டிஸ்க்லெய்மர்: இந்த பதிவிற்கும் ரகு என்ற பெயர் கொண்ட யாருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் குழந்தையாக இருந்தப்போ ”ஆப் ஜைஸா கோயீ மேரி சிந்தக்கீ மே ஆயே தோ பாப்பஞ்சாயே” என்ற பிரபலமான பாட்டைத்தவிர எனக்கும் ஹிந்திமொழிக்கும் பெருசா எந்த சம்பந்தமும் இல்லை. ரொம்ப வருஷம் கழிச்சு தான் அது பாப்பஞ்சாயே இல்லை, பாத் பன்(ban) ஜாயே என்று புரிந்தது. அ, ஆ, இ, ஈன்னு போடில பவானி மிஸ் சொல்லி குடுத்து இருந்தாங்க. அதுக்கே ஓவர் அலம்பல் காட்டிண்டு இருப்பேன். அங்கே அதெல்லாம் அப்போ ரொம்ப பெரிய விஷயம்! அப்பாவுக்கு மாற்றலாகி விஜயவாடா போனப்போ, CBSE ஸிலபஸ்.ஒரேடியா ஹை ஹை தான். சுத்தமாக ஒண்ணுமே புரியலை. சரளா டீச்சரின் க்யூட்டிக்யூரா வாசனை நல்லா இருந்ததேயொழிய, ஹிந்திவகுப்பு சுத்தமா நல்லா இல்லே. வழக்கம்போல எங்கம்மாவுக்கு மூக்குல வேர்த்து, அவசரமா கொண்டு போயி அனுசியாடீச்சர் கிட்டே ஹிந்திக்கு சேர்த்து விட்டுட்டாங்க. மூணாங்கிளாஸ் ல ப்ராத்மிக், நாலாங்கிளாஸ்ல மத்யமா ஆச்சு. ரொம்ப முக்கி முனகி அழுகணி ஆட்டம் ஆடி ராஷ்ட்ராவும் பாஸாகிட்டேன். அடுத்து பிரவேஷிகா. 5வது வகுப்புக்கு பிரவேஷிகா ரொம்ப ஹை ஸ்டாண்டர்டுன்னு யாரொ திரியைக்கொளுத்தி போட, நிம்மதியா ரெண்டு வருஷம் போச்சு. ஹிந்தியே இல்லாத உலகம் எவ்வளவு இன்பமயமானதுன்னு அந்த கஷ்டத்தை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்.அந்த ஆனந்தம் இருக்கே.. ஆஹாஹா...
நான் எட்டாவது படிக்கும்போது(அக்கான், எட்டாவது ‘படி’ ச்சுட்டாலும்!) சரியா எனக்கு அஷ்டமத்துல சனி குடி கொண்டிருந்துருக்கு. (ஏன் அது இப்போவும் அதே பொஸிஷன்ல இருக்கு? சுப்பையா வாத்தியார் கிட்டே யாராவது கேட்டு சொல்லுங்கப்பா!) என்னெம்மோ சாக்கு சொல்லியும் அம்மா விடாப்பிடியா என்னை நம்பி பிரவேஷிகாவுக்கு காசு கட்டிட்டாங்க. ஸ்கூல் பாடமே ’ப்ரும்மாண்டமா’ படிக்கற நான், ஹிந்தி பரீட்சைக்கு படிச்சுட்டாலும்!!! அரும்பாக்கம் தாத்தாவின் மேற்பார்வையில் குஜராத்தி வித்யாலயாவுல செண்டர் போட்டு இருந்தாங்க. சுத்தமா விருப்பமே இல்லாம போய், அங்கே வந்திருந்தவங்களை எல்லாம் நோட்டம் விட்டுண்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு பரீட்சையை 1 மணி நேரத்துல முடிச்சுட்டு வந்துட்டேன். மதியம் சாப்டுட்டு மறுபடியும் வேடிக்கை பார்த்துண்டு இருந்தேன். என்னமோ எல்லாரும் திஷ்ய, பிந்துஸார்ன்னு எல்லாம் புலம்பிண்டு இருந்தாங்க. என்ன எழவோ..எனக்கு அதெல்லாம் ஒண்ணுமே தெரியாது. நான் கண்டுக்கவே இல்லையே! மதியம் பேப்பர் டெட் ஈஸி! பின்னே ஒண்ணுமே தெரியலையே! இந்த வாட்டி இன்னும் கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன். தாத்தா என்னை உள்ளே அனுப்பிட்டு மூக்குப்பொடி டப்பாவில இருந்து பொடி எடுக்கறதுக்குள்ளே, ”முடிச்சுட்டேன் தாத்தா”ன்னு ஈன்னு பல்லிளிச்சுண்டு வெளில வந்துட்டேன். தாத்தாவுக்கு ரொம்ப அதிர்ச்சி! பேப்பர்ல எதாவது எழுதினியான்னு கேட்டார். நானும் ரோல் நம்பர்ல்லாம் எழுதி இருக்கேன்னு சத்தியம் பண்ணி பெருமையா சொன்னேன். வீட்டுக்கு வந்த உடனே ரொம்ப ப்ராம்டா அம்மாகிட்ட போட்டுக்கொடுத்துட்டார்.
