Pages

Friday, April 16, 2010

மோஹனின் மொக்கைகள்

இது கொஞ்சம் பழைய ஜோக்குதான்ன்னாலும் சொல்ல பயங்கர சுவையா இருக்கு.. ரங்குவை மாட்டிவிடுற மேட்டர் எல்லாம் அப்படி ஒரு சுவை தங்கமணிகளுக்குன்னு உங்க எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல நல்லா தெரியுமே!

ஒரு மூணு வருஷம் முன்னாடி இங்கே முதல் வாட்டி வேலை கிடைச்சு சுமார் ஒரு மாசத்துல ஒரு தமிழ்ப்பெண்ணை ஃப்ரெண்டு பிடிச்சு பேசிப்பேசி அவள் வீடு கோபால் அண்ணா வீட்டுப்பக்கத்துல தான் இருக்குன்னு கண்டு பிடிச்சப்போ பயங்கர சந்தோஷம். அவளும் தமிழ்க்கலாச்சாரப்படி, எங்க வீட்டுக்கு கண்டிப்பா நீ வரணும்ன்னு அன்புக்கட்டளை போட்டுட்டா. அதான் அப்போ எல்லாம் வீக்கெண்டுன்னா நேரா கார் தானா ஷார்ஜா போயிடுமே. அண்ணா வீட்டுல உக்காண்டு மொக்கை போட்டுட்டு நன்னா மூக்கை பிடிக்க சாப்பிட்டுட்டு சாயந்திரம் தான் வருவோம். இல்லாட்டி மறுநாள் கார்த்தால. சரி போறது தான் போறோம் அப்படியே நாஸியா வீட்டுக்கும் போயிட்டு வந்துடலாம்ன்னு பேசி டிசைடு பண்ணினோம்.

இவர் வழக்கத்துக்கு மாறா ரொம்ப முன்னாடியே ட்ரெஸ் பண்ணிண்டு ரெடியாயாச்சு. ஒரு அரை மணி நேரமா என்னமோ யோசனையில ஆழ்ந்து இருந்தார். அப்படி யோசிச்சுண்டு இருக்கும்போது தேவையே இல்லாமல் ஜுப்பாவை குனிஞ்சு பார்த்துண்டே, தடவிண்டே உக்காந்து இருந்தார். ”என்னன்னா”ன்னு கேட்டு இருக்க வேண்டாம். விதி வலியது. கேட்டாச்சு. ”புருவம் நெறித்து, இந்த களர் (இவங்க அப்படித்தான் சொல்லுவாங்க) நன்னா இருக்காம்மா”ன்னு வினயமாத்தான் கேட்டார்.” ஏன்? இந்த டார்க் மெரூனுக்கென்ன? உங்க நிறத்துக்கு எடுப்பா ஜோரா இருக்கே? ஏன் கேக்கறேள்”ன்னு அப்பாவியா கேட்டேன். முகமெல்லாம் முகஸ்துதியிலே பிரகாசமாகி, “இல்லே, நாஸியாவுக்கு இந்த களர் இஷ்டப்படுமா?”ன்னு கேட்டப்போ ஆடிப்போயிட்டேன்.

