Pages

Tuesday, May 4, 2010

துபாயில் ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம்



போன திங்கள் கிழமை தான் ஹூஸைனம்மா கூப்பிட்டு ஸாதிகா அக்கா துபாய் வந்திருப்பதாக சொன்னாங்க. எல்லாரையும் சந்திக்க ஆவலா இருக்கறதா சொன்னாங்க. வியாழன் மீட் பண்ணலாம்ன்னு ஒரு பேச்சு இருக்கறதா சொன்னாங்க.  நான் ப்ளாகுலகத்துக்கு புதுசு. எனக்கு இங்கே யாரையும் தெரியாதே. அதுனால எல்லாரையும் சந்திச்சு பரிச்சயப்பட்டுக்கலாம்ன்னு நினைச்சேன்.

ஆனா பாருங்க ரங்குவுக்கு ஏதோ மீட் அன்னிக்கி. ஸோ, சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவார்ன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு, நான் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். ஹூஸைன்னம்மா ரொம்ப பெருந்தன்மையா பிக்கப் பண்ணி ஷார்ஜாவில ட்ராப் பண்றேன்னு சொன்னாங்க. சரி பார்க்கலாம்ன்னு சொல்லி இருந்தேன்.அதுக்குள்ளே ரெண்டு மூணு கெஸ்டு வராப்ல எல்லாம் சொல்லி இருந்தாங்க. அப்படியே வேலையில மூழ்கிட்டேன். புதன் அன்னிக்கு ரங்கு கிட்டே விஷயத்தை சொன்னப்போ, துபாய் தானே? கூட்டிண்டு போறேன்னு சொல்லிட்டார். எனக்கு ஒரே குஷி.

புதன் அன்னிக்கு வல்லிம்மா ஜிங்குன்னு துபாய் வந்துட்டாங்க. அவங்க கிட்டே பேசினப்போ உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே தித்திப்பா இருந்தது. அழகா அன்பா அவங்க பேச்சு ரொம்ப ரிஃப்ரெஷிங்கா இருந்தது. எப்[படியும் இவங்களையும் இந்த மீட்ல சேர்த்துக்கணும்ன்னு ஹூஸைனம்மா கிட்டே தெரியப்படுத்தினேன். உடனே எல்லாரும் மெயில் மூலமா கோஆர்டினேட் செஞ்சு, பேசி, டேட், டைம், லொக்கேஷன் எல்லாம் ஃபைனலைஸ் பண்ணி ஹூஸைனம்மா தெரிவிச்சாங்க. நாங்களே வல்லிம்மாவை பிக்கப் பண்ணி மீட்டிங்குக்கு அப்புறமா ட்ராப் பண்றதா ஏற்பாடு. 7.30 ஆகும்ன்னு சொல்லி இருந்தேன்.

முதன் முறையா ப்ளாக் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் சில இணைய தோழிகளை சந்திக்கப்போறோம்ன்னு எனக்கு ரொம்ப குதூகலமா இருந்தது. இல்லையோ பின்னே? இங்கே வந்ததுக்கப்புறம் எனக்குன்னு இருக்கறது ஒரு சின்ன வட்டம் தானே. அதை விரிவு படுத்திய ஹூஸைன்னம்மாவுக்கு பல நன்றிகள்.

வியாழக்கிழமை சாயந்திரம் எப்போ வரும்ன்னு ஒரே ஆவலா இருந்தது. ப்ளாக்கர்ஸ் மீட்டுக்கப்புறமா நாங்க ரெண்டு பேரும் நேரே ஷார்ஜா போறதா ப்ளான். ரங்கு 5.30க்கு வரேன்னு சொல்லி இருந்தார். நான் 5 மணிக்கே ரெடி. துணிஎல்லாம் எடுத்து வெச்சுண்டு காத்துண்டு இருந்தேன். ரங்கு வழக்கம் போல 6.15க்கு வந்தார். அவர் அன்னிக்கு கார்த்தால 6 மணிக்கே கிளம்பி போனதுனால ரொம்ப களைப்பா இருந்தார். அதுனால போனாப்போகட்டும்ன்னு ட்ரெஸ் சேஞ்சுக்கு பெர்மிஷன் குடுத்தேன். ஒரு டம்ளர் ஜூஸ் குடிச்சுட்டு ஜிங்குன்னு கார் ஆக்ஸிலரேட்டரை அழுத்த, கார் ஆன்ந்தமா பறந்தது. முதல்ல எல்லாம் பேசிண்டே போனோம். போகப்போக ட்ராஃபிக் வேலையக்காட்ட ஆரம்பிச்சது. ஜபலாலி வந்தப்போ, மெதுவா ரங்குவை பிறாண்ட ஆரம்பிச்சேன். பின்னே, ரொம்பவே மெதுவா போக ஆரம்பிச்சது. 7.15 ஆயிடுத்து அப்போவும் நாங்க ஷேக் ஸாயத் ரோட்டில் தான் ஊர்ந்துண்டு இருந்தோம்.

வல்லிம்மா 9 மணிக்கு படுத்துக்கறவங்க.ரொம்ப லேட் ஆகிடுத்துங்கறதுனால அவங்களுக்கு அசெளகரியமா இருக்குமே. அதுனால அவங்களை மீட்டுக்கு கூட்டிண்டு போகாட்டியும் அட்லீஸ்டு பார்க்கணும்ன்னு எனக்கு ஒரே ஆவல். 8 மணிக்கு மக்தூம் பக்கத்துல இருக்கற அவங்க பில்டிங் வாசலுக்கு போனப்போ படபடப்பா இருந்தது. இதுக்குள்ளே ஹூஸைனம்மா அங்கே குரூப்பை குழுமப்படுத்திட்டாங்க. வல்லிம்மா கீழே இறங்கி வந்தாங்க. ரங்கு கார் பார்க்கிங் கிடைக்காம எமர்ஜென்ஸி போட்டுண்டு காத்திருக்க, நான் ஓடியே போய் வல்லிம்மாவை பார்த்து கட்டிண்டு அவங்க பொழிஞ்ச அன்பு மழையில நனைஞ்சேன். சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவங்களை பிரிய மனசே இல்லை. அவங்களை அபுதாபிக்கு அழைச்சுட்டு டைம் ஆயிடுத்துன்னு கிளம்பினேன். ஒரு தாயிடம் கிடைக்கும் அன்பும் ஆதுரமும் அவங்க கிட்டே கிடைச்சதுன்னா,  அது மிகையில்லை.

ஐஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்னு சொன்னேன் ஹூஸைனம்மா கிட்டே.அவசர அவசரமா ரங்கு ஓட்டினாலும் க்ளாக்டவர் கிட்டே நல்ல ட்ராஃபிக். ஆனா முன்னைக்கு இப்போ துபாய்ல ட்ராஃபிக் ரொம்பவுமே குறைஞ்சிருக்கு. அப்படி இப்படி புகுந்து லுலு கிட்ட வந்தப்போ ஹூஸைனம்மா கோசம் காத்துண்டு இருந்தேன். ரங்குவை கழட்டி விட்டுட்டுடலாம்ன்னு பார்த்தா என்கிட்டே வந்து நின்னுண்டே இருக்கார். க்ர்ர்.. அப்புறம் ஒரு பத்து நிமிஷம் காத்திருந்ததுக்கப்புறம் ஹூஸைனம்மா வேர்த்து விறுவிறுத்துண்டு வந்தாங்க. அந்த இடத்துல என்னமோ குழப்பம். எனக்கு அதெல்லாம் சந்தோஷத்துல பிடிபடலை! பின்னே? எல்லாரையும் பார்த்துட்டு ஒரே சிரிப்பு சந்தோஷம். நிறைய பேர் பர்தா போட்டுண்டு இருந்ததுனால எனக்கு யார் யார்ன்னு தெரிஞ்சுக்கவே ஒரு 45 நிமிஷம் ஆச்சு.

வாயெல்லாம் 32முமாய் ஓடிப்போய் ஒரு பெண்ணைப்பிடித்தேன். இவங்க தான் ஜலீலான்னு யாரோ திரியை கொளுத்திபோட, கெக்கே பிக்கேன்னு ஒரு 10 வரி அவங்க ப்ளாக் பத்தி புகழ்ந்து பேசினேன். அவங்க திருதிருன்னு முழிச்சாங்க. அப்புறம் அந்த ’எட்டப்பி’ யாருன்னு தேடினேன். யார்ன்னு தெரியல. எட்டப்பியா என்ன சொல்றீங்கன்னு தானே கேக்கறீங்க? ஏன்னா இவங்க தான் ஜலீலாக்கான்னு காட்டப்பட்டது ஜலீலா இல்லையாம். சும்மாங்காச்சுக்கும் யாரோ சொல்லி இருக்காங்க. அவங்க ஆஸியாவாம். கஷ்டம்.வந்த உடனே ’அநன்யா ட்ரேட்மார்க் பல்பு’ வாங்கியாச்சு. இதே தானே வேலையா அலையுறேன். ‘சந்தோஸமா’ன்னு கஞ்சா கருப்பு மாதிரி கேட்டுண்டே அடுத்த ஆளை பரிச்சயப்படுத்திண்டேன்.

நான் யாருன்னு சொல்லுங்கன்னு ஒரு பெண் ரொம்ப அன்பா கையைப்பிடிச்சுண்டு கேட்டப்போ சத்தியமா தெரியாதுன்னு சொன்னேன். இல்லை உங்களுக்கு தெரியும். உங்க ப்ளாக் வந்திருக்கேன்னு சொன்னப்போ நாம் மறுபடியும் பழம் சாப்பிட்டேன்.  அவங்க ஸாதிகா அக்கா. ரொம்ப அழகு, வல்லிமா மாதிரியே ஒரு கருணையான கண்கள், சிரித்த முகம்.

ஹலோன்னு சொல்லி மலர் கை குடுத்தாங்க. இவங்க நம்ம ப்ளாக் வந்திருக்காங்கன்னு நினைச்சு புக்மார்க் பண்ணிண்டேன்.

பிரியாணி நாஸியா அறுந்த வாலு போல இருக்கு. சிரிச்சுண்டே ரொம்ப ஜாலியா பேசினாங்க. ஜலீலா அக்கா பயங்கர காஷுவல்.பொறுமையா ஏகப்பட்ட ஐட்டம்ஸ் பண்ணி சாப்பிட எடுத்துண்டு வந்திருக்காங்க.
மொத்த குரூப்பையும் ஆசுவாசப்படுத்திண்டு இருந்தாங்க. இடைக்கி அப்பப்போ வந்து  என்னையும் கவனிச்சுண்டாங்க. அவங்க அன்புல திக்கு முக்காடி போயிட்டேன். அந்த செயல்ல நம்ம நாட்டு விருந்தோம்பல் தான் தெரிஞ்சது.

(எனக்கும் தோணிச்சு, ஒரு க்ரூப் மீட்ன்னா, கண்டிப்பா ஏதாவது ’இன்புட்ஸ்’ இருக்கணுமே.  நானும் ஏதாவது பண்ணி எடுத்துண்டு போய் இருப்பேன். அன்னைக்கு ஃபுல்லா செம்ம தலைவலி, அதான் வெறுங்கையோடு போயிட்டேன்)

திருமதி மனோ சுவாமினாதனை பார்த்தது பெரும் பாக்கியம் தான். எவ்ளோ இன்ஃபர்மேஷன். நான் நினைக்கறேன் இவங்க விக்கிப்பீடியா மாதிரி மனோபீடியான்னு ஒரு சைட் ஆரம்பிக்கலாம். மல்டி ஃபேஸட்ட் பெண்மணி. ஏகப்பட்ட திறமைகளை வெச்சுண்டு இருக்காங்க.

ஹூஸைனம்மா எல்லாரையும் பத்து வாட்டிக்கு மேல காட்டிக்குடுத்தப்போ தான் எல்லாரையும் ஓரளவுக்கு அடையாளம் தெரிஞ்சது.

நம்ம காமெடி ஃப்ரீக்வென்ஸி வேவ்லெங்க்துக்கு ரொம்ப சூப்பரா ஒத்து போனது மலிக்கா தான். ஊசிப்பட்டாசு மாதிரி ஒரே பேச்சு.. சிரிப்பு.

சுந்தராங்கர பதிவரை தான் சந்திக்க முடியல. அடுத்த வாட்டி எப்படியும் மீட்டிடுவோம்ல?

நீங்க கமெண்டுக்கு பதில் போடவே மாட்டேங்கிறீங்கன்னு மலர் என்னை சாடினாங்க. உண்மைதான். நான் ரொம்ப டிலே பண்றேன். பதிவு போடுறதுல இருக்குற சுறுசுறுப்பு கமெண்ட்ஸுக்கு ரெஸ்பாண்டு பண்றதுல இருக்க மாட்டேங்கறது. ஹ்ம்ம்.. பாயிண்டு நோட்டட் மேடம்.

