புத்தாண்டுலயாவது எங்களயெல்லாம் இவங்கள்ட்டேயிருந்து காப்பாத்து....

தமிழ் உதயம் said...

மகிழ்ச்சி... உங்க விக்ருதி ஆண்டு ஸ்பெஷலை படிச்சதுல. இதே மகிழ்ச்சி எல்லா நாளும் தொடர வாழ்த்துகள்

தக்குடு said...

உங்கள் வீட்டார் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்...:)

Prathap Kumar S. said...

டிஸ்கியை கடைசில போடுற மேட்டரை எவன்டா கண்டுபிடிச்சது... முதல்லயே போட்டுருந்தா இப்படி ஒரு தர்மசங்கடத்திலேருந்து தப்பிச்சுருப்பேன்... யப்பா...முடில....

அதான் மொக்கை போடனும்னு முடிவு பண்ணியாச்சுல்ல கொஞ்சம் புதுசாத்தான் போடறது...

Ananya Mahadevan said...

@LK,
@ஜெயக்குமார்,
@அண்ணாமலையான்,
@தமிழுதயம்,
@தக்குடு,
@நாஞ்சில்,
நன்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

@நாஞ்சில்,
உங்களுக்கு இந்த ஃபார்வார்டு வந்திடுச்சா? எனக்கு முதல் வாட்டி தான் வந்தது. நல்லா இருந்ததுங்கறதுனால தான் போட்டேன். கருத்துக்கு நன்றி!

sriram said...

மரண மொக்கை, இதுவே இந்த வருடத்தின் கடைசி மொக்கை இடுகையாக இருக்கட்டும்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

முகுந்த்; Amma said...

Newyearum athuvuma, eppadi mokkaiya, kaaluthula raththam varuppa

Wish you a very Happy Tamil Newyear.

துபாய் ராஜா said...

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

ரசித்துப் படித்துச் சிரித்தேன். நிறைய ஏற்கெனவே படித்திருந்தாலும், ஏழாவது காதல் டெஃபனிஷன் நல்லா இருந்தது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஹுஸைனம்மா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த நல்ல நாள்லயாவது நல்ல பிள்ளையா இருந்திருக்கக்கூடாதா? இன்னிக்குமா?

எல் கே said...

//இந்த நல்ல நாள்லயாவது நல்ல பிள்ளையா இருந்திருக்கக்கூடாதா? இன்னிக்குமா?//

நல்ல கேட்டேங்க ponga

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் சிரிச்சுகிட்டு இருக்கீங்க பாருங்க. கை குடுங்க...சூப்பருங்க//

ரங்கமணி மொதல் மொதல்ல பேசின டயலாக் பொண்ணு பாக்கற பதிவுல போட மறந்து எங்க சேத்துடீன்களோ (நாங்களும் கடிபோம்ல)
ஆனாலும் சூப்பர் கடிஸ் ஆனா... இன்னிக்கி ரங்கமணிய torture பண்ண சூப்பர் ஐடியா குடுத்துடீங்க...நன்றி நன்றி நன்றி
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

R.Gopi said...

யப்பா...

மொக்கைலயும் மொக்கை இது மெகா மொக்கைடா சாமி....

எங்கள காப்பாத்த யாருமே இல்லையா?

நடத்துங்க... இப்போ உங்க பாலைவனத்துல ஒட்டகம் (எவ்ளோ நாள்தான் உங்க காட்டுல மழைங்கற வார்த்தையே சொல்றது...)

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... என் பதிவு இதோ :

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html

Geetha Sambasivam said...

//டிஸ்கி: இன்று இடம் பெறும் சன் டீவீ சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே என் பதிவை படித்துவிட்டு (ரத்தக்கொதிப்பு அதிகரித்து, மண்டை காய்ந்து) கண்டபடி கோபத்துடன் பின்னூட்டினால் அதற்கு கொம்பேனி பொறுப்பேற்காது என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்!//

தொலைக்காட்சியே பார்க்கமாட்டோமே, இந்த மாதிரி விழாக்காலச் சிறப்பு மொக்கைகளைப் பார்க்கும் வழக்கமே இல்லை! சங்கரா, எஸ்விபிசி, போன்ற சானல்கள் இருக்கே, அருமையான கச்சேரிகள், அதை விட்டுட்டு, சன்னாவது, டிவியாவது??? :P

Madhavan Srinivasagopalan said...

all are very nice.

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails