கிரிலக்ஷ்மி மிஸ் -1
சுஜாதாவின் ’ஆ’ கதைல வர்ற ஜெயலக்ஷ்மி டீச்சர் மாதிரி இன்னிக்கு எனக்கு கிரிலக்ஷ்மி மிஸ் நினைவு ஜாஸ்தியா இருக்கு. ரேடியோ வெச்சுட்டு ரங்குவும் நானும் பால்கனியில் நின்னுண்டு அபுதாபி வியூ பாக்குறது வழக்கம். இன்னைக்கு ரேடியோ வெச்சப்போ இதயத்தாமரை படத்துல இருந்து, “ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்” பாட்டு வந்தது. ஹான்னா என்ற பெண் இந்த பாட்டை ”ஒரு டாஷு தேவதை பூமியில் வந்தாள்”ன்னு பாடினது ஏனோ மனசுல ஒரு நிமிஷம் ஃப்ளாஷ் ஆச்சு. இந்த மாதிரி மாத்தி பாட முதல் காரணம் கிரிலக்ஷ்மி மிஸ் தான்.
என்ன காரணம்ன்னு தெரியலை, குரோம்பேட்டை ஹஸ்தினாபுரம் சேவியர் ஜீஸஸ் ஸ்கூல்ல ப்ரேயர் அஸெம்ப்ளில அடிக்கடி பாட சொல்லுவாங்க. ஏதாவது ஒரு அனெளன்ஸ்மெண்டுக்கு காத்திருக்கும் நேரத்திலா இருக்கலாம். நினைவில்லை. அப்படி ஒரு சமயம் நம்ம ஸ்கூல் பையன் ஒருத்தன் போய் அப்போ ரொம்ப ரொம்ப பிரபலமா பேசப்பட்ட ”ராஜா கைய வெச்சா” அப்படீங்கற அபூர்வ சகோதரர்கள் படத்துல இருந்து பாட்டை பாடினான். அந்த பையனுக்கு நல்ல குரல்வளம், ஓரளவுக்கு நல்லாவே பாடினான். எல்லோருக்கும் பயங்கர சந்தோஷம் பின்னே சினிமாப்பாட்டு அதுவும் ஹிட் பாட்டு, அதும் அஸெம்ப்ளில.. கேக்கவா வேணும். எல்லாரும் நல்லா எஞ்சாய் பண்ணி கேட்க ஆரம்பிச்சோம்.ஆனா, கிரிலக்ஷ்மி மிஸ்ஸுக்கு பயங்கர கோபம். மிஸ் குறுக்கிட்டு அந்த பையன் பாட்டை கட் பண்ணி பல்பு குடுத்து”இந்த மாதிரி அசிங்கமான பாட்டெல்லாம் அஸெம்ப்ளில பாடக்கூடாது”ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நானும் ரொம்பவே யோசிச்சு பார்த்தேன். இந்த பாட்டுல கமலஹாசன் கூட ஆடும் பெண்களால தான் மிஸ் தப்புன்னு சொல்றாங்க போல இருக்குன்னு நினைச்சுண்டேன். பாவம் அவன் முகம் சுணங்கிப்போய் திரும்பி வந்து தன் இடத்துல வந்து நின்னுண்டான்.
அடுத்து நம்ம ஹான்னா போனா.மெளனராகம் படப்பாடல் சின்னச்சின்ன வண்ணக்குயில் பாட்டை எடுத்து பாட ஆரம்பிச்சா. மிஸ்ஸை பார்த்துட்டு திருட்டு முழி முழிச்சுண்டு, திட்டுவாங்களோ, பல்பு கிடைச்சுடுமோன்னு ஒரே பயம் அவளுக்கு. மிஸ்ஸுக்கு அவ்ளோ திருப்தி இல்லை ஆனா ராஜா கைய வெச்சாவுக்கு எவ்ளோவோ பராவாயில்லையேன்னு சும்மாத்தான் நின்னுண்டு இருந்தாங்க..
பல்லவியை இனிதே தப்பில்லாம பாடின நம்ம ஹான்னா, சரணத்துக்கு வந்த போது, “ மேனிக்குள் காதல் வெள்ளம் மெல்லத்தான் பாயக்கண்டேன்”ன்னு பாடுறதுக்கு பதிலா, மிஸ்ஸை பார்த்துண்டே, ”மேனிக்குள் டாஷு வெள்ளம் மெல்லத்தான் பாயக்கண்டேன்”னு பாடினா. கொல்லுன்னு எல்லாக் குழந்தைகளும் சிரிச்சுட்டாங்க.
