Pages

Saturday, May 1, 2010

பிடித்த பாடகர்கள்

உங்க எல்லோருக்குமே தெரியும் என் குலதெய்வம் SPBன்னு. இவருடைய பல பாடல்கள்ன்னா எனக்கு உயிர். மண்ணில் இந்த காதல், அழகான ராட்சசியே, தீண்டாய் இப்படி லிஸ்டு போயிண்டே இருக்கும். இருந்தாலும் ஒரு பாட்டு மட்டுமே போடக்கூடிய சூழல். அதுனால என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்டுன்னு சொல்லக்கூடிய இந்த பாட்டை போட்டுடறேன். ஃபேவரைட் சிங்கர், ஃபேவரைட் ஆக்டர்,  இப்படி எல்லாமா சேர்ந்து அமைஞ்ச பாட்டு தான் நீல வான ஓடையில்... ஆஹா..  கங்கை அமரன் இசைன்னு சமீபமாத்தான் தெரிஞ்சது. கலக்கிட்டார் போங்க.




ஷங்கர் மஹாதேவன். இவர் மிக அருமையான  பாடகர். இருந்தாலும் பாவம் இப்போதெல்லாம் குத்து பாட்டு ஹீரோ இண்ட்ரோ சாங்குக்கு தான் இவரை அணுகுகிறார்கள். அது எனக்கு வருத்தமே. குலதெய்வம் மாதிரி மூச்சு விடாமல் இவர் பாடிய ப்ரெத்லெஸ் என்ற ஆல்பம் கேட்டு வாய்பிளந்தேன். நல்ல ஒரு தனித்துவம் வாய்ந்த குரலின் சொந்தக்காரர். எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் இந்த பாட்டு தான்.




சின்னக்குயில் சித்ராவின் பல பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும். இருந்தாலும் இந்த பாட்டு அவங்க பாடுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டாங்களாம். நந்தனம்ன்னு ஒரு மலையாளப்படம் பாட்டும் அப்படித்தான். இருந்தாலும் இதுல இருக்கற மெலடி எனக்கு ரொம்ப இஷ்டம். நல்ல குரல் வளம், அருமையான பாவம், செழிப்பான இசையறிவு இதெல்லாம் மட்டும் இல்லாம, தன்னடக்கம், எப்போவும் சிரித்த முகம் இதெல்லாம் பார்க்கும்போது இவங்களை பொறாமைப்படாத பெண்களே இருக்க முடியாதுன்னு திட்ட வட்டமா சொல்லலாம். 




சுஜாதா. இவங்க குரல் தேன்ல குழைச்ச பலாச்சுளை மாதிரி அப்படி ஒரு தித்திப்பு. இவங்களும் இதே டைப்பு சிரிச்ச முகம், அருமையான குரல் வளம், இசையறிவு, பாவத்துடன் பாடும் திறன் எல்லாம் படைத்தவர். என்னுடைய பெர்சனல் ஃபேவரைட்” உண்மை சொன்னால் நேசிப்பாயா” என்ற ஆய்த எழுத்து பாடல். இருந்தாலும் இவர் பாடினாலே ஒரு தனி ரிச்னஸ் கிடைத்து விடும் எந்த பாட்டுக்கும். எல்லாத்துக்கும் மேலே சிரிச்சுண்டே பாடுற மாதிரி இருக்கும். கேட்கும்போதே புத்துணர்ச்சி கிடைக்கும்.

 
 



உன்னிக்கிருஷ்ணன் இவர் பாட்டை முதன் முதலா கேட்டது காதலன் படத்தில் தான். கர்நாடக இசையிலிருந்து மிக எளிமையாக சினிமா இசைக்கு வந்து கோலோச்சியவர். காதலன் படத்துல வரும் ’என்னவளே’ பாட்டு சூப்பர் ஹிட் ஆனாலும் சுப்புடு போன்ற இசை விமர்சகர்களிடம் ரொம்ப கெட்ட பேர் வாங்கித்து. கடுமையான விமர்சனத்தால் பாதிப்படையாமல், உன்னி தன் சினிமா பாட்டு வாழ்க்கையும் கர்நாடக சங்கீத வாழ்க்கையும் நன்றாக சமன் செய்தார். அருமையான பாவங்கள், தேர்ந்த தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் இந்த பாடகரின் சொத்து. ஏ.ஆர்.ஆரின் இசையில் இது எப்போதும் நான் விரும்பிக்கேட்கும் பாடல்களின் ஒன்று. சில சமயம் அழுவதுமுண்டு. வைர வரிகளாச்சே!