அப்படியே டெம்ப்ளேட்ஸ், போஸ்ட்ஸ், அவார்ட்ஸ் & ரிகக்னிஷன்ஸ் இதைப்பத்தி எல்லாம் ஒரு பத்து நிமிஷம் விவாதிச்சோம். (பின்னே ப்ளாக்கர்ஸ் மீட்னா டெக்னிக்கலா ஏதாவது பேச வேண்டாமா?ஹீ ஹீ, மேற்கொண்டு விவரம் அறிய மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்கி நம்ம ஹூஸைன்னம்மாவை கேட்கவும்.)

ஆஸியாக்கா வந்ததுல இருந்து ஒரே டென்ஷன். அதுனால சீக்கிரம் கிளம்பிட்டாங்க. எல்லாரும் அந்த கனோபிக்குள்ளே உக்காண்டு பேசலாம்ன்னு செட்டில் ஆறதுக்குள்ளே நம்ம ரங்ஸ்”ஆச்சாம்மா”ன்னு ஃபோன் பண்ணிட்டார். ”இருங்கோன்னா, இப்போத்தான் எனக்கு முகங்கள் அடையாளம்  தெரிஞ்சு இருக்கு இனிமேத்தான் பேச ஆரம்பிக்கணும்”ன்னு சொல்லிட்டு திரும்பினா எல்லாரும் கொல்லுன்னு சிரிக்கறாங்க. ரெம்ம்ப வெக்கமா போச்சு

யாரும் யாரையும் அக்கான்னு கூப்பிடக்கூடாதுன்னு ஒரு நடுவுநிலையுடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்புறம் அவங்க சமைச்சு கொண்டு வந்ததெல்லாம் சுடச்சுட சேல்ஸ் ஆச்சு. நானும் வேக வெச்ச வேர்க்கடலையும் சுவையான மசால் வடையும் சாப்பிட்டேன். ”அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?” வருந்தி வருந்தி ஜலீலாக்கா பண்ணின உபச்சாரத்துல அசந்துட்டேன்.

இப்பிடியா சிரிச்சு சிரிச்சு பேசிண்டு இருக்கும்போதே ரங்கு ஃபோன் பண்ணியாச்சு. 9.53ன்னு பாழாப்போன மொபைல் மணி காட்ட ஒரே பதபதைப்பு. மனசே இல்லாமல் பிரிஞ்சேன். அந்த சிரிப்பும் கும்மாளமும் இன்னும் மனசுக்குள் எதிரொலிச்சுண்டு இருக்கு. காருக்குள்ளே ரங்கு அரைத்தூக்கத்துல உக்காந்து இருந்தார். பாவம் அவருக்கும் பசிச்சு இருக்குமே.

மறக்கமுடியாத இந்த சந்திப்பை ஏற்படுத்தித் தந்த ரங்குவுக்கும், இதை கோ-ஆர்டினேட் செய்த ஹூஸைனம்மாவுக்கும், மூல காரணமான ஸாதிகா அக்காவுக்கும் பலப்பல நன்றீஸ். இல்லாட்டி இங்கே நான் பாலைவன ஒட்டகமாகவே இருந்திருப்பேனே. பின்னே எத்தனை நாளைக்கு தான் கிணற்றுத்தவளைன்னு சொல்லிண்டு இருக்க? அதான் ஒரு சேஞ்சுக்கு. ஹீ ஹீ!

43 comments:

Geetha Sambasivam said...

அது சரி, வல்லி மீட்டிங்குக்கு வந்தாங்களா இல்லையா?? வரலையா??? நல்லா இருந்திருக்கு மீட்டிங். போன வருஷம் இங்கேயும் ஒரு சின்ன குழுக் கூடினோம். கவிநயா, தி.வா.மெளலி, திராச சார், வல்லி எல்லாரும் வந்தாங்க, அம்பத்தூருக்கு, இந்த வருஷம் அதை நினைச்சுட்டு இருந்தேன். அடிக்கடி சந்திங்க, தொடர்பிலே இருந்து, அங்கே உள்ள செய்திகளைப் பகிர்ந்துக்குங்க. நல்லா இருக்கு, கொஞ்சம் ஓவரா எல்லார் கிட்டேயும் அசடு வழிஞ்சாலும், (ஹிஹி, வழிய வச்சுட்டாங்க! )
ம்ஹும், முதல்லே யாரோ எழுதினதுனு நினைச்சுட்டேன் ட்டேளா??

ஹுஸைனம்மா said...

யாராவது வந்து இதில எட்த்ஹை ஹுஸைனம்மான்னு போட்டி வைக்கப் போறாங்க பாருங்க!!

//ஒரு பத்து நிமிஷம் காத்திருந்ததுக்கப்புறம் ஹூஸைனம்மா வேர்த்து விறுவிறுத்து//

பத்து நிமிஷம் ஆச்சா? சாரிப்பா, நான் வழி மிஸ் பண்ணதால், சுத்தி வந்தேன், அதான் லேட்!!

//எனக்கு யார் யார்ன்னு தெரிஞ்சுக்கவே ஒரு 45 நிமிஷம் ஆச்சு.//

தெரிஞ்சதும் கிளம்பிப் போயிட்டீங்களே!!

//இவங்க தான் ஜலீலான்னு யாரோ திரியை கொளுத்திபோட//

மலிக்காதானே அது??

/வல்லிமா மாதிரியே ஒரு கருணையான கண்கள், சிரித்த முகம்./

ஸாதிகா அக்காவும் பாட்டின்னு சொல்றீங்க, அதானே!!

/விக்கிப்பீடியா மாதிரி மனோபீடியா//

இந்த ஐடியா நல்லா இருக்கே!! அவங்க அவ்வளவு அனுபவசாலியும்கூட!!

//டெம்ப்ளேட்ஸ், போஸ்ட்ஸ், அவார்ட்ஸ் & ரிகக்னிஷன்ஸ் இதைப்பத்தி எல்லாம் ஒரு பத்து நிமிஷம் விவாதிச்சோம்//

இது எப்போ, நான் சாப்பிட்டுடு இருக்கும்போதா? எனக்குத் தெரியாம என்னன்னவோ பண்ணிருக்கீங்க.

//மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்கி நம்ம ஹூஸைன்னம்மாவை கேட்கவும்//
அவ்வ்வ்... என்ன சாப்பாடு ஐட்டம்ஸ்னு வேணா லிஸ்ட் சொல்றேன்!!

நாஸியா said...

அறுந்த வாலா? ஹிஹி... நான் அன்னைக்கு வால சுருட்டிலோ வெச்சிருந்தேன்! ஹிஹி.. அநன்யா, உண்மையா அன்னைக்கு நானு ஏதோ ஒரு களைப்புல ரொம்ப அமைதியா இருந்தேன்.. ஃபார்ம்ல இருந்திருந்தா ஒரு வேளை அறுந்த க்ரேட் வால் ஆஃப் துபாய்ன்னு சொல்லிருப்பீங்களோ

Jaleela Kamal said...

