Pages

Monday, October 26, 2009

மனம் ஒரு குரங்கு- 7

மனம் ஒரு குரங்கு- 7


இப்போதெல்லாம் லூலூ சூப்பர் மார்க்கெட்டில் பூங்கொத்துகள் மற்றும் பூச்செடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதோடு, இந்த இறுக்கமான, complex வாழ்க்கையிலும் நம்மையறியாமல் ஒரு இனிமை நுழைந்துவிடும் படியாக இந்த பூக்கள் புன்முருவலிடுகின்றன. அன்று கடைக்கு போவதற்கு முன்னர் ஏதோ சிறிய மனஸ்தாபம் எனக்கும் என் கணவருக்கும். வழக்கமானது தான் என்றாலும் நான் வழக்கத்துக்கு மாறாக முகத்தை உர்ர் என்று வைத்துக்கொண்டு வாராந்திர shopping சென்றேன். கூட அவரும் வந்தார். Khalidiya Mall இல் ஏதோ வேலை இருப்பதால் அங்கே இருக்கும் லூலூ supermarket இலேயே வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவாயிற்று.

கடையில் காய்கறி பக்கம் போனால் அங்கே வண்ணமயமான அழகழகான பூக்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. எடுதுப்பார்த்தபொழுது, அவை பூந்தொட்டிகள். தனியாக பூங்கொத்துகளும் வைத்து இருந்தார்கள்.மனதுக்குள் "வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்" என்று முணுமுணுத்துக்கொண்டே அந்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் நின்று கொண்டு இருந்தேன். வேறு என்ன பாட்டு இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து "வசந்தம் தேடி வர வைகை பாடி வர "என்றெல்லாம் பாடிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்.. மனசுக்குள்ள தான். (உரக்க வெளியே பாடினா super market இலிருந்து என்னை வெளியேறும்படி மைக் announcement வந்து விடும்.)

என் இறுக்கம் எல்லாம் தளர்ந்து, தானாக என் முகத்தில் புன்னகை வந்து விட்டு இருந்தது. லூசு மாதிரி தனியாக நின்று கொண்டு பூக்களை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தேன். நான் மட்டும் தான் அப்படியோ என்று நினைத்த பொழுது தான் அக்கம் பக்கம் பார்த்தேன். பூக்களை பார்த்த மற்றவர்களும் அப்படியே நின்று ரசித்துக்கொண்டு இருந்தார்கள். என்ன பண்ணுவது? இங்கே பூக்களை காண்பதரிதாயிற்றே!

கணவர் வேலையை முடித்து கொண்டு வந்தார். எனக்கு அவர் மேல் வருத்தம் இருந்தது போல அவருக்கும் என் மேல் ஏதோ கோபம். (இதை vice versaa வாக நீங்கள் எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல) இறுக்கமான முகத்துடன் வந்தார். இன்னும் காய் வாங்கலையா என்று கேட்டுவிட்டு நான் எதை பார்த்துக்கொண்டு நிற்கிறேன் என்று அவரும் பூக்களை பார்த்தார். நான் எதிர்பார்த்தபடியே அவரும் இறுக்கம் தளர்ந்து பூக்களை ரசித்து "செடி வாங்கலாம்" என்றார். 'ஹய்' என்று சந்தோஷப்பட்டது தான் தாமதம், "அடுத்த மாதம் " என்று அந்த வரியை முடித்தார். அதானே பார்த்தேன்.வாங்கிக்குடுதுட்டாலும் ...

முன்னெல்லாம் கடைகளுக்கு போனால் யாரவது தமிழில் பேசிக்கொண்டால்,"ஹய் தமிழ்" என்று பேபி ஷாலினி போல் மனம் குதூகலிக்கும். குறிப்பாக இந்த ஊருக்கு வந்த புதிதில் கார் ஜன்னல் வெளியில் எல்லாமே 'நம்மூர்காரங்க ' மாதிரி தான் இருப்பார்கள் பட் பேசுவது தான் புரியாது. மலையாளிகள். அதனால் யாரவது தமிழ் பேசினால், நான் மிகவும் மகிழ்ந்து விடுவேன். இப்போ பழகி விட்டது. தமிழ் பேச்சு கேட்டால் ஓகோ, இவர்களும் தமிழ் தான் என்று நினைத்துக்கொண்டு," சூனா பானா, போ போ போய்கிட்டே இரு" என்று போய் விடுகிறேன்.


