Pages

Sunday, November 1, 2009

செல்லவ்வா


செல்லவ்வா 



செல்லம்மா அத்தை, செல்லம்மா சித்தி, செல்லம்மா பெரியம்மா, செல்லம்மா மாமி, என்று பலர் பலவாறு அழைத்தாலும் எங்களுக்கு மட்டும் இவங்க செல்லவ்வா. செல்லவ்வா  பொருள்: செல்லம் - அவர் பெயர் , அவ்வா- பாட்டி (தெலுங்கில்), எங்களுக்கு  அம்மா  வழிப்பாட்டி.  அகராதியில் செல்லவ்வா என்ற சொல்லை தேடிப்பார்த்தால் அன்பு, தியாகம்  என்று இருக்கும். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர். அந்த காலத்து   மனுஷி   என்று நாமெல்லாம்   நினைக்கும்   இவருக்கு,    latest  technology  எல்லாம் அத்துபடி  .தீவிர கிரிக்கெட் ரசிகை எம் கே டி பாட்டு மட்டுமல்லாமல் நேற்றைக்கு வந்த யுவன் பாட்டும் தமன் பாட்டும் விரும்பி கேட்டு பாடியும் கலக்கும் இசை விரும்பி. இது மட்டும் அல்லாமல் கர்நாடக சங்கீதம் பயிலாவிட்டாலும் ஒரே ஒரு செகண்ட் கேட்டுவிட்டு,  reality shows ல் feedback கின்  தரத்தை நிர்ணயித்து ஜட்ஜ்களை qualify / disqualify செய்து  விடும் சூடிக்கை நிறைந்த super lady.

தன்னைத்தானே காலத்துக்கு ஏற்றார்போல எப்போதும்   upgrade  பண்ணிக்கொண்டே   இருப்பவர்  .

யாருக்கு   வேண்டுமானாலும்   உதவுவதற்கு   தயாரான  மகா  பரோபகாரி .
எத்தனை  பேர் வந்தாலும் முகம் சுளிக்காமல் சமைப்பதற்கு everready யாக  இருக்கும்  super woman.


என் குழந்தைப்பருவத்தின் அனேக ஆண்டுகள் செல்லவ்வா விடம் தான் கழிந்தது.

நிற்க. நான் இந்த போஸ்ட் எழுத ஆரம்பித்த பொழுது, அவ்வா வுடைய காமெடி சரவெடி யாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அனால் sentiment ரசம் சற்று அதிகமாகிவிட்டது
.

உலகத்தில் best channel பொதிகை மற்றும் Raj Digital Plus  என்ற அதீத நம்பிக்கை உடையவர். பொதிகையில் எத்தனை முறை அந்த மடிசாரணிந்த மாமி ஜலதரங்கம் வாசித்தாலும் "aggaaa, accharaaa" என்று  தாளம்  போட்டு  கேட்டு  ரசிப்பவர் .இது போன்ற கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகளை மறு மறு மறு மறு மறு ஒளிபரப்பு செய்தாலும்  விடாமல் பார்த்து ரசிப்பவர்.

சிவாஜி , பாலச்சந்தர் படங்கள் என்றால் அவ்வாவிற்கு  உயிர்.


நான்  பன்னிரெண்டாவது படிக்கும் சமயத்தில் அவ்வாவிற்கு  நான் TV பார்த்தால்   பிடிக்காது. எனக்கோ, அந்த Super Hit Muquabla எல்லாம் பார்க்காமல் சத்தியமாக படிப்பு ஏறாது. (இல்லாட்டி மட்டும்...). TV போட்ட அடுத்த  நிமிடத்தில் இருந்து என்னை பார்கவிடாமல் நச்சு பண்ணிக்கொண்டே இருப்பார். இதை பார்க்கும் நேரத்தில் 5 மார்க்குக்கு படிக்கலாம் இல்லியா என்று சொல்லுவார். (நிற்க. ஒரு கேள்வி, அது எப்படிங்க  இந்த 5 மார்க்க்கு படிக்க முடியும்? இந்த கேள்வி தான் வரும்ன்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? இன்று வரை இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை. பலாஜியிடமும் இதே பிட்டை போட்டு அவ்வா  வாங்கிக்கட்டிகொள்வார்)