இந்த சம்பவத்துக்கப்புறமா எல்லாக்குழந்தைகளும் பாட்டை எடிட் பண்ணாம பாடவே மாட்டாங்க. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஹான்னா மேலே சொன்ன அந்த இதயத்தாமரை படப்பாட்டை அப்படி பாடினா.
சினிமாப்பாட்டு பாடும்போது சபையுணர்வு எவ்ளோ முக்கியம்ன்னு உணர்த்தினாங்க அந்த மிஸ். ஒரு விழிப்புணர்வு வந்ததுன்னு சொல்லலாம்.
ப்ரைவேட் சிங்கிங், பப்ளிக் சிங்கிங்குக்கு பாட்டு செலக்ஷன் எவ்ளோ முக்கியம்ன்னு அப்போ புரிஞ்சுண்டேன்.
சமீபமா ஏதோ ஒரு மஹா மட்டமான மூன்றாம்தர பாடலை ஒரு 8 வயது சிறுமி மலையாள சானலில் பாடிண்டு இருந்தா.. துளி கூட அந்த பாவம் பிசகாம போல்டா நிஜமா பாடின பாட்டுக்காரரை எல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி பாடினான்னு சொன்னா மிகையில்லை.
நிச்சியம் இதை பார்க்கும் போது கிரிலக்ஷ்மி மிஸ் முகம் சுளிப்பாங்கன்னு மட்டும் நினைச்சுக்குவேன். எண்பதுகளின் கடைசியிலேயே அவ்ளோ கண்டிப்பானவங்களா இருந்தாங்களே கிரிலக்ஷ்மி மிஸ், இப்போ அவங்க என்ன பண்ணிண்டு இருப்பாங்க? இந்த மாதிரி கண்ணியம் மட்டும் இல்லை, இந்த கிரிலக்ஷ்மி மிஸ்ஸை நினைச்சு பார்க்குறதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு. அடுத்த பதிவுல சொல்றேன். இல்லாட்டி எல்.கே ரொம்ப நீளமான பதிவுன்னு சொல்லிடுவான்!
நீங்க ரொம்ப காத்திருக்க வேண்டாம். நாளைக்கே சொல்லிடறேனே..

26 comments:
enoda lalitha miss madhri inga oru jeyalakshmi missa.. padichitu varen!
//சமீபமா ஏதோ ஒரு மஹா மட்டமான மூன்றாம்தர பாடலை ஒரு 8 வயது சிறுமி மலையாள சானலில் பாடிண்டு இருந்தா..//
அதுக்கு எல்லோரும் என்ன பாராட்டு! இதாவது ஏதோ தாளம் ஸ்வரம் பிட்ச் (தமிழ் பிட்ச் சொல்றேன்..) என்று கவனம் வேறு மாதிரி போய் சமாளிக்க முடியும், ஆனா டான்ஸ் போட்டின்னு ஆடறாங்களே, முடியல! :(
ஆனா பசங்களை சொல்லியும் குற்றமில்லை, பாடற/ஆடற மாதிரி பாட்டு எங்க வருது? எவ்ளோ நேரம் தான் பக்தி பாடள்களை வெச்சு சமாளிக்கறது? (நான் ஸ்கூல்ல இருக்கும் போது கூட டீச்சர்ஸ் முடிஞ்ச வரை 'நல்ல' பாட்டு தான் சூஸ் பண்ணுவாங்க, ஆனா இப்போல்ல தெரியுது நல்லதே எவ்ளோ கொடுமையான அர்த்தமா இருந்துருக்குன்னு!)
நீங்க பாட்டு எதுவும் பாடலியா.. சுவாரசியமா இருக்கு.. தொடருங்கள்... நாந்தான் முதல்லயா?..
ஜெயலக்ஷ்மி மிஸ் ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிட்டாங்க.. நல்ல பதிவு அனன்யா அக்கா..
