Pages

Tuesday, November 3, 2009

மருமகனே மருமகனே வா வா

மருமகனே மருமகனே வா வா

நேற்றைக்கி வெகுநேரம் போனில் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு விசாகாவின் அழைப்புக்கு செவி சாய்த்துவிட்டு சமயலறைக்கு போய் விட்டேன். மதிய உணவு கழித்து சுமார் 5.30 மணி அளவில் பார்த்தால் மகேஷின் offliner வந்திருப்பது தெரிந்தது. அகிலாவிற்கு  வலி எடுத்துவிட்டதாகவும் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் கூறியிருந்தான்.
எனக்கென்னமோ ஒரு இனம் புரியாத tension, excitement எல்லாம்  தொற்றிக்கொண்டு  விட்டது. என் தங்கையின் டெலிவரியின் போது அழுதே விட்டேன்.தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடுமே. ஜிங் என்று ரெண்டு கதாநாயகர்கள் இந்த பூமியில் வந்து குதித்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை குதூகலமும் கொண்டாட்டமும் எங்கள் வீட்டில் தொடர்கிறது. 
இருந்தும் அகிலாவிற்கு இவ்வளவு சீக்கிரம் வலி வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை என்பதே உண்மை. சட், ஒரு முக்கியமான நேரத்தில் online னில் இல்லாமல் போய் விட்டோமே என்று வருந்தினேன். ராத்திரி எல்லாம் யோசித்துக்கொண்டே இருந்தேன். எதிர்பார்த்து போலவே காலையில் sms அனுப்பி இருந்தான்
Double Treat  போல மெயில் திறந்து பார்த்தால் குழந்தையின் படத்தோடு அகிலாவையும் எடுத்து எங்கள் எல்லோருக்கும் அனுப்பி இருந்தான். குழந்தையை பார்த்த பொழுது அகிலா பட்ட கஷ்டம் எல்லாம் பரவாயில்லை என்றே தோன்றியது. குழந்தை ஆஜானுபாகுவாக அழகோ அழகு. ஆதித்யா என்ற நாமகரணமும் ஆகிவிட்டது.
Phone பேசுவதை விட படங்கள் இருப்பதால் SMS, Email, Phone பேச்சை விட 1000 விஷயங்கள் கூடுதலாக சொல்லியது. பார்த்தாலே பரவசம். ஆதித்யா பாப்பா முதன் முதலில் நானும் பார்த்துவிட்டேன் என்று ஒரே மகிழ்ச்சி.
Congratulations Mahesh - Akila on the birth of Adithya.
இனி அய்யா ப்ளாக் பக்கம் வருவாரா என்று எனக்கு சந்தேகமாதான் இருக்கு. Adithya is extremely attractive.
Welcome to this world Aadithya.

11 comments:

Anonymous said...

Congrats mahesh. Ananya i knew how excited you would be to see the pic. You were eagerly waiting to know its boy or girl, mahesh surprised you by sending pic! Great!!

Ananya Mahadevan said...

Mittu,
More than being excited about the baby being a boy or girl, I was excited about its arrival. As he had mentioned in his blog, he arrived one week before he was expected. Ironically, Mahesh's previous post on his Tanjore painting in which he mentioned he would suspend painting for some time as he needs to spend more time with his baby. The baby was overjoyed I guess, and rushed into this world. Blessings to him.

Anonymous said...

I have heard boy babys are usually born a week ahead of their due date. Anyways marandhudama mahesh kitta treat kelunga.

Ananya Mahadevan said...

Mittu,
ஆளு தலைமறைவா இருக்கும்போது எங்கே Treat கேக்கறது?
அவனை போன்ல பிடிக்க முடியலை, CHATல காணோம், மெயில் அனுப்பினா no response. இது வரைக்கும் இந்த போஸ்ட் கூட படிச்சதா தெரியலை.
ஹும்ம் பாக்கலாம்.
அவனோட ஜால்ரா சத்தம் இல்லாட்டி போஸ்ட் கூட எழுத வரமாட்டேங்குது.. ஹீ ஹீ

Anonymous said...

Nan vena konjam Jallra thattava?? :)

Ananya Mahadevan said...

ஏன்னா தான் சொல்லுங்க மிட்டு, மகேஷ் மாதிரி ஜால்ரா யாராலுமே தட்ட முடியாது ;-)

Anonymous said...

:( too bad ananya..

Unknown said...

அக்கா... என் பையனுக்கு இதை விட சிறப்பா இந்த உலகத்துக்குக்கு ஒரு வரவேற்பு வேறு யாராலேயும் குடுத்திருக்க முடியாது... ரொம்ப நன்றி... ஆதியோட ஸ்பெஷல் முத்தம் உனக்கு... அவன் அவனோட அத்தையை ரொம்ப விசாரிக்கிறான்... நீயே அவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதிலே இருந்து பையன் ஆம்பளைங்க கையையே புடிக்க மாட்டேங்குறான்... நான் அனுப்பின வீடியோவிலே உன்னை பற்றிய உரையாடலும் வந்திருந்ததை கவனிச்சியான்னு தெரியலை... நன்றி மிட்டு... எனக்கு ஜால்ரான்னா என்னன்னே தெரியாது... மனசுக்கு தோனினதை நேரடியா சொல்லிடுவேன்.. அவ்ளோ தான்... ஜால்ரான்னா என்ன அக்கா? பொடியன் நாளைக்கு அவனோட அம்மா வழி தாத்தா வீட்டுக்கு போயிட்டு மாச கடைசியிலே தான் வருவானாம்... அதுவரைக்கும் வேள்ச்சேரிக்கும் மாம்பலத்துக்குமா அலையனும்... மீண்டும் அவன் அத்தைக்கும், மாமாவுக்கு ஆதியின் செல்ல் முத்தங்கள்...

Ananya Mahadevan said...

I did hear you saying all that in the dress changing video of aadi. orey discomfort avanukku . ponn kuzhandaikku podura dress pottu vitrukkeenga. I guess you were ready for a baby girl. it is nice to see your comments. hey kuzhandai porandhu ten days la function irukkume? is it there in your custom? Thanks sooo much for passing on aadi's love to us. ippo thaan enakku oru post ezhudharathukku energy vandhu irukku. :-)
Mittu, comon, velaiyaattukku sonnen.

Anonymous said...

Why no new post yet Ananya? Am waiting for one :)

Ananya Mahadevan said...

ippo thaane jalra sattham balammaa kettu irukku. muyarchi pannren mittu. promise pannalai. but will put my best effort. :-) am glad someone is waiting for my post!!!

Related Posts with Thumbnails