ஹ ஹாஅப்ப எத்தனை நாள் இங்கு வந்து கமெண்ட் போட முடியாமல் திரும்பினேன். நான் தானே சொன்னேன் டெம்ப்லேட் மாற்ற சொல்லி அத சொல்லலையே, ம்ம்ம் தெரியுது தலை கொட்டிண்டு அசடு வழியரது, பாலை வன ஒட்டகத்தில் சோலை வன பதிவு ஜூப்பரு,

அப்ப பிளாக் இப்ப தான் கண்ணுக்கு குளிர்சியா இருக்கு,

ஹுஸைனம்மா said...

வல்லிம்மாவைக் கண்டிப்பா பார்த்துடணும், இறைவன் நாடினால். சுந்தராக்காகிட்டயும் சொன்னேன்.

Madhavan Srinivasagopalan said...

94 posts.. 85 followers...

நீங்க பதிவுலகத்துக்குப் புதுசா..? கதை விடாதீங்க..

எல் கே said...

//நான் தானே சொன்னேன் டெம்ப்லேட் மாற்ற சொல்லி அத சொல்லலையே, /
adhuku munnadiye adiyen solliten :)

@geetha

paati intha varusam oru meet potralama sollunga

சுந்தரா said...

நேர்லயே கலந்துகிட்ட ஃபீலிங் அனன்யா.
நடந்ததை ஜோரா எழுதியிருக்கீங்க :)

மகளிர்மட்டும் கூட்டத்துக்கு மாங்குமாங்குன்னு கார் ஓட்டிட்டுவந்த ரங்கமணிகள் எல்லாரையும் ஒரு க்ரூப்பா சேர்த்துவிட்டிருக்கலாம்.
பாவம் அவங்க.

இந்த மாதத்துக்குள் இன்னோரு கூட்டம் ஏற்பாடு பண்ணுங்க ஹுசைனம்மா. நான் இப்பவே ரெடி.

Jaleela Kamal said...

//ஒரு பத்து நிமிஷம் காத்திருந்ததுக்கப்புறம் ஹூஸைனம்மா வேர்த்து விறுவிறுத்து//

பத்து நிமிஷம் ஆச்சா? சாரிப்பா, நான் வழி மிஸ் பண்ணதால், சுத்தி வந்தேன், அதான் லேட்!!

நான் தான் சொன்னேனே கூப்பிட்டு போறேன்னு, ம்ம் நானே போய் பேன்னு சொன்னீங்களே ஹிஹி,

பரவாயில்லை அபுதாபியில் இருந்து துபாய் வந்து தைரியமா நான் போய் கூப்பிட்டு வரேன்னு சொன்னீங்கலே..

அதே பெரிய விஷியம் தான்

Porkodi (பொற்கொடி) said...

:)))))))) nice!!

//எனக்கும் தோணிச்சு, ஒரு க்ரூப் மீட்ன்னா, கண்டிப்பா ஏதாவது ’இன்புட்ஸ்’ இருக்கணுமே. நானும் ஏதாவது பண்ணி எடுத்துண்டு போய் இருப்பேன். அன்னைக்கு ஃபுல்லா செம்ம தலைவலி, அதான் வெறுங்கையோடு போயிட்டேன்//

பரவாயில்ல, நல்லதுக்கு தான்! இல்லனா கொலக்குத்தம் ஆயிருக்கும்!! :)

Chitra said...

அருமையான சந்திப்பை, கலகலப்பு குறையாமல் அருமையாக தொகுத்து இருக்கீங்க. :-)

Ahamed irshad said...

Nice Post.
Nice Meet.
Nice Talk.

Ok Ok..

When QATAR BlOGGER MEETS SHADIQA MAM.....?

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள்.

பத்மநாபன் said...

///அநன்யா ட்ரேட்மார்க் பல்பு’ வாங்கியாச்சு. இதே தானே வேலையா அலையுறேன். ‘சந்தோஸமா’ன்னு கஞ்சா கருப்பு மாதிரி கேட்டுண்டே //// வண்டி டிராபிக்குல ஸ்லோவா போய் சேர்ந்தாலும் .. உங்க பதிவு நான் - ஸ்டாப் நகைச்சுவையாக இருந்தது ....

Asiya Omar said...

அநன்யா உங்கள் மெயில் பார்த்து தான் ஓடி வந்தேன்,அய்யோ அப்பா,என்னை கையை பிடிச்சிண்டு உங்க ப்ளாக் அருமை,சமையல் அருமைன்னு சொல்லும் பொழுது உங்களை என் ப்ளாக்கில் பார்த்தது இல்லைன்னு சொன்னால்,நான் ஃபாலோ பண்ணிண்டு இருக்கேன்னு அடம் வேற.இப்பவாவது புரியறதா ? நான் அவள் இல்லைன்னு.ரிலாக்ஸ்டாகத்தான் இருந்தேன்,நீங்க லேட்டாக நான் கிளம்பும் நேரம் வந்ததால் என்னால் உங்களுடன் அதிக நேரம் பேசமுடியாமலை ,அவ்வளவே....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... நானும் தான் துபாய்ல இருந்தேன் கொஞ்ச வருஷம் முன்னாடி... அப்ப எல்லாம் இப்படி இருந்து இருக்க கூடாதா... இப்ப இந்த பனிகாட்ல (கனடா) வந்து முழிச்சுட்டு இருக்கேன். இங்கயும் இப்படி ஒரு மீட்டிங் போட்டா சூப்பர்ஆ இருக்கும்.... இருக்கறவங்க சொல்லுங்க... போட்டுடலாம்
(பொற்கொடி சொன்னாப்ல கொலை குத்தத்துல இருந்து உங்க தலைவலி காப்பத்திடுச்சு... சும்மாவா சொன்னாங்க.... தலைக்கி வந்தது தலைபாகையோட போச்சுன்னு....)

தக்குடு said...

// போன வருஷம் இங்கேயும் ஒரு சின்ன குழுக் கூடினோம். கவிநயா, தி.வா.மெளலி, திராச சார், வல்லி எல்லாரும் வந்தாங்க, அம்பத்தூருக்கு, இந்த வருஷம் அதை நினைச்சுட்டு இருந்தேன்// antha comedythaan uurukkey theriyumeyyy!!!...:) after that meet M'Pathi anna vanthu oru report kuduththaar paarungoo!! ROFTL. Ambathurnu sonnaley ippo avaa yellarum alari oodaraalaam...:)

ஸ்ரீராம். said...

