Pages

Friday, November 6, 2009

விளம்பரங்கள்

விளம்பரங்கள்


நாளின் முக்கால் வாசி நேரம் டி வீ முன்னாடி அமர்வதால் இந்தப்பதிவை எழுத தூண்டப்பட்டேன்.பாடல்களைப்பத்தி எழுதியாச்சு.சினிமாவா?மூச்.... கொன்னுடுவாங்க.இனி பாக்கி இருப்பது விளம்பரங்கள் மட்டும் தான்.

சில விளம்பரங்கள் பார்க்க தூண்டும். சில விளம்பரங்கள் எரிச்சல் மூட்டும். சில  விளம்பரங்கள்  சிரிப்பு  மூட்டும் .சில விளம்பரங்கள் இசையால் அழியாப்புகழ் பெறும்.  அனேக  விளம்பரங்கள்  வெற்றி  அடைவது  இந்த  ஹியூமர் கான்சப்டில்  சில விளம்பரங்கள் தமிழிலேயே இருந்தாலும் நாராசமாக இருக்கும். why blood same blood என்னும் அளவிற்கு அலறுவார்கள். For eg:" பாக்குகளில் சிறந்த பாக்கு நிஜாம் பாக்கு, வாய் மணக்க, தாம்...பூ...லம் சிறக்க நிஜாம் பாக்கு. உனக்கு எனக்கு என்று அனைவரும் போட்டி போட்டு கேட்டு வாங்கும் பாக்கு நிஜாம் பாக்கு." இது ரேடியோ விளம்பரம் என்றாலும் இதையே TV யிலும் காட்டி கழுத்தறுத்தார்கள்.தான். சில விளம்பரங்கள் மகாகேவலமாக தமிழில் டப் செய்து உயிரை வாங்குவார்கள்.(shahrukh khan மலையாளத்தில் airtel network கிற்கு ஒரு கொடூரமான மொழியில் பேசி கதி கலங்க வைக்கிறார்.. முடியலைங்க!)

நல்ல இசை நல்ல கான்செப்ட் நல்ல punchline இது  இருந்தால்  போதும்  அந்த  product நன்றாக  விற்க  ஆரம்பித்து  விடும்.

மனதை நெருடும் படியாக இருந்த சில விளம்பரங்களை பற்றிய பதிவு தான் இது.

சிகப்பழகு  கிரீம் போட்டுக்கொண்டால் நேர்முகத்தேர்வில் வேலை கிடைத்து விடும், அழகிப்போட்டி ஜெயிக்கலாம், கல்லூரியில் admission கிடைத்துவிடும்  சினிமா நடிகை ஆகலாம்,  சிகப்பழகு இருந்தால் ஒப்பனை தேவையே இல்லை , பழைய நடிகையின் ஜாடை இருந்தாலும் சிகப்பழகு இல்லாமை காரணத்தினால் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை, உபயோகிக்கும் அதே நாள் பாய்பிரெண்டு கிடைப்பான்  போன்ற பேத்தல் விளம்பரங்களின் தொல்லை தாங்கவில்லை. இதில் காமடி என்னவென்றால், இதே நிறுவனம் செயற்கை ரசாயனங்களால் செய்யப்பட கிரீம்கள் தயாரிப்பதோடு ஆயுர்வேத முறைப்படி குங்குமப்பூ எல்லாம் போட்டு தயாரிக்கிறார்கள். அதற்கு தனி விளம்பரம்!!! என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திபன் முதன் முதலாக புதிய பாதை என்ற படத்தை எடுத்த போது, வழக்கம் போல விகடன் ஜால்ரா அடித்து அவரை ஒரு தொடர் எழுதுமாறு வேண்டிக்கொண்டார்கள். பார்த்திபனின் novelty யை ரசித்து நான் படித்தது  நன்றாக நினைவு இருக்கிறது. அவர், தம் கல்லூரி நாட்களில் பலமுறை டியூப் டியூபாக இந்த சிகப்பழகு கிரீம்களை உபயோகித்ததாகவும், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்து இருந்தார். இதெல்லாம் இவர் சொல்லிதான தெரிய வேண்டுமா ? அவர்களது பேத்தல் விளம்பரத்தை பார்த்தாலே தெரியாது? நான் பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கும் போது, 6 வாரங்களுக்கு பின்னர் நல்ல பலன் அளிக்க வல்லது என்று நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி வாங்கினேன். ஒவ்வொரு வாரமும் எங்கம்மாவிடம் போய் கேட்பேன். பல்பு தான் கிடைத்தது. சிகப்பழு ஒன்றும் கிடைத்ததாக  தெரியவில்லை. எல்லாரும் என்னை பார்த்தாவது திருந்துங்க..

