Pages

Saturday, October 10, 2009



மனம் ஒரு குரங்கு - 3







போன வாரம் சங்கடங்களைத்தீர்க்கும் சதுர்த்தி விரதம் இருந்தேன். நண்பன் மகேஷிடம் தெரிவித்தபோது என் மீது இருக்கும் அதீத அக்கறையினால் எதுக்கு அக்கா இப்படி உன்னை வருத்திக்கற என்று கேட்டு மெயில் அனுப்பி இருந்தான்.. வெளிநாட்டு வாழ்க்கையில் insecurity எவ்வளவு அதிகம் என்று அவனுக்கும் தெரியும். இருந்தாலும் அதற்கு இந்த முறையைக்கையாள வேண்டி இல்லை என்றே அவனுக்கு தோன்றியது. இந்த Global Recession காரணமாக என் கணவருக்கு பல ஒப்பந்தங்கள் ஓகே என்கிறபோதிலும் கையெழுத்தாகவில்லை. மிகவும் சோர்ந்து போய் இருந்தார். அவருக்கோசம் தான் இந்த நோன்பு இருக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தேன். மகேஷுக்கு என் நம்பிக்கைகளை பற்றி எடுத்துக்கூறி விட்டு நன் என் விரதத்தை செவ்வனே முடித்தேன். எதிர்பாரா விதமாக அடுத்த நாள் என் கணவருக்கு ஒரு சின்னஞ்சிறிய contract கிடைத்தது . மிகச்சாதாரண காண்ட்ராக்ட் என்ற போதிலும் பத்து நாட்கள் பசியோடு இருப்பவனுக்கு ஒரு கவளம் நெய்சோறு கிடைத்தது போலாயிற்று. பிள்ளையாரப்பா... உனக்கு நன்றிகள் பலகோடி.


எங்கள் பில்டிங்கில் பத்தாவது மாடியில் இந்த நவராத்ரி நாட்களில் பரிச்சயமான திரு நாராயணன் லக்ஷ்மி தம்பதியனர் மிகவும் சுவையான மனிதர்கள். அதிலும் திரு நாராயணன் அசாதரணமாக பாடும் திறமை பெற்றவர். வெள்ளிக்கிழமை அன்று ஏதோ பூஜை செய்து கேசரி பிரசாதத்தை எடுத்து சென்று கொடுத்த பொழுது, தங்கள் வீட்டில் தாமோதர பூஜை செய்யபோவதாக தெரிவித்து எங்களை அந்த பூஜைக்கு வரும்படி திருமதி லக்ஷ்மி அழைத்தார். சுமார் ஏழரை மணியளவில் தொடங்கிய பூஜை இரண்டு மணி நேரம் நடந்தது. இஸ்கான் முறையில் நடந்தபடியால் மந்திரங்கள், வேத ஆகம கோஷங்கள் இவை ஒன்றும் இல்லாத போதிலும் எளிமையான பாடல்கள், நாம சங்கீர்த்தனங்கள், கதைகள், ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகள் முதலியனவற்றை கூறினார்கள். நடுவில் திரு நாராயணன் மலையாளத்தில் ஒரு குருவாயுரப்பன் படலைப்பாட, நான் கண்ண மூடி பிரார்த்தனை செய்தேன். பக்திரசம் சொட்ட சொட்ட அவர் பாடிய அந்த பாடல் கேட்டு என் மனக்கண்ணில் குருவாயூர் கோவில் நடை திறந்து குட்டி கிருஷ்ணன் நின்று கொண்டு இருந்தான். அவ்வளவு நன்றாக இருந்தது அந்த பாடல். வாழ்த்துக்கள் திரு நாராயணன் அவர்களே. திரு மனோகர் கூறிய ஸ்ரீமத் பாகவதம் என்ற நூலின் கதைகள் எல்லாமே சுவாரஸ்யமானவை.அவர்கள் எங்கள் வீட்டுக்கும் வருவோம் என்று தெரிவித்தனர். அக்கம் பக்கம் தொந்தரவு ஆகுமோ என்று எங்களுக்கு கொஞ்சம் தயக்கம். பார்க்கலாம் என்று கூறி இருக்கிறோம். இங்கே அண்டை வீட்டார் புகார் கொடுத்தால் வீடு காலி செய்ய வேண்டியது தான். அவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் சின்னகுரலில் பாடல்கள் பாடி, டோல் , சிங்கு சா போன்ற இசைக்கருவிகள் தவிர்த்து விட்டு கிருஷ்ண நாமத்தை சொல்ல தடை இருக்காது என்று நம்புவோமாக.. எங்கள் இருவருக்கும் இது போன்ற பூஜைகள் நல்ல stress busters.




