Pages

Monday, November 30, 2009

பாசஞ்சர்


ஈத் விடுமுறையில் நாங்கள் உருப்படியாக பார்த்த ரெண்டு மூன்று படங்களில் இது தான் முதன்மையானது


ரொம்ப நாளைக்கப்புறம் ச்சே , இதுவல்லவோ படம் என்று தோன்றியதோடு மட்டும் நில்லாமல், இது போன்ற படங்கள் நம் தமிழ்கூறும் நல்லுலகில் வரும் நன்னாள் எந்நாளோ என்று ஏங்க  ஆரம்பித்துவிட்டேன்.


இந்த கலிகாலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் மறந்து வரும் சில ethics, சில Cultural valuesஐ எல்லாம் தூசு தட்டி எடுத்து நமக்கு நினைவூட்டி இருக்கிறார்கள். இதற்கு முன்னர் இவ்வளவு விறுவிறுப்புடன் நாங்கள் பார்த்த படம் 'A Wednesday ' . ('உன்னைப்போல் ஒருவன்' அல்ல)அனால் இந்த படம் சற்றே வித்தியாசமானது. மனதைதொடும்படியான ஒரு  முடிவுரையுடன் படம் நிறைவடைகிறது. இந்த படத்தின் one liner - 'சத்யமேவ ஜெயதே'. வாய்மையே வெல்லும்.

ஆபீசில் ஓவர்டைம் செய்யும் ஸ்ரீனிவாசன் பாசஞ்சர் ரயிலில் தான் இறங்க வேண்டிய stationநில் தூங்கிவிட சில நிமிடங்கள் மட்டுமே  ஏட்டிக்கி போட்டியாக பேசி பரிச்ச்சயப்படும் திலீப்பை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளின் படமாக்கமே  பாசஞ்சர் . இந்த படத்தின் கதையைப்பற்றி வேறெதுவும் நான் கூற விரும்பவில்லை. அவ்வளவு சுவாரஸ்யமான படம் இது.


தோற்றத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் நல்ல பொருத்தம் ஸ்ரீனிவாசன். அதுதான் மலையாள சினிமாவின் சிறப்பம்சம். கிழடு தட்டி போயிருந்தாலும் டயிட்டாக  பான்ட்  ஷர்ட் அணிந்து கொண்டு திங்கு திங்கு என்று ஹீரோயின் கூட குதிக்க மாட்டார்கள். கழுத்தில் ஸ்கார்ப்  கட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் எல்லாம் பேச மாட்டார்கள். Introduction பேத்தல் பாடல் இருக்காது. படத்தின் நடுவில் சம்பந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வந்து ஒரு (அ)கௌரவ நடிகையின் கேவலமான மூன்றாம்தர குத்து நடனம் ஏதும் இருக்காது. கதை மட்டுமே கதாநாயகன் என்று இன்றளவும் நம்பி வரும் ஒரு தொழிற்சாலை என்றால் அது மாலிவுட் தான் என்று அடித்து கூறுவேன். சில technical  சமாச்சாரங்களை புகுத்தி இருக்கிறார்கள்.அங்கங்கு சில தொய்வுகள் இருந்தாலும் அவை மன்னிக்கப்படலாம்.

மொத்தத்தில் மிகவும் நிறைவான ஒரு படம். படத்தில் வேகத்தடை செய்யும் பாடல்களே இல்லை. எனக்கு மம்தா : மோகன்தாசை (மாயூகதிற்கு அடுத்து) மிகவும் பிடித்த படம் இது தான். திலீப்பிற்கு அவ்வளவாக scope இல்லாவிட்டாலும், வருகின்ற காட்சிகளில் சிறப்பான நடிப்பு.அடர்த்தியான புருவங்களுடன் நெடுமுடி வேணு டாக்ஸி டிரைவராக  வருகிறார். அவர்களுக்கெல்லாம் நடிப்பு சொல்லியா தரவேண்டும்.. கிங்ஆச்சே.. கலக்கி இருக்கிறார்

மொத்தத்தில் பாசஞ்சர், ஒரு விறுவிறுப்பான, உண்மையான இந்தியப்பயணி. வெல்க வாய்மை!!!

Friday, November 27, 2009

Mr & Mrs Iyer


Mr & Mrs Iyer


2002இல் வெளிவந்து பல வருடங்களாக நான் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்த படத்தை இன்று தான் பார்க்க முடிந்தது. அபர்ணா சென் என்ற புகழ்பெற்ற பெண் இயக்குனரின் படம் என்று titles போடும் வரை நான் அறிந்திருக்கவில்லை. அது என்னமோ இந்த கொண்கனா சென் ஷர்மாவின் மேல் அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு. நிச்சியம் படம் நன்றாக தான் இருக்கும் என்று எடுத்துவிட்டேன். பற்றாக்குறைக்கு நம்ம ஹீரோ ராகுல் போஸ் இறுக்கமான முகத்திலும் அனாயாசமாக வெளிப்படும் பாவங்கள்.



ஒரு மொபைல் keypad டின் பட்டனுக்குள் எழுதிவிடக்கூடிய சிறிய கதை தான். (பின்னே, இதை எப்படி எல்லாமா சொல்லிட்டாங்க நான் என் ஸ்டைல் ல சொன்னேன் அவ்ளோ தான்.)


நிற்க இந்தப்படத்தின் வசனங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான். இந்திய நாட்டின் வெவ்வேறு மொழிகளின் கலவை என்பதால் இதை ஒரு மொழியில் எடுக்க வேண்டாம், எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசட்டும் அனால் அவரவர் Accent  போட்டு தான் பேச வேண்டும் என்பது அபர்ணா வின் ஸ்ட்ரிக்ட் ஆர்டராம்,கொங்கனாவின் தமிழ் 'ழ' உச்சரிப்பு பிரமாதம் போங்கள் , அம்மணி தமிழில் நடித்தால், dubbing தேவை இருக்காது என்று நம்புவோமாக



இனக்கலவரம் காரணமாக தன்னுடன் பயணிக்கும் சக பயணியை கணவராக அறிமுகப்படுத்துகிறார் கொங்கனா. பெற்றோர் அறிமுகப்படுத்திய நண்பரின் நண்பர் என்பதைத்தவிர வேறெதுவும் தெரியாத நிலையில், இவர்,  தன் கணவர் என்று பிறருக்கு தோன்றும்படியாக பேசுகிறார் கொங்கனா சென். பஸ்ஸில் மற்ற பயணியரின் மனதை பளிச் என்று கண்ணாடி போல காட்டுகிறார் இயக்குனர்
அபர்ணா சென். முதிய இஸ்லாமிய தம்பதியினர், மன நலம் குன்றிய பையனும் அவன் தாயும், முசுடு பாட்டி, குதூகலிக்கும் இளைஞர் பட்டாளம் என்று பஸ்ஸில் பயணிக்கும் மனிதர்களின் பாத்திரப்படைப்பு அபாரம்.