சுமார் ஒரு மணி நேரம் ’அர்ச்சனை’, ’அலங்காரம்’, எல்லாம் முடிச்சுட்டு, கண்றாவியா ஒரு டிஸ்கோ டான்ஸர் டீ ஷர்ட்டும் கேவலமான ஒரு ’சம்பந்தமூர்த்தி’ பேண்டும் மாட்டி விட்டு நாஸியா வீட்டுக்கு கூட்டிண்டு போனேன். ”நாஸியா, விச் ஃப்ளோர்”ன்னு கேக்கறதுக்கு ஃபோன் பண்ணினா, இவர் நடூல மூக்கை நுழைச்சு, ”அவாத்துல சேப்பு கம்பளம் இல்லாட்டி விட்டுடச்சொல்லு.. என்ன தான் நான் வரேன்னாலும், என்னத்துக்கு அனாவஸியமா அதெல்லாம் எல்லாப்படியிலும் போட்டுண்டு.. எப்படியும் நாம லிஃப்டுல தான் போவோம்,காரிடர்ல மட்டும் போட்டாப் போறும்ன்னு சொல்லிடூ” ன்னு உளரி எக்ஸ்ட்ராவாக செல்ஃபோனாலேயே மண்டையில் ரெண்டு பொடுமி வாங்கிக்கொண்டு போறாக்குறைக்கு ஸ்பைசியாக கொஞ்சம் திட்டும் வாங்கிக்கட்டிண்டார். காரில் கண்ணாடி, வெளியில் தெரியும்.. லிஃப்டுன்னா யாருக்கும் தெரியாதுன்னு ஹாண்டு பேக்கில் வெச்சிருந்த ஸ்கேல் & பூரிக்கட்டை பத்திரமா இருக்கான்னு பார்த்துண்டேன். நல்ல வேளை எல்லாம் பத்திரமாக இருந்தது!

”ஹாய்”ன்னு வரவேற்ற நாஸியா என்னை மட்டும் உள்ளே கூட்டிண்டு போயிட்டா. அதுக்கப்புறம் இவரும் நாஸியா கணவரும் பேசிண்டு இருந்தாங்க. கடைசியில பேசிட்டு கிளம்பும் போது தான் நம்ம ஹீரோ நாஸியாவை பார்த்தார். ஹீரோவுக்கு ரொம்ப வருத்தம். நாஸியா ரெட் கார்பெட் போடலை, தன் கூட பேசலைன்னு. க்ர்ர்ர்ர்...

நெக்ஸ்டு நேத்திக்கி நடந்த காமெடி.. கார்னிஷ் போய் ரொம்ப நாளாச்சுன்னு போயிருந்தோம். நல்ல 1 மணி நேர நடைக்கப்புறமா ரோடெல்லாம் க்ராஸ் பண்ணி ஒரு புல்த்த்ரையில் போய் உக்காண்டோம். தாகம் நாக்கை வறட்ட, ஒரு கோக் வேணா குடிக்கலாமான்னு கேட்டார். முன்னக்காலத்து ட்ராமால எல்லாம்,"இதோ, அவரே வர்றாரே”ன்னு சொல்லுவாங்களே அதே மாதிரி, இதோ, பக்கத்துலேயே வெண்டிங் மெஷின் இருக்கேன்னு சொல்லிண்டே இவர் போய் கோக் வாங்கிண்டு வந்தார்.

ரொம்ப தாகமாச்சேன்னு நான் பெருந்தன்மையா காத்திருக்க, ரங்கு கோக் டின்னை ஓப்பன் பண்ணி ஒரு வாய் விட்டுண்டார். தாகசாந்திக்கு உபச்சாரமா, அலங்காரமா ”நன்னா இருக்கா”ன்னு நான் கேட்டது தான் தப்பு.

ரங்கு ஒரு ஃப்ராக்‌ஷன் ஆஃப் செகண்டுல சொல்றார், ”கோக் என்ன சீயஞ்சட்டியிலையா உண்டாக்கறா? ஃபேக்டரியிலயாக்கும் உண்டாக்கறா.. எல்லாமே ஒரே டேஸ்டாத்தான் இருக்கும்.அதே கோக் டேஸ்டு தான். நோ சேஞ்சு!”

என்னால முடியல.. ஆராவது காப்பாத்துங்கோ!!!

34 comments:

Chitra said...

அந்த factory யிலும் அதே taste தானா? தேங்க்ஸ்.
nice post.

Anonymous said...

=))

sriram said...

சரியாத்தான் சொல்லியிருக்கார் ஒங்க ரங்கு..