TR என்றவுடன் எனக்கு என் தம்பி பாலாஜியின் mimicry யும் அவனுடைய high pitch இல் " ஏ டண்டணக்கா டணக்கு நக்கா" உம் தான் நினைவுக்கு வரும் .


அதென்னமோ தெரியவில்லை இந்த விகடனுக்கும் விஜய டிஆருக்கும் ஆகாது போல இருக்கு. சென்ற ஆண்டு டிசம்பரில் புத்தாண்டு இணைப்பில் இப்படி தான் ஒரு பேட்டி பிரசுரத்திருந்தார்கள். இதை படித்த அனைவரும் வாய் விட்டு சிரித்தோம் . அந்த போட்டோ வேறு பயங்கர comedy யாக கிச்சு கிச்சு மூட்டியது . வெகு நேரம் நானும் என் கணவரும் சிரித்ததுமில்லாமல் அதை screenshot எடுத்து ஈ மெயிலில் கூட அனுப்பி நண்பர்களையும் சிரிக்க வைத்து இருக்கிறேன்.

முதலில் அந்த பேட்டி ...கீழே பார்க்கவும் . பின்னர் அடுத்த செய்தி.
**********************************************************************************


' தம்த தகிட... தம்த தகிட... இது நாட்டுச் சரக்கு. அடுத்ததா வெஸ்டர்ன் வேணுமா? தகஜூம் தும்


தும்... த்தாத்தா'' தலைமுடி துள்ள, அறையே அதிரவாயா லேயே வாத்தியம் வாசிக்கிறார் விஜய டி.ஆர். ''சார்.. நான் ஓர் இசைக்கலைஞன் சார். தோல் வாத்தியம் தெரியும்.எனக்குத் தோளே வாத்தியம் சார்!''என்றபடி வலது கையால் இடது தோளை'ரப் ரப்'என்று அறைந்து தாளம் போடுகிறார். மிரட்டலாக ஆரம்பிக்கிறது விஜய டி.ராஜேந்தரின் பேட்டி.


''வந்திருச்சு சார் இடைத் தேர்தல். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சின்னு அத்தனைக்கும் இது டெஸ்ட்டு சார். இந்த ஆட்சி பற்றி மக்கள் மனதில் பலவிதமான குறைபாடுகள் இருக்குன்னு கலைஞர்கிட்ட சொல்லிட்டுதான், மாநில சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவியை ராஜி னாமா
செஞ்சேன். விலையேற்றம், மின்சாரத் தட்டுப் பாடுன்னு மக்கள் சிரமப்படுறாங்க சார். 'இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும் யுத்தம். தமிழன் சிந்தக் கூடாது ரத்தம். அதற்காக நீங்கள் கொடுக்க வேண்டும் சத்தம்'னு இன்னிக்கு வரைக்கும் சத்தம் போட்டுப் பேசிட்டு இருக்கேன். 'பிரணாப் முகர்ஜி இன்னும் ஏன் இலங்கைக்குப் போகலை?'ன்னு கேட்டா,
கலைஞர் பதில் சொல்ல மாட்டேங்குறாரு. தப்பு நடக் கும்போதெல்லாம் தட்டிக் கேட்டுக்கிட்டே இருக்கேன் சார்!'
'''திருமங்கலம் இடைத் தேர்தலில் உங்க கட்சியோட நிலை என்ன?''

