Pages

Wednesday, October 7, 2009

மனம் ஒரு குரங்கு

இனிமேல் மனசுக்கு தோன்றதெல்லாம் எழுதப்போறேன்
அதுக்கு எதுக்கு மனம் ஒரு குரங்குன்னு சொல்லணும்? என்று நீங்கல்லாம் கேக்கலாம்
வழக்கமா எல்லாரும் தன்னோட ப்ளாக்ல ஒரு போஸ்ட் ல ஒரு விஷயத்தை பத்தி தான் எழுதுவாங்க.. ஆனா என்னால அப்டி எல்லாம் எழுத முடியாது..அதுனால என்னவெல்லாம் தோணுதோ, எல்லாத்தையும் எழுதுவேன்.. மனசு அலைபாஞ்சுண்டே இருக்கறதுனால மனம் ஒரு குரங்குன்னு தலைப்பு வெச்சு இருக்கேன். சரிதானே?

இன்னமும் நவராத்ரி hang over முடியலை எனக்கு.
நான் அபுதாபியிலே பார்த்துலேயே best கொலுன்னா, அது ஜெயந்தி மிஸ் வீட்டு கொலு தான்.
ஜெயந்தி மிஸ் என் வீடுக்காரரோட வீணை டீச்சர்.
ஹம்தான் தெருவில் அவங்க பில்டிங் ல தாம்பூலம் வாங்கிக்க போனேன்.
அழகா அடுக்கி வெக்கப்பட்ட பலவித பொம்மைகள் அலங்கார பொருட்கள், கண்ணைகவரும் புத்தர் சிலை, இதெல்லாம் போறாதுன்னு குழந்தைங்க முயற்சில கோவில் கோபுரம், கோவில் மதில் சுவர், தெப்பகுளம், நந்தவனம் அடிச்சு பட்டைய கிளப்பிட்டாங்க.
பொம்மைகள் எல்லாம் ரொம்ப unique ஆ இருந்தது . (அபுதாபியிலே ) நான் பார்த்ததிலே இதை மட்டும் தான நல்ல கொலு என்பேன் .
அபுதாபியில இருந்தும் நம்ம கலாச்சாரத்தை விடாம பின்பற்ற முயலும் இது போன்ற தமிழர்களுக்கு என்னோட வந்தனங்கள் வாழ்த்துக்கள்

நேத்திக்கி இங்கே இருக்கின்ற இந்தியன் ஸ்டோர் சென்று இருந்தேன் அப்பப்பா! தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்குன்னு உணர்த்திச்சு . கடையே விழாக்கோலம் பூண்டு இருக்கு . அந்த அளவுக்கு பூஜை உபகரணங்கள் , கோலங்கள், மருதாணி, தோரணங்கள் எல்லாம் குவிஞ்சு கிடக்கு. பாக்கறதுக்கே ரொம்ப இனிமையா இருக்கு.. ஆனா என்ன , இந்த Global Recession ல இதெல்லாம் அவசியமான்னு மனச சமாதானப்படுத்திக்கிட்டு வந்துட்டேன்.. இல்லாட்டி கூட இங்கே வீட்டுல இருக்கறது மூணு ரூம் அதுக்கு ஆறு தோரணமா கட்ட முடியும்? என்ன சொல்லறீங்க?

acidity பிரச்சினையால ஒரு வாரமா அவஸ்தை பட்டுகிட்டு இருக்கேன்.
நேத்திக்கி என் தோழி விசாகா போன் செய்தாள்.அவளிடம் நான் இந்த உதரவிதானத்தில் வலி என கூற, உடனே ஒரு மணி நேரத்தில் என் வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்து குடுத்தாள். அதாவது அவளுக்கும் இந்த வலி உண்டாம். அதற்கு ஊரிலிருந்து கொண்டு வரப்பட்ட மருந்து தான கேட்குமாம் . அதனால் உடனடி மருந்து (சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு ஆற விட்டு குடித்தல்) மற்றும் ரெகுலர் மருது ரெண்டையும் குழந்தையை தூக்கி வந்து சொல்லி குடுத்து விட்டு சென்றாள் புண்ணியவதி.. இந்த காலத்துலேயும் இந்த மாதிரி ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க.அவள் அன்புலேயே பாதி வலி குறைஞ்சிட்ட மாதிரி ஒரு பிரமை
அட.. பரவால்லியே .. Thanks my dear Vishu.. I am grateful to have a friend like you..
இன்னிக்கி இது போதும்ன்னு நெனக்கறேன் மீண்டும் நாளை சந்திக்கலாம்..

2 comments:

Deepak Kumar Vasudevan said...

என் பதிவிலும் இரண்டு குரங்குகளிருக்கே:


ஹை! குரங்கு!!

Ananya Mahadevan said...

:-))
Thanks Deepak for going thru such old posts!!!

Related Posts with Thumbnails