போகும் வழியில்   ஏதோ ஒரு இடத்தில் வெடிக்கும் இனக்கலவரத்தில் நாமும் கலவரம்   அடையும்படியாக நிகழ்வுகள். அங்கே   இங்கே   சுற்றித்திரிந்து   நாய்   படாத   பாடு  பட்டு  ஒரு  வழியாக  குழந்தையுடன்  கொங்கனா கல்கத்தா வந்தடையும்போது நமக்கும் நிம்மதி கிடைக்கிறது அமோகமான  ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமில்லாத கதை சொல்லும் திறன் இவை எல்லாம் இந்த படத்தின் தூண்கள்.



மிகசிறப்பாக பயணிக்கும் கதையானது, ஏனோ தடம் புரண்டு, குழந்தையுடன் இருக்கும் சென் இந்த அறிமுகமற்ற அந்நியனிடம் காதலில் விழுகிறார் போன்ற பேத்தல்களினால் என்னால் முழு மனதுடன் இந்தப்படத்தை மெச்ச முடியவில்லை. என்ன தான் ஆயிரம் இருந்தாலும் நம்மூர்ப்பெண்களின் Psychology எப்படினா, தன் கணவன் தன் குழந்தை பத்தி மட்டும் தான், வள வள என்று பேசுவார்கள். ஒரு மனிதாபிமானத்துடன் காப்பாற்றிய ஒருவனிடம் எதற்கு காதல்வயப்பட வேண்டும் என்ற தெளிவு இல்லை. அப்படியே இருந்தாலும் அது நம் கலாச்சாரத்தின் படி ஏற்புடையதாக இல்லை. ஒரு வயது குழந்தையுடன் ஒரு தாய், கணவன் ஹௌரா ஜங்கஷனில் காத்துக்கொண்டு இருக்கும்போது, மடத்தனமாக காதல் வசனம் பேசுவதெல்லாம்... சாரி..  Rejected Aparna . இந்த ஒரு முக்கியமான cultural jerk   ஜீரணிக்க முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்குமாக இருக்கும், ஆனால் சினிமா என்ற சக்திவாய்ந்த ஊடகத்தை, இவ்வளவு தவறான ஒரு கலாச்சார சறுக்கை பற்றி சொல்லி வீணடித்திருக்க வேண்டாம். அந்த Love Track ஐ கத்தரிதிருந்தால் படம் நிறைவாக இருக்கும்.இதைப்பற்றி இவ்வளவு நேரம் பேசவேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், படத்தின் இறுதியில் நல்ல விஷயங்கள் எல்லாம் அடிபட்டு போய், இந்த சொதப்பல் மட்டும் பூதாகாரமாக தெரிகிறது.

Wednesday, November 25, 2009

ஸ்வர்க்கம் என்பது நமக்கு ....சுத்தமுள்ள வீடு தான்


"விடியாமூஞ்சி வந்துருச்சு டும் டும் டும்
வீட்டை வெள்ளை அடிச்சிருச்சு டும் டும் டும்"


என்னமோ ஜுரம் போல இருந்ததால் இவரை ஆபீஸ் கு அனுப்பிவிட்டு பேசமால் லாப்டாப்பை  மூடி வைத்து விட்டு சூர்யா வை on பண்ணிக்கொண்டு படுத்துக்கொண்டேன். காலை சுமார் 8.30 ௦ மணிக்கு டிங் தாங் என்று கல்லின் பெல் அடித்தது. காலங்கார்த்தால  நம்ம ஹீரோ விடியாமூஞ்சி கையில் பெயிண்ட்பிரஷ் ஷுடன் நின்று கொண்டு இருந்தார். அவரை பார்த்த ஆச்சர்யத்தில் முகம் மலர சிரித்துவிட்டேன். பின்னே ஏழெட்டு மாதமாக துரத்தி துரத்தி follow up பண்ணிண்டு இருக்கோம், எப்டி தண்ணி காட்டினாங்க தெரியுமா?அவரை அன்புடன் வரவேற்றேன்.

சுவர்களை எல்லாம் பார்த்துவிட்டு போனவர், ஒரு நேஷனல் பெயிண்ட்ஸ் பத்து லிட்டர் பக்கெட்டுடன் வந்தார். ஆஆஹா நன்னா செழும்பா பெயிண்ட் எடுத்துண்டு வந்து இருக்கார், நாம தான் அவசரப்பட்டு இவரை விடியாமூஞ்சின்னு சொல்லிட்டோம்ன்னு நெனச்சது தான் தாமதம், அந்த பக்கெட்டில் எனக்கு என்னமோ சந்தேகமா இருந்தது. உள்ளே பெயிண்ட் இருக்கும்ன்னு நம்... பி  அண்ணாந்து பார்த்தபொழுது அதில் (வருண் பாபா மூச்சா போனமாதிரி ) சுமார் 100 ml ௦ பெயிண்ட் மட்டுமே இருப்பது தெரிந்தது. மவராசன் இதுவாவது எடுத்துண்டு வந்தாரே சந்தோசம்.


ரோலர் பிரஷ்,  பெயிண்ட் பிரஷ், ஒரு நீளமான குச்சி சஹிதம் வேலையை ஆரம்பித்து விட்டார். அவருடைய முகத்தில் ஏதேனும் ஒரு expression  எப்படி வரவழைப்பது என்று யோசித்தேன். பேச்சு கொடுத்து பார்க்கலாம் என்று முடிவு பண்ணினேன். நீங்க எப்படி எல்லா வேலையும் பண்ணறீங்க என்றேன் ஹிந்தியில். ஒரு புன்சிரிப்பு உதிர்ந்தது.. உலக அதிசியம். எதனை வர்ஷமா இருக்கீங்க என்றேன். பன்னிரண்டு வரஷமாச்சு இங்கே வந்து என்றார். அதன் பிறகு நான் பேசுவதை விட்டு விட்டேன்.டீ எடுதுக்கரீங்களா என்றேன். வேண்டாம் என்று மறுக்காததால் டீ தயாரித்து நானும் குடித்து அவருக்கும் கொடுத்தேன்.