என்ன தான் ஐஞ்சு பாட்டு தான் போடலாம்னாலும் என்னால இந்த பாட்டு போடாம இருக்க முடியலை. அருமையான இசை, உன்னி பாம்பே ஜெயஸ்ரீ குரலில் குறுந்தொகை மாதிரியான பாடல் வரிகள் ரசிக்காமல் இருக்க முடியாது.



இத்துடன் இந்த பகுதி நிறைவடைந்தாலும் இன்னும் பல பாடகர்கள் பாடல்கள் எனக்கு பிடிக்கும். இந்த் மாதிரி ஐஞ்சே ஐஞ்சு பாடகர்களையும் பாடல்களையும் தொகுத்து வழங்கச்சொன்ன கார்த்திக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :)) இன்னும் விட்டுப்போன உன்னி மேனன், அனுபமா, பாம்பே ஜெயஸ்ரீ, ஷ்ரேயா கோஷல், சோனு நிகாம், ஹரீஷ் ராகவேந்திரா, கே.கே, சுசித்ரா, ரஞ்சித், கவிதா கிருஷ்ணமூர்த்தி, அனுராதா பெளடவால், ஹரிஹரன், கார்த்திக், அநன்யா மஹாதேவன் இவர்களுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?(ஹீ ஹீ இதான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதுன்னு சொல்றது!)

நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது,

பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா
எங்கள் ஸ்ரீராம் அண்ணா
பொற்கொடி
ஜெகன் நாதன்
ட்ரீமர்
பத்மனாபன் அங்கிள் ச்சே ச்சே, அண்ணா
திருமதி கீதா சாம்பசிவம்
அப்பாவி தங்கமணி
R.கோபி

மீண்டும் இதே மாதிரி ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடை & வடை பெறுவது உங்கள் அநன்யா... அநன்யா... அநன்யா............

41 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அருமை அருமை அருமை... எல்லாமே முத்து முத்தான பாடல்கள்... அதிலும் "என்னவளே" எப்பவும் நம்பர் ஒன் தான். பேஷ் பேஷ் கலக்கிட்டேள் போங்கோ... சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டின மேட்டர்ம் சூப்பர் தான் போங்கோ. தொடர் பதிவுக்கு வெத்தல பாக்கு வெச்சதுக்கு மிக்க நன்றி. கண்டிப்பா எழுதறேன்...

மின்மினி RS said...

ரொம்ப அருமையான தேர்வு.. நீங்கள் குறிப்பிட்ட அனைவரையும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

ஹேமா said...

வாவ்...அநன்யா அத்தனயும் முத்து முத்தான பாடல்கள்.தேர்வுகள் அருமையில்ம் அருமை.2 3 தடவைகள் கேட்டுவிட்டேன்.எனக்கும் S.P.B யைப் பிடிக்கும்.ஆனால் இந்தத் தெரிவில் யார் முன்னுக்குன்னே தெரியாம இருக்கு.காலேலயே மயக்கிட்டிங்க அநன்யா.

தக்குடு said...

ம்ம்ம்....

மின்மினி RS said...

ஆமா தமிழ்மண கருவிப்பட்டையே இல்லியே..

Ananya Mahadevan said...

@அப்பாவி தங்கமணி,
கருத்துக்கு நன்றீஸ் அம்மணி, ஆவலா இருக்கேன் உங்க கலெக்‌ஷன் கேட்க.

@மின்மினி,
ஆமாங்க, தமிழ்மணத்துல போடலை. உங்கள் ரசனையும் என்னுடன் ஒத்து போறதே.. மகிழ்ச்சி.

@ஹேமா,
வாங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

@தக்குடு,
டாங்கீஸ்.

Anonymous said...