''இந்த இடைத் தேர்தலை ஏன் இப்பவெச்சாங்கன்னு கலைஞரே சந்தேகமாக் கேக்குறாரு. 'தேர்தல் முடிவு பாதகமா இருந்துச்சுன்னா, தி.மு.க-வைக் கழட்டிவிட்டுடலாம்'கிறது காங்கிரஸோட கணக்கு.
திருமங்கலத்தில் நான் போட்டிபோடணும்'னு என் கட்சியினர் எழுதினாங்க சுவர் எழுத்து. எனக்குத் தெரிஞ்சிருச்சு தேர்த லோட தலையெழுத்து. அதனால, லட்சியத் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது. திருமங்கலம் தேர்தல்களமா... ரணகளமா..? அங்கு நடக்கப்போவது ஜனநாயகமா... பண நாயகமான்னு மக்கள்தான் பதில் சொல்லணும். நான் ஆன்மிகவாதி. ஜோதிடம் அறிந்தவன். என் ராசி தனுசுல சூரியனும் செவ்வாயும் சேர்ந்து உட்கார்ந்திருக்காங்க. குரு உச்சத்துல இருக்கான். கூடவே, ராகு இருக்குறான். இந்தக் காலத்தை நான் பார்க்கிறேன். என் கண்ணில் ஒரு ரணகளம் தெரியுது!''


''விஜயகாந்த்தோட அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கு?''

''தமிழ்நாட்டுல போண்டா மணி ஓட்டு கேட்டுவந்தாக் கூட கூட்டம் வரும். திருமங்கலத்துல நின்னா, திருப்பு முனையை ஏற்படுத்துவேன்னு தெருமுனையில பேசு றாரே, ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வரலை? ஜெயலலிதா, காங்கிரஸ் இவங்களோட கூட்டணிவைக்க ணும்னா, இலங்கைத் தமிழர் பிரச்னையில அடக்கி வாசிக்கணும்னு விவரமா இருக்கார். (பல்லைக் கடித்தபடி விஜயகாந்த் வாய்ஸில் மிமிக்ரி செய்கிறார்.) விஜயகாந்த்துக்கு முன்னாடியே நான் அரசியல் களம் பார்த்தவன் சார். ஆனா, அவ்வளவா விவரம் இல்லாதவன். நான் வேகமான தமிழன். ஆனா, பிழைக்கத் தெரியாத தமிழன். இதுதான் உண்மை!''

''மாறன் - கலைஞர் குடும்ப இணைப்புபற்றி என்ன நினைக்கிறீங்க?''
''தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டபோது,'மதுரையை கண்ணகி எரிச்சதையெல்லாம் மக்கள் பார்க்கலை. ஆனா, இவங்க எரிச்சதை இப்பதான் பாக்குறாங்க'னு விஜயகாந்த் அன்னிக்குக் கொடுத்தாரு பேட்டி.
இன்னிக்கு அவுந்துடுச்சு பாத்தீங்களா, அவரு வேட்டி. நான் அன்னிக்கு ஏதாவது பேட்டி கொடுத்தேனா? கலைஞர் டிவி. ஆரம்பிச்சப்ப, நான் அங்கே போகாம சன் டி.வி-யிலயே அரட்டை அரங்கம் பண்ணுனேன்
எவன் விவரமானவன், எவன் சிந்திக்கத்தெரிஞ்சவன்னு புரியுதா? ராஜேந்தருக்கு இருக்குறது முடி மட்டுமில்ல... மூளை! (தலையைக் கலைக்கிறார்) இவன்கிட்ட இருக்குறது வேகம் மட்டுமில்ல... விவேகம்.என்கிட்டே துடிப்பும் இருக்கு, படிப்பும் இருக்கு. எனக்காகப்பிரசுரிங்க சார். கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும்அடிச்சுப்பாங்க... ஒண்ணா கூடிப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.நீரடிச்சு நீர் விலகாது.கலைஞர் கதை, திரைக்கதை, வசனம்எப்படி வேணும்னாலும் எழுதுவார்னு எனக்குத் தெரியும் சார்!''


''சிம்பு மேல மட்டும்இவ்வளவு சர்ச்சைகள் வருதே?''


''காய்ச்ச மரம் கல்லடி படத்தான் சார் செய்யும். 'இந்தப் பையன் இப்படி வளர்றானே!'னு சிம்பு மேல பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கு எல்லாம்ஆதங்கம் இருக்கு. என் மகனைப் போல ஒரு நல்லவனை நான் இதுவரைக்கும் பார்க்கலை.எவ்வளவோ பெண்களோட பழக வாய்ப்புள்ள
சினிமாஉலகத் துல, காதல் குறித்த ஒரு மென்மையான இதயத்தோடஇருக் கான். சினிமாவுல இருந்துட்டு, என்னை மாதிரியே அவனும் நல்லவனா இருக்குறது பெரிய விஷயம் சார் இப்படி ஒரு மகனைப் பெற்றதற்கு நான் பெருமைப்படுறேன் சார்!''


''தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாரா வர்றதுக்கு யாருக்கு வாய்ப்பிருக்கு?''
''சினிமாவுல திறமைசாலி, புத்திசாலி மட்டும் ஜெயிக்க முடியாத பொறுமைசாலியாவும் அதிர்ஷ்டசாலியாவும் இருக்கணும். இவ்வளவு நடிகர்கள் இருக்குற தமிழ் சினிமாவுல ரஜினி - கமல், விஜய் - அஜீத், சிம்பு - தனுஷ்னு 6 பேருக்குத் தான் ரசிகர்கள் இடம் கொடுத்திருக்காங்க. அதுல ஒருபையனா வந்து நிக்கிறான் யாரு..அவனைப் பெத்தது இந்த விஜய டி.ஆரு. 'ஐ யம் எ லிட்டில் ஸ்டார். ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்'னு 1989-லயே 'சம்சாரம் சங்கீதம்' படத்தில் நான் ஒரு பாட்டு எழுதிட்டேன் சார். எதிர் காலத்துல என் பையன் எப்படி வளர்ந்து வருவான்னு வெயிட் பண்ணிப் பாருங்க . நான் தலைக்கனத்தோட சொல்லலை, தன்னம்பிக்கையின் இலக்கணத்தோடு சொல்றேன்!''


'' 'வீராச்சாமி'க்கு அப்புறம் என்ன படம் பண்றீங்க?''
'' என்னோட அடுத்த படம் 'ஒருதலைக் காதல்'. 1979-ல் 'ஒருதலை ராகம்' எடுத்தேன். 2009-ல் 'ஒருதலைக் காதல்' எடுக்குறேன். இப்போ உள்ள யூத்து களுக்காக இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக் கேன். டப்பாங்குத்துப்
பாட்டுக்களோட இன்னைய டிரெண்டுக்கு இறங்கி அடிக்கப் போறேன்.இதுல ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக ஜிம் போய், டயட் இருந்து வெயிட்டைக் குறைச்சுக்கிட்டு இருக்கேன். (படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்) பாருங்க தொப்பை இல்லாம யூத் மாதிரி இருக்கேன்ல? இப்ப உள்ள ஹீரோக்களை என்னை மாதிரி ஆடிப் பாடச் சொல்லுங்க சார். தம் அடிச்சு யாருக்குமே தம் இல்லை.' வீராச்சாமி'யில நானஆடினா, தியேட்டரே கைதட்டி ரசிக்குறாங்க சார். உங்களை மாதிரி சில பேர்தான் 'ஏன் ஹீரோவா நடிக்கிறீங்க?'ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம். நான் நடிக்கக் கூடாதா? (காலை பக்கவாட்டில் உதைக்கிறார்) ஒரு காலைத் தூக்கி இப்படி அடிச்சேன்னா, இன்னிக்கு நாள் பூரா அடிச்சிட்டே இருப்பேன். நீங்க வேணா கிண்டலுக்காக'டி.ஆர். சிக்ஸ்பேக் வைக்கப் போறான்'னு எழுதலாம். நான் முகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் இல்ல... அகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் சார்!''
***********************************************************************************
இந்த வாரம் ஜூனியர் விகடனில் மசாலா மிக்ஸ்இல் இதே போல இன்னொரு நியூஸ்."லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்' குறித்துப் பேச ஆரம்பித்தால் ஏக குஷியாகி விடுகிறார் விஜய டி.ராஜேந்தர். ஒவ்வொரு ஊருக்கும் பிரசாரத்துக்குப் போன சமாச்சாரங்களை எதுகை மோனையோடு தாளம் போட்டபடி சிலாகித்துப் பேசும் விஜய டி.ஆரிடம், 'உங்க கட்சியில சிம்புக்கு என்ன பதவி கொடுக்கப் போறீங்க?'என ஒரு கேள்வி கேட்டு உசுப்பியதுதான் தாமதம்...''அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு.அவரை எதுக்கு இழுக்குறே வம்பு...'என சாமியாடி அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுகிறாராம்"
***************************************************************************