அப்புறம் நாஸியாவின் இமெயில் ஐடி மற்றும் போன் நம்பர் கெடைக்குமா??
சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜுக்குத்தான் (யாரும் என்னை நாஸ்யா போன் நம்பர் தெரியாதவன்னு சொல்லிடக் கூடாதில்லையா)


என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எல் கே said...

///ம். நாஸியா ரெட் கார்பெட் போடலை, தன் கூட பேசலைன்னு. க்ர்ர்ர்ர்... //

he hehehe

எல் கே said...

//என்னால முடியல.. ஆராவது காப்பாத்துங்கோ!!! //

yara rangsathana

எல் கே said...

//சுமார் ஒரு மணி நேரம் ’அர்ச்சனை’, ’அலங்காரம்’, எல்லாம் முடிச்சுட்டு, கண்றாவியா ஒரு டிஸ்கோ டான்ஸர் டீ ஷர்ட்டும் கேவலமான ஒரு ’சம்பந்தமூர்த்தி’ பேண்டும் மாட்டி விட்டு நாஸியா வீட்டுக்கு கூட்டிண்டு போனேன்///

vanmayaga kandikkiren

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அனன்யா

ஹாய்... சூப்பரா இருக்குங்க..
ஹிஹிஹி...வீட்டுக்கு வீடு வாசப்படி... :)
நல்ல வேளை.. பூரிக்கட்டைக்கு வேலை இல்லையே.. :D :D

GEETHA ACHAL said...

நல்லா சிரிச்சாச்சு..பாவம் உங்க ரங்கு...

Porkodi (பொற்கொடி) said...

ஹிஹிஹி.. இப்படி அப்பப்போ உளறினா தான் அவங்க ரங்கு, க்ர்ர்ர்ர்னு இருந்தா தான் நாம தங்கு.

தக்குடு said...

//கோக் நன்னா இருக்கா”ன்னு நான் கேட்டது // hahahaha 'வாலி' படத்துல அஜீத் சொன்ன ஒரு வசனம் தான் ஞாபகத்துக்கு வருது, நீங்க கேனைனு எனக்கு தெரியும் ஆனா இவ்ளோ........:) நான் ஒன்னும் சொல்லலைப்பா!!!!...:)

நானானி said...

அநன்யா,
இப்பத்தான் உங்க பதிவுக்கு வர்ரேன்.

ரங்ஸின் ரெட் கார்பெட் ரவுசு....ரசிச்சு சிரிச்சேன்.

கோக் இங்குள்ள தண்ணிக்கு சுவை மாறுபடும் தெரியுமா?

//என்னால முடியல..ஆராவது காப்பாத்துங்கோ//

ஆராலும் காப்பாத்த முடியாத கட்டு. அனுபவிச்சுத்தான் ஆகோணும். ஏன் நாங்கெல்லாம் அனுபவிக்கலை?

அண்ணாமலையான் said...

முடியலே....

துபாய் ராஜா said...

//ரங்கு ஒரு ஃப்ராக்‌ஷன் ஆஃப் செகண்டுல சொல்றார், ”கோக் என்ன சீயஞ்சட்டியிலையா உண்டாக்கறா? ஃபேக்டரியிலயாக்கும் உண்டாக்கறா.. எல்லாமே ஒரே டேஸ்டாத்தான் இருக்கும்.அதே கோக் டேஸ்டு தான். நோ சேஞ்சு!”//

இம்புட்டு அடி வாங்கியும் திருந்தலையா.. மாமா ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருருரு.....

//என்னால முடியல.. ஆராவது காப்பாத்துங்கோ!!!//

இது மாமாவோட குரல்ன்னோ.... பக்கத்தில இருக்கவா யாராவது ஓடிப்போய் காப்பாத்துங்கோ.... :))

geethasmbsvm6 said...

follow up

geethasmbsvm6 said...