நிற்க. இங்கேயெல்லாம் நம் வீட்டில் எதாவது ரிப்பேர் செய்ய வருவோருக்கு டீ காப்பி எல்லாம் கொடுத்தால் அவர்கள் நம்மை வேற்று கிரக மனிதர்களை போல பார்ப்பார்கள். அதில் இந்தியர்களாக இருப்பின் குறிப்பாக தென்னிந்தியர்களாக இருப்பின் கண்களில் நீர் மல்க காபி குடித்து விட்டு சிறப்பாக வேலை செய்து முடித்து விட்டு செல்வார்கள். வேற்று நாட்டவராயின் ஆச்சர்யப்பட்டு போவார்கள். இதெல்லாம் cultural barriers. அவ்ளோ தான். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது. துபாயில் ஒரு முறை Pest Control  பண்ண வந்த தென்னிந்தியகர்கள் எனது உப்புமாவையும் காப்பியையும் மெச்சி பாராட்டு பத்திரம் வழங்கி விட்டு அரைகுறையாக Pest Control  பண்ணிவிட்டு சென்றார்கள் என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்பவில்லை. அதிலும்(கரப்பான்) பூச்சி கொல்லி போட்டார்களா, இல்லே பூச்சி(இனப்)பெருக்க மருந்து தெளித்தார்களா தெரியவில்லை, சை.. மகா அருவெறுப்பு. துபாய் வாழ்கை வெறுக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது.



விடியா மூஞ்சி பாவம் வயதானவர். கஷ்டமான வேலை . நாம் நினைக்கும் அளவிற்கு ரோலர் பிரஷ் ஐ கையாள்வது சுலபமல்ல . தோள்களும் கைகளும் வலி பின்னி எடுத்து விடும் போல தோன்றியது. எந்த ஊர் என்று மட்டும் கேட்டு வைத்தேன் . பங்களாதேஷ் என்றார் . முதலில் ஹால் சீலிங் அடித்தார் . வீடே Centralized AC யினால்  கருப்பு கருப்பாக பூஞ்சைக்காளான் வந்து திட்டுதிட்டாக இருந்தது. அந்த கருப்பு திட்டுகள் மேல உப்பு காயிதம் தேய்ப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம். ஏனோ தானோ என்று கடனுக்கு அதன் மேலேயே பூசி விட்டார்.

சுவற்றில் அங்கங்கு பேப்பர் டேப்ஸ்ஒட்டி போஸ்டர்ஸ் போட்டு இருக்கிறோம்.அந்த போஸ்டர்ஸ் ஐ எடுத்து விட்டேன். ஆனால் மீதமிருந்த அந்த சிறிய டேப் துண்டுக்களை முழுதும் எடுக்காமல் அதன் மேலேயே பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார் . அதை எடுத்துவிடுங்கள் என்று சொன்னேன் . பெட்ரூம் அடித்து விட்டு வந்தார் . ஹாலில் ஏற்கனவே அடித்த பெயிண்ட் அதற்குள் காய்ந்து மீண்டும் கருந்திட்டுகள் தென்பட்டன . இங்கே அடியுங்கள் அங்கே அடியுங்கள் என்று ஏவிக்கொண்டே இருந்தேன். துர்வாசர் போல எதாவது சாபம் கொடுத்துவிட்டு இனி எக்காலமும் உன் வீட்டு மராம்மத்து வேலைகளுக்கு தலை சாய்க்க மாட்டேன் என்று போய்விடப்போகிறார் என்று பயந்துகொண்டே மெதுவாக சிரித்துகொண்டே(!!) தான் சொன்னேன். மீண்டும் அதே expression இல்லாத மூஞ்சியுடன் திட்டுக்களின் மேல் அந்த காய்ந்து போன பிரஷை மேலும் கீழும் சுழற்றி விட்டு perfection  கோசம் வீடெல்லாம் சுற்றித்திரிந்து பார்த்துவிட்டு தனது வேலை செவ்வனே செய்து முடித்த திருப்தியுடன் கிளம்பினார். சர்பத் குடிக்கிறீர்களா என்று கேட்டு வைத்தேன். வேண்டாம் என்று மறுத்து விட்டார். பால்கனி யில் துணி காயபோடும் மரப்பட்டையை எடுத்து ஆறு மாதங்கள் ஆகின்றன. போகும் முன் இதை சரி செய்து விடுங்கள் என்றேன்.'நகி' என்று போய்விட்டார். இனி எப்போ வருவாரோ



என்ன தான் முகத்தில் சிரிப்பில்லாவிட்டாலும் அவரால் தான் இன்று வீடு பளிச் என்று இருக்கிறது. ஏனோ இனி அவரை விடியா மூஞ்சி என்று அழைக்க மனம் வரவில்லை.அவருக்கு வேறு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும்.யாராவது சொல்லுங்களேன்...

Sunday, November 22, 2009

துபாய் அல் கூசில் அய்யப்ப இலட்சார்ச்சனை



துபாய் அல் கூசில் அய்யப்ப இலட்சார்ச்சனை

இன்று விடிகாலை ஐந்து மணிக்கே எழுந்து நாங்கள் துபாயில் அய்யப்ப லட்சார்ச்சனைக்கு புறப்பட்டு விட்டோம். சுமார் ஆறு மணிநேரம், அர்ச்சனையும் வேதங்களும் ஓதி, பாடல்கள் பாடி முடித்தார்கள். மிக சிறப்பாக இருந்தது. ஐயப்பனின் ஆயிரம் நாமங்கள் கூறி அர்ச்சனை செய்தார்கள். கூட்டம் அலைமோதியது. சிற்றுண்டி, தேநீர், பிஸ்கட்டுகள், மதிய உணவு எல்லாம் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். இவை எல்லாவற்றிற்கும் அடித்தளமாக பணியாற்றியது திரு பிரகாஷ் என்ற தனி மனிதரும் அவர் ஆரம்பித்த 'for B' என்ற அமைப்பு தான் காரணம் என்று தெரியவருகிறது. அவரும் அவருடைய குழுவும் மிகவும் பாடுபட்டு உழைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது.அவர்கள் உழைப்பும் கூட்டு முயற்சியும் நிகழ்ச்சி முழுவதும் பளிச்சிட்டது.

ஜெ எஸ் எஸ் என்ற பள்ளியில் அல் கூஸ் துபாயில் இது நடந்தேறியது. வழக்கம் போல பட்டு பாவாடை சரசரக்கும் பெண் குழந்தைகள்,குட்டியாக அவரவர் சைஸ் இல் ஜிப்பா வேஷ்டி அணிந்த சிறுவர்கள், ஒரு புறம் பட்டு புடவை அணிந்த பெருமை மிகு பெண்கள் என்றால் மறுபுறம், தன நகைகளைக்காட்டி சதா சர்வகாலமும் பீற்றிக்கொள்ளும் பெண்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஐயப்பனையே தியானம் செய்யும் வயோதிகர்கள், எப்போதும் அலுவலகத்தை மட்டும் பற்றி பேசும் ஆண்களும் இதில் அடக்கம்.