அந்ன்யாக்கா, உங்கள பத்தி வீட்டில சொன்னேனா? அதுக்கப்புறம், எங்கம்மாவுக்கு பூரிக்கட்டையை எடுக்கும் போதெல்லாம் சிரிப்பு வருதாம். பக்கத்தில இருக்கவங்க என் அம்மாவுக்கு ஏதோ நடந்துடுச்சுனு மாதிரி பார்ப்பாங்களாம். அன்னிக்கொரு நாள் அப்பா ஸ்கேலை வைச்சிட்டு ஏதோ செஞ்சின்டு இருந்தாங்களாம். திடீருனு அம்மா வர, அதை ஒழிச்சு வச்சிட்டாங்களாம். ஏனுன்னு அம்மா கேட்க, உனக்கு தான் உன் பொண்ணு அநன்யாவோட டிப்ஸ் அனுப்பிட்டே இருக்காளேனு சொன்னாராம். வீட்ல சொல்லி சொல்லி சிரிச்சாங்க.

எல் கே said...

என் வேண்டுகோளை ஏற்று தொடர் பதிவு போட்டதுக்கு என் நன்றி ..

அருமையான ஐந்து பாடகர்கள். பாடல்களின் தேர்வு மிக மிக அருமை வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

ஐந்தும் முத்துக்கள். இன்னும் நாலு சேர்த்திருந்தா நவரத்ன மாலையா ஜொலிச்சிருக்கும். பிடியுங்க பாராட்டுக்களை.

Ananya Mahadevan said...

@அனாமிகா,
நான் நினைக்கிறேன் நீங்க கொஞ்சம் ஓவரா சொல்லிட்டீங்கன்னு, ஸ்கேலை ஒளிச்சு வெச்சது எனக்கு ரொம்ப காமெடியா இருக்கு பாவம் உங்க நைனா..
பூரிக்கட்டை எல்லாம் இங்கே ஆண்டாண்டு காலமா வந்துண்டு இருக்கே. இதுக்கு ஒரிஜினல் ஓனர்ஸ் டுபுக்கும் அம்பியும்.
இருந்தாலும் நம்மளைப்பத்தி இவ்ளோ விலாவரியா சொல்லி இருக்கீங்க.. மிக்க நன்றீஸ் அம்மணி. டான்க்யூ!

@எல்.கே,
உன் விதிமுறை தான் விட்டுப்போச்சு. பரவாயில்லை, கொஞ்சம் விரிவடைஞ்சா தப்பில்லையே.. இல்லையா? வசுதேவ குடும்பகம்ன்னு சொல்லி வெச்சு இருக்காங்களே?

sury siva said...

பாட்டெல்லாம் என்னவோ நன்னாத்தான் இருக்கு..
ஆனா தொடர் பதிவுக்கு அழைக்கப்பட்டவா பெயரிலே
தக்குடி பாண்டி பெயர் இல்லையே !!!

இப்படிக்கு,
தக்குடி பாண்டி யின் பரம ரசிகன்

சுப்பு தாத்தா.

sury siva said...

அது என்னது !1
தக்குடு எழுதின கமென்ட்ஸ்க்கு பதில் சொலறப்போ
டாங்கீஸ் அப்படின்னு எழுதிருக்கேள் !!

டா எப்படி உச்சரிக்கிறதுன்னு தெரியல்லையே !!
d யா ?

சுப்பு தாத்தா.

Madumitha said...

நல்ல தேர்வு.
ஆமா.. யேசுதாஸுக்கு
இடமில்லையா?

Ananya Mahadevan said...

அமைதிச்சாரல்,
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

சுப்புத்தாத்தா அவர்களே,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
தக்குடுவை எல்.கே ஆல்ரெடி தொடர் பதிவுக்கு அழைச்சாச்சு. தக்குடு தான் இன்னும் எழுதலையாக்கும். டான்கீஸ்=thanks தாங்கீஸ்ன்னு செல்லமா சொல்றது. சொந்தக்காராளுக்கு மாத்ரம் அப்படி சொல்றது. :) கருத்துக்கு மிக்க நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

அழகான ராட்சசியே

ஆமாம் மிகவும் நல்ல பாடல் எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது

திவாண்ணா said...

இசைன்னா கிலோ என்ன விலைங்க?

தமிழ் உதயம் said...