இடுகையில பெரிசா சொல்ல ஒண்ணுமில்ல.. ஆனா ஒரு விசயம், இந்த இடுகையில் உள்ள தமிழைப் படிங்க, வித்தியாசத்தைப் பாருங்க, இதுதான் நான் உங்களுக்கு ஒரு முறை சொன்னது, இது மாதிரியே தொடர்ந்து எழுதுங்க (புரியும்னு நெனைக்கிறேன்)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இப்போ எல்லா பள்ளிகளிலும் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் என்ற பெயரில் LKG முதல் +2 மாணவ மாணவியர் வரை பாடும் பாடல்களையும் ஆடும் ஆட்டங்களையும் பார்க்க முடியவில்லை. தனியாக வெளியிலிருந்து டான்ஸ் மாஸ்டர் ஏற்பாடு செய்து ஆட வைக்கும் ஆட்டங்கள்...! ஜெயலக்ஷ்மி மிஸ் மாதிரி ஒருவர் இப்போது கிடைப்பாரா?!
ஹ்ம்ம் நல்ல எழுதற நீ இப்பலாம்.. வாழ்த்துக்கள்./. அந்த பாட்டு விஷயம் . மகா கேவலம்
Very nice read Ananya. Enjoyed every line of the post :)
////சினிமாப்பாட்டு பாடும்போது சபையுணர்வு எவ்ளோ முக்கியம்ன்னு உணர்த்தினாங்க அந்த மிஸ். ஒரு விழிப்புணர்வு வந்ததுன்னு சொல்லலாம்.///
.... :-) அந்த ஆசிரியை மேல ஒரு மரியாதையும் மதிப்பும் தன்னால் வருகிறது. ம்ம்ம்ம்......
நீங்க ஜெயலஷ்மின்னு சொன்னதுமே சுஜாதா ’ஆ’ என்னாலும் மறக்க முடியல.
அப்புறம் என் 2வயசு கொழந்தையும் அழகா பூக்குதே பாட்டையும் இப்படிதான் பாடுது காலத்தின் கோலம்.
சுஜாதாவின் "ஆ" கதையையும் ஜெயலக்ஷ்மியையும் எனக்கும் மறக்கமுடியலை, என்கிட்டே விகடன்லே இருந்து எடுத்து பைண்ட் பண்ணினது இருந்தது. ஏதோ ஒரு சமயம் தவிர்க்கமுடியாம அண்ணாகிட்டே கொடுத்தேன், ஒரு பை புத்தகங்களை, அதிலே அதுவும் போயிடுத்து! ம்ம்ம்ம்ம் நல்ல உளவியல் அலசல் கதை, மறுபடி படிக்கணும்னா கிடைக்கவே இல்லை! :(
இப்போ போஸ்டிலே சொல்லி இருக்கும் விஷயம் நல்ல விஷயம் தான், ஆனால்???? இப்போ அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லாருமே மானாடி, மயிலாடிட்டு இருக்காங்க, இல்லாட்டி டீலா, நோ டீலானு கேட்டுட்டு இருக்காங்க. அவங்க எல்லாம் முழிச்சுக்கணுமே! எங்க ஸ்கூலும் கிறிஸ்தவ மிஷன் ஸ்கூல் தான். அசெம்பிளியில் பாரதியார் பாட்டுக்கள், தேசபக்திப் பாடல்கள் தவிர, கிறிஸ்துமஸ் கோரல்ஸ் எனப்படும் பாடல்கள் தான் பாடலாம். வேறே பாட்டுக்கள் பாட முடியாது. சினிமாப் பாட்டா?????? மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! இப்போ எப்படினு தெரியலை!
நீ சொல்லற மிஸ் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனா திறமை-ங்கறதுக்கு சரியான உதாரணம் இல்லாததால தான் குழந்தைகள் சினிமா பாட்டு பாடறாங்க. ஜீ மராட்டி டிவி-ல "சா ரே கா மா" நு ஒரு நிகழ்ச்சி வரும். அதுல சில குழந்தைகள் பாடினாங்க. என்ன அழகு தெரியுமா? அவங்க பாடின நிறைய பாடல்கள் - அபங் வகையை சேர்ந்தவை. விட்டல் மேல அவங்க பாடின பாட்டுக்கு அன்னிக்கி அங்கே விட்டலே வந்து நின்னிருப்பாரோ-னு நினைக்க தோணித்து. நான் ரெகார்ட் பண்ணி வெச்சிருக்கேன். நீ வர்றச்சே போட்டுக் காட்டறேன்.
வெட்டி வெட்டியாச் சொல்லலை, அதேபோல் ஏஷியா நெட்டிலும் இதே சரிகம போன்ற ஒரு நிகழ்ச்சி அருமையா இருக்கும், இப்போல்லாம் பார்க்க முடியறதில்லை.