ரிசல்ட் வந்தது, தர்ம அடி கிடைச்சது. ரெண்டாவது வாட்டி எதிர்பாரா விதமா பிரவேஷிகா ஸிலபஸ் மாத்திட்டாங்க! (மாத்தாம இருந்திருந்தா மட்டும், நாங்க சபாலேயே முதல் மாணவியா தேறி இருப்போம்ல,சிங்கம்ல...) அதுனால் மீண்டும் அஷோக்,சுமன்,திஷ்ய,எல்லாம் படிச்சுண்டு போய் கூட என்னால பாஸ் பண்ணமுடியல!!!
மூணாவது வாட்டி,ஏகப்பட்ட வ்யாகரண், ஏகப்பட்ட எஸ்ஸே எல்லாம் படிக்க சொன்னாங்க! அதுலேயும் லீலா பாட்டி சொன்ன ஃபார்முலாப்படி முதல் பத்து, கடைசிப்பத்துல ஒரு பாடம் கூட பரீட்சைல வரலை. சனி பகவானின் விளையாட்டா இருக்கும்ன்னு அம்மா வெளீல வருத்தத்தோட சொல்லிண்டாலும், கதவை சாத்திட்டு, வீட்டுக்குள்ளே , தன் கடமையை செஞ்சாங்க!
இவ்ளோ அடி வாங்கியும் மூணாவது வாட்டியும் நான் ஃப்ணால் ஆயிட்டேன்! அம்மா,அவ்வா, புண்ணியத்துல ‘நான் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புத்திசாலி’ங்கற மேட்டர், எங்க சுத்துவட்ட 18 பட்டிக்கும் தெரிஞ்சு போச்சு. ஹஸ்தினாபுரம்,குரோம்பேட்டை,பல்லாவரத்துல எல்லாம் எனக்கு போஸ்டர் ஒட்டினாங்க.” மூணுவாட்டி ஃபெயிலான மூதேவியே”ன்னு அதுல போட்டு இருந்ததா எங்கண்ணா மார்தட்டிண்டு சொன்னான்.வெற்றி தியேட்டர் கிட்டக்க எனக்கு பாராட்டு விழா கூட ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. எங்கம்மாதான் போக விடலை. திருஷ்டி பட்டுடும்ன்னு அப்படி சொல்லி இருக்கலாம்ன்னு நான் நினைக்கிறேன்.
இருந்தாலும் எங்கம்மாவின் பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் ஒரு எல்லையே இருக்கலை. மறுபடியும் எனக்கோசரம் பிரவேஷிகாவுக்கு பைசா கட்டினாங்க.
ஹிந்தி பிரச்சார சபாவுல என் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பார்த்து, காரித்துப்பி, வார்னிங் குடுத்தாங்களாம். இந்த வாட்டி மட்டும் ஃபெயிலானா இனி எப்போவும் இந்த காண்டிடேட்டால எந்த பரீட்சையும் எழுத முடியாதுன்னு சொல்லி இருக்காங்க. இந்த விஷயத்தை அம்மாவுக்கு என்கிட்டே மறைக்க எப்படித்தான் மனசு வந்ததோ, தெரீல, சொல்லவே இல்ல.இது மட்டும் தெரிஞ்சிருந்தா, நிச்சியமா 4வது வாட்டியும் ஃபெயிலாகி வரலாறு காணா புகழ் பெற்றிருப்பேன்.. ஹிந்தியில இருந்தும் தப்பிச்சிருப்பேன் ஜஸ்ட் மிஸ்.. யாரோ தெரிஞ்சவங்க இன்ஃப்ளூயென்ஸ் பண்ணி, அவங்க கைல கால்ல விழுந்து எனக்கு ஹால் டிக்கெட் வாங்கிக்குடுத்தாங்க.
எனக்கும் 3 வாட்டி பிரவேஷிகா எழுதி எழுதி போர் அடிச்சுடுத்து. அதுனால சரி போனாப்போகட்டும்ன்னு பிரவேஷிகா பாஸ் பண்ணிட்டேன். அதுக்குள்ளே நான் 9த் வந்துட்டேன்.”மேத்ஸ் எல்லாம் ஒண்ணுமே தெரியலைம்மா”ன்னு சொல்லி ஹிந்தியிலே இருந்து ஜகா வாங்கிட்டேன்! ஹை ஜாலி. அடுத்த ரெண்டு வருஷம் பப்ளிக் எக்ஸாம் அது இதுன்னு பொழுது போயிடுத்து. 11வது படிக்கும்போது திருப்பியும் சர்ப்ப தோஷம். விஷாரத் ரெண்டே பார்ட் தான் முடிச்சுடு, உன் தங்கை பாரு, பிரவீண் வந்துட்டா, நீ பெரியவ இல்லையான்னு எல்லாம் வெறுப்பேத்தி, மறுபடியும் ஜெய’த்ரித்திர’ வத், ஜெயஷங்கர் பிரசாத், ப்ரேம்சந்த்ன்னு போட்டு தாளிச்சுட்டாங்க.