நீங்க என்ன கூப்பிடல. இருந்தாலும் நீங்க என்ன கூப்பிட்டதா நினைச்சு பதிவு போட்டுறேன்.

உங்க குலதெய்வம் பாடலை நாளெல்லாம் கேட்டுட்டே இருக்கலாம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அருமையான செலக்ஷன் ஷாங்கர் மஹதேவனுக்கு சவால் விடும் அநன்யா மஹாதேவன் பாட்டும் ஒன்னு போட்டு இருக்கலாம்

பத்மநாபன் said...

பாலா , சித்ரா ஷங்கர் மகாதேவன் , சுஜாதா , உன்னி .. எல்லாம் சிறப்பான பாட்டாளர்கள் .. இசைக்கு மொழியேது என்று பலமொழிகளிலும் உங்கள் தேர்வு நல்ல ரசனை ... எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் , புரியும் ....தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி .... ரசனைக்கு பஞ்சமில்லை
தொகுக்க நேரம் ஒதுக்கி விரைவில் வர முயற்சி செய்கிறேன் ..

sury siva said...

//இசைன்னா கிலோ என்ன விலைங்க?//

அது நீங்க ஹோல் ஸேலா வாங்கரேளா இல்லை ரீடைலிலா என்பதைப் பொருத்தது.

மேலும் ஊருக்கு ஊரு தேசத்துக்கு தேசம் வித்தியாசப்படறது.

மூன்றாவது , அது கிலோ கணக்கில் இல்லை. இங்கே தோஹாவிலே எல்லாம் லிட்டர் அளவிலே தான்
தரா.
தக்குடி பாண்டி ஸார்ட்ட சொல்லட்டுமா
உங்களுக்கு ஒரு 10 லிட்டர் வாங்கிண்டு வருவார்.

சு. ர.

கே. பி. ஜனா... said...

இசையாக இனித்தது பதிவு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///இன்னும் விட்டுப்போன உன்னி மேனன், அனுபமா, பாம்பே ஜெயஸ்ரீ, ஷ்ரேயா கோஷல், சோனு நிகாம், ஹரீஷ் ராகவேந்திரா, கே.கே, சுசித்ரா, ரஞ்சித், கவிதா கிருஷ்ணமூர்த்தி, அனுராதா பெளடவால், ஹரிஹரன், கார்த்திக், அநன்யா மஹாதேவன் இவர்களுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?(ஹீ ஹீ இதான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதுன்னு சொல்றது!)///

அன்னக்கே நினைச்சேன், நீங்க நல்லா பாடுவீங்கன்னு ஜெயலக்ஷ்மி மிஸ் பதிவிலே சொல்லிருந்தீங்க..

///@ஸ்டார்ஜன்,
நானும் பாடி இருக்கேன் அஸெம்ப்ளில. அப்போ சேஃபா பாடக்கூடிய ஒரிரண்டு பாட்டு இருந்தது. ராஜாதி ராஜா படத்துல இருந்து மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாடி இருக்கேன். இன்னும் ஒண்ணு ரெண்டு பாட்டு. நினைவில்லை. ///

இப்போ பிடித்த பாடகர் லிஸ்ட்டா.. நடக்கட்டும் நடக்கட்டும்.

வாழ்த்துக்கள் பின்னணி பாடகி அநன்யா வாழ்க வாழ்க...

அருமையான தேர்வு..

geethasmbsvm6 said...

//தக்குடி பாண்டி ஸார்ட்ட சொல்லட்டுமா
உங்களுக்கு ஒரு 10 லிட்டர் வாங்கிண்டு வருவார்.//

வேண்டாம், வேண்டாம், ஏற்கெனவே அவன் அளந்து கொட்டிண்டு இருக்கான், இதுவேறேயாட்டேளா??

அநன்யா அக்கா, நானும் அளந்தோ நிறுத்தோதான் போடணும்ட்டேளா??

Nathanjagk said...

பிடித்த பாடகர்கள்...
என்னைப் பொறுத்தவரையில் நம் இசையறிவுக்கு (அ) ரசனைக்கு நாம் ​வைக்கும் பலத்த பரீட்சை (அ) பலப்பரீட்சை என்று தோன்றுகிறது.