என்ஜாய் பண்ணிட்டீங்க...அது சரி..துபாய்ல ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம்னு தலைப்பு வச்சிருக்கீங்களே..அதைப் பத்தி எழுதவே இல்லையே...

ஸாதிகா said...

அநன்யா உங்களுக்கே உரித்தான பாணியில் அட்டகாசமாக பதிவிட்டுள்ளீர்கள்.நீங்க பாடத்தை மனனம் செய்வது போல் முகவாயில் விரல் வைத்து மற்றொருகைவிரலால் ஆசியா,ஜலிலா,ஸாதிகா,ஹுசைனம்மா,மலர் என்று வாய்ப்பாட்டு பாடிக்கொண்டிருந்ததை இன்னும் என்னால் மறக்க முடியலே.நானும் பதிவிட்டுள்ளேன்.வந்து பாருங்கோ.

sriram said...

அநன்யா Aunty..
நல்லாத்தான் எஞ்சாய் பண்ணியிருக்கீங்க.

வல்லிம்மா நல்லவங்கதான் இல்லன்னு சொல்லல. உங்கள அநன்யா குட்டின்னு ஒரு வார்த்தை சொன்னதுக்காக இவ்ளோ ஐஸ் வைக்குறது ரொம்ப ஓவர். வல்லிம்மா கண்களை நல்ல டாக்டர்கிட்ட காட்டணும்.
ஆண்டியைப் போயி குட்டி கிட்டினு கிட்டு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஜெய்லானி said...

//ரங்கு வழக்கம் போல 6.15க்கு வந்தார். அவர் அன்னிக்கு கார்த்தால 6 மணிக்கே கிளம்பி போனதுனால ரொம்ப களைப்பா இருந்தார். அதுனால போனாப்போகட்டும்ன்னு ட்ரெஸ் சேஞ்சுக்கு பெர்மிஷன் குடுத்தேன். //

என்னா தங்கமான மனசு உங்களுக்கு

//ஜபலாலி வந்தப்போ, மெதுவா ரங்குவை பிறாண்ட ஆரம்பிச்சேன்//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எல் கே said...

@boston naattami

vidunga sila samayam ithellam sagajam

அன்புடன் மலிக்கா said...

நம்ம காமெடி ஃப்ரீக்வென்ஸி வேவ்லெங்க்துக்கு ரொம்ப சூப்பரா ஒத்து போனது மலிக்கா தான். ஊசிப்பட்டாசு மாதிரி ஒரே பேச்சு.. சிரிப்பு.//

என்னா ஒரு கலாட்டா அப்பப்பா
அப்பச்சொன்னேளே ஞாபகமிருக்கா
அநன். ரங்குகிட்ட சொல்லி அத்தயே பாக்கவேணா ஆத்துலையும் பாருங்கோன்னு சொல்லி வைங்கோ.

அழகா கிளாஸ் எடுத்துட்டேள் உங்க அதிம்பேருக்கு டாங்ஸ் சொல்லுங்க கய்டப்பட்டு கொண்டுவந்து சேத்து ஆத்துக்காரியோட ஆசை நெவேத்துனதுக்கு...

அன்புடன் மலிக்கா said...

//எனக்கு யார் யார்ன்னு தெரிஞ்சுக்கவே ஒரு 45 நிமிஷம் ஆச்சு.//

அங்கே அசடு வழிஞ்சிட்டு நின்னததான் பாத்தோமே ஹி ஹி

//இவங்க தான் ஜலீலான்னு யாரோ திரியை கொளுத்திபோட//

மலிக்காதானே அது??//

ஏம்பா ஏன் ஏன் இந்த கொலவெறி
அநன் யாரு யாருன்னு அல்லாடி தவிச்சப்ப நாந்தானே அழகா கைப்பிடிச்சி இது இவா இது அவா. இதுதான் நானு ந்னு சொல்லிக்கொடுத்தேன். இல்ல அநன் அதெல்லாம் எங்கே நியாபகத்துல நிக்கப்போவுது.

ரங்கு ரங்கு அச்சோ ந்னு அடிக்கடி புலம்பி தள்ளிட்டேள்..

ராமலக்ஷ்மி said...

சந்தித்த எல்லோர் பதிவுகளையும் வரிசையா படிச்சிட்டு வர்றேன்:)! உங்க பகிர்வும் அருமை. தொடரட்டும் நட்பு:)!

pudugaithendral said...

சந்தோஷமா இருக்கு. நட்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்

Ananya Mahadevan said...

@மாத்தா கீத்தானந்தமயி,
வடை உங்களுக்கு தான். சரி சரி கூடவே காப்பியும் தரேன்.
நான் சென்னை வரும்போது ஆட்டோமேட்டிக்கா நேரா அம்பத்தூர் வந்திடுவேன். ஹீ ஹீ.. அசடு தானே? நான் தானே? அதுக்கு தான் அவதரிச்சு இருக்கேனக்கும். :)கருத்துக்கு நன்றீஸ் கேட்டேளா?

@ஹூஸைனம்மா,
டீட்டெயில்டா கருத்து சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றீஸ்.

//பத்து நிமிஷம் ஆச்சா? சாரிப்பா, நான் வழி மிஸ் பண்ணதால், சுத்தி வந்தேன், அதான் லேட்!!//
நான் என்ன ப....த்....து... நிமிஷம்னா சொன்னேன்? க்ர்ர்.. சாதாரணமாத்தேன் சொன்னேன். இதுக்கு போய் சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு.. பேசாம இம்போஸிஷன் எழுதி அனுப்பிடுங்க. ஈமெயில்ல அனுப்பினா போறும். :))

//தெரிஞ்சதும் கிளம்பிப் போயிட்டீங்களே!!//

அதைத்தானே காதுல புகையோட ரெண்டு பக்கத்துக்கு புலம்பி இருக்கேன். அவ்வூ.....(வடிவேல் மாதிரி மூஞ்சியை வெச்சுண்டு அழுறேன்)

//மலிக்காதானே அது??//

அதான் யார்னே முகப்பரிச்சயம் இல்லையே.. யார்னு நிஜம்மா தெரியலைப்பா. வால்த்தனத்தை வெச்சு பார்க்கும் போது ஒருவேளை
நம்ம மலிக்காவோ நாஸியாவோவா இருக்கலாம். ஸ்டில் ஐ ஆம் நாட் ஷ்யூர். குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்கும், இங்கே வந்து பாவமன்னிப்பு கேப்பாங்கன்னு பார்த்தா நோ ரெஸ்பான்ஸ்! க்ர்ர்.. அது யாரா இருந்தாலும் இம்போஸிஷன் எழுதி அனுப்பவும்.