அடுத்து இந்த டியோடரண்ட் அல்லது உடம்பில் போட்டுக்கொள்ளும் பவுடர். எங்கள் வாசனைப்போருளை உபயோகப்படுத்தினால் பெண்கள் எல்லாரும் (பிகினி உடையில்) உங்களை பின்தொடர்வார்கள் என்ற விளம்பரத்தை பார்த்து அதிர்ந்தேன். இந்தியாவில் இத்தனை கேவலமான விதத்தில் ஒரு விளம்பரமா என்று என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அக்கிள்களில் பவுடர் போட்டுக்கொண்டால் தன்னம்பிக்கை மேலோங்கும்  போன்ற பிதற்றல்களும் உண்டு. எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு ஒரு விதமான பவுடர், கிரீம், சோப்பு, Face Wash போன்றவை என்னைப்போன்ற எண்ணெய்ப்பசையுள்ள சருமம் படைத்தவர்களை ஏதோ மகபாவிகள் போல நடத்தினார்கள்.

இருப்பதிலேயே மெகா பிதற்றல் ஷாம்பூ விளம்பரங்கள் தான். சத்தியமாக சொல்கிறேன், இந்த மார்க்கட்டிலுள்ள எந்த  ஷாம்பூவை  உபயோகித்தாலும் அவர்கள் விளம்பரத்தில் காட்டுவது போல முடி ஆகாது . ஆகவே ஆகாது. ஆனால் நிமிடத்திற்கு நூறு முறை கூந்தல் உடையாது, செதில்கள் இருக்காது போன்ற டுபாக்கூர் விளம்பரங்கள் மட்டும் நின்ற பாடில்லை.

இப்போது நான் அடிக்கடி காண்பது குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்து பானங்களைப்ப்  பற்றியதாகும். எல்லா பெற்றோருக்கும் தம் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்படவேண்டும்  என்ற தீராத (பே)ராசை தான் என்றாலும் அதற்கோசம் வெறும் நீராகாராம் போன்ற இந்த கஞ்சி மாவை மட்டும் தந்தால் போதும் உங்கள் குழந்தைகள்  சக்திவாயிந்தவர்களாக, உயரமானவர்களாக , கூர்மைநிறைந்தவர்களாக மாறுவார்கள் என்று (துஷ் ) பிரச்சாரம் செய்கிறார்கள்.


இதைவிட கொடுமை சின்னஞ்சிறு குழந்தைகள் இவர்களுடைய பானத்தை குடித்தாலே போதுமாம். முழுமையான ஊட்டச்சத்து மொத்தமும் கிடைத்து விடுமாம். என்ன ஒரு கண்றாவி. நான் கேட்கிறேன், பெற்றோர்கள் என்ன அவ்வளவு தத்தியா?