சிலர் பொத்தாம் பொதுவாக 'எனக்கு அந்தப்பாட்டுன்னா உயிரு' என்பார்கள். கொஞ்சம் ஆழமாக அதை அணுகினால் ​தெரியும். அவர்கள் ரசித்தது பாடல்வரிகளாக இருக்கும்.

நம்மைக் கவர்ந்தது பாட்டின்​மொழி வடிவம் என்றாலும் அதை நல்லப்பாட்டு என்று வகைப்படுத்தி இசைஇயக்குநர், பாடகர் மற்றும் பின்னணிஇசை என அனைத்துக்கும் ​ஷொட்டு கொடுத்துவிடுகிறோம்.

இதெல்லாம் ஏன் இங்கே உளறிக்கிட்டு இருக்கே.. கம்முனு 5 பேரை எழுதிட்டு போகாம... அதுவும் சரிதான்
பட்...
இசை பற்றிய விஷயமாதலால்.. மிகவும் பிடித்த விஷயமாதலால்.. 3 அண்ணன்கள் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்கும் முஸ்தீபுகளோடு களம் இறங்க வேண்டியதாயிருக்கிறது.

நீங்கள் சுட்டிக்காட்டிய பாடல்கள், பாடகர்கள் அருமை.
ஷங்கர் மஹாதேவனின் ப்ரெத்லெஸ் ஆல்பம் அறிமுகத்திற்கு நன்றி..!

கேட்டப் பாடகர்களைவிட கேட்காத பாடகிதான் சுவாரஸ்யமா இருப்பார் ​போலிருக்கே:))

தொடர்பதிவு அழைப்புக்கு நன்றி அநன்யாஜி!

Chitra said...

very good! nice songs too.

Unknown said...

Nice post.... Even though "Thaththithom" is my favourite, Nandhanam's "Kaarmugil Varnande Chundil..." would have been better in this post. Don't underestimate the audiences that they might not enjoy a Malayalam song.

தக்குடு said...

//இப்படிக்கு,
தக்குடி பாண்டி யின் பரம ரசிகன்// ippaveyy kannai kattutheyy...;)thks subbu thatha..:)

//தக்குடு தான் இன்னும் எழுதலையாக்கும்.// this friday i will post that post only...:)

//அழகான ராட்சசியே

ஆமாம் மிகவும் நல்ல பாடல் எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது// TRC mama, mikavum rasiththen..:)

//அநன்யா மஹாதேவன் பாட்டும் ஒன்னு போட்டு இருக்கலாம்// aiyooo, apparam cine fieldla irukkara yella singersum field out aayiduvaa..:) ananya madam voice avloo sweeeet....:)

ஸ்ரீராம். said...

எல்லாமே தரமான தெரிவுகள்

கார்த்திக் கிட்ட சொன்னா மாதிரி அஞ்சுல அடக்க முடியாது இதை எல்லாம்..! நீங்களும் சொல்லிட்டீங்க...
ஜெகன் சொன்ன கருத்தும் ஏற்புடையதே...!
எழுதினவங்களைப் பார்த்துக் குறை சொல்றதும்,கமெண்ட் அடிக்கறதும் ஈஸி. நம்மளையே எழுதச் சொல்லிட்டா கஷ்டம்தான்!! 'எங்களையும்' கூப்பிட்டதுக்கு நன்றி. விரைவில் முயற்சிக்கிறோம்...

Kanchana Radhakrishnan said...

அருமையான தேர்வு.

பாச மலர் / Paasa Malar said...

கலக்கல் பாட்டுகள்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

@ தக்குடு
ஆனாலும் உங்க திறமைய என்னால பாராட்டாம இருக்க முடியல மிஸ்டர். தக்குடு. யு சி, துப்பாக்கி முனைல சுப்பு தத்தாவ பாராட்டி கமெண்ட் போட வெச்சுட்டு இப்ப ஒண்ணும் தெரியாத மாதிரி வந்து தன்னடக்க கமெண்ட் போடறீங்களே... உங்க நடிப்பு திறமைய பாத்து நேக்கு ஆனந்த கண்ணீரே வர்றது.....

Ananya Mahadevan said...