ஜெயலக்ஷ்மி மிஸ் போல இன்றைய ஆசிரியைகள் இல்லாததற்கு முக்கியக் காரணம் நம்மில் சில பெற்றோர்களும், ஊடகங்களும்தான்!! ஒரு சிறு கண்டிப்பிற்கே, ஆ, ஊ என்று படையெடுத்து வந்து மிரட்டுவதும், டிவியில் சொல்லிக் கிழிப்பதும், சில சமயம் மாணவர்கள் தற்கொலைக்கே போவதும்... இதனால்தான் இன்றைய ஆசிரியைகள் எதையும் கண்டுகொள்வதில்லை!!
நான் படிச்சப்போ சினிமா என்பதே கெட்ட வார்த்தைபோல!! அதுவும் நல்லாத்தான் இருந்தது!!
அதென்னவோ காலேஜ்ஜில் கூட டீச்சர்ஸ் இருந்தாலும் ஸ்கூல் வாத்தியார்களை மனம் மறக்கமுடியவில்லை. ஜெயலக்ஷ்மி டீச்சர் ஒரு உதாரணம். பயத்தில் வார்த்தை மறந்து போய் டேஷ் போடுவது உண்டு ஆனால் பயத்திலேயே வார்த்தைக்கு மறக்காமல் டேஷ் போட்டது சாதுர்யம்தான்.நல்ல பீளிங்க்ஸ் கொணர்ந்த பதிவு. எப்படியோ மொக்கைகளுக்கு அப்பறம் ஒரு நல்ல பதிவு போட வைத்த ஜெயலக்ஷ்மி டீச்சருக்கு நன்றி
இப்பல்லாம் டாஷ் ...டாஸ் ... எல்லாம் கிடையாது ...கூச்சமும் கிடையாது ..அப்படி அப்படியே ...ஒரு விஷயம் அர்த்தம் தெரியாம எதார்த்தமா பாடுகிற குழந்தைகளும் உண்டு .. உங்க ஜெயலக்ஷ்மி மிஸ் மூலமா எங்க ரங்கநாயகி டீச்சர ஞாபக படுத்திட்டிங்க ...நன்றி ..அப்படியே வாத்தியாரோட '' ஆ '' ஆச்சரிய கதைகளை நினைவு படித்தியதற்க்கு நன்றி ....
சபை உணர்வு பற்றி பயனான பதிவு! நிரப்பப்படாத கோட்டுக்கு (டாஷ்) இப்படி ஒரு நிஜமான உபயோகமா?
Oru thadavai ennoda anna ponnu (appo avalukku 5-6 vayasu thaan irukkum) "Appan panna thappula aatha pettha vetthalai"nnu oru maattu doctor padatthu paattai salaname illama paadinappo naan thaan thalaiyai pidichukittein.... adhe pola 2-3 vayasu pillaikku ava amma "Balanathau... yaara kaiyilum padaathathu"nnu innoru maattu doctor Vijay padathu paattai sollikudukka... antha pombalaiya appadiye 4 saatthu saatthalamannu thonichu.... veettilye ozhungu paduttha aal illai.. Jayalakshmi miss pola orutharaavathu ovvoru schoolukkum avasiyam...
ஆனாலும், அந்த ஹான்னா-வோட சமயோசித புத்தியை நினைச்சா புல்லரிக்குதுங்க... அதெப்படி ஸ்பாடல் யோசிச்சு மேடத்தை பாத்துக்கிட்டே 'டாஷூ வெள்ளம்'னு பாடுனாங்க... அடுத்த பகுதிக்கு காத்துட்டிருக்கேன்..!
-
DREAMER
21வது பீலிங்கு...
ஹான்னாவுக்கு ஒரு ஓ!
பட், ஐ டேஷ் ஜெ மிஸ்!!
ரொம்ப நல்லாயிருந்தது இந்த ஸ்கூல் பகிர்வு!
பால்கனியில் இருந்து அபுதாபியைப் பாத்தா இடுகை வரும்னு புரியுது :))
@பொற்ஸ்,
வடை நாயகியே, வருக வருக.