இதுக்குள்ளே அம்மாவே டீச்சர் ஆயாச்சு அதுனால டியூஷன் தொல்லை இல்லை. ஜஸ்ட் போய் பரீட்சை எழுதிட்டு வரவேண்டியது தான். அந்த வயசுல எனக்கிருந்த நல்ல கற்பனாசக்தியும்,3 வாட்டி திருப்பியும் திருப்பியிம் படிச்ச க்ராமரும் கைகொடுக்க, டீவீ சீரியல் புண்ணியத்துல மெளக்கிக் கொஞ்சம் நல்லா வர, சிக்கல் இல்லாம விஷாரத் தேறிட்டேன்.
ஸிப்ளிங்க்ஸ் லைக் மைண்டடா இருக்காததுனால எவ்ளோ கஷ்டம் பாருங்க? ”அம்மா, எனக்கு தெய்வம்மா அவ, அவளே எழுதலையேம்மா, நாமட்டும் ஏம்மா எழுதணும்”ன்னு என் தங்கை கண்கள்ல நீர்மல்க ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை கேட்டு இருந்தா எனக்கு அன்னிக்கு அந்த நிலமை வந்து இருக்காது. இது சொன்னத்தையெல்லாம் படிச்சுண்டு இருக்கும். ”பாரு அவ எல்லா பரீட்சையும் முடிச்சாச்சு, நீயும் இருக்கியே”ன்னு இளக்காரமா பேசி, பிரவீணுக்கும் காசு கட்டிட்டாங்க. இருக்கறதுலேயே பிரவீண் தான் ரொம்ம்ப மொக்கை. ஏகப்பட்ட செய்யுள் உரைநடை,காவியம்,காப்பியம்ன்னு கொன்னுட்டாய்ங்க. சின்ன க்ளாஸ்ல எல்லாம் கதை நல்லா இருக்கும், சட்டுன்னு மனசுல பதிஞ்சுடும். ஆனா போகப்போக யுத்தம், கவிதை, வர்ணனை, இப்படி ஆர்ட்டு ஃபிலிம் மாதிரி த்ராபையா இருக்கும். அதுலேயும் பிரவீண் மெகா மொக்கை. ஹப்பா நிம்மதி இதுக்கு மேல படிக்க ஒண்ணுமே இருக்காது.. அம்மாவும் விட்றுவாங்கன்னு அதையும் பாஸ் பண்ணிட்டேன்.
பிரவீண் படிச்சா பீஏன்னு வெளீல சொல்லிப்பாங்க. எந்த லட்சணத்துல படிச்சோம்ன்னு அவங்கவங்க மனசாட்சிக்கு தான் தெரியும். பிரவீண்ன்னா தேர்ச்சி பெற்றன்னு பொருள். எந்த ஒரு பிரவீண் பட்டதாரியை வேணா கேட்டுப்பாருங்க,” ஏம்ப்பா, நீ நிஜம்மாவே ஹிந்தியில பிரவீணா”ன்னு அவன் நெஞ்சுல கைவெச்சு ஆமான்னு சொல்லட்டும் நான் இந்த கீ போர்டை டிஸ்மாண்டில் பண்ணிடுறேன்.
ஒரு ரெண்டு மூணு வருஷம் நிம்மதியா இருந்தேன். மறுபடியும் அம்மா காதுல யாரோ திரி கொளுத்தி போட்றுப்பாங்க போல இருக்கு, அன்னிக்கி அப்படித்தான் வேகாத வெய்யில்ல பிரச்சார சபா போயிட்டு வந்து சொல்றாங்க,”தோ பாரு, நிஷ்ணாத்ன்னு ஒரு பரீட்சை இருக்காம். அது படிச்சா எம்.ஏ ஈக்வலெண்ட்டாம்.அது இருந்தா ட்ரான்ஸ்லேஷன் வேலைக்கெல்லாம் அப்ளை பண்ணலாமாம். நான் ஃபார்ம் வாங்கிண்டு வந்தாச்சு. ஸ்வாமி கிட்டக்க வெச்சுருக்கேன், ஃபில் பண்ணிடு” ங்கறாங்க!!.. நான் தலைசுத்தி கீழ விழுந்துட்டேன்!
40 comments:
//நான் தலைசுத்தி கீழ விழுந்துட்டேன்//
அப்புறம் யார் எழுப்பிவிட்டு ஃபார்ம் ஃபில் பண்ண வச்சாங்க? ஹா...ஹா...ஹா... நல்லாத்தான் இருக்கு நீங்க ஹிந்தி படிச்ச லட்சணம்.
ரேகா ராகவன்.
சுவாரசியமா இருந்ததுங்க.