அப்படியும் விடாமல் superhit muqabla பார்த்தால் , என் கெட்ட நேரம் பாருங்கள் , அப்போது பார்த்து அதில்  "Main Tera Boyfriend, Tu meri Girlfriend" என்று அரையும்குறையுமாக ஆடிக்கொண்டு இருப்பார்கள். அவ்வாவோ பல்லைக்கடித்துக்கொண்டு முறைத்து விட்டு, நிம்மதியாக, டிவி ஆப் பண்ணிவிடுவார். நானும் ஒரு முக்கால் மணி நேரம்  புஸ்தகத்தை வைத்துக்கொண்டு இந்த பக்கமும் அந்த பக்கமும் நடந்து கொண்டே   என்னெல்லாம் பாட்டு டாப் டென்னில் இடம் பிடித்து இருக்கும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டே பொழுதைக்கழித்து விட்டு தூங்கி விடுவேன்.

மறுநாள் ஸ்கூலுக்கு Super hit muqabla பார்க்காமல் போனால் மானக்கேடு என்று நான் சொல்லி தெரிய வேண்டாம். நான் SUMU பார்க்கலை என்று சொன்னால், எல்லாரும் சாயந்திரம் வரை காத்திருந்து விட்டு,  ஸ்கூல் பெல் அடித்த பிறகு என் மேல் காறித்துப்பிவிட்டு செல்வார்கள். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி பாப்புலர்.

எனக்கோ reverse  psychology தான் வேலை செய்யும். படி என்றால் படிக்க மாட்டேன். சும்மா விட்டு விட்டால், நானே Ramanujam range இல் Maths எல்லாம் போட்டு விடுவேன்.இது தெரியாமல் பாட்டி என்னை விரட்டோ விரட்டு என்று விரட்டி படிக்க வைத்தார். எந்நேரமும் அவருக்கு என் படிப்பு டென்ஷன் தான்.

வகிடு எடுத்துதான்  தலை  பின்னிக்கொள்ள  வேண்டும், அதிலும் கோணல் வகிடு தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.(இந்த விதிமுறையினால் என் ஸ்கூல் போட்டோவில் நான் 'ஞ'  என்று பேக்கு மாதிரி இருப்பேன்  ) ஒற்றை ஜடை போட்டுக்க கூடாது, ரெட்டை ஜடை போட்டுண்டா தான் முடி வளரும், ஹேர் பின்னா? மூச்... 365 நாட்களும் எண்ணையை தலையில் கவிழ்த்திக்கொண்டு தான் ஸ்கூலுக்கு போக வேண்டும், ஷாம்பூ எல்லாம் prohibited. சியக்காய்  மட்டும்  போட்டு  குளித்து , அது  எனக்கு  allergy ஆனாலும்  பரவாயில்லை , தும்மிக்கொண்டே  ஸ்கூலுக்கு  செல்லுதல்  பலன்  தரும்  என்பதெல்லாம்  அவ்வாவுடைய கொள்கைகள். (நாங்க கேட்ருவோமே.. ஹீ ஹீ)