ஆமாம், உன்னை லலிதா மிஸ் எப்படி ஆட்கொண்டாங்களோ என்னையும் அதே மாதிரி தான் இந்த ஜெயலக்ஷ்மி மிஸ்ஸும். //(ஆனா இப்போல்ல தெரியுது நல்லதே எவ்ளோ கொடுமையான அர்த்தமா இருந்துருக்குன்னு!)ரொம்ப கரெக்டு, எல்லாமே லேட்டாத்தான் புரியறது. :(
@ஸ்டார்ஜன்,
நானும் பாடி இருக்கேன் அஸெம்ப்ளில. அப்போ சேஃபா பாடக்கூடிய ஒரிரண்டு பாட்டு இருந்தது. ராஜாதி ராஜா படத்துல இருந்து மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாடி இருக்கேன். இன்னும் ஒண்ணு ரெண்டு பாட்டு. நினைவில்லை. (ஓ அப்போவே மலையாளக்கரையோரம் போயாச்சான்னெல்லாம் கலாய்ச்சு போடப்படும் பின்னூட்டம் நிராகரிக்கப்படும். ஹீ ஹீ)
@மின்மினி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
@பாஸ்டன் ஸ்ரீராமண்ணா,
கருத்து புரிஞ்சது.கட்டாயம் முயற்சி செய்யறேன். வருகைக்கும் அட்டெண்டென்ஸுக்கும் நன்றீஸ்
@எங்கள் ஸ்ரீராமண்ணா,
ரொம்ப கரெக்டு. 2000 வது ஆண்டு, ஒரு ரத்த தான முகாமுக்கு போய் இருந்தேன். அன்று ஆகஸ்டு 15. அன்னிக்கு அங்கே ஒரு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. பார்த்தா ஷாக்கலக்க பேபி பாட்டுக்கு குழந்தைகள் ஆடிண்டு இருக்காங்க!என்ன நிகழ்ச்சியா இருந்தாலும் கண்டபடி பாட்டுக்கு டான்ஸ் ஆடுறது தான் வழக்கம். எல்லோரும் மாறினாத்தான் இதெல்லாம் மாற்ற முடியும்.
@LK,
ஏதோ உன் தயவுல தான் இப்படி எழுதிண்டு இருக்கேன். நன்றி
@சிட்சாட்,
கடைசியில உங்க ப்ளாக் கண்டு பிடிச்சு வந்துட்டேன். நீங்களும் அபுதாபியா? கலக்குறீங்க? கருத்துக்கு நன்றிங்க. அடிக்கடி வாங்க. நானும் வருவேன். பீட்டர் படிக்கத்தான் கொஞ்சம் கஸ்டம்.
@சித்ரா,
கருத்துக்கும் மிக்க நன்றி.
@ஜெய்லானி,
ஆமாங்க, அந்த புஸ்த்தகத்தை படிச்சதுல இருந்து யாராலையும் அந்த பேரை அவ்ளோ எளிதில் மறக்க முடியாது. சமீபமாத்தான் நெட் ல மறுபடியும் அந்த கதை படிக்க முடிஞ்சது. அருமையோ அருமை.
ஓஹோ.. குழந்தை பாடுறது பரவாயில்லை. புரிந்தும் புரியாமல் இருக்கும் வயதில் அறியாமல் பாடும் பாட்டுக்களை ஜெயலக்ஷ்மி ஆசிரியை மாதிரி யாராவது இருந்தால் தான் திருத்த முடியும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
@கீதா மாமி,
ஆமாம், எனக்கும் தான். ஆன்லைன்ல இருக்கு. லின்க் வேணும்னா எனக்கு மடல் அனுப்புங்க. நான் தரேன்.
உங்க ஸ்கூல் மாதிரி எங்க ஸ்கூலும் கிறிஸ்துவ மிஷினரி பள்ளி தான். ரொம்ப ஸ்ட்ரிக்டு. ஏன் பாடசொன்னாங்கன்னு சரியா தெளிவில்லை. தினமும் வித விதமான ப்ரேயர் சாங்ஸ் இருக்கும். அதெல்லாம் முடிச்சுட்டு வேற ஏதாவது பாட சொல்லி இருக்கலாம். எனக்கு இதான் தெரியும்ன்னு யாராவது முன்னாடி போய் சினிமாப்பாட்டு பாடி இருக்கலாம்.
சன் டீவியில் ஒளிபரப்பப்படும் ராணி 6 ராஜா யார் டீலா நோ டீலா பத்தி எல்லாம் நான் ஏற்கனவே மனம் ஒரு குரங்குல கரடியா கத்தியாச்சு. ஒரு புண்ணியமும் இல்லை
கருத்துக்கு நன்றி!
