Pages

Sunday, November 8, 2009

Happy Birthday Balaji

1987 ஆம் ஆண்டு  நவம்பர்  மாத  குளிரில்  எட்டாம்  தேதி அயனாவரம் பகுதியில்  பாலாஜி  பிறந்தான் . மாமாவின்  மகன் என்றாலும், நாங்கள் வளர்த்த பையன், எங்களுக்கு தம்பி.குழந்தையில்  இருந்தே  எங்களிடம்  மிகவும்  அன்பாக  இருப்பான் . எங்கள்  வீட்டு  செல்ல  பையன் . சின்ன   குழந்தையாக   இருக்கும்போது   அவன்   பெரிதாக   துஷ்டத்தனம்   எல்லாம்   பண்ண   மாட்டான் .  ஆனால்  நச்சு  ஜாஸ்தி .யாரும்  புதிய  மனிதர்கள் வீட்டிற்கு  வரக்கூடாது  என்பான் .
எங்கள் சொந்தக்காரர் ஒருவர் பார்ப்பதற்கு Star Trek - Spark மாதிரி இருப்பார். அவரைக்கண்டால் ஒரே allergy இவனுக்கு. அழுது தீர்ப்பான்.




 சின்ன வயசில் மிகவும் cute ஆக இருப்பான். அப்புறம்  இப்போ தான் பாவம்  இப்படி ஆயிட்டான்.. ஹி ஹி
பாலாஜி சமத்தா ஸ்கூல் போவான் நல்லா படிப்பான்.எல்லாரையும் நக்கல் அடிப்பான்.செல்லவ்வா தான் அவனோட நல்ல கம்பெனி.அவங்க இல்லாம பொழுதே போகாது.படிப்ஸ் மட்டுமே இல்லாமல், மிமிக்ரி, ADZAP போன்றவற்றிலும் நிறைய பரிசுகள் வாங்கி இருக்கான்.இவனுடைய ஒரே ஒரு weakness சாப்பாடு.
வசந்த பவன், சரவண பவன்,Pizza Hut, Dominos  பக்கம் எல்லாம் போனால் ஜொள்ளு ஊற்றெடுக்கும் .
இவனுக்காக அத்தையும் அவ்வாவும் வேலை மெனக்கெட்டு யோசித்தும், செல்லவ்வா வீட்டிற்கு வரும் டியூஷன் குழந்தைகளின் தாயார்களிடம் எல்லாம் CBI  ரேஞ்சில் enquiry  நடத்தியும் விசாரித்தும்  பிரைடு ரைஸ், மசாலா ரைஸ் எல்லாம் பண்ணி கொடுத்தால், கூலாக சாப்பிட்டுவிட்டு அதில் தப்பு சொல்லுவான்.பெண்கள் வீட்டில் இருக்கும்போது பேசத்தானே செய்வார்கள்.அத்தையும் அவ்வாவும் ரொம்ப தேவை இல்லாம discuss  பண்ணறாங்க என்று ஒரு முறை புலம்பினான்.ஐந்து வயதிருக்கும்போதே அத்தை அவ்வா மாதிரி மிமிக்ரி பண்ணி காட்டியவன் இவன். இப்போ நக்கலுக்கா பஞ்சம்???

தசாவதாரம் படம் வந்த புதிதில், இவன் பலராம் நாயுடு  கமல் மாதிரி பேசிக்காட்டி இவனை என் கணவர் 'அப்பாராவா?' என்று தான் அழைப்பார்.


கொஞ்சம் Optimism, கொஞ்சம் Hope இன்னும் கொஞ்சம் Confidence எல்லாம் கடவுள் அருளால் அவனுக்கு கிடைக்க பெற வேண்டும். சீக்கிரமே அவன் நினைப்பதெல்லாம் கைகூட வேண்டும் . மத்யானம் lunch unlimited ஆ serve  பண்ணறா  மாதிரி   ஒரு   நல்ல  company ல  அவனுக்கு  வேலை   கிடைக்க  வேண்டும் . 


சீக்கிரமே அவன் கனவுகள் எல்லாம் நிறைவேற அவனை ஆசீர்வதிக்கிறோம்.
- அக்கா அத்திம்பேர்.

4 comments:

Unknown said...

Thank you Athimber and Akka..

Anonymous said...

My best wishes to Balaji!

Unknown said...

Balaji resembles a lot like actor Bharat... unga sonthakkarara?

Ananya Mahadevan said...

yaaru bharath enga sondhama nu kekkuraiyaa? oru vaatti en friend sarath kittakka sollindu irundhen that balaji is of late resembling bharath nu adhukku avan yen ipdi balajiya kevalappaduthare nu sollittaan. adhunaala no comments.

Related Posts with Thumbnails