இப்படி அவ்வா பண்ணிய நச்சு ஒன்றல்ல இரண்டல்ல. எப்படியோ ஒரு வழியாக படித்து பாஸ் பண்ணியாகி விட்டது. இப்போது என் கல்யாண கலாட்டா ஆரம்பம். பல்லாண்டு காலம் எனக்கு வரன் தேடினார்கள். அப்படி தேடிய பொழுது, பல இடங்களில்,  வெவ்வேறு புடவைகள் கட்டி, பல போட்டோக்கள் எடுத்தார்கள். இது அத்தனையும் அவ்வாவின் பிளான். போன வாட்டி இடம் ராசியில்லை, back ground சரியில்லை அல்லது ராசியில்லை , கட்டிண்டது சரியில்லை, முந்தானை சொருகவில்லை, புடவை ராசியில்லை என்றெல்லாம் சொல்லி சுமார் 300 படங்கள் எடுத்தார்கள். வீட்டுக்கே போட்டோக் கிராப்பர்களை வரவழைத்து போட்டோ எடுக்கப்பட்டேன்.  ஜிப்ஸி உடை அணிந்து பரதநாட்டிய போஸ் கொடுக்காது மட்டும் தான் பாக்கி.கல்யாணத்துக்கு கொடுக்கும் போட்டோவில் சிரிக்க கூடாது என்று strict order போட்டு விட்டார் அவ்வா. நான் சிரிக்காவிட்டால், குரங்கே தோற்கும்  விதத்தில்  அழகுடன்  திகழ்வேன் . இதனாலேயே   பலர்  பார்த்து பயந்து   போட்டோவை   திருப்பி   அனுப்பி விட்டனர்  . இது புரியாமல்   அவ்வா மட்டும் இந்த போட்டோ ப்ராஜெக்ட் ஐ கைவிடாமல் , நான் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் போட்டோ எடுக்கப்பட்டேன். பெங்களுருவிலும் 4-5 போட்டோ எடுத்தேன். அதிலும் இதே கதை தான்.   கடைசியில், வெப்காமில் என்னை பார்த்து  தான் எனக்கு நிச்சியம் ஆயிற்று .

பாலாஜியின் காலேஜ் கிளம்புதல் ஒரு மெகா ப்ராஜெக்ட் ஆகும்.பாலாஜி காலேஜ் கிளம்புவதற்கு அவ்வா தனியாக ஒரு Instruction Manual தயாரித்து இருப்பார். அவன் குளித்துவிட்டு வந்ததும் உடம்பை தொடைச்சுக்கோ பாலாஜி, வகிடெடுத்து தலை வாரிக்கோ,  லூப்புக்குள்ளே  பெல்ட் போட்டுக்கோ,சாக்ஸ் போட்டுண்டு shoe போட்டுக்கோ ஸ்டாண்ட் எடுத்துட்டு சைக்கிள் எடு போன்ற அரும்பெரும்  ( யாருக்குமே தெரியாத) instructions ஐ அவ்வா அள்ளி வழங்குவார். அவன் மிகவும் பொறுமையாக எதையும் கண்டு கொள்ளாமல் போய் விடுவான். .

நானோ என் தங்கையோ அல்லது பாலாஜியோ வெளியில் போனால் நாங்கள் வீடு திரும்பும் வரை அவ்வாவிற்கு நிம்மதியாக இருக்காது. அதுவும்  மழை கிழை என்று மாட்டிக்கொண்டோமேயானால், அவ்வளவு தான். அவ்வாவிற்கு வயிற்றை கலக்கி விடும்.

பாலாஜியின் favourite அயிட்டங்களான pizza, burger, chat items எல்லாம் computerized ingredient finder போல செயல்பட்டு, யோசித்து கண்டுபிடித்து விடுவார். நாக்கில் அந்த பதார்த்தத்தை வைத்த உடனே அவ்வாவின் கண்கள் மேலே பார்க்கும், மூளை தீவிரமாக வேலை செய்து இதில் என்னவெல்லாம் போட்டு இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து கண்டுபிடித்து விடும்.  இதற்கு பயந்து கொண்டே பாலாஜி அவ்வாவிற்கு புதியதாக ஏதும் ருசி பார்க்க கொடுப்பதில்லை. கண்டுபிடித்தால் தான் என்ன தப்பு என்கிறீர்களா? அதான் பரவாயில்லையே. .. கண்டுபிடித்து, இதென்ன பிரமாதம், நான் இதே போல செய்து தருகிறேன் பார் என்று kitchen னுக்குள்  நுழைந்து அவனுக்கு பண்ணி தந்து விடுவார்.
அவன் நிலைமை ரொம்ப பரிதாபத்திற்குரியது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவ்வா கண்களில் cataract  ஆபரேஷன் பண்ணிக்கொண்டார். சில நாட்களுக்கு அணியுமாறு அறிவுறுத்தி ஒரு black  glass அணிவித்து இருந்தார்கள். ஆஸ்பத்திரியிலிருந்து discharge ஆன அவ்வா, வீட்டில் வந்து சாப்பிட உட்கார்ந்தார். Tube light ஐ(கண்ணாடியுடன் ) பார்த்து," சை, ஒரே "Low Volatge" என்றாரே  பார்க்கலாம் !!!