//ஸாதிகா அக்காவும் பாட்டின்னு சொல்றீங்க, அதானே!!//

அவ்வ்... ஏன் இந்த கொலை வெறி?நாகர்கோவில்ன்னு சொன்னீங்க? இப்போ என்னடான்னா ஐயம்பேட்டை வேலை பண்றீங்க?

//இந்த ஐடியா நல்லா இருக்கே!// டாங்கீஸ்

//இது எப்போ, நான் சாப்பிட்டுடு இருக்கும்போதா? எனக்குத் தெரியாம என்னன்னவோ பண்ணிருக்கீங்க.// அடக்கி வாசிங்க.. இதெல்லாம் சும்ம ஒரு பில்டப். நமக்கும் டெக்னிக்கல் ஜார்கன்ஸ் எல்லாம் தெரியும்ன்னு காட்டிக்க வேண்டாமா? என்னங்க நீங்க? வெள்ளிந்தியா இருக்கீங்களே?

//அவ்வ்வ்... என்ன சாப்பாடு ஐட்டம்ஸ்னு வேணா லிஸ்ட் சொல்றேன்!//
நான் சொன்னது மினிட்ஸ் ஆஃப் மீட்டிங். நாட் மினிட்ஸ் ஆஃப் ஈட்டிங்!!! :)

வாங்கின காசுக்கு நிறைவா கமெண்டு எழுதி இருக்கீங்க. நேத்திக்கி ட்ரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு. செக் செய்யவும். :PP

Ananya Mahadevan said...

@ஜலீலாக்கா,
இப்போ டெம்ப்ளேட் ஓக்கேயா? முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றீஸ்.

@நாஸியா,
பார்த்த அளவுல துறுதுறுன்னு இருந்தீங்க. மே பீ, ஐ மிஸ்டு.. ஹம்ம் அடுத்த வாட்டி ப்ளீஸ் கம் இன் ஃபுல் ஃபார்ம்யா...

@ஹுஸைனம்மா,
கண்டிப்பா சந்திக்கவும். எல்லாரும் அவங்களை மீட்டணும். வெரி லவ்லி லேடி டு பீ வித்.

@மாதவன்,
வெட்டியா இருந்தா 3 மாசத்துக்குள்ள 200 போஸ்டு கூடத்தான் போடலாம். எத்தனை போஸ்டு போடுறோம்ங்கறது முக்கியமில்லை, எத்தனை கமெண்டு வரது, அதான் முக்கியம் கேட்டேளா?

@எல்.கே,
சில பேர் காதுல பயங்கரமா புகை வருது. என்ன பண்ண? எல்லாரும் மீட்டுங்க. சந்தோஷமா இருங்க. (கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி படிக்கவும்)

@சுந்தரா,
வாங்க, உங்க முதல் வருகைக்கு ரொம்ப நன்றீஸ்
கருத்துக்கு அதை விட நன்றீஸ். இதே மாதிரி எல்லா போஸ்டுக்கும் கமெண்டவும். பேமெண்ட் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். :))
ரொம்ப சரியாச்சொன்னீங்க. அதுலேயும் நம்ம ரங்க்ஸ் கார்த்தால ரொம்ப சீக்கிரம் எழுந்தாச்சு.. கார்ல உக்காண்டு சாமியாடிண்டு இருந்தார் பாவம். :((

ஐ ஆல்ஸொ ரெடி சுந்தரா..

@பொற்ஸ்,

ஏன் காசை வாங்கிட்டு இப்படி எல்லாம் பின்னூட்டம் போடுறே? உனக்கு குடுக்கற பைசாவையும் சேர்த்து இனிமே பத்து அண்ணாவுக்கு குடுத்துடபோறேன்.. அனியாமான்னா இருக்கு?

@சித்ரா,
ரொம்ப நன்றீஸ் டாலு.. டாங்கீஸ்

@அஹம்து இர்ஷாத்,
ப்ளீஸ் டோண்ட் புட் கண் யா.. அண்ட் நோ காதுல புகை. சீக்கிரம் யூ வில் மீட்! ஐ டூயிங் ஆசீர்வாதம் யா.. டோண்ட் வொர்ரி!

@அக்பர்,
ரொம்ப நன்றீஸ்

@பத்து அண்ணா,
நீங்க தான் வாங்குற ”பேமெண்டுக்கு” ஏத்த மாதிரி கமெண்டு எழுதறது, இதையே மெயிண்டெயின் பண்ணிக்கோங்க.. குட் கோயிங்!

@ஆசியா அக்கா,
நானே பல்பு வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆகி கன்ஃபெஷன் பதிவு போட்டா நீங்க வந்து வெந்த புண்ல வேலைப்பாய்ச்சறீங்களே..

Ananya Mahadevan said...

@அப்பாவி தங்கமணி,
சீக்ரமாய கண்டாய ப்ளாக்கர்ஸ் மீட்டாய ப்ராப்தி சித்தி ரஸ்து! ஏ.டீ, சில சமயம் சில பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் டிஸேபிள் பண்ணிடணும்ன்னு தோணுதுப்பா.. :))

@தக்குடு,
மாத்தா கீத்தானந்த மயி பத்தி இப்படி தாறுமாறா பேசுறதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன்.. ரெம்ப டூ மச் ஐ ஸே!இனிமே மாத்தா பத்தி உன் விஷமத்தனமான கமெண்டுக்கள் பிரசுரிக்கப்பட மாட்டா என்பதை மிகவும் பணிவன்புடன்(!!??)தெரிவிச்சுக்கறேண்ட்டியா?

@’எங்கள்’ ஸ்ரீராம் அண்ணா,
இப்பெல்லாம் நீங்களா பாஸ்டன் அண்ணாவா தெரிய மாட்டேங்குது. அந்த அளவுக்கு நையாண்டி.. ஹ்ம்ம்.. வீ ஆர் தி பட்டாம்பூச்சிஸ்.. அதுல நான் மட்டும் ’லைட்ட்ட்டா...’ ஹெவி வெயிட் பட்டாம்பூச்சி. அவ்ளோ தான்... (அநன்யா, இந்த கமெண்டைப்போட்டுட்டு கமெண்ட்ஸ் டிஸேபிள் பண்ணிடு இல்லாட்டி வம்பு வந்துடும்ன்னு என் மனசாட்சி சொல்றது)

@ஸாதிகா அக்கா,
சூப்பர் பதிவு. படிச்சேன். ஆமா.. எனக்கு பை ஹார்ட் பண்ண கொஞ்சம் டைம் ஆச்சு. பரவாயில்லே. இப்போ எல்லாரையும் நல்லா தெரிஞ்சுண்டேனே.. :)) உங்களை பரிச்சயப்பட்டது ரொம்ப சந்தோஷம்.