பாவம் ரங்கு. நான் எப்போவுமே ரங்குவுக்குத் தான் ஓட்டுப் போடுவேன், இப்போவும் அவருக்கே என்னோட வோட்டு(பின்னே குண்டர் படைத் தொண்டர்னா சும்மாவா?)

திவாண்ணா said...

hihihi
ரங்ஸ் க்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் நல்லா ட்ரெய்னிங் எடுத்துக்குங்க!

Unknown said...

Maappu.... you rock!!!! I love you

Unknown said...
This comment has been removed by the author.
முகுந்த்; Amma said...

//என்னால முடியல.. ஆராவது காப்பாத்துங்கோ!!!//

ஹி ஹி ஹி, மொக்கை பலமா போடுறாங்கப்பா.

தாங்க முடியல யாரவது சீக்கிரம் காப்பாத்துங்க.

ஜெய்லானி said...

பெரிய கோக் டின்னை விட சின்ன கோக் டின் டேஸ்ட் நல்லா இருக்கும். நீங்க கேட்டது எது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///என்னால முடியல.. ஆராவது காப்பாத்துங்கோ!!!// அப்படின்னு சொல்லமாட்டேன்.

திவாண்ணா said...

//சின்ன கோக் டின் டேஸ்ட் நல்லா இருக்கும். // ஓ! கோக் டின்னை சாப்பிட்டு பாத்து இருக்கீங்களா? :P

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ரங்குவை மாட்டிவிடுற மேட்டர் எல்லாம் அப்படி ஒரு சுவை தங்கமணிகளுக்குன்னு உங்க எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல//

நோ objection யுவர் honor

//ஹாண்டு பேக்கில் வெச்சிருந்த ஸ்கேல் & பூரிக்கட்டை பத்திரமா இருக்கான்னு பார்த்துண்டேன்//


இந்த மாதிரி compact சைஸ்ல பூரி கட்டை எங்க கெடைகரதுன்னு சொல்லுங்களேன்.... ஒரு வேள இதுக்காகவே நீங்க பெரிய handbag வெச்சுருகேளோ

சூப்பர் காமெடி ரசித்து படித்தேன் (லோகத்துல எந்த ரங்கமணிக்கு ஆப்பு வெச்சாலும் நம்ம reaction இதான்)

ஸாதிகா said...

அநன்யா..உங்க பிராமணாள் ஆத்து பேச்சு வழக்கு நேக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.ஆம்படயானை நன்னா வார்ரேள்..நாஸியாவையும் பார்த்துண்டாச்சா?பலே..

அண்ணாமலை..!! said...

"அதுக்காக ஆயுதமெல்லாம் பிரயோகம் பண்ணாதேள்!"
நல்லா ரசிச்சு படிச்சேங்க! உங்க எழுத்து நடை அருமை!
இடை இடையே யாரும் பார்க்கிறார்களா என பார்த்துவிட்டு நன்றாய் சிரித்தேன்!

Anonymous said...

//லோகத்துல எந்த ரங்கமணிக்கு ஆப்பு வெச்சாலும் நம்ம reaction இதான்//

இதுக்கு பேர் தான் அப்பாவியா? விளங்கிடும். என்னா வில்லங்கம்ப்பா??!!??


//ஹாண்டு பேக்கில் வெச்சிருந்த ஸ்கேல் & பூரிக்கட்டை பத்திரமா இருக்கான்னு பார்த்துண்டேன்////

OMG

பித்தனின் வாக்கு said...

ஹலோ, ரங்கஸ் எவ்வளே பொறுமையா அக்கறையா, உங்க அக்கப்பேரை எல்லாம் பொறுத்துண்டு உங்களை நஸியா வீட்டுக்குக் கூட்டிப் போயிருக்கார். அதுவரைக்கும் நீங்க கொடுத்த இன்ஸ்ரக்க்ஷன் எல்லாம் பொறுமையா கேட்டுண்டு வந்துருக்கார். நீங்களும் நாஸியாவும் உள்ள போயி ஒரு மணி நேரம் மொக்கை போட்டதை, எப்படி ரெண்டு பேர் ரங்கமணியும் பொறுத்துண்டாக. இதை எல்லாம் நினைக்க மாட்டிங்களே.