ஆங் சொல்ல மறந்துட்டேன். நம்ம teleshopping விளம்பரங்களை மறந்துவிட்டோமே.  ஈஈஈ என இரத்தல் இழிந்தன்று என்று நாலடியார் சொன்னாலும் கேட்காமல், ஈஈஈ என்று பல்லைக்காட்டி கண்டத்தையும் பற்றி பித்றோ பிதற்றேன்று பிதற்றினால் அது மகிழ்ச்சி என்று பொருள் கொள்ள வேண்டுமாம். பல்லு மஞ்சளா  இருக்கும், சோபா சரியில்லாமல் இருக்கும், வயறு பெருத்து இருக்கும், காய்கறி நறுக்க முடியாமல் உழல்வார்கள். அப்பெல்லாம் சோகமே உருவாகி, ஏதோ உணவில்லாமல், உடையில்லாமல், வீடில்லாமல் வேற்று கிரகத்தில் வாழ்பவர்கள் போல முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு இவர்கள் வெட்டிப்பேச்சு பேசுவார்கள். பேட்டி எடுக்கறாங்களாம். அப்புறம் பல் வெண்மையாக்கும் பசை உபயோகபடுத்தியோ, ஒரு டுபாகூர் சோபா (காற்று ஊதி பெருசாக்குவது) வில் அமர்ந்தோ, வயிறு கன்னா பின்னா என்று அநியாயமாக குறைந்தோ(ஜட்டி போட்டுக்கொண்டு side இல் நிற்பார்கள் before and after னு திரி கொளுத்தி போடுவார்கள் நாமும் ஞ என்று நம்புவோம்!!) அல்லது sandwich கோசம் காய் நறுக்கும் சீவல்  மிஷின் உபயோகித்தோ அவர்களது 32 பற்களையும்  காட்டி சிரியோ  சிரி என்று  சிரித்து  தள்ளுவார்கள் . ஏனா? அட அதாங்க மகிழ்ச்சி. பல்லைக்காட்டினா மகிழ்ச்சி.உடனே நாமும் தொலைபேசி எடுத்து அங்கே காட்டப்படும் நம்பரை டயல் செய்ய வேண்டுமாம் !!! டிங் டிங் டிங் !!!(சுவத்துல இடிச்சுக்கறேங்க!)

மொத்ததுல எங்க ரவி மாமா சொல்லுவதைப்போல எப்போ பாரு வாய் நாற்றம் அக்குள் நாற்றம்,தொடை இடுக்கில் சொறி , சிரங்கு இதே தான் விளம்பரங்கள். உஷா techniques , Monaco போன்ற விளம்பரங்கள் கிச்சு கிச்சு மூட்டி மனதில் பச்சக் என்று ஒட்டுகின்றன . யாராவது docomo புதிய விளம்பரம் பார்த்தீர்கள? ரயிலில் பயணிக்கும் பயணிகள் பாடுவது போல அமைத்திருக்கிறார்கள். Very Catchy...

6 comments:

Anonymous said...

Nice post Ananya. Sila ads yen da paarthom nu irukum.

"நல்ல இசை நல்ல கான்செப்ட் நல்ல punchline இது இருந்தால் போதும் அந்த product நன்றாக விற்க ஆரம்பித்து விடும்."

That's true..some are really nice esp Bank of India's "Piggy bank", Bru coffee Ad (Lakshmi Rai's), RMkV ads are too good. Appealing for eyes too.

Ananya Mahadevan said...

Loads of Good Ads to recall..This post was on the stupid ones.the good ones, one black coffee please? sony ericsson, regal venmai maaraadhu by kushboo(music at its best),Ujala jingle thunigalai amutthu, eduthu pizhinjidu, thunigal palichidum. ahahaa.. vplus adangiya vishesha vingyaana chikkanamaana ennaadhu? ujala.. verellam edhukku ujala irukku.. ting ting..
ippadi nirayyyyyyyyyyyyyyyyyyyyyyya ads irukku.

Unknown said...

சில விளம்பரங்கள் என்றும் நம் மனதில் பதிந்து விடுகின்றன - ஹீராவும் கௌதமியும் (பின்னர் அசின் அறிமுகமான) வந்த ‘AVT' வாங்கிட்டீங்களா? வாங்கிடீங்களா? வும், அதே அசின் வந்த ஹயக்ரீவா சில்க்ஸ் விளம்பரமும் எனக்கு பிடித்தவை...

Ananya Mahadevan said...

Yeah I remember reading your posts on the above mentioned ads. how abt butterfly appliances ad? I am sure it must be ARR. ungal ninaive ... ungalukkenave butterfly, ungal butterfly nu varum. quite beautiful song.

dondu(#11168674346665545885) said...

இந்த சென்னை சில்க்ஸ் விளம்பரம் பர்த்திருக்கிறீர்களா? எனக்கும் என் பெண்ணுக்கும் மிகவும் பிடித்தது.
பார்க்க:
http://www.youtube.com/watch?v=jYcK4Om3efA

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ananya Mahadevan said...

ஓ பார்த்திருக்கேன் சார். உங்களை ரொம்ப கவர்ந்து இருக்கு போல்ருக்கு. :)

Related Posts with Thumbnails