@வெட்டி,
உன் கருத்துக்கு உடன் படுகிறேன். (இல்லாட்டி நீ விட மாட்டியே!) ஜோக்ஸ் அபார்ட், குழந்தைகள் திறமையை அளவிடறதுக்கு சினிமாப்பாட்டு மட்டும் தான் அளவுகோலா இருக்கறது வருந்தத்தக்க ஒன்று. நன்றி.
@கீதா மாமி,
பாயிண்டு நோட்டட்
@ஹூஸைனம்மா,
மிகச்சரியான கருத்துக்கள். அளவான சினிமா இனித்தது என்றே சொல்லலாம். இப்போவும் இருக்கே.. எல்லாமே ஓவர்டோஸ். புளிச்சுப்போச்சு.
@TRC மாமா,
கருத்துக்கு நன்றீஸ். ஸ்கூல் ஸ்கூல் தானே. மிக்க நன்றி
@பத்மநாபன் அண்ணா,
கருத்துக்கு நன்றி. இப்பெல்லாம் முழுப்பாட்டே டாஷ் டாஷ்ன்னு தான் பாடணும் போல.
@கே.பீ. ஜனார்தனன் அவர்களே,
கருத்துக்கு நன்றிகள். உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்.
@மஹேஷ்,
ரொம்ப வருத்தமா இருக்கு. இது குழந்தைகள் தப்பில்லை. பெரியவங்க தப்பு தான்னு தோணும். நாம பெர்மிஷன் குடுக்கறதுனால தானே அதுகள் ப்ராக்டீஸ் பண்றதுகள். பாவம். மாட்டு டாக்டரை மட்டும் சொல்லி ஒரு புண்ணியமும் இல்லை. எல்லா ஹீரோக்களுமே இதே ரேஞ்சுல தான் பாட்டு வேணும்ன்னு கேட்டு வாங்கறாங்க. பப்ளிக் டிமாண்டு.
@ட்ரீமர்,
வாங்க, கருத்துக்கு ரொம்ப நன்றீஸ்.
ஃபில் இன் தி டாஷஸ்ன்னு நமக்கு ஸ்கூல்ல எல்லாம் வரும். ஆனா இந்த ஹானா, டாஷஸாலேயே ஃபில் பண்ணிட்டா.. பயங்கர சாமர்த்தியம் தான்.
நான் முன்னாடியே சொன்ன மாதிரி இப்பெல்லாம் பாட்டு முழுசுமே டாஷுக்களால் தான் நிரப்பணும்.
Madam ungaloda blogyai padipatharkku munnal oru glass thanniyai ( ada kudikara kudineerunka) vaithykonduthan padipen. Enna sirithu sirithu purai erividukirathu chila samayam. I like your blogs keep writing.
அன்பு அநன்யா,
காலம் கெட்டுப் போகிறதுன்னு சொல்லியே, ரொம்ப வருஷம் ஓடிப் போயிடுத்துமா.வேணும்னு பாட்டுகளை
எழுதிவிடுகிறார்கள். இப்போ பெரியவர்களும் குழந்தைகளை திறமை வளர்க்கிறேம் பேர்வழின்னு
குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள்னு சொல்லக் கூட பயமா இருக்கு. ஏன்மா நாம பழைய ஓல்ட் மாடல்னு பேரு கிடைக்கும்;)
சுவாரஸ்யமான விஷயமா சொல்லி இருக்கீங்க. நான் கல்லூரியில படிச்சப்ப என் கூட படிச்ச ஒரு பொண்ணு ஜெயலக்ஷ்மி மிஸ் மாதிரி திட்ட ஆள் இல்லாம கூட காதல் நு வந்தாலே அந்த இடத்துல டஷுனு போட்டு தான் பாடுவா அவங்க வீட்ல அவ்வளவு கட்டுபாடாம்.
என் குழந்தைகளின் பள்ளி ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தேன். தமிழும் இல்லை தரமும் இல்லை. இதை வேறு லைவ் டெலிகாஸ்ட் டிவி சேனல் + சுட சுட cd காபி வேறு கொடுத்தார்கள். மானாட மயிலாட ஜூனியர் பார்த்த மாதிரி இருந்தது. சங்கடம்.
Post a Comment