சரி சரி நானும் என் பங்குக்கு ஒரு கேள்வி கேட்டறேன். நாஸியா பிரியாணி சட்டியைப் பார்த்தீங்களா? அக்கா என்ன சமையல் பண்ணிக் கொடுத்தார்கள்.

Nathanjagk said...

நீங்கள் தங்கமணி மஹாசபையில் தலைவியாக இருக்க ​
வேண்டியவர்.
- ரங்க்ஸ் அர்ச்சனை மாலை
- ரங்க்ஸ் அலங்கார கைடுலைன்ஸ் (அல்லது) காஸ்ட்யூம் கன்ட்ரோல்
- ரங்க்ஸ் அட்டாக்கிங் ஸிஸ்டம்
போன்ற தங்கமணிகளுக்குத்​தேவையான உருப்படிகளை,
உங்களால் சிறப்பாக செய்து தரமுடியும் என்று நம்புகிறேன்.

முக்கியமாக, ​ஹேண்ட்பேக்கில் பூரிக்கட்டை, ஸ்கேல், காம்பஸ், கரண்டி இத்யாதிகளை​எப்படி
அமுக்கமாகக் கொண்டு செல்வது போன்ற அட்டாக்கிங் சீக்ரட்களை பகிர்ந்து கொள்ளலாம்.

............. என்னாலயும் முடியல.. ஆராவது காப்பாத்துங்கோ!!

கடைசியில் ரங்கமணி கொடுத்த கோக்-கமண்ட் ஜில்லுனு இருந்துச்சு :))

பை தி பை.. your slapstick is very nice..!

ஹுஸைனம்மா said...

”அர்ச்சனை, அலங்காரம்”

”கோக் சீயஞ்சட்டி...”

அதுக்கு இது சரியாப் போச்சு!! இதத்தான் ஜாடிக்கேத்த மூடின்னு சொல்வாங்க போல!!

ஸாதிகாக்கா & பித்தன் வாக்கு,

இது நம்ம “பிரியாணி நாஸியா” இல்லை. வேற நாஸியா, இல்ல அநன்யா?

வல்லிசிம்ஹன் said...

ஆ கண்டேனே அனன்யாவின் பதிவை:)
அபுதாபியா. அப்ப உங்களைப் பார்க்க நல்ல சான்ஸ் இருக்கு. துபாய் வந்த பிறகு போன் செய்யறேன். ஓகேயா.

Ananya Mahadevan said...

@சித்ரா,
வாங்க, ஆமாம், அதே டேஸ்டுதான். கருத்துக்கு ரொம்ப நன்றி! இந்தாங்க வடையை பிடிங்க!

@அனாமிகா துவாரகன்,
உங்க பேர் ரொம்ப நல்லா இருக்குங்க.வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!

@ஸ்ரீராமண்ணா,
எப்படி இப்படி எல்லாம்? வெரி ஆஃப் தி டூ மச் ஐ ஸே!

@LK,
Its too late LK, இப்போ கண்டிச்சு ஒரு புண்யமும் லேது. :)கருத்துக்கு நன்றி!


@ஆனந்தி,
வாங்க, ரொம்ப நன்றி!
பூரிக்கட்டைக்கு வேலை இல்லையா? சரியாப்போச்சு? லிஃப்டுல தான் போனோம் நாஸியா வீட்டுக்கு.. அப்போ செய்ய வேண்டிய ’சேவைகள்’ எல்லாம் செஞ்சாச்சு. அதுக்குத்தான் முன்னெச்சரிக்கையா பூரிக்கட்டையும் ஸ்கேலும் ஹாண்டுபேக்கில் சரியா இருக்கான்னு பார்த்துண்டேன்னு ஹிண்ட்
குடுத்தேன்..