@TRC அவர்களே,
மிகவும் அருமையான பாட்டு. என்னுடைய பல்லாயிரக்கணக்கான ஃபேவரைட்ஸில் இது ரொம்ப முக்கியம் வாய்ந்தது. கருத்துக்கு நன்றி. //அருமையான செலக்ஷன் ஷாங்கர் மஹதேவனுக்கு சவால் விடும் அநன்யா மஹாதேவன் பாட்டும் ஒன்னு போட்டு இருக்கலாம்// ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி? ஏதோ பத்து பேர் படிக்கறா என் ப்ளாக். அதையும் இல்லாம பண்றதுக்கு தானே? :P

@தமிழ் உதயம்,
கட்டாயம் போடுங்க. எனக்கு உங்களை தெரியாதே. அதான் கூப்பிடலை. பதிவு போட்டுட்டு இங்கே வந்து லின்க் குடுக்கணும். தொடர் பதிவு விதிமுறை எல்லாம் உங்களுக்கு தெரியும் இல்லையா?

@திவா அண்ணா,
இசை கிலோ என்ன விலைன்னு எனக்கு தெரியாது. ஏதோ சினிமா பாட்டு மட்டும் ரொம்ப விரும்பி கேக்கறது. பாத்ரூம்ல பாடுறது. அவ்வளவே.

@பத்மநாபன் அண்ணா,
சீக்கிரம் போடுங்க. படிக்க ஆவலா இருக்கேன். கருத்துக்கு நன்றி.

@சுப்புத்தாத்தா அவர்களே,
அதென்ன தோஹாவில லிட்டர் கணக்குல விக்கறாளா? ஆச்சரியமா இருக்கே?

@ஜனார்த்தனன் அவர்களே,
வருக்கைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி

@ஸ்டார்ஜன்,
நல்லா எல்லாம் பாடத்தெரியாது. இசை பயிற்சி இல்லை. சும்மா அப்டியே பாடுறது தான். பின்னணி பாடகியா.. ஹய்யோ ஹய்யோ, சூப்பர் சிங்கர் எல்லாம் பார்த்துட்டு நான் கப்சிப் ஆயிட்டேன். நானெல்லாம் முட்டை மார்க்கு தான் வாங்குவேன் அதுல போனா.. நீங்க வேற.

@மாத்தா கீத்தானந்த மயி,
நீங்க எப்புடி போட்டாலும் போஸ்டு சூப்பர் டூப்பர் ஹிட்டு தான்.. ஏன்னா உங்க செலக்ஷன் அப்படி.. ஹீ ஹீ.. ஜெய் ஜெய் மாத்தா.. ஜெய் ஸ்ரீ மாத்தா..

@ஜெகன்,
இது பாடகர்களைப்பற்றிய பதிவு. ஒன்லி சிங்கர்ஸ். பாட்டோ, லிரிக்ஸோ, இசையோ அல்ல.
// 3 அண்ணன்கள் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்கும் முஸ்தீபுகளோடு களம் இறங்க வேண்டியதாயிருக்கிறது. //
ஹா ஹா.. ரசனை ...
ஆமாம் ஷங்கர் மஹாதேவனின் ப்ரெத்லெஸ் கேளுங்க. யூடியூப்ல இருக்கு. சூப்பரா இருக்கும்

@சித்ரா,
ரொம்ப நன்றிங்க.

@மஹேஷ்,
கார்முகில் வர்ணண்டே சுண்டில் நல்லா இருக்கும். ஆனா வெறும் ஸ்தாயி எனப்படும் பிட்ச் வேரியேஷனுக்காக அந்த பாட்டை தேர்வு செய்வதை விட கஷ்டமான ஸ்வரங்களை மூச்சு கண்ட்ரோல் பண்ணி அனாயாசமாக பாடி இருப்பது என்னை வெகுவாக கவர்கின்றது. அதான் அதை விட இதை விரும்பினேன். மற்ற மொழி விரும்பறதும் விரும்பாததும் இல்லை கேள்வி. எனக்கு எது ரொம்ப பிடிக்கும்ங்கறது தான் கேள்வி. நேரம் இருந்தா நீயும் எழுதலாமே.