எது எப்படியானாலும், அவ்வா என்ற ஒரு அன்பு தெய்வம் கூட இருப்பது தான் எங்களுக்கு ஒரு சக்தி. அவர் மட்டும் இருந்து விட்டால் தைரியமாக இருக்கும். தன் ஆழ்ந்த அனுபவத்தில் நிறைய அறிவுரை சொல்லுவார். நாங்கள் தான் கேட்டால் பரவாயில்லையே

வயதானாலும் அவரது சுறுசுறுப்பும், determination னும், எங்களை வாய் பிளக்க வைக்கும். நிமிடங்களில் குட்டி வருண் பாப்பாவிற்கு 'கம்மா'(அவன் பாஷையில் காரமுடைய எண்ணையில் பொறிக்கப்பட்ட சமாச்சாரங்கள்) தயாரிப்பதாகட்டும், நான் ஊருக்கு கிளம்பும் நேரம் என் கணவருக்கு பிடித்த சுண்டைக்காய் வத்தல், மாங்காய் இஞ்சி கொடுத்து விடுவதாகட்டும், அவருக்கு நிகர் அவர் மட்டுமே. அவர் வயதில் நாங்கள் எல்லாரும் நினைத்தாலும் அவரைப்போல ஆக முடியாது என்பதே உண்மை. She is definitely our role model. .. We love you Avvaa...






8 comments:

Shanlax said...

அப்போதெல்லாம், போடியில் இருக்கும் போது எங்கம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால்.. எங்களுக்கு பெரியம்மாதான் பால் தருவார்கள் (தாய்). உங்களுக்கு அந்த பாக்கியம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

Ananya Mahadevan said...

:-)

vetti said...

kalakkitta po! I hope avva knows this...

Ananya Mahadevan said...

Thanks, I hope Balaji reads it out for her.

Unknown said...

எல்லாரும் காமெடியாக் இந்த பதிவை படித்து சிரித்துக்கொண்டிருக்க எனக்கு குற்ற உணர்ச்சி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. எனது பாட்டி கடைசி காலத்தில் என்னை (அவரை) வந்து பார்க்கவேண்டும் என்று சொன்னபோதும் நான் (vacation) முடியப்போகிறது என்று பொள்ளாச்சிக்கு போய்விட்டேன். அடுத்த vacation வருவதற்குள் பாட்டி இறந்துவிட அபுதாபியில் இருந்தபோது செய்தி கேட்டவுடன் துக்கத்தை விட ‘பாட்டியே கூப்பிட்டும் போய் பார்க்கவில்லையே, இனி எப்போது பார்ப்பது’ என்று என் மனசாட்சி திட்டியது இன்றும் உரைத்துக்கொண்டு இருக்கிறது. செல்லவ்வா நீண்ட காலம் இருந்து பாலாஜியையும், அருண் வருண் பாப்பாக்களை கொஞ்சி, அதட்டி வளர்க்கவேண்டும் என்று பிரார்த்துக்கொள்கிறேன்.

Anonymous said...

Super avva :) When i read the post it was like reading about my paati. She is the same. Loved ur post!

Ananya Mahadevan said...

Mahesh,


நீ மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டதே போதும், உன் பாட்டியுடைய ஆத்மா நிச்சயமா உன்னை ஆசீர்வதிக்கும். அவங்களுக்கெல்லாம் நம்மை திட்ட தெரியாது. அதுனால நீ கவலைப்படாதே.
Love always flows downwards, it is hardly reciprocated upwards is what I feel. The love that our grandparents or parents have given us is never returned by us. Instead, we carry on with our lives and shed our love on our offsprings and the next generation offsprings. I realised this in 2003 and ever since then, I have started worshipping my granny. She has worshipped all the three of us. for them we are the world, sometimes, the very reason for their existence. I still feel guilty for hurting her due to my words and actions. I have cried many times while here in Abudhabi. She cant hear clearly in phone, but she very well knows what I have for her in my heart.
Thanks for your wishes.

Ananya Mahadevan said...

Thanks Mittu. Guess all grannies are one and the same throughout.

Related Posts with Thumbnails