@கீதா ஆசல்,
வாங்க, வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.”நல்லா சிரிச்சாச்சு” - அதுக்கு தானே எழுதறது! ரொம்ப நன்றி!

@பொற்ஸ்,
வெரி கரெக்டு.. நீ என் கூட சேர்ந்தததுல இருந்தே ரொம்ப தெளிவா பேசுறே. வாழ்த்துக்கள், கீப் இட் அப்!


@தக்குடு,
X-( அதிகப்பிரசங்கி!
எனிவே, பாஸ்ட் இஸ் பாஸ்ட், ஃபர்கெட் இட்!

@நானானி,
வெல்கம் டூ மை ’குடிசை’ ப்ளாக்.
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.
ஆமா, சுவை வைஸ் பார்த்தா UAE தான் எல்லா பெவெரேஜஸ்க்கும் பெஸ்டு. அமெரிக்க கோக் சுவை எப்படீன்னு தெரியாது. ஃபார்முலா மாறுமோ? அருமையான சுவையுடன் இருக்கும். நம்மூர்ல நிறைய டூப்ளிக்கேட் தான் கிடைக்கும்.
//. ஏன் நாங்கெல்லாம் அனுபவிக்கலை// அதானே?

@அண்ணாமலையான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@துபாய்ராஜா,
:) டாங்கீஸ்.. வந்து கருத்து சொன்னதுக்கு! மாமாவை (என்கிட்ட இருந்து) யாராலையும் காப்பாத்த முடியாது.. ஹா.. ஹா... ஹா..

@கீதா மாமி,
எனக்கு அப்போவே தெரியும் இந்த மாதிரி நீங்க கட்சி மாறுவீங்கன்னு. ஏதோ என் வீட்டுக்காரருக்கு ஒரு சப்போர்ட்டா நீங்களாவது இருக்கேளே.. சந்தோஷம்!

@திவா அண்ணா,
வருக, மெஸேஜ் தெரிவிக்கப்பட்டது!விரைவில் ரங்க்ஸுக்கு கான்வக்கேஷன்.

@மஹேஷ்,
பார்த்து, லவ்வு ஓவர்ஃப்ளோ ஆயிடப்போறது! க்ர்ர்ர்... எல்லாரும் இப்பிடியே கட்சி மாறுங்க!

@முகுந்தம்மா,
வாங்க, கருத்துக்கு நன்றீஸ்

@ஜெய்லானி, வாங்க, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, வெண்டிங் மெஷின்ல ஒரு திராம் போட்டுட்டு முக்காவாசி நாள் பட்டனை அமுக்கி பார்த்து பல்பு வாங்குற கேசுங்க நாங்க. ஏகப்பட்ட வாட்டி ஒரு திராம் போயிந்தி, போயே போச்சு தான்! இந்த அழகுல சின்ன கோக்கு தா, பெரிய கோக்கு தான்னு எல்லாம் சொன்னா, மெகா பல்பு தான் கிடைக்கும். ஒரே சைஸ் கோக் தான் வெச்சுண்டு இருக்காங்க.

@ஸ்டார்ஜன்,
வாங்க , வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!

@அ.தங்கமணி,
நீங்க வந்தாத்தான் ப்ளாக் களை கட்டுது!
நன்றீஸ் பா! அடிக்கடி வாங்க!என் ஹாண்டுபேக் கொஞ்சம் அரேபிய பெண்கள் வெச்சுக்கற மாதிரி பெருசு தான். அப்போ தானே சில முக்கியமான் எக்விப்மென்ட்ஸ் எல்லாம் எடுத்துண்டு போகலாம். you never know when you'd need them! :P

// (லோகத்துல எந்த ரங்கமணிக்கு ஆப்பு வெச்சாலும் நம்ம reaction இதான்// இல்லையோ பின்னே?