//ரொம்ப வருஷம் கழிச்சு தான் அது பாப்பஞ்சாயே இல்லை, பாத் பன்(ban) ஜாயே என்று புரிந்தது.//
ஓஹோ! பாத் எடுத்திட்டு பன் சாப்பிடணுமுன்னு சொல்றாங்களா? :-))
//ஹிந்தியே இல்லாத உலகம் எவ்வளவு இன்பமயமானதுன்னு அந்த கஷ்டத்தை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்.//
//(ஏன் அது இப்போவும் அதே பொஸிஷன்ல இருக்கு? சுப்பையா வாத்தியார் கிட்டே யாராவது கேட்டு சொல்லுங்கப்பா!)//
உங்களுக்குமா? சரியாப் போச்சு, அப்போ இங்கே என் கூடவே சுத்திட்டிருக்காரே, அவரு யாரு?
தலை சுத்துறவங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்க! அவங்க முதுகை அவங்களே பார்க்கலாம். மத்தவங்களாலே முடியாது.
பஹூத் அச்சா (அச்சி?) பதிவு ஹை! தில் தோ பாகல் ஹை! குச் குச் ஹோதா ஹை! மே ஜாத்தா ஹை! வூட்டுலே ஆத்தா ஹை!
இதர் கியா ஓரஹாஹே?
@ரேகா, நானே தான் தெளிஞ்சு எழுந்து, ஃபில் பண்ணேன்.ரொம்ப நன்றிங்க
@அகநாழிகை, நன்றிங்க
@சேட்டை,அந்த ஹிந்திப்பாட்டுக்கு இவ்ளோ நல்ல விளக்கம் உன்னால மட்டும் தான் குடுக்க முடியும். பேஷ் பேஷ்!நவக்ரஹத்துல வேறு பாக்கி எல்லாம் உன்கூட சுத்தறது போல இருக்கு. இருந்தாலும் நம்ம சனி பகவான் தான் க்யூட். தலை சுத்தறத்துக்கு இப்படி ஒரு வியாக்கியானமா? ஸ்ஸ்.. அப்பா.. முடியல..
சேட்டை அச்சா போல்தா ஹை,ஜிந்தகி மே சேட்டை சுதரேகா நஹி ஹை!
ஆயியே ஆயியே, ஆடுமாடுஜீ, பஹூத் பஹூத் தன்யவாத்ஜீ பின்னூட்டம் கே லியே!
யோவ் மஞ்ச துண்டு என்னய்யா பண்றே? சீக்ரம் வாயா.. நீ ஒழிச்ச ஹிந்தி என்னமா வெளாடுது பாரு..
நான் மூணு எக்ஸாமோட நிறுத்திட்டேன்.. அப்பறம் நேரா டில்லிக்கே வந்தாச்சு..
அன்னிக்கு ஒரு நாள் ஒரு ஹிந்திக்காரப்பாட்டி என்னை . என் பையன் பொண்ணுக்கூட கம்பேர் செய்து.. அவங்கள்ளாம் பாரு என்ன அழகா பேசறாங்க நீ ஆண் பாலை பெண் பாலா மாத்தி மாத்தி பேசறேன்னு சொல்லிட்டாங்க.
இவங்கப்பாட்டுக்கு சேர் , பஸ் , ரயிலு எல்லாத்துக்கும் ஆண் பால் பெண் பால் வச்சிருந்தா நான் என்ன செய்யறது.. :))
நீங்க எம் ஏ வரைக்கும் படிச்ச மேதை பாராட்டுக்கள்
நாங்க ப்ரவீண் வரை படிச்சிகிழிச்சிட்டோம்ல! ஆனா கீபோர்டை நொறுக்கிடாதிங்க. உண்மைய ஒத்துகுறேன்.
@அண்ணாமலையான், யே......ன்? நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சு?
@முத்துலெட்சுமி மேடம், நீங்க சொல்றது சரிதான். அஃறிணைக்கெல்லாம் இவங்க ஆண்பால் பெண்பால் வெச்சிருப்பாங்க. குடை,வண்டி இப்படி எல்லாத்துக்குமா பால் வித்தியாசம்? அநியாயம் தான். நீங்க சரியாப்படிக்கலைன்னு நினைக்கறேன்.எம் ஏ எல்லாம் நான் வெளீல சொல்லிக்கறதே இல்லை. ஏன்னா எனக்கு பிரவேஷிக்கா தகுதியே இல்லை. நீங்க வேற!
@குட்டிபிசாசு, உண்மையை ஒத்துண்டதுக்கு நன்றிகள். குட்டிப்பிசாசா இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி நேர்மையா இருக்கே! ஸோ சமத்து பிசாசு.
//யோவ் மஞ்ச துண்டு என்னய்யா பண்றே? சீக்ரம் வாயா.. நீ ஒழிச்ச ஹிந்தி என்னமா வெளாடுது//
கன்னாபின்னான்னு ரிப்பீட்டே...
ஆகா அமீரகத்துல இப்படி ஒரு பதிவரா இப்பத்தான் பார்க்குறேன்... செமகாமெடி போங்க... பின்னிட்டேள்....
very hilarious .. you appear to be a natural in writing humor .. pl keep writing!!