நான் எப்போதும் படிக்கிற விகடன் வாசகர் கருத்து படிக்கும்பொழுது மோகன்என்ற வாசகர் தம் வலைத்தளமுகவரி கொடுத்து நமக்கு ஒரு புதிய TR ஐ அறிமுகப்படுத்தினார். அவரது வலைப்பதிவில்
போய் பார்த்தபோது TR எவ்வளவு எளிமையான இனிமையான மனிதர் என்பது தெரிந்தது.


From now on, I changed my opinion about TR.
http://msams.blogspot.com/2009/10/t.html


சரி சரி எல்லாரும் கண்ணை துடைச்சுக்கோங்க. போறும் sentiment!
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த எஸ் வி சேகர் ஜோக். யாமிருக்க பயமேன் டிராமாவிலிருந்து:


வழக்கமான சண்டை போடும் ஹீரோயினிடம்,


எஸ் வி சேகர் : ஹே நான் இப்போ தானே உன்னை வெளீல பார்த்தேன்?


ஹீரோயின் : என்னை யா?


எஸ் வி சேகர் : ஆமா , அதான் அந்த ட்ரம்மடிச்சிகினு கம்பி மேல போனீங்களே ஓ, அந்த பார்ட்டி நீ இல்லியா?


ஹீரோயின் : ??????????????????#$%#$%#$%#@$%@#$%@#$%#@$%






அதே டிராமாவில் இன்னொரு ஜோக்.


எஸ் வி சேகர்: ஜட்ஜ் மாமா ஜட்ஜ் மாமா


வக்கீல் : என்னய்யா ஜட்ஜ்ஐ போயி மாமாங்க்றியே?


எஸ் வி சேகர்: இல்லேங்க குடும்ப கோர்ட்ன்னு சொன்னாங்க

8 comments:

Anonymous said...

great!! each day a post.. keep it up. its surprising to read about TR.. good one :)

Unknown said...

என்னடா, அக்கா சினிமாவே தொடாம ப்ளாக் எழுதுதான்னு ஆச்சரியப்பட்டுகிட்டு இருக்கும்போதே TR-ன் பேட்டி... அக்கா, சொம்பு ரசிகர்கள் கூட சொம்பு எப்படி எளிமையானவ(ர்/ன்/ள்)னு ஒரு ரசிகர் வலைதளமே வச்சிருக்காங்களாம்... தேடுறதுக்கு வசதி எப்படி? ஹா! ஹா! ஹா! Jokes apart, அந்த பதிவு படிக்க சுவாரசியமாகவே இருந்தது.

கலீதியா மால் லூலூ நன்றாக இருந்தது. உன் புண்ணியத்தில் ஒரே ஒரு முறை பார்த்திருக்கேன். பூக்கள் குறித்த உனது அபிப்பிராயமே எனதும்.. அதனால் தான் எனக்கும் இயற்கை / இயற்கை சார்ந்த இடங்கள், காணும் இடம் எல்லாம் செடிகள் என்று இருந்தால் மனது சந்தோஷம் அடைகிறது... மாப்பிள்ளை செடி வாங்கி குடுக்கலைன்னா என் கிட்டே சொல்லு...

’யாமிருக்க பயமே’னில் நீ சைட் சாந்தி பத்தி சொல்லி இருந்தால் நல்லா இருக்கும்... உன்னிடம் தான் நல்ல எஸ்.வி சேகரின் கலெக்‌ஷன் உள்ளதே, அவர் நாடகங்கள் பற்றி எழுதுவதற்கு வசதி எப்படி???? நாளைய குரங்கிற்கு தீனி...

இப்போதெல்லாம் தினமும் காலையில் செய்தித்தாள் இணையங்களுக்கு பதிலாக உன்னுடைய தளத்தில் புதிய பதிவு என்ன எழுதி இருக்கிறாய் என்று தான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!!!

