Pages

Friday, October 9, 2009

மனம் ஒரு குரங்கு-2

மனம் ஒரு குரங்கு - 2

ஜெயராம் ஸ்ரீனிவாசன் சேர்ந்து நடிச்ச படங்கள் எல்லாம் தேடித்தேடி எதுத்து பாக்க ஆரம்பிச்சுட்டேன்.
அதுல கடைசியா பார்த்த கண்கட்டு (1991)என்ற படம் சுமார் ரகம். அதற்கு முன்னர் பார்த்த ஆயுஷ் காலம் (1992) பற்றி எழுதாமல் இருப்பதே தேவலாம். பல்லாயிரக்கணக்கான வருஷங்களா இவங்க எடுக்கற அதே கதை தான். விபத்துல இறக்குற ஜெயராம் இதயத்தை எடுத்து இதய நோயாளியான முகேஷிற்கு பொருத்தறாங்க. தன் சாவுல ஏதோ மர்மம் இருக்குன்னு சொல்லிட்டு ஜெயராம் ஆவியா முகேஷ் ஐ துரத்தி துரத்தி தொந்தரவு பண்ணி கடைசியில் கண்டுபிடித்து பழி வாங்கும் படலம். கதை ஆரம்பிக்கவே இடைவேளை ஆகி விடுகிறது..இதில் ஒரு டுபாகூர் போலீசாக நம்ம ஸ்ரீனிவாசன்.. எவ்ளோ தான் முயற்சி பண்ணினாலும் சிரிப்பு வரலை. நல்ல திறமை உள்ள நடிகர்களைக்கூட இப்படி வீணடித்திருப்பது வருத்ததிற்குரியதே.டைரக்டர் யாரு தெரியுமா ? நம்ம மகேஷோட உயிருக்குயிரான கமல் தான். என் தம்பி பாலாஜி சொல்வது போல் சொல்லவேண்டும் என்றால் "Sorry - Rejected".

ஆயுஷ் காலத்தை பத்தி நொந்து போய் இருந்த சமயம் நம்ம ஊர்வசி பொண்ணு நடிச்ச காக்கதொள்ளாயிரம்ன்னு ஒரு மலையாள படம் ஏஷியாநெட் ல போட்டான் . இந்த படத்தை பார்த்தப்போ ஏன் கமலஹாசன் இவங்களை நடிப்பு ராட்சசின்னு சொன்னாருங்கறது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவா வெளங்குது. மனவளம் இல்லாத பொண்ணா வந்து அசத்திட்டாங்க. சின்ன குழந்தை போன்ற வெள்ளேந்தியான பாத்திர படைப்பு. வழக்கமான அசட்டு சிரிப்பு, உடல் பாவனைகள் (body language) இதெல்லாம் தாண்டி நிஜம்மாவே ஒரு குழந்தை தானோ என்று நினைக்கும்படி இருந்துச்சு . காலனி குழந்தைகளுடன் அழுகணி ஆட்டம் ஆடும் போதும் சரி, தன் அண்ணா முகேஷிடம் தனக்கு சும்மாங்காச்சுக்கும் பர்த்டே கொண்டாட வேண்டும் என்று அடம் பிடிக்கும் போதும் சரி, அம்மணி அசத்தல் ரகம்.hats off..

நீங்க கேக்கலாம் ஏன் நீ தமிழ் படமே பார்க்கறதில்லையான்னு. இங்கே Evision Subscription la சன் தொ(ல்)லைக்காட்சி மட்டும் தான் வரும். எத்தனை வாட்டி தான் பார்த்த படம் பாக்குறது? E-Masala Channel இல எப்போதும் எதாவது ஒரு தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட அல்லது ஹிந்தி படம் போடறான்.. ஆனா எல்லாமே பாடாவதி ரகம். அதான் மெதுவா மலையாளம் பக்கம் தாவிட்டேன். முன்னெல்லாம் மலையாளம் சுத்தமா புரியாது.. இப்போ கொஞ்சம் பரவால்லை. தேறிடுவேன்னு நெனைக்கறேன்.

சமீபமா பார்த்தப்போ 'அட' சொல்ல வெச்ச படம் ஈரம். Technical ஆ எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. தண்ணி visuals எல்லாம் superb. புதுமையை நாம வரவேற்கணும். யதார்த்தமா ரசிக்க வெச்ச படம் நாடோடிகள். அட்ரா சக்கை. special mention to Bharani. நாமக்கல் கோவில் காட்சியில் "டேய் உங்களுக்கும் சேர்த்து தான் டா பொங்கல் வாங்கறேன். ஏன்டா அடிக்கிறீங்க " என்று அப்பாவியா தர்ம அடி வாங்கும் காட்சி என்னை அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டும். BTW, dont miss his jokes in this week's vikatan issue.