ஹிந்தி தெரியுமா??? சொல்லவே இல்ல்ல.. அப்போ அடுத்த முறை சாட்ல ஹிந்தில பேசிட வேண்டியதுதான், நானும் எப்போதான் ஹிந்தி கத்துக்கறது.. 5 வருஷ்ம் தில்லியில ஹிந்திக்காரங்க கழுத்துல ரத்தம் வர வெச்சிருக்கேன், இப்போ நீங்க மாட்டினீங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
உங்களுக்கு பார்ம் வாங்கிக்குடுக்கரதுல...
அம்மா செம பார்ம் ல இருந்தா போல இருக்கே...
உங்கள படிக்க சொல்லி உங்க அம்மா டிகிரி வாங்கிட்டாளா.. பிரமாதம்...
நீங்க பிரவேஷிகா க்கு கட்டின பணத்துலதான், இன்னும் பிரசார சபை நடகரதாமே....
அச்சா ஹே ...
@நாஞ்சில் ஜீ,
வொய் திஸ் கொலை வெரி ஹை? ஹான் ஜீ, ஹம் அமீரகம்லே தான் ஹை. நன்றி ஜீ
@ஸ்ரீராமண்ணா ஜீ,
பஹூத் பஹூத் மொக்கை போடிங் ஹை..
@ஜிகர்தண்டா ஜீ,
பிரச்சார சபை அந்த வருஷம் எல்லா ஸ்டாஃபுக்கு போனஸ் குடுத்தது. ஒரு டெர்ம் எல்லா வித்யார்த்திகளுக்கும் இலவசமா பரீட்சைவெச்சாங்கன்னா பார்த்துக்கோ. ஸ்டாக் எல்லாம் செம்ம ஹை ரேட்டுக்கு வித்தாங்க! அப்படி ஒரு பூமிங் பிராஃபிட்!
@ ஆஹோரிஜி, தன்யவாத் ஹை!
நமக்கும் இந்த ஆத்தாகை! பாத்தாகை! சத்தமே புடிக்காது. இந்த எழவுக்காக இந்தி இல்லாத இஸ்கூலுக்கு மாறினேன்னா பாருங்களேன்!.....:)
அனன்யா - என்னால சிரிப்பை அடக்கவே முடியல ... இது என்னடா இது நம்ப கதை மாதிரியே இருக்கே'ன்னு .. Hindhi Prachar Sabha should set age limits on exam participation... ஒரு ஐந்தாம் , ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் எப்படி மைதிலி ஷரன் குப்தா , கபீர் கே டோஹி எல்லாம் ரசிக்க முடியும், புரிந்து படித்து எழுத முடியும்... நன்றாக மனப்பாடம் செய்து ஏதோ எழுதி தேர்வாக முடியும்... எனக்கு சுட்டு போட்டாலும் இதெல்லாம் வராது, இதிலே பிரஷர் வேறு.."மகேஸ்வரன் தங்கையா நீ என்று? ... நானும் பிரவீன் பூர்வர்த் வரை படித்தேன் .. சத்தியமா என்ன படித்தேன் என்று தெரியாது... உன்னோட keyboard ஐ பிரிசுடதே ...
PS: உன்னோட ப்ளாக் இப்படி எதனை பேரை போட்டு வாங்கறது பாரு... நடத்துமா ராசாத்தி நடத்து...
இப்படி ரவுசு பண்ணியே இவ்வளவு படிச்சிட்டிங்க ... அச்சா ....பகுத் அச்சா.. இப்படித்தான் போனமா வந்தமான்னு என் பசங்களும் ப்ராத்மிக் முடிச்சிட்டு .... பப்ளிக் எக்ஸாம் அது இதுன்னு சாக்கு சொல்லி மேல படிக்காம எஸ் . வீட்டம்மா கதை வேற , போய் அந்த டீச்சரயே ஒரு வழி பண்ணிட்டாங்க... சீரியல் பாக்கணும் ஹிந்தி மேகசின் வாங்கணும் ன்னு ஒரே அலப்பரை..அதே ப்ராத்மிக் க்குத்தான் ... நான் பச்சை மஞ்ச பின்க்கு தமிழன் ...விடுவனா... நுழைய விடுலேயே ... ( எல்லை தாண்டும் --குறிப்பா வளைகுடா வரவிரும்பும் என் தமிழ் மக்களே , அந்த கிரகத்தை படிச்சு தொலைச்சுருங்க ...... வெள்ளைக்காரனும் , அரபியனும் இந்தியாவிலிரிந்து வர்ற உனக்கு இந்தி தெரியிலையா ? கிண்டல் பண்றதை ஒதுக்கிட்டாலும் ,, இங்க இருக்கிற பாக் , பீகார் மக்களை வேலை வாங்கறதுக்கு கண்டிப்பா தேவை .. இல்லாட்டி நம்ம பக்கத்து ஊர்காரங்களை அண்ணாந்து பார்த்துக்கிட்டே இருக்கவேண்டியது தான் )...