ஐயப்பனின் ஆயிரம் நாமங்களை நூறு பேர் சொல்லுவது தான் இலட்சார்ச்சனை - இந்த நிகழ்ச்சி சுமார் பத்து மணிக்கு ஆரம்பம் ஆகியது. காலை ஐந்து மணிக்கு எழுந்த எனக்கு கண்ணை சுழற்றி விட்டது. நல்லவேளை என்னிடம் அந்த நாமங்களின் லிஸ்ட் இருந்தது. பிழைத்தேன். என்னை போலவே நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வந்திருந்த மாமி பாவம் நாமங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே. தூக்கம் சொக்கி உறங்கி விட்டிருந்தார். அவர் கஷ்டகாலம் என் உறவினர் ஒருவர் பார்த்து அதை எனக்கு சுட்டி காட்டி, எனக்கு பயங்கர distraction. நிறைய பெண்கள் இது போல தான். கடவுளின் நாமத்தை சொல்லும்போது கூட இங்கே அங்கே மனதை அலைபாய விட்டு விடுகிறார்கள். ஒரு இரண்டு நிமிடம் நிம்மதியாக கடவுளை நினைத்திருப்பார்களா என்று எனக்கு சந்தேகம் தான். நான் உட்கார்ந்திருந்த இடத்தில் நிறைய பெண்கள் சள சள என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். இதில் ஒரு மாமி," என்ன அனன்யா பேசவே மாட்டேங்கற என்று என்னிடம் மிகவும் குறைப்பட்டு கொண்டு இருந்தார்". எல்லாம் என் நேரம் தான்.நறநற




இங்கே ஒரு interesting  டான்ஸ் வாத்தியார் இருக்கிறார். இருந்தா என்ன னு கேக்கறீங்களா? இவர் நன்கு டான்ஸ் ஆடத்தெரிந்த ஒரு வைதீக குருக்கள். நமக்கு அவர்கள் குழு சொல்லும் மந்திரங்கள், பாடல்கள், வேற்றுமொழி சொற்கள் எல்லாம் புரியவில்லை என்றால்  இந்த டான்ஸ் வாத்தியாரை பார்த்தல் மட்டும் போதுமானது. அவருடைய கைகளும், கண்களும், தோள்களும், பற்பல அபிநயங்கள் பிடித்து காட்டி நமக்கு புரியாதவற்றை எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக சொல்லி புரிய வைத்து விடும்.(பார்க்க படம்.)உடனுக்குடன் படங்கள் தந்துதவிய கோபால் அண்ணாவிற்கு நன்றிகள் பல.


பலரையும் பார்த்து பேசுவதால் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி எதை எடுப்பது எதை விடுப்பது range இல் நமக்கு யாரிடம் பேசினோம் பேசவில்லை என்று நினைவு இருக்காது. இவருக்கு ஊரெல்லாம் நண்பர்கள். அதிலும் இவர் சொந்த ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இங்கே தான் இருக்கிறார்களோ என்று நினைக்கும் அளவிற்கு இவரைதெரிந்தவர்கள் இவரை நோக்கிஅலை மோதுவார்கள். நான்கு வருடங்கள் ஆனாலும் இன்னும் எனக்கு பலரை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். பாதி பேர் முகம் மறந்து விடும், மீதி நினைவிருக்கும், ஆனால் பாருங்கள், யார் இவர்?எங்கே பார்த்தோம் போன்ற இன்ன பிற கேள்விகளுக்கிடையில் சிக்கிக்கொண்டு, அவர் பெயர் தெரியாமல் விழிப்பேன். கஷ்டகாலம். அவர்கள் மட்டும் " என்னை தெரியறதா அனன்யா? சுதா ஆத்து பகவத்சேவைக்கு வந்திருந்தேனே "என்று தெளிவாக குழப்புவார்கள் மன்னிக்கவும் விளக்குவார்கள். நானும் பாலசந்தர் பட ஹீரோயின் போல "ஆங், என்று உரக்க கூறிவிட்டு  மண்டையை முதலில் மேலும் கீழும் ஆட்டிவிட்டு பிறகு பக்கவாட்டில் ஆட்டுவேன் இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை. ஓரளவிற்கு மனிதர்களை அடையாளம் தெரிந்து கொண்டிருந்தேன்

மேலார்கோடு வைத்தி அண்ணா மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பாகவதாள்.அவர் பாட ஆரம்பித்தால் அரங்கமே பக்தி பரவசத்தில் மூழ்குமாம். இரண்டாண்டுகளுக்கு முன்னர் தான். யாருமே எதிர்பாராத ஒரு தருணத்தில் காலமாகிவிட்டார். அவருடைய இரண்டு சிறிய பெண்களும் அசாதாரணமாக பாடி அசத்தி விட்டனர்.சிறிய குழந்தைகள் தான் என்றாலும் குரலில் நல்ல வளம். பெரிய பெண்ணின் மைக் வாய் அருகில் வைக்கப்பட்டதால் அவள் குரல் தான் அரங்கமெங்கும் எதிரொலித்தது. சற்றே ஒலி குறைந்தாலும் சிறிய பெண்ணின் குரலில் அந்த supporting vocals  எல்லாம் ஹப்பப்பா... amazing!

இந்த குழந்தைகள் பாடிக்கொண்டிருக்கும்போது ஐயப்பனின் கதையை நினைவுபடுத்தும் ஒரு பாடல் பாடப்பட்டது. பக்கத்திலேயே அரங்கில் ஒரு ஸ்கிட் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். ஐயப்பனாக நடித்த சிறுவன் ஜம்மென்று புலிவேடமிட்ட ஒரு ஆளின் மேல் ஏறி  வந்து அசத்தினான்.ஐயப்பனை போல உட்கார முடியாமல் அந்த குழந்தையை ஒரு chair ரில் அமர வைத்திருந்தார்கள். ரொம்ப நேரம் போராடிய பிறகு நல்லவேளையாக பாடல் முடிவு பெற்றது. குழந்தை நாற்காலியிலிருந்து ஒரு வழியாக இறங்கினான் 

பூஜை அரங்கில் உள்ளே நுழைந்ததும் சுற்றி பார்த்தபொழுது, ஓவியங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழே ஓவியம் வரைந்தவர்களின் பெயர் போட்டு இருந்தார்கள். எங்கள் உறவுக்கார சிறுமி கிருபா ஜெயராம் கூட மிகச்சிறப்பாக சில படைப்புகளை வரைந்திருந்தாள். பார்ப்பதற்கே எனக்கு மிகப்பெருமையாக  இருந்தது. வித்யா பிரசாத் என்ற பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் வரைந்த ஓவியங்களைப்போய் பார்க்குமாறு கூறினார். வரிசையாக வித விதமான ஓவியங்களை பார்த்த பொழுது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அது போல அப்பெண்ணின் திறமை பளிச்சிட்டது. மகேஷ் போன்ற கலைஞர்களை நினைத்துக்கொண்டே எல்லா வகையான ஓவியங்களை பார்த்து ரசித்தேன். கலம்காரி, மதுபனி,ராஜஸ்தானி, தங்க(THANGKA), தாந்த்றிக்(Tantric), தஞ்சாவூர்,பதிக்,வரளி, இன்னும் என்னென்னமோ விதமான படங்களை வரைந்து தள்ளி இருக்கிறார் .இவர் துபாய் ஜுமேயிராவில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரைகலை  கற்றுத்தருகிராராம். துபாயில் வசிக்கும் வரைகலை ஆர்வலர்கள் vidyaprasad2@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். இவரைப்போன்ற கலைஞர்களை என் வலைதளத்தில் அறிமுகப்படுத்துவது எனக்கு பெருமை தான்.