@ஸ்ரீராம் அண்ணா,
ஆராக்கும் ஆன்ட்டி? இனிமே ஆன்ட்டின்னு வரும் உங்கள் கமெண்டுக்கள் பிர்சுரிக்க மாட்டேன் தெரிஞ்சுக்கோங்க..
க்ர்ர்....இந்த மாதிரி கன்னா பின்னான்னு கமெண்டு போட்டுட்டு என்ன “என்றும் அன்புடன் பாஸ்டன் ஸ்ரீராம்” வேண்டிக்கிடக்கு?
க்கும்...

@ஜெய்லானி
//என்னா தங்கமான மனசு உங்களுக்கு// இல்லையோ பின்னே?
ஹீ ஹீ.. அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு.. நிஜம்மா எல்லாம் இல்லை. கண்டுக்கக்கூடாது..

@எல்.கே,
நீயே சொல்லு இப்போ யார் நாட்டாமை?

@மலிக்கா,
//உங்க அதிம்பேருக்கு டாங்ஸ் சொல்லுங்க கய்டப்பட்டு கொண்டுவந்து சேத்து ஆத்துக்காரியோட ஆசை நெவேத்துனதுக்கு// இவர் எனக்கு ஆத்துக்காரர். அத்திம்பேர்ன்னா அக்கா புருஷன். தப்பான உறவு முறை வந்துடும். நீங்க தமிழ்லேயே பேசுங்களேன். ஹீ ஹீ..
நன்றியுரை சொல்லியாச்சுப்பா.. கடைசி பத்தியிலே..
//ரங்குகிட்ட சொல்லி அத்தயே பாக்கவேணா ஆத்துலையும் பாருங்கோன்னு சொல்லி வைங்கோ.// மலிக்கா, சுத்த்மா புரியலைப்பா.. ப்ளீஸ் ரிப்பீட்டு.

//அநன் யாரு யாருன்னு அல்லாடி தவிச்சப்ப நாந்தானே அழகா கைப்பிடிச்சி இது இவா இது அவா. இதுதான் நானு ந்னு சொல்லிக்கொடுத்தேன். இல்ல அநன் அதெல்லாம் எங்கே நியாபகத்துல நிக்கப்போவுது.// இல்லயோ பின்னே. நீங்கதான் அந்த எட்ட்ப்பின்னு இப்போ எனக்கு திட்டவட்டமா தெரிஞ்சுடுச்சு. என்னோட ரங்கு வீக்னெஸ் தெரிஞ்சுண்டு, நயவஞ்சகமா என்னை கொண்டு போய் தப்புத்தப்பா இண்ட்ரோ குடுத்து என் முதுகுல குத்தினது நீங்க தானே அப்போ..

ஹூஸைனம்மா கையக்குடுங்க.. சரியாச்சொன்னீங்க. வர வர நீங்க ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரி ஆயிண்டு வர்றீங்க..

@ராமலக்ஷ்மி அவர்களே,
முதல் வாட்டி என் ப்ளாக் வந்திருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. கருத்துக்கு அதை விட நன்றீஸ்
கண்டிப்பா நட்பு தொடரும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

யாரும் யாரையும் அக்கான்னு கூப்பிடக்கூடாதுன்னு ஒரு நடுவுநிலையுடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அப்படியா அநன்யா அக்கா சரிக்கா

தி. ரா. ச.(T.R.C.) said...

அதெல்லாம் இருக்கட்டும் ஜுன் மாதம் 5 ஆம் தேதி பிளாக் உலக மன்னர் துபாய் வருகிறார் ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருக்கட்டும்.தாரை தப்பட்டை எல்லாம் அடிக்கிற அடியில் அறுந்து தொங்க வேண்டும்.

sriram said...

//@ஸ்ரீராம் அண்ணா,
ஆராக்கும் ஆன்ட்டி? இனிமே ஆன்ட்டின்னு வரும் உங்கள் கமெண்டுக்கள் பிர்சுரிக்க மாட்டேன் தெரிஞ்சுக்கோங்க..
க்ர்ர்....இந்த மாதிரி கன்னா பின்னான்னு கமெண்டு போட்டுட்டு என்ன “என்றும் அன்புடன் பாஸ்டன் ஸ்ரீராம்” வேண்டிக்கிடக்கு?
க்கும்... //

ஐயே.. இது என்ன கொழந்தை மாதிரி அழுதுகிட்டு.. கழகக் கண்மணியா இருக்கணும்னா இதுமாதிரி கமெண்டெல்லாம் தாங்கித்தான் ஆகணும்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனன்யா,துபாயே சில்லுன்னு போயிடுத்து போ. இத்தனைஅன்பா யாரும் என்னைப் பத்தி எழுதவில்லை.:))))))))))))))))))))))))))))))))))))))

நிஜமா நன்றிப்பா. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தது எனக்கே உற்சாகமா இருந்தது.
சீக்கிரமா எழுந்திருக்கிறதனால சீக்கிரமா தூங்கப் போற வழ்க்கம். 9.30க்கு மேல தூக்க சாமி வந்து பிடிச்சுக்கும்.
சாதிகா,மனோ,ஜலீலா,மலிக்கா,ஹுசைனம்மா,ஆசியா ,நாசியா எல்லோரையும் சந்திக்காம வாய்ப்பை விட்டுட்டேன்.
நாங்க கிளம்பறத்துக்குள்ள எப்படியாவது இன்னோரு மீட் போடணும்.
உங்க எல்லோருக்கும் சங்கடம் ஒண்ணும் இல்லைன்னா!!

பத்மநாபன் said...

போன மாசம் நீங்க அனுப்பிய செக் பவுன்ஸ் ஆயிடுச்சு....ஞாபக படுத்திட்டேன்..

மின்மினி RS said...

ஐய்யயோ.. நாந்தான் லேட்டா.. அனைவருக்கும் வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

அநன்ய முதல் வருகை இல்லை ,அடிக்கடி வருகை தருகிறேன் ஆனால் கமெண்ட் போடல.


என் பதிவில் அவாட்கொடுத்துள்ளேன் வ்ந்து பெற்று கொட்ள்ளுங்கள்/
நேற்று வந்து சொல்ல நேரமில்லை.

Vijiskitchencreations said...