வார இறுதி நாட்களில் எதாவது ஒரு சினிமா பார்ப்பது வழக்கம். என்னவர் வெள்ளிக்கிழமை அன்று மன்னார் மத்தாயி ஸ்பீகிங் என்கிற மலையாள படத்தை எடுத்து வந்தார். இது 1995 இல் வெளிவந்த ஒரு mysterious comical hit என்று சொல்லலாம். இந்த படத்தை பார்த்தபொழுது எனக்கு சுஜாதா அவர்கள் எழுதிய விரும்பிச்சொன்ன பொய்கள் என்ற கதை தான் நினைவுக்கு வந்தது. இந்த முறை சென்னை சென்ற பொழுது மகேஷ் என்னை விசா பப்ளிகேஷன்ஸ் என்ற புத்தக நிலையத்திற்கு அழைத்து சென்றான். அங்கே நாங்கள் தேடி தேடி வாங்கிய சில சுஜாதாவின் புத்தகங்களில் இருந்து ஒரு மிகச்சிறிய புததகத்தை மட்டும் படித்தேன். அந்த புத்தகம் தான் விரும்பிச்சொன்ன பொய்கள். சுஜாதா இந்த கதை எழுதியது 1987 ஆம் ஆண்டு. சுமார் 80 பக்கங்கள் கொண்ட இந்த கதையின் இறுதியில் ஆம் இல்லை என்ற வார்த்தை தேர்வின் பேரில் கதை முடியும். நான் இப்படி சொல்லி புரிந்து கொள்ளுதல் கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அந்த கதைக்கருவை அப்படியே களவாண்டு எடுத்து விட்டார்கள். இந்த படத்தின் கரு காப்பியடிக்கப்பட்டாலும் நகைச்சுவைக்கு குறை இல்லை. இன்னொசென்ட் தனது அப்பாவித்தனமான நடிப்பால் நம்மை சிரிக்க வைக்கிறார். படம் நெடுக ஒரே நகைச்சுவை தூறல் தான். முதன் முறையாக சாய்குமார் "ரொம்ப நல்லவன்" ஆக நடித்து இருக்கிறார். இதைப்பார்த்து முடிக்கும் போது தான் இதே மாதிரி ஒரு படம் hyped up location இல் high funda lifestyle உடன் கூடிய ஒரு ஹிந்தி படம் "பாகம்பாக்" பார்த்த நினைவு வந்தது. லண்டனில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் லாரா தத்தா, பரேஷ் ராவல், அக்ஷய் குமார் மற்றும் கோவிந்தா இணைந்து நடித்து இருந்தார்கள். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் படங்களே பாலிவூட்டில் ஹிட் ஆகும்.இதில் சுஜாதாவின் கதை வேறு. கேட்கவா வேண்டும். படம் சூப்பர் டூப்பர் ஹிட். வழக்கம் போல ப்ரியதர்ஷன் cut copy paste பண்ணி தன் பெயரை போட்டுக்கொண்டு விட்டார். ஆமாம், காஞ்சிபுரம் எதை பார்த்து எடுத்து நேஷனல் அவார்டு வாங்கி இருப்பார்?



விகடன் தீபாவளி இதழ்னு சொன்னாங்க.. சொன்னாதான் தெரிஞ்சது.. இப்பொழுதெல்லாம் விகடன் படிப்பதற்கு ஒரே காரணம் விகடன் பொக்கிஷம் மட்டுமே. அந்த காலத்தில் வந்த கட்டுரைகள், விட்டுகள், கார்டூன்கள், பொதுசெய்திகள் இதுவல்லாது அப்போது வந்த படங்களின் விமர்சங்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் பேட்டி இப்படி சுவாரஸ்யமான இதழாக இருக்கிறது பொக்கிஷம். இந்த வாரம் என்னை மிகவும் கவர்ந்த பகுதி இதோ..