இன்று மகேஷ் ப்ளாக் படிக்கும் போது அண்ணாமலையாரின் வலைப்பக்கம் பக்கம் போனேன். கீ போர்ட் கெடைச்சா சும்மா பிரவாகாம எழுதி தள்ளிடுவார் போல .. ரொம்ப யோசிக்கும்படி பல கட்டுரைகள். உதாரணமா பொதுவா வலைத்தளங்களில் திரைப்பட விமர்சனங்கள் எதை அடிப்படையாக வெச்சு எழுதறாங்கன்னு ரொம்ப ரசிக்கும்படியா அதே சமயம் சிந்திக்கும்படியாக எழுதி இருக்காரு. விமர்சனம்ங்க்ற தலைப்புல பார்க்கவும். முடிந்தால் படிக்கவும். http://manipuram.blogspot.com/search/label/விமர்சனம்

மேலே சொன்ன அண்ணாமலையாரின் பக்கத்தை படித்துக்கொண்டு இருக்கும் போது ஞானியின் வலைத்தளம் இருப்பது தெரிய வந்தது. க்ளிக்கினேன். ஞானி அவர்களுக்கு இப்பேர்ப்பட்ட விளக்கமான வலைத்தளம் இருப்பது இதனை நாள் தெரியாமல் இருந்ததற்கு வெட்கப்பட்டேன். ஞானி நான் மதிக்கும் ஒரு பத்திரிக்கையாளர். அவரை ஒரு முறை வடபழனி பிக் பஜாரில் சந்தித்து இருக்கிறேன். இனிமையான எளிமையான மனிதர், முக்கியமாக சிவாஜி (2007) படத்தில் சரக்கு இல்லை என்பதை ஆணித்தனமாக அடித்து கூறிய அஞ்சாநெஞ்சன். வாழ்க வளர்க. இவர் கந்தசாமி போன்ற படங்களை விமர்சிக்கும் காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நடிகர் திலகம் சிவாஜியின் இடம் இன்று தமிழ்த்திரையுலகில் காலியாக இருப்பதாகவும் அதை நிரப்புவதற்கு கமலை விட விக்ரமிற்கே அதிக தகுதி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். ஏன் சார் இப்படி எல்லாம்?

மீண்டும் இன்று வாஹதா மால் - லுலு ஹைபர்மார்கேட் செல்ல வேண்டி இருந்தது. வாராந்திர ஷாப்பிங். போன தடவை இந்தியன் ஸ்டோரில் பார்த்தது போலவே வித விதமான கண்கவர் பொருட்களை கன்னா பின்னா என்று கொட்டி வைத்து இருக்கிறார்கள் . பெண்களின் வீக்னஸ் ஷாப்பிங் தான்னு சும்மாவா சொன்னாங்க. நான் அந்த கவுண்டரில் "ஞே" என்று நின்று பார்த்து கொண்டு இருந்தேன். இதெல்லாம் நம்மளை கவுக்கரதுக்கு ஒரு சதி என்று என் உள்ள மனம் எச்ச்சரித்துகொண்டே இருந்தது. அதை சட்டை செய்யாமல் நான் "ஞே". ஒரு இஸ்லாமிய பெண் தன் மகளுடன் வந்தாள். விளக்கு, மணி, தீபக்கால், வாயில் தோரணங்கள், கோலம் ஸ்டிக்கர்கள் ஆகிவற்றை எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு இரண்டு மாலைகளை தன் மகள் கழுத்தில் அணிவித்து அழகு பார்த்துவிட்டு அகமகிழ்ந்து போனாள். அவங்களுக்கே அவ்ளோ ஆசை இருந்தா.. நாமெல்லாம் சொல்லவா வேணும்.. தப்பில்லை அனன்யா... நீ நின்னு வேடிக்கை பாத்துக்கோ என்று என் மனம் எனக்கு அனுமதி கொடுக்க மீண்டும் நான் "ஞே".
மீண்டும் சந்திக்கலாம் .. டாட்டா

5 comments:

Shanlax said...

எங்க ஊர் பக்கம் இததான் சொல்லுவாய்ங்க.. கட்டி ஏறகிவிடுரதுன்னு... ஏம்மா இம்புட்டு திறமைய இத்தன நாளு... எங்க ஆத்தா ஒளிச்சு, பொதச்சு வச்சு இருந்த?
இதுல கொடும என்னன்னா, ஏப, சாப்பை நாங்கதான் கெடசோமா? எங்கள ப்ளொக் போட சொல்லி.... எப்டியும் இந்தியா பக்கம் வராமலா போய்டுவீங்க ... அப்ப வச்சுக்குறோம்...
வேணாம்
வேணாம்
வலிக்கிது
அழுதுருவேன்
இதுவும் வுங்க போஸ்ட்ல இருந்து சுட்டதுதான்....

Ananya Mahadevan said...

neenga eppa saappai nu neengalae nenachukkitta? naane ungalaiellaam than inspiration a vechundu ezhudha aarambichu iurkken.. infact en gurunaathare neenga thaan.. hee hee.. thanks for stopping by.. adkikkadi vaanga..

Annamalai Swamy said...

Thanks for your comments on my blog. And for mentioning about my post in your article. I am trying to avoid redundant words and spelling mistakes in my latest posts.

ungalrasigan.blogspot.com said...

ஞாநி பற்றிப் போகிற போக்கில் ஓரிரு வரிகள் சொல்லியிருந்தாலும் நல்ல ஆப்சர்வேஷன் என்பது புரிந்தது. எளிமையான நடை மேலும் படிக்கத் தூண்டுகிறது.

Ananya Mahadevan said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரவிப்பிரகாஷ் அவர்களே. அவரைப்பற்றி நிறைய எழுத ஆசைதான். இருந்தாலும் எனக்கு அவ்வளவு தகுதி இல்லை. போகிற போக்கில் என்ற சொல்லில் ஒரு வேளை நான் அவரை அலட்சியப்படுத்தி எழுதிவிட்டேனோ என்று பதறி விட்டேன். இந்த பதிவின் அம்சமே வளவளன்னு எழுதாம ஓரிரு வரிகள்ல எழுதணும்ன்னு தான். :) மீண்டும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்களைபோன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் என் வலைத்தளத்திற்கு வருகை புரிந்தது என் பாக்கியமே.

Related Posts with Thumbnails