@தக்குடு,
உன் ரசிகர்கள் அதிகரிச்சுட்டாங்க பா.. உன் போஸ்டுக்கு காத்துண்டு இருக்கேன்.
//aiyooo, apparam cine fieldla irukkara yella singersum field out aayiduvaa..:) ananya madam voice avloo sweeeet....:)//
உன் லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா தக்குடு?

@ஸ்ரீராம் அண்ணா,
சீக்கிரம் போடுங்க. ’உங்கள்’ கலெக்‌ஷெனையும் கேட்க ஆவல்.

@காஞ்சனா மேடம்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

@பாசமலர்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அருமையான தளம் உங்களுடையது. மதுரையைப்பற்றி இத்தனை விஷயங்களா? சூப்பர்.

Asiya Omar said...

நல்ல தேர்வு,பாட்டுக்களை திரும்ப அசை போட வைத்து விட்டீர்கள்.எல்லாமே பிடித்த பாடல்கள்.

Ananya Mahadevan said...

ஆசியா அக்கா,
வருகைக்கும் கருத்துக்கும் டான்க்ஸ்!

சிநேகிதன் அக்பர் said...

தேர்வுகள் மிக அருமை.

ஹுஸைனம்மா said...

அநன்யா, நல்ல பாடல்/பாடகர்கள் தேர்வுகள்.

கீழே உள்ள லிஸ்ட்ல நித்யஸ்ரீ மஹாதேவனைச் சேக்கலியே ஏம்ப்பா? ”சித்தி” தொடரின் “கண்ணின் மணி”யும், ஜீன்ஸ்ல “கண்ணோடு காண்பதெல்லாம்” ரெண்டும் என்னோட ஃபேவரைட்ஸாக்கும்!!

Ananya Mahadevan said...

@அக்பர்,
மிக்க நன்றிங்க.

@ஹூஸைனம்மா,
நித்யஸ்ரீயுடைய எல்லாப் பாட்டுமே எனக்கு பயங்கர ஃபேவரைட். முக்கியமா, சாமுராய்ங்கர படத்துல வரும் ஒரு நதி ஒரு பெளர்னமி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில இந்த பாட்டு ரொம்ப வித்தியாசமா இருக்கும். அதான் சொல்லிட்டேனே, என் லிஸ்டு ரொம்ப பெருசுப்பா.. கடல் தண்ணியை கையில பிடிக்க சொன்னா என்ன பண்ண முடியும். இன்னும் ஜானகி அம்மாவை விட்டுட்டேன். வாணி ஜெயராம்? ஒரு சின்ன அசைவு கூட இல்லாம சிலை மாதிரி நின்னு பாடுவாங்க. கொஞ்சம் கூட ஓவராக்‌ஷன் பண்ணாம பாடும் பாடகிகள் இவங்க ரெண்டு பேரும். எனிவே.. இந்த மாதிரி இசைப்பதிவுகள் அடிக்கடி போடணும். ஏதாவது ஒரு தலைப்பு வந்துண்டே இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

அநன்யா நானும் பாலா ஃபேன் அய்யோட மேலே சுத்துமே அந்த ஃபேனில்ல ஓகே.

பாலா குரலில் அத்தனை கம்பீரம். எனக்கு மிக பிடிக்கும் பாடல்தேர்வுகள் அருமை.

10 முறை வந்துட்டேன் ஆனா உங்க பிளாக் ஓப்பனாக மறுக்கிறது. நிறைய வீடியோக்கல் ஆட் செய்த லோட் ஆக லேட்டாகுமுன்னு கேள்வீஈஈஈஈஈஈஈஈஈஈ

malar said...

அசதீட்டீங்க....

R.Gopi said...

Vidaiyodu VADAIyum petra ungal saamarthiyam super...

DREAMER said...

இந்தியாவில் இந்தக் கோடைக்காலத்தை தணிக்க, நமது வலையுலகில், தொடர்பதிவு சீசன் (டிசம்பர் சங்கீத சீசன் மாதிரி) சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அருமையான பாடல்கள், அருமையான குரலாளர்கள்..!

பதிவைத் தொடர அழைத்ததற்கு மிக்க நன்றிங்க..! சீக்கிரம் எழுதுறேன்..!

-
DREAMER

Related Posts with Thumbnails