நகைச்சுவை நடிகர்கள் தாங்கள் மக்களை சிரிக்க வைக்க முயற்சிக்கும்போது எப்படி எல்லாம் கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள் என்று ஒரு தொகுப்பு. சந்திரபாபு கருணாநிதி சாதரணமான நிகழ்வுகளை பற்றி கூறி இருந்தார்கள்.தங்கவேலு மற்றும் நாகேஷ் அவர்களின் இந்த தொகுப்பு இதோ :



கே.ஏ.தங்கவேலு:
''காஷ்மீரில் சந்தன்வாடி என்ற இடத்தில் 'தேன் நிலவு' படப்பிடிப்பு. ஒரு 'டோங்கா' வண்டியில் நான், ஜெமினி, வைஜெயந்தி, சரோஜா ஆகி யோர் அமர்ந்து, 'ஒய்' மாதிரி உள்ள மலைச்சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம். திடீரென்று குதிரை, படு வேகத் தில் பின்னால் ஓட ஆரம்பித்து விட்டது. யாராலும் அதை நிறுத்த முடியவில்லை.
மலைப்பாதை ஆதலால், அந்தச் சாலையில் பக்கவாட் டில் வேலி போட்டிருந்தார்கள். வேகமாகப் பின்புறம் ஓடிக் கொண்டே வந்த வண்டி, அந்த வேலியை நெருங்கிற்று. வேலி முறிந்தால், வண்டி அப்படியே மலையிலிருந்து கீழே விழ வேண்டியதுதான்.
வண்டி வேலியை நெருங்கிற்று. நான் சட்டென்று சமயோசிதமாக வேலியை ஒரு உதை உதைத்தேன். வேலியில் இருந்த மூன்று கம்புகளில் ஒன்று, உடைந்து எகிற, வண்டியின் சக்கரங்கள் மற்ற இரண்டு கம்புகளுக்கு நடுவே நன்றாக அகப்பட்டுக்கொண்டு நின்றுவிட்டன. தெய்வாதீனமாகத் தப்பித்தோம்.
இம்மாதிரி அனுபவங்கள் எதுவும் எனக்கு இல்லை. வேண்டுமானால் இதுபோல் இன்னும் சுவாரசியமாகப் பொய் சொல்லவா?''


நாகேஷ்:

''ஏதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரசிகர்களைச் சிரிக்க வைப்பதற்கு இப்படிக் கஷ்டப்பட்டதாகச் சொல்லி விட்டு, அதைப் படிக்கும் ரசிகர் 'பாவம், இவ்வளவு கஷ்டப்பட் டீர்களா! எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந் தால், சிரித்திருப்பேனே!' என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? நான் ஒரு படத்தில் 'எனக்கு சோடா கிடையாதா?' என்று சாதாரணமாகக் கேட்ட போது, ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இன் னொரு படத்தில் கஷ்டப்பட்டு நடித்ததாக நினைத்தேன். யாருமே சிரிக்காமல் 'கம்' என்று இருந்துவிட்டார்கள்!''
Comedians with real sense of humor... Royal Salute...

3 comments:

Unknown said...

விரும்பி சொன்ன பொய்களை பற்றி நீ எழுதியதை படித்த பிறகு தான் அந்த புத்தகத்தை படித்தேன். ஆங்கில erotic thriller பார்த்தது போன்ற அனுபவம். ’மன்னார் மத்தாயி ஸ்பீக்கிங்’ பார்க்கவேண்டும். எங்கேனும் நல்ல காப்பி கிடைத்தால் டவுன்லோடு செய்யவேண்டும். அல்லது மோசர்பேயரில் ஆர்டர் செய்த்யுவிட்டு டெலிவரி ஆகும்வரை காத்திருக்கவேண்டும்.... அக்கா, ஒரு ஆலோசனை - ‘திரைப்படங்கள் குறித்த பதிவுகளை மனம் ஒரு குரங்கு பகுதியில் போடாமல் ஒரு தனி category-ல் போட்டால் கோர்வையாக இருக்கும்’

Ananya Mahadevan said...

suggestion considered and implemented.. thanks for the time taken

Nathanjagk said...

அநன்யாஜி!
சதுர்த்தி விரத்தில் ஆரம்பிச்சு, global recession, gulf feelings, சுஜாதா, ப்ரியதர்ஷன், பாகம்பாக், விகடன் ​பொக்கிஷம்னு (I love it) கலக்கீட்டீங்க!!
டணால் தங்க​வேலுவின் காமடி மிக ரசித்​தேன். இந்த ட்விஸ்ட் கம் ​ஜெர்க் முடிவுகள்தான் அவர்களின் சிறப்பே.

​வெல்டன்!!!

Related Posts with Thumbnails