சிரிப்பு மழை பொழியும் உங்களுக்கு ஒரு பட்டம் தர பதிவர் பொதுகுழு செயற்குழு கூடி இருக்குது ...பட்டம் விரைவில் ..
@தக்குடு-சரியாச்சொன்னே, ஸ்கூல் மாத்தற அளவுக்கு எனக்கு ஸ்கூல்ல இந்தி நச்சு இருக்கலை.பிரைவேட்டா தான் இந்த நச்சு ஜாஸ்தி.
@ப்ரியா-ஏஜ் லிமிட் எல்லாம் இருந்தாத்தான் புரிஞ்சு ரசிச்சு படிக்கலாமே. குழந்தைங்களைப்பிடிச்சு தள்ரது. பாவம் அதுகள் என்ன தான் பண்ணும்? என்ன நீ அவனைக்கேட்டா உன்னை சொல்றான், நீ என்னடான்னா அவனை சொல்றே? என்னமோ நடக்கறது, புரிய மாட்டேங்குது.
@ பத்மநாபன் சார்- உங்க குழந்தைகள் & மனைவி ரகளைய ரசிச்சேன். நீங்க சொல்றதும் சரிதான். இங்கே இண்டியா ஸே ஆயா ஹைன்னா மதராஸீ சப்ராஸீ எல்லாம் பாக்கறதில்லை. டைரக்டா ஹிந்தில தான் பேசுறாங்க! நான் தப்பிச்சுட்டேன்பா! எல்லாம் எங்கம்மா பண்ணின புண்ணியம்!
//சிரிப்பு மழை பொழியும் உங்களுக்கு ஒரு பட்டம் தர பதிவர் பொதுகுழு செயற்குழு கூடி இருக்குது ...பட்டம் விரைவில் // ஏன் சார் இப்படிஎல்லாம் கலாய்க்கறீங்க? வேணாம், வேணாம், வலிக்கிது,அளுதுருவேன்..
பட்டம் எல்லாம் தயார்நிலையில் இருக்கும்பொழுது , அநய் அம்மாவிடம் இருந்து ஒரு கண்டிசன், உங்க பட்டமெல்லாம் '' நிஷ்ணாத்'' படிச்சு முடிச்சப்புறம் கொடுத்தா போதும் ..( என்ன சம்பந்தம் இல்லாமல் இருக்கேன்னு ... சம்பந்தம் இருக்கே ....நிஷ்ணாத்'' இதை விட ஜோக்குக்களை கொடுக்கும் அவங்க நம்பிக்கை ) .... பட்டத்துக்கு தயாரா :)
besh besh...romba nanna irukku...Keep it up Ananya...
//மறுபடியும் எனக்கோசரம் பிரவேஷிகாவுக்கு பைசா கட்டினாங்க.//
ஸ்ஸ்ஸ்பா, முடியல.
நானும் விஷாரத் உத்ராத். ஆன எனக்கு ஹிந்தி நல்லாவே வந்தது.
இப்ப பாருங்க ஆபிஸ்ல ஒரு பஞ்சாபி, குஜாராத்தி, மராத்தினு வறுக்க முடியறதுன்னா அது அந்த ஹிந்தி மிஸ் போட்ட பிச்சை. (இத கேட்டு தங்க்ஸ் தலைல அடிசுண்டா) :))
@ விஜய்ஜீ- நன்றி ஹை :)
@பத்துஜீ-எனக்கு உங்க கமெண்டு புரியலை ஹை.
@அம்பீஜீ ஆயியே ஆயியே!!! மேரா ப்ளாக் தன்ய ஹுவா!!!
//நானும் விஷாரத் உத்ராத். ஆன எனக்கு ஹிந்தி நல்லாவே வந்தது. // உங்க ஹிந்தி மிஸ் நம்பர் கிடைக்குமா? உங்க பாட்ச் ல எத்தனை குத்து விளக்கு இருந்ததுன்னு தெரிஞ்சா சட்னு இந்த,”ஆன எனக்கு ஹிந்தி நல்லாவே வந்தது”ங்கற ஸ்டேட்மெண்டை வெரிஃபை பண்ணிடலாமே!
//இப்ப பாருங்க ஆபிஸ்ல ஒரு பஞ்சாபி, குஜாராத்தி, மராத்தினு வறுக்க முடியறதுன்னா அது அந்த ஹிந்தி மிஸ் போட்ட பிச்சை.// My Name is Ambi ங்கற உங்க போஸ்டில் தக்குடுவின் கமெண்டை வழி மொழிகிறேன்!
//இத கேட்டு தங்க்ஸ் தலைல அடிசுண்டா) :))
சரியாச்சொல்லுங்கோ, தலையில அடிச்சுண்டாளா, இல்லே உங்களுக்கு தலையில் அடி கிடைச்சதா????.. ஆய், ஆய், வழியறதப்பார்த்தா, நன்னா அடி கிடைச்சிருக்கு போல இருக்கே!!