Thursday, November 19, 2009

மனம் ஒரு குரங்கு 10

In my last post it was an english heading with a tamil post. I thought this time, let me try a new post with tamil heading and an english post. he he.. No that is not it. The Tamil  transliteration feature of google stopped working for the past one week. I have been trying day in and day out. But it wont work. Hence I decided to write an english post for Manam oru Kurangu part 10.


Drama Dilemma:



Earlier this week, I have been constantly listening  to SVe Shekhar's comedy dramas. I was surprised that for some strange reasons, I seem to be sleeping only upon switching on these dramas. I mean some conversation puts me to sleep. I had been accustomed to these things long back when I was a kid. Mother bought Mahabharathatthil Mangaaatha in 1989 when TV was little dominant. I mean there were only 2 channels and Channel two always broadcasted documentaries sports etc excepting post 10.00PM dramas, songs and cinema shows. We listened to this Mahabharathatthil Mangaatha with great enthusiasm, ever since then, we both became a fan of SveShekhar. He was quick witted and though his dramas were a garland of jokes, we still enjoyed them a lot. As a next step, we were delighted when Bharani Audios in Chrompet Radhanagar had the video cassettes (VHS Versions)of many of Sve Shekhar's Comedy plays. We managed to watch Aayiram udhai vaangiya aburva sigamani, Adhirshtakkaaran, Kaattula Mazhai etc and rejoiced. Infact we hired the same cassettes over and over again especially when we had guests at home. My Chandru Pinny(Dad's youngest brother) was rolling with laughter upon seeing these dramas.Ever since then, we had been listening to all SVe Shekhar's Dramas. We waited eagerly in 1992 for his release of Periya Thambi which I consider as his best so far. It was a total mockery of foolish tamil movies which were super duper hits then. My sister and I enjoyed listening to this drama numerous times.  So, If he is to offer me or my sister a role to play in his play, we dont need any rehearsals you see.. We are all set for the show because we know all the dialogues bye heart!
Now, coming back to my drama addiction before sleeping, I have to necessarily play a drama as I slip into sleep. deeper and deeper as I sink into my sleep, the conversations get fainter and fainter. Sleep is really getting ecstacic but what happened.. suddenly I wake up only to find some song being played . Oh! the drama is over and I get up for some song. Now I have to turn off that song. Wish that drama couldve been longer...
Strange but true. People normally listen to songs and good music before going to bed. But I am addicted in such a way that I wake up upon the starting of a song... Strange but true.


The Galloping Horse :



Mother called ten days ago to say that keeping a Galloping horse would bring good vibes in the house. Though I believe in such vibrations, I find it very hard to convince my husband to buy anything that is artistic in the house. I always felt very conscious when I went to see the other houses in the neighbourhood. We never had any showpiece  at our house. This was an opportunity to convince him and buy a nice horse to decorate our ailing TV Almirah. (this almirah has all the Gods and Goddesses according to the Hindu Mythology). So I set out looking for a galloping horse. To my dismay, wherever I went, it was a big  :-(     NO NO.
I tried in almost all shops far and wide in Abudhabi. They dint have Horses. They had Camels and Elephants  and Monkeys and Birds.. But horses???? Naaaah.. Grrr.... I had to meet a consultant the other day. I returned walking back home due to the non availability of taxis in abudhabi. I found a shop called hyper market in Najda Street. I asked the Philippino sales girl if they have a gallopping horse at their store. She smiled and said Yes. "Turrrrn right and you will find horses there". I did, and what do I see? a huuuuuuge horse gigantically placed on a steel stand. Honestly speaking our little single bedroom apartment cant hold such big statues you know.. he he.. I thanked the girl and left the place quietly.
So I almost gave up the idea of buying a horse. We normally buy all grocery from our nearest supermarket Al falah plaza. We get all glorious Indian vegetables in this store and it is just a few yards away from our building.  So asusual to buy some adhoc veggies we had been to Al Falah Plaza last week. We needed to buy some stationery so had to peep into other segments of the store. There... We were thrilled to see the beautiful white horse galloping . It was not only handy but also very beautiful. We had been looking for this horse all over abudhabi. Phew.! it was so relieving when we instantly bought the horse and decorated it in our almirah. It proudly gallops near our TV. We dont watch TV anymore!


Second CD:



I was standing in Capital Videos Passport Road when a man came to the shop. As he was looking at what movie to take, with lot of grief he said, Kandhasami second CD dint work properly. Lot of disturbance. I couldnt stop laughing. I left the place immediately thinking, "CD work aayittaa mattum...."


Vidiyaa Moonji :





There is this  All in All Azhaguraja in our building. He is a Plumber, Carpenter, Electrician, Painter and what not. He is omnipresent in almost all the houses in our building. I do admire his Multi faceted talents, however, I call him 'Vidiyaa Moonji' because whatever we ask for, he would deny it prima facie. He would right away say "NO, IT CANT BE DONE" even if it is as easy as changing a bulb. Moreover we have to follow up with our Nathur(Watchman of the building) numerous times before having this vidiyaamoonji in our place for fixing the various problems that arise from time to time. Recently I have been chasing him to get our apartment whitewashed. Asusual he is not turning up as promised. Even if he comes, I am confident, he would leave one portion of the house without whitewashing due to some disagreement. He would say, "yahaan paint naheen kar sakte". Most important feature of vidiyamoonji is that he wouldnt drop a smile even after getting twice or thrice the cost of his services.


Joke of the Day:


I had been trying to post this article ever since I posted 'Finding Swapna'. I was all excited that I recieved comments immediately after posting that article. I told my husband, Na, I got three comments within 2 hours of posting finding Swapna. He said without waiting for a moment, So they mustve commented asking you not to write such posts again isnt it? Grrr... nara nara...

Sensible out of office replies:


I got this funny email forwarded from my sister. Thought I should share this with you all. 


Sensible out of office replies:


          1:I am currently out at a job interview and will reply to you if I fail to get the 
position.


2:I’m not really out of the office. I’m just ignoring you.

3:You are receiving this automatic notification because I am out of the office. If I was in, chances are you wouldn’t have received anything at all.


4:Sorry to have missed you but I am at the doctors having my brain removed so that I may be promoted to management


5:I will be unable to delete all the unread, worthless emails you send me until I return from vacation on 4/18. Please be patient and your mail will be deleted in the order it was received.


6:Thank you for your email. Your credit card has been charged $5.99 or the first ten words and $1.99 for each additional word in your message.


7:The e-mail server is unable to verify your server connection and is unable to deliver this message. Please restart your computer and try sending again.’ (The beauty of this is that when you return, you can see how many in-duh-viduals did this over and over).


8:Thank you for your message, which has been added to a queuing system. You are currently in 352ND place, and can expect to receive a reply in approximately 19 weeks.


9: Hi, I’m thinking about what you’ve just sent me. Please wait by you PC for my response.


10: Hi! I’m busy negotiating the salary for my new job. Don’t bother to leave me any messages.


11: I’ve run away to join a different circus.


AND, FINALLY, THIS ONE TAKES THE CAKE:


12:I will be out of the office for the next 2 weeks for medical reasons. When I return, please refer to me as ‘Loretta’ instead of ‘Steve’

Monday, November 16, 2009

Finding Swapna.....

மூன்றாம் பிறை மாதிரி சில சமயங்களில் நம்மை அறியாமல் வாழ்கை மிகவும் அழகாகி விடும். ஹய்யா.. நம்ம வாழ்க்கைதான இது நு நம்மளை நாமே கிள்ளி  பாக்கறதுக்குள்ள... திரும்பி பழைய படி.. ஊத்தி மூடிக்கும். ஹூம்... அதான் வாழ்க்கையோட நியதி.


ஐந்து ஆண்டுகளுக்கு முன் Dell International Services, பெங்களூரில் வேலை கிடைத்த பொழுது , எப்படியோ இந்த சென்னையை விட்டு போனால் போதும் என்று இருந்தது . கொஞ்சம் எதிர்பார்புகளோடு பெரீய கம்பெனி, புதிய இடம், கண்டிப்பாக Hostel லில்  தங்க மாட்டேன் அம்மாவோ அப்பாவோ யாரவது வந்து போய்க்கொண்டு இருக்கவேண்டும் என்ற condition நின் பேரில்  போனேன். கனி, விஜய் போன்ற நண்பர்கள் வீடு பார்க்க உதவி பண்ணினார்கள். கடைசியில் கேம்பிரிட்ஜ் லே அவுட்டில் ஒரே ஒரு ஸ்டுடியோ penthouse வாடகைக்கு எடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் கால் நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்ளலாம்

அதுவும் பாலாஜி உயரத்துக்கு  சரிப்பட வில்லை.(அவனால் திருப்திகரமாக படுத்துக்கொண்டு WWF பார்க்க முடியவில்லை என்று புலம்பினான்) அவ்வளவு தான் இடம் ஹால் இல. நான் மட்டும் நுழையக்கூடிய ரயில் வண்டித்தனமான சமையலறை . தண்ணீர் வராத சிங்க. அவ்வளவு தான். ஒரு டிவி வாங்கிக்கொண்டேன். தினம்தோறும் ஷிப்ட்  முடிந்ததும் அதிகாலை  நேரம்  சூடான  கோதாஸ்  காபி  குடித்துக்கொண்டே   கார்ட்டூன் பார்ப்பேன்.

வேலையில் பயிற்சி தொடங்கியது. அன்றே எனக்கு அந்த பெண் அறிமுகமானாள். பெயர் ஸ்வப்னா என்றாள் . சிரித்த முகம், நல்ல கலகலப்பான சுபாவம், முக்கியமாக மற்றவர்களுக்காக வருத்தப்படும் தன்மை இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்து போக, அவள் எனக்கு பெங்களூரில் பெஸ்ட் பிரண்டு  ஆனாள்

நான் மட்டும் தனியே வசித்து வந்த அழகிய குட்டி வீடு, என் பில்ட்டர் காபி, மாடியில் விசாலமான இடம், பூந்தோட்டம், ஓட்டின் மேல் உட்காரும் இடம், இதெல்லாம் முதல் முறை வந்த ஸ்வப்னாவிற்கு பிடித்து போக, ஒரு weekend என்னுடன் வந்து தங்குவதாக கூறினாள். அதுக்கென்ன, தாராளமா வான்னு சொன்னேன். நைட் ஷிப்டு முடித்து விட்டு எனக்கு தூக்கம் கண்ணை சுழற்றும். இது விடாமல் டிவி பார்க்கும். கெக்கே பிக்கே என்று எதாவது பேசிக்கொண்டே இருக்கும். நன்றாக பாடுவாள் கூட. ராத்திரி எல்லாம் மாடியில் வீட்டு வாசலில் பாய் போட்டுக்கொண்டு பாட்டு பாடுவோம். அடுத்த நாள் சாயி கோவிலுக்கு போனோம். நடந்து நடந்து உள்சூர் டு இந்திரா நகர் போனோம். நிறைய்ய்ய பேசினோம். கடுகு தாளித்து காய் கறி போட்டு நான் தயாரித்த noodles ஐ அம்மணி "yummeee" என்று குதூகலித்தாள் . அல்சூர் முழுவதும் சுற்றி திரிந்தோம். சிவாஜி நகரில் கணேஷ் ஜூஸ் கடைக்கு சென்று ஜூஸ் குடித்தோம். இப்படி இரண்டு நாளும் வெளியில் ஊர் சுற்றி, பேசி, சிரித்து, பாடி எனக்கு இவள் தான் எனக்கு சரியான கம்பனி என்று தோன்றி விட்டது. வழக்கமாக வார இறுதியில் பகலில் தூங்கி விடுவேன். சாயந்திரம் டிவி போட்டுக்கொண்டு எதாவது பாடாவதி சமயல் செய்து நானே என்னை திட்டிக்கொண்டே தின்பேன்.ஆறு மணிக்கு மேல் அங்கே உள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு போய் விடுவேன். அங்கே அடிக்கடி செல்லுமாறு அம்மா சொல்லி இருந்தார்.  அம்மாவிடம் போன் பேசுவேன். துணி துவைப்பேன். இப்படி என் வார இறுதி கழியும். இந்த பெண் வந்ததால் இது ஒன்றுமே  செய்யவில்லை. ஊர் சுற்றிக்கொண்டு இருந்தேன். திங்கள் மாலை மீண்டும் ஷிப்ட். என்னை தூங்க விடு தாயீ என்று குப்புற படுத்து விட்டேன். இவள் டிவி யை அலறவிட்டு கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.ஒரு பதினொரு மணிக்கு நான் எழுப்பப்பட்டேன். "நிம்மி, lets go to Forum in Kormangla " என்றாள். எனக்கு தலை சுற்றிவிட்டது. முடியவே முடியாது என்று மறுத்து விட்டேன். ஆனால் அவள் விடுவதாக இல்லையே. மூக்கால் அழுதுகொண்டே ஆட்டோ பிடித்து Forum என்ற அந்த மாலுக்குள் நுழைந்தோம். முக்கால்வாசி கடைகளில் விண்டோ ஷாப்பிங் செய்தோம். முதன் முறையாக KFC என்ற  கடைக்குள்  போனேன் . (அபச்சாரம் அபச்சாரம்.) ஸ்வப்னா சொன்னாள்,  "இங்கத்த Chocolate fudge icecream ரொம்ப நல்லா இருக்கும். try பண்ணி   பாரேன். "இப்படி ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்றை புதியதாக எனக்கு அறிமுகப்படுத்தினாள். வாழ்கை மிகவும் சுவையானது என்பதை எனக்கு தெளிவு படுத்தினாள். நான் வீடு திரும்பிய போது மணி நான்கு. எட்டு மணிக்கு ஷிப்ட். மாற்று உடை எடுத்து வராததால் அவள் கிளம்பி விட்டாள். நான் சற்று தூங்கலாம் என்று படுத்தேன். சுத்தமாக தூக்கம் போய் விட்டது. ஒரே Exciting  ஆக இருந்தது. இனி இந்த பெண் எல்லா வார இறுதியிலும் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.இரண்டரை நாள் முழுதும் ஒரே பாட்டு, கூத்து, கும்மாளம், ஊர்சுற்றல் தான். ஊரில்  இந்த  மாதிரி  எல்லாம் பண்ண முடியாது.  என்ன,  என் வழக்கப்படி தூங்க முடியவில்லை. பரவாயில்லை. நாளை காலை தூங்கிக்கலாமே. அதன் பிறகு மொத்தம் ஒரு பத்து பதினைந்து நாட்கள் அவள் என்னுடன் என் வீட்டில் வந்து இருந்தாள். ஆபீசில் கூப்பிட்டு சொல்லி விடுவேன். ஒரு செட் டிரஸ் என் வீட்டில் வைத்து விடு என்று.