@ஸாதிகா அக்கா,
கருத்துக்கு மிகவுன் நன்றீஸ். அவரும் என்னை வாருராறே? பரஸ்பரம் வாரிப்போம்.. இதெல்லாம் அரசியல்ல ஜகஜம் தானேக்கா? இதையெல்லம் சொல்லிக்கிட்டு! இங்கே பேசிப்பேசி இப்படித்தான் எனக்கு பேச்சு வர்றது! என்ன பண்ண? மெதுவா மாத்திக்க முயற்சி பண்ணறேன் கேட்டேளா?

@அண்ணாமலை,
வாங்க, வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றீஸ்.

Ananya Mahadevan said...

அனாமிகா,
//OMG//
இதுக்கெல்லாம் டென்ஸன் ஆகக்கூடாதும்மா, ரிலாக்ஸ். புருஷனும் பொண்டாட்டியும் பரஸ்பரம் தப்பு பண்ணும்போது ஒருத்தர் தலையில் ஒருத்தர் குட்டி மற்றவரின் தவறைத் திருத்தறது நாட்டுல புதுசு ஒண்ணும் இல்லையே? என் கேசுல நான் குட்டு தருபவளாகவும் , ரங்ஸ் குட்டு வாங்குபவராகவும் இருப்பது என் குற்றமா? இஹ்கி இஹ்கி!

@பித்தனின் வாக்கு,
இவர் சைட்டு அடிக்கத்தான் வந்தார். இவர் ஒரு ஆம்பிளை கிட்டே உக்காந்து பேசி நான் இதுவரை பார்த்ததில்லை சார். மாமிகள், பெண்கள், பாட்டிகள் இவர்கள் தான் இவர் ஃபேவரைட்!
ஐ தின்க் நீங்க வேற நாஸியாவை சொல்றீங்கன்னு. பிகாஸ் இந்த நாஸியாவுக்கு தமிழ் எழுதப்படிக்கத்தெரியாது!

@ஜகன்,
மிகவும் நன்றீஸ். இவ்ளோ பெரிய கருத்துரை போட்டதுக்கு! ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்.

ஜில்லுன்னு இருக்குமே! டிட் ஃபார் எ டாட்!
க்கும்!

@ஹுஸைன்னம்மா,
கருத்துக்கு நன்றீஸ்!
ஓ ஸாதிகா அக்கா வேற நாஸியான்னு நினைச்சுண்டாங்களா? லேது லேது.. இது வேற நாஸ்! இவள் பேர் நாஸியா ஆஃப்ரீன். தமிழ் எழுதப்படிக்க தெரியாது. தமிழ்ப் பேச்சே மழலையாத்தான் இருக்கும்.
பை தி வே, பிரியாணி நாஸியா ஆராக்கும்?

@வல்லிம்மா,
வாங்கோ வாங்கோ. நீங்கள் ஏற்கன்வே எங்கம்மா பர்த்டே ப்ளாக்போஸ்ட்டுக்கு வந்து இருக்கீங்களே! மறந்துட்டீங்களா?
துபாயா? வாங்க வாங்க..கட்டாயம் மீட்டலாம்!

நாஸியா said...

ஹலோ மைக் டெஸ்டிங் 1 2 3

நாந்தான் அந்த பிரியாணி நாஸியா... எனக்கு தமிழ தவிர வேறொன்னும் தெரியாது தெரியாது தெரியாது கேட்டேளா

vinoveenee said...

ஹாண்டு பேக்கில் வெச்சிருந்த ஸ்கேல் & பூரிக்கட்டை- IDHAI ELAAMAA KONDU PORAAEL?? Naan apadiye shock aayitennn!!! Ungal varnanai miga arumai!! Follower aayaachu !!! Keep up the gud work :)

Related Posts with Thumbnails