Ananya Mahadevan said...

நீ அடங்கவே மாட்டியா மகேஷ் ?நான் தான் சொல்லி இருக்கேன் இல்லே இந்த மாதிரி புகழ்ந்து கமெண்ட்ஸ் எழுதினாலும் உனக்கு ஒரு allowance உம கிடையாதுன்னு.. சொம்பு எப்படி எளிமையானவ(ர்/ன்/ள்)னு - LOL எப்படி இப்படி எல்லாம்? சூப்பர் போதித்து.. எனக்கு தெரியும் நீ இதே தான் சொல்லுவே.. யாரும் நம்பமாட்டங்க.. என்ன பண்ணறது ..but i already changed my views on him. : அந்த தற்பெருமை மட்டும் குறைசுண்டா போரும் TR will not be laughing stock. Please kindly note I am not talking about movies or Simbu, it is about an artist called TR :-) எப்புடீ? பேசராங்கய்ய பேச்சு..

Mittu, Thanks for dropping by. Yeah, I am idle at home and nothing much to do during the day. That is why I am hooked up to my computer almost all day long.

மோகன் said...

Thanks for ur reference to my site Ananya....

Prathap Kumar S. said...

ஹஹஹ டி.ஆர் மேட்டர் சிரிச்சு வயிறு வலிக்குது...உண்மையிலேய அவரு ரியல் லைப் காமெடியன்தான்....

டைமிங் காமெடி எஸ்வி.சேகர் ட்ராமைவை விட கிரேஸீமோகன் ட்ராமல நிறைய இருக்கும்...

ஒருவர் கிரேஸீயிடம் வந்து,

சார் நீங்க பார்க்கறதுக்கு படிச்சுவரு மாதிரி இருக்கீங்க சார்?

கிரேஸீ: யோவ் நான் உண்மையிலேயே படிச்சவன்தான்யா???

Ananya Mahadevan said...

:-) கிரேஸி மோஹன் ஜோக்குகள் எனக்கும் பிடிக்கும். ரெண்டு பேரு டிராமாவும் கேக்கறதுண்டு. என்ன, கிரேஸியின் நாடகங்களில் ஜோக்குகளில் redundancy இருக்கும். எஸ் வீ யிடம் அது இருக்காது. புதிய ஜோக்குகளாக இருக்கும். கிரேஸியின் நாடகங்கள் பெரும்பாலும் பொய் சொல்லிவிட்டு பழம் சாப்பிடுவது போல இருக்கும்.எஸ் வீ சேகரிடம் வாரல் ஜாஸ்தி!
கிரேஸியின் இன்னொரு ஃபேமஸ் மொக்கை ஜோக்கு-ஒருவர்: உனக்கு ஒரு 24 வயசிருக்குமா?
மாது: 2 சேர்த்துக்கோங்களேன்
ஒருவர்:(அதிர்ச்சியுடன்) 242 ஆ?

தி. ரா. ச.(T.R.C.) said...

வேறு என்ன பாட்டு இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து

"மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அக்கா வாங்கி கொடுப்பாளென்று கனவு கண்டாள்" பொருத்தமா இருக்குமே

தானாக என் முகத்தில் புன்னகை வந்து விட்டு இருந்தது. லூசு மாதிரி தனியாக நின்று கொண்டு பூக்களை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தேன். நான் மட்டும் தான் அப்படியோ என்று நினைத்த பொழுது

தமிழில் எழுதும்போது சிக்கனமா வார்த்தைகளை போடனும். உதரணமா மேலே சொன்ன வரிலே மாதிரி தேவையே இல்லை

இவ்வலவு ஹாஸ்ய உணர்வு எங்கிருந்து வந்தது கீப் இடப்

kargil Jay said...

உங்கள் ஹாஸ்ய வகையறாக்களைப் பற்றிய அவதானிப்பும் மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாவே உள்ளது. டி.ஆர். சூப்பர் காமெடிதான். அவருடையது தமிழ் ப்ளெட் . ஒய் ப்ளெட் . சேம் ப்ளெட் .

Related Posts with Thumbnails