ஸ்வப்னா என்றால் அன்பு என்று ஆகிப்போனது. அவள் அம்மா அப்பா எல்லோரும் இங்கே ஷார்ஜாவில் இருந்தார்கள்.

அப்படி தான் ஒரு முறை அவளை போனில் அழைக்க முற்பட்டேன் .என்ன ஆயிற்றோ தெரியாது திடீரென்று இவள் மொபைல் சுவிட்ச் ஆப். 4-5 ஈ மெயில்கள் அனுப்பிப்பார்த்தேன் ம்ஹூம். யோசனையுடன் நகர்ந்தேன். அவள் டீமில் விசாரித்த பொழுது அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக தெரிந்தது. Jaundice என்றார்கள், என்ன ஆஸ்பத்திரி, என்று யாருக்கும் தெரியவில்லை. ச்சே, என்ன ஒரு மடத்தனம் பண்ணி விட்டோம். வேறு எந்த தகவலும் அவளிடம் வாங்கிவைத்துக்கொள்ள வில்லையே என்று நினைத்து வருந்தினேன். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவள் டீமில் சென்று விசாரித்த போது அவள் பெற்றோருடன் ஷார்ஜா சென்று விட்டாள் என்று கூறி விட்டனர். என் திருமணம் நிச்சயமாயிற்று. அதை காண மிக மிக ஆவலுடன் இருந்தவர்களில் முதன்மையானவள் ஸ்வப்னா. அந்த அளவிற்கு எனக்கு பிரார்த்தித்தாள். அநேகமாக எல்லா தொடர்பும் அறுந்துவிட்ட நிலையில் நான் மட்டும் இங்கே துபாய் ஷார்ஜா வில் மால்களில் போகும்போது அவளை ஆர்வத்துடன் தேடினேன். அவள் இங்கே தான் இருக்க வேண்டும் என்று தீவிரமாக நம்பினேன்.
போன வாரம் இங்கே நாஜ்தா தெருவில் நாங்கள் வாக்கிங் போய் இருந்தோம். ஒரு பெண் நயிட்டீ  அணிந்து கொண்டு குழந்தையை கையில் பிடித்த படியே வந்து கொண்டு இருந்தாள். ஜாடையில் இவள் அவளோ என்று யோசித்து நின்றேன். என்னைப்பார்த்தால் அந்த பெண் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. சட்.. இல்லை இவள் இல்லை என்று வருத்தத்துடன் நகர்ந்தேன்.

முந்தாநாள் சனியன்று வயலில் தீவிரமாக உழுது விதை நட்டு, மரங்களில் பழங்கள் அறுவடை செய்து, மாட்டுக்கு பருத்திக்கொட்டை பிள்நாக்கு வைத்து, இந்திரனை மழை பெய்யுமாறு கோரிக்கொண்டு, வெளியில் வந்த பொழுது, face book home  இருப்பதை பார்த்தேன். search friends  என்று இருந்தது. சும்மா ஸ்வப்னா வர்கீஸ் என்று அடித்தேன். அடியாத்தீ... .இந்த புள்ளை இங்கிட்டு தான்யா இருக்கு என்று அலறினேன். படங்களுடன் ஸ்வப்னா சிரித்துக்கொண்டு இருந்தாள். சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தேன். ஐந்தாண்டுகளாக நான் தேடிக்கொண்டு இருக்கும் தோழி கிடைத்து விட்டாள். ஹய்யா என்று அவளுக்கு என் தொலைபேசி எண்ணுடன் ஒரு personal message அனுப்பினேன். சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு போன் கால் வந்தது. அவள் தான். அவளும் கத்த நானும் கத்த, ரெண்டு பேர் காதும் கிழிந்தது. காடு மேடு எல்லாம் உன்னை தேடினேன் நிம்மி என்றாள் அந்த துரோகி. முதலில் பரஸ்பர அர்ச்சனை செய்துகொண்டோம்.என் தங்கை முன்பு இங்கே இருந்ததால் இங்கே உள்ள  லோக்கல் தமிழ் ரேடியோ சக்தி எப் எம் மிற்கு போன் செய்து என் தங்கையின் பெயர் சொல்லி தேடி இருக்கிறாள். உன்னை ரொம்ம்ம்ப மிஸ் பண்ணினேன் என்றாள்.  அதன் பிறகு அவள் இங்கே துபாயில் வேலை செய்வதாகவும், இங்கே அஜ்மானில் வீடு இருப்பதாகவும் கூறினாள். கண்டிப்பாக அபுதாபி வருவதாக கூறி இருக்கிறாள். மீண்டும் அந்த கனாக்காலம் வருமோ என்னமோ தெரியாது. நான் மட்டும் கொஞ்சம் தூங்கி ரெடி ஆயிக்கறேன். ஸ்வப்னா வந்தா தூங்கவே விட மாட்டா சனியன்.