அக்கா... நான் ஹிந்தி க்ளாஸ், டிராயிங் எல்லாம் (எது எதுக்கெல்லாம் ஸ்கூலோட சம்பந்தம் இல்லையோ) அதிலே எல்லாம் ரொம்ப ஆர்வமா இருப்பேன்... அதனால எனக்கு ஹிந்தி க்ளாஸ்-ல எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை... பன்னிரெண்டாவது படிக்கும்போது தான் பிரியா சமர்தா இருந்ததால பிரச்சினைகள் ஆரம்பிச்சது... வர வர உன்னோட நகைச்சுவை உணர்ச்சி அதிகமாகிக்கிட்டே போகுது... மாப்புவோட பங்கு / கைவண்ணம் இதிலே இருக்கா?
ராம் ரவிஷங்கர்ஜீ,
முஜே மன்னிச்சிடுங்க ஜீ, உங்க கமெண்ட்டை ஓவர்லுக்டு கர்தியா ஜீ. சாரிஜீ.
முதல் வாட்டி என்னைப்பத்தி இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ அதிகமா புகழ்ந்ததுக்கு ஜீ, நான் ஆனந்த கண்ணீர் வடிக்கறேன் ஜீ. தாங்ஸ் ஜீ!
டியர் மாப்பு ஜால்ரா, சாரி மஹேஷூ,
நீ அடங்கவே மாட்டியா? ஆன்னா ஊன்னா மாப்பு மாப்புன்னு ஏன் இப்படி பிராண்டுறே?அண்ணாவும் தங்கையும் ஒரே போஸ்டுல கமெண்டு எழுதினதுனால பிரளயமே வரப்போறது. ரெம்ம்ப நன்றி ராசா!
இங்கயும் ஹிந்தியா!!!
எனக்கும் அம்மா ஃபோர்ஸ் செஞ்சுத்தான் ஹிந்தி கத்துக்கும் வாய்ப்பு. அதைப்பத்தி நிறைய்ய கொசுவத்தி சுத்திட்டேன்.
நல்லாத்தான் ஹிந்தி படிச்சிருக்கீங்க
you made my day !!
Dhanyavad !
- Moses
எல்லார் வாழ்க்கையிலும் ஹிந்தி நல்லா அபார்ட்மெண்ட் கட்டி ஆடிருக்குப்பா...
வீடு மாறுனதாலே 'பிராத்மிக்'கோட கிரேட் எஸ்கேப்ப்பு.....
ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அடுத்த அதிரடிப்பதிவு அனன்யாவின் "நிஷ்ணாத்".... :))
வருகைக்கு நன்றி தென்றலக்கா
மோஸஸ், உங்க கருத்தும் மேட் மை டே! நன்றிங்க!
துபாய்ராஜா-இதானே வேணாம்ங்கிறது? அடுத்த பதிவுக்கு நான் கமிட்மெண்ட் குடுக்கவே இல்லையே! லாஸ்ட் அண்ட் கன்க்லூடிங் பதிவு திஸ் ஒன்ன்னு போட்டுடறேன். இதுக்கு மேல டரியல் ஆக முடியாது.
{அவன் நெஞ்சுல கைவெச்சு ஆமான்னு சொல்லட்டும் நான் இந்த கீ போர்டை டிஸ்மாண்டில் பண்ணிடுறேன். }
ஹிந்தி கி போர்டையா சொல்றீங்க !
ஹி..ஹி..
hehe yeh koothu bhi ho raha hai? haye raam. :P maine ye post miss kar dhiya.. aala vudunga.
அப்புசாமி சீதா பாட்டி கதை ஒன்றில் அப்புசாமி ஹிந்தி கற்றுக்கொண்ட விவரம் இருக்கும். அதிலிருந்து சில வரிகளை எனது நினைவிலிருந்து கோட் செய்கிறேன்.
அப்புசாமியையும் சீதா பாட்டியையும் போலீஸ் ஹிந்தி எதிர்ப்புக்காகப் பிடித்துக் கொண்டு செல்ல இருவரும் தப்பிப்பதற்காக "பச்சோங்கீ கிதாப்" என்ற ஹிந்தி பாடநூலை வைத்து இன்ஸ்பெக்டரை குழப்பிய சீன். நினைவிலிருந்து தருகிறேன்.
அப்புசாமி: "ஏ மேஜ் ஹை, மேஜ் பே கலம் ஹை, கலம் மே ஸ்யாஹீ ஹை" *மொழிபெயர்ப்பு: இது மேஜை, மேஜையின் மேல் பேனா இருக்கிறது. பேனாவில் மை உள்ளது.
இன்ஸ்பெக்டர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே: "அடேங்கப்பா, ஒரே ஹை ஹையாக இருக்கே, நம்மால் முடியலை சாமி, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகலாம்"
சீதாபாட்டி (கருணையுடன்): "அச்சா, சாரதா சோமு கீ பெஹன் ஹை" (நல்லது, சாரதா சோமுவின் சகோதரி).
இதை படித்துவிட்டு நான் என்னை மறந்து சிரிக்க ஆரம்பிக்க, நூலகத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிலர் மெதுவாக என் பக்கத்திலிருந்து விலகி தூரப்போய் அமர்ந்து கொண்டனர்.