அநனயா நான் முதல் வருகை. என் முதல் வருகையே எனக்கு ரொம்ப பிடித்ததாகவே அமைந்தது. உண்மையிலேயே சொல்லனும் என்றால் இந்த மாதிரி தருணங்கள் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் அதை நம்மால் ஒரு போதும் மறக்கமுடியாதாகவே இருக்கும். இதில் என்ன நம்ம ஜலீ குக் எக்ஸ்பெட் ஆச்சே , ஸாதிகா அக்காவே நான் தான் பார்க்க மிஸ் பன்னிட்டேன். மல்லிக்கா எனக்கு ரொம்ப பிடித்தவங்க நான் அவங்க கவிதையிலே மயங்கினவ. ம்.. இன்னும் உங்களை இப்ப தான் வந்து பழகிகொண்டேன். நிங்களும் எனக்கென்னவோ ரொம்ப நாள் தெரிந்த தோழி போல் ஒரு நினைப்பு.
சரி அதனால் என்ன நானும் உங்க தோழியாயிட்டேன்.
ரொம்ப நல்ல பதிவு. மீண்டும் வருகிறேன்.
நானும் எல்லாரும் சொல்வாங்க அனன்யா என்று யார் தான் என்று பார்க்கலாம் என்று வந்தால் வாவ் இப்படி ஒரு நல்ல ப்ளாக் மிஸ் பன்னிட்டோமே என்று தோன்றுகிறது.
வருகிறேன்.....பெரிய பதிவு

முகுந்த்; Amma said...

கலக்கலா இருந்திருக்கும் போல . நல்ல அனுபவம். யாராவது அமெரிக்க வில ஈஸ்ட் கோஸ்ட் ல மீட் பண்ணினா என்னையும் கூப்பிடுங்கப்பா.

'பரிவை' சே.குமார் said...

நல்லா விரிவா எழுதியிருக்கீங்க..?

மலிக்காக்காக்கா இது குறித்து அவங்களுக்கே உரிய நடையில் எழுதியிருந்தார்கள். நீங்கள் உங்கள் நடையில்...?

ம்... கலக்குங்க...

Ananya Mahadevan said...

TRC அவர்களே,
க்ர்ர்.. நான்? உங்களுக்கு? அக்காவா? பேஷ் பேஷ்! இருங்கோ உங்களை மாத்தா கீத்தானந்த மயி கிட்டே சொல்லி மாட்டி விடுறேன்!

நீங்க துபாய் ஏர்போர்டு வரும்போது, ஷங்கர் மஹாதேவன் பாடிய இண்ட்ரோ சாங், 10000 துணை நடிகர்களுடன் கூடிய நடனம் எல்லாம் ஏற்கனவே ஏற்பாடு பாண்ணியாச்சு கேட்டேளா? நடுவுல ஆடுறதுக்கு ரஜினி மாதிரி ரங்குவை தயார் பண்ணிண்டு இருக்கேன். போறுமோல்யோ?

@வல்லிம்மா,
நான் துளி கூட மிகைப்படுத்தலை. இருக்கறதை தான் சொல்லி இருக்கேன். மறுபடியும் உங்களை அபுதாபியில் சந்திக்க ஆவலோடு இருக்கேன்.

@பத்மநாபன்,
க்ர்ர்.. கொம்பேனி சீக்ரெட் எல்லாம் இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சதுனால நீங்க நான் டிஸ்க்லோஷர் அக்ரீமெண்ட்டை ப்ரீச் பண்ணிட்டீங்க. அதுனால உங்களை வேலையில இருந்து தூக்கிட்டேன்.

@மின்மினி,
ரொம்ப நன்றிங்க.

@ஜலீலா அக்கா..
ஓ லைக் தட்டா?
அக்ஸ் உங்க விருது நான் வாங்கிண்டாச்சே. கமெண்டு போட்டு இருக்கேன். தாங்கீஸ்.. :))

@விஜி அவர்களே,
முதல் வருகைக்கும் இவ்ளோ டீட்டெயில்டு கருத்துக்கும் ரொம்ப ரொம்ப டாங்கீஸ்.
நானும் நீங்க மயங்கின மாதிரியே மயங்கி இருக்கேன். கவுஜ, சமயல், ஹூஸைனம்மா ஸ்மார்ட் ரைட்டிங் ஸ்கில்ஸ், இதெல்லாம் என்னை வெகுவாக கவர்ந்தது.
ஆமா கொஞ்சம் பெரிய பதிவு தான். எழுத எழுத அப்படியே அனுமார் வால் மாதிரி நீண்டுடுத்து. என்ன பண்றது?
:( பொறுமையை சோதிச்சுட்டேனோ? மன்னிச்சிடுங்க.

முகுந்தம்மா,
சீக்கிரம் மீட் ஏற்பாடு ஆக என் வாழ்த்துக்கள். ப்ரும்ம ப்ரயத்னம் பண்ணி தான் நாங்களே மீட்டினோம்.
:))

@சே.குமார்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீஸ். மலிக்கா மாதிரி கவுஜ எல்லாம் எனக்கு எழுதத்தெரியாது. ஏதோ மனசுக்கு தோணறதை எழுதிண்டு இருக்கேன். அவ்ளோ தான்.

Jawahar said...

பல்லாயிரக் கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் போது நம்ம ஆட்களோட வர்ர நட்பு ரொம்ப எஞ்சாயபிளா இருக்கும்ங்கிறதை நேரா சொல்லாம தி.ஜானகிராமன் கதை மாதிரி புரிய வெச்சிருக்கீங்க.

அதே ஆட்கள் உள்ளூர்ல இருக்கிறப்போ கேட்டுக்கு முன்னால வண்டி நிறுத்தாதேன்னு போஸ்டர் ஒட்டினாக்கூட கண்டுக்காம நிறுத்தி கழுத்தை அறுக்கறாங்க.

Ananya Mahadevan said...

ஹா ஹா..
கருத்துக்கு ரொம்ப நன்றி திரு சுஜாதா அவர்களே.. சாரி.. திரு ஜவஹர் அவர்களே.. தி.ஜானகிராமனா? அந்த ஜாம்பவானை எதுக்கு இங்கே இழுக்கறேள்? க்ர்ர்..

தக்குடு said...

commentukku bathil yellam poodareeley ananya, athisayamthaan poongo!!!...:) //கமெண்டுக்கள் பிரசுரிக்கப்பட மாட்டா என்பதை மிகவும் பணிவன்புடன்// yennoota commentunaaley ungalukku pudikkathey, ithai thaniyaa veera sollanumaa??...:PP

Related Posts with Thumbnails