Saturday, November 14, 2009

Anniversary Greetings to my dear Uncle and Aunt


Dear Mama and Athai,

You have done so much to me. You have got abundant clothing, accessories for me.
You have made my day many times with your presence.
You have gifted me a lovely cousin.
You regularly call me even if I am overseas.

You have done so much.. still, All I can do is Wish you through this page, on your anniversary.

Many many more happy returns of the Day, Dear Ravi Mama and Kalyani Athai.

A Tribute to Snuffy

After reading Mittu's post on Dogs, I am motivated to write about our beloved dog snuffy.

It was the mid nineties and I was probably whiling away time by the name of colleging in Chrompet. We were living in 12th Cross St Extension in New Colony and our neighbour - a paatti used to feed regularly a stray dog called brownie. Every day she would offer food to that stray dog. She would call out loudly after her morning lunch,"browneeeeeeeeeeeeeeee, jooo joooo jooooooo".This jooo jooo joo was thrice exactly. Not more not less.  Down comes rushing brownie, across the gate, to gulp the sour curd rice fed by the paatti.
Brownie- As the name suggests, was brown, unattractive, frustrated dog. He often loitered in the garbage dump a street away. He was stinky and disgusting.

To my memory, Snuffy dear was this browni's son.I cannot recall who was his mother. If someone does, please enter comments.  Though Snuffy was born as a Stray Dog, it had all the vital qualities of becoming our beloved pet. We adopted snuffy when he was 3-4 days of age. He was cute & clean.Snuffy was named after his beautiful velvety snuff  fur - colour.



He had long ears which fell on his forelegs. These ears used to communicate very effectively . I will tell you how in the later part of this article.

Snuffy had a beautiful white spot on his forehead almost like a bindi, and his dorsal part of body was fully white. The tip of his furry tail had a white finish. His paws were also white. He was very very attractive and none missed to cuddle him. Snuffy was very well behaved when he was a little pup. We took him out on morning walks, trained him on 'moocha'ing and pottying.

He was dead fond of eating. He kept eating most of the day. On top of it, whatever we ate, must be necessarily offered to him. He would jump up and down restlessly untill he got his share.

My mother had additional hindi tution enrolments just because the word spread across the colony about our snuffy. Children used to be eager to see snuffy. More than writing the lesson on ' kutthaa" they used to be watching the kutthaa most of the time thereby get scoldings from my mom. Snuffy would be tied by the window chained with a cup by its side  which had different things to eat. Sometimes the tution kids fed snuffy with chocolates and biscuits that they got from their homes. Some kids would sacrifice their snack for their love of snuffy. They would carry eatables in their pockets to feed him.

Snuffy would respond to people more with his tail and his ears. He would wag his tail rapidly on seeing his beloved people, like my mom and dad. Especially, when dad arrived after his work, he would get up, pay his respects to dad, and eagerly wait for a piece of bread or rusk that this offered to him after a cuddle and pat.I used to say 'indhaa' (simply without having anything in my hand) and he would be excited hoping that he is going to get something to eat. Just like diamond babu in tenaali, snuffy was a huuge foodie. I often yelled out naaaaffeeeee, kutti payley which became a popular means to comic me by my tution kids.

We took him in our cycle to the local vet for vaccinations and injections when he fell ill. The vet was located in Raanitthottam in Chitlapakkam. Taking snuffy in a cycle would be a proud job as he would always draw people's attention across the MIT gate.

Snuffy was equally loved by our neighbours and relatives who visited us. Jaya Athai and Kumar Mama visited us during summer vacation with Priya and Divya from Trichy. I recall Kumar Mama had written a letter and he had enquired about 'steppy' very fondly.

As snuffy grew up, he became a naughty brat and  uncontrollable within the gates and we left him out of the gate. . But he regularly came home for breakfast lunch and dinner. Mom scolded him for being a Dada like dog in 12th and 13th Cross streets of New Colony. Tution kids complained of seeing him near GST Road, and Pallaavaram Municipality. Mother was worried for him.

Once like all the tragic ending movies, came a dog catcher from municipality. They collected all stray dogs. We had tied a belt in his neck. Still, they took our dear dear snuffy. We rushed to the streets to stop the dog van. How unfortunate, we were told that snuffy had been captured by them. We lost him forever.

He remains in our memories, ever since then.We gave up the idea of bringing up a dog after the loving memories of Snuffy. We thought none can fill the space he left.  I googled for a beautiful snuff dog. Even after searching all over the world, I couldnt find one single picture matching my dear little snuffy. He was one of his kind. Attractive, warm and adorable.

Friday, November 13, 2009

போடி வளர்த்த சில சுவையான மனிதர்கள்




கோகர்ணம்  :
இவருடைய  சிறப்பம்சம்,  ஒன்றுமே  இல்லாவிட்டாலும் தலைகீழே விழுவாராம் . நாமெல்லாம் கால்களால் நடந்து வருவது போல அவர் கை விரல்களால் தான் நடப்பாராம். அவ்வளவு தலைக்கனமாம்.  இறுமாப்பில்  மேலே பார்த்துக்கொண்டே    தான்  பேசுவாராம் . தன் level க்கு கீழே  பார்க்கவே மாட்டாராம்  . செம்ம ஓவர் confidence ல ?அதனால்  யாரவது அல்பனுக்கு  வாழ்வு  வந்தமாதிரி  நடந்து கொண்டால் அவரை  அன்புடன் கோகர்ணம் என்றே  அழைப்பார்கள்

சுந்தரக்க :
 இவருடைய  speciality, பொட்டு எப்போதும்  கோணலாகத்தான்  வைத்துக்கொள்வாராம்  . வீட்டில் பொட்டு கொஞ்சம் கோணலாக வைத்துக்கொண்டாலோ ,கோலம்  சற்று    சொதப்பினாலும்   , மருதாணி வட்டம்  சற்று   பிசகினாலும்  உடனுக்குடன் 'சுந்தரக்க' என்ற  கூக்குரல்கள்  கேட்டு  விடும் .. எமகாதகப்பயபுள்ளைங்க .

அன்னம்மா :
இவர்  சண்டைக்காரி , தீவிரமாக  மற்றவருக்கு  பேச  வாய்ப்பளிக்காமல்  சண்