இது பற்றி நான் இட்ட பதிவை பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_04.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
'''பாப்பஞ்சாயே இல்லை, பாத் பன்(ban) ஜாயே என்று புரிந்தது''
எனக்கும் உங்க பதிவை படித்தபிறகு தான் ’’’பாப்பஞ்சாயே இல்லை, பாத் பன்(ban) ஜாயே என்று புரிந்தது’’’’
அண்ணாமலையான் said...
யோவ் மஞ்ச துண்டு என்னய்யா பண்றே? சீக்ரம் வாயா.. நீ ஒழிச்ச ஹிந்தி என்னமா வெளாடுது பாரு..
சொன்னமாதிரி மஞ்சள் துண்டு ஹிந்தி இல்லாமல் பண்ணி போட்டது
(ஹிந்தி இருந்தாலும் கிழிச்ரமாடோம்)
துபாய் வந்து மகனை CBSE ஹிந்தி கட்டாயம். டியுசன் வைக்க முடியாது
சரி இதோட நாம ஹிந்தி படிபோம் என்று ஹிந்தி டு தமிழ் டிக்ச்னரி வாங்கி ஹிந்தி எழுத்து மேல் தமிழில் எழுதி படித்து கொடுப்பேன் அப்படி 7 ஆம் வகுப்பு வரை படித்து கொடுத்துதேன்.அர்தம் ஆண்டவனுக்கு தான் தெரியும்.அப்படியே 10 வரை தள்ளி 11 ,12 ம் ஹிந்தி இல்லை. அப்புறம் நீங்க சொன்ன மாதிரி
’’’ஹிந்தியே இல்லாத உலகம் எவ்வளவு இன்பமயமானதுன்னு அந்த கஷ்டத்தை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்.அந்த ஆனந்தம் இருக்கே.. ஆஹாஹா...’’’’’’
நினைத்தால் இன்னும் சந்தோசம் .என் மகனுக்கு இன்னும் சந்தோசம் .
பஜார் போனா நான் பேசுற ஹிந்தி கேட்டு கடை காரர் சிரிப்பபார்
ஹிந்தி பிரச்சார சபையில் நுழைந்து விட்டேனோ... அடடா... அய்யன் கோபிப்பாரே... அதெப்படி என் வீட்டார் தவிர வேறொருவர் ஹிந்தி படிக்கலாம் என்று...
எஸ்.வி.சேகரின் “காதுல பூ” நாடகத்தில் எமலோகத்தில் நடைபெறுவதாக வரும் ஒரு காட்சி :
சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்ல சொல்லும் போது, அங்கு வரும் நபர் (ஒரு அரசியல்வாதி), சத்தியம் என்பது வடமொழி சொல், தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு என்று சொல்லிவிட்டு, ப்ராமிஸாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்பார்.
Super Story Ananya,
அஞ்சாவதுல Praveshika fail ஆனதுக்கு அப்புறம் அந்த பக்கமே போகல. சரி ட்ரை பண்ணுவமேன்னு 2nd year ல மறுபடியும் எழுதி borderla பாஸ் பண்ணிட்டேன். அதுக்கு அப்புறம் ஒரு வெறுப்பு வந்து அந்த பக்கமே போகல. ஆனா இப்போ நாக்பூர் RBI வந்ததுக்கு அப்புறம் தான் ஒரே கிலி ஆய்டுச்சு. சுத்தி ஒரே ஹிந்தி வாலா. ஹிந்தி இல்லாட்டி மராத்தி. எனக்கு ஹிந்தி வராதுன்னு எல்லார்டையும் சொல்லிட்டேன். praveshika பாஸ்ன்னு யார்ட்டையும் சொல்லல. (சொன்னா காரி துப்பிடுவாங்க). மொழி புரியாம தினமும் ராவுகாலம் தான் போங்க. எப்படா நம்ம ஊருக்கு போவம்னு இருக்கு.
Merako hindi acha aatha hai.... Therako hindi seekney keli kya difficult aatha hai ... Emk gaav mey hai kissan hai aaatha hai .... Ithukum mela ennala tea aatha mudiyathu .... Naan mothamey 4 nal than Hindi tuition poirupen ... Vowels imposition mathiri kodukuranutu pogalai... But now feeling y I missed that...
hindi romba "kora dhaandavam" aadi iruku polaye ... :((
nalla velai inniku varai andha maari prachana illama.. manjathundu pola ORU KETTHAA valndhutu iruken... hehe
ammani ... aana summa solla koodadhu... pinni pedal edukureenga... lol
//நானும் ரோல் நம்பர்ல்லாம் எழுதி இருக்கேன்னு சத்தியம் பண்ணி பெருமையா சொன்னேன். வீட்டுக்கு வந்த உடனே ரொம்ப ப்ராம்டா அம்மாகிட்ட போட்டுக்கொடுத்துட்டார். //
हा हा दीदी, ये कया बॊल रहॆ है आप?? बडा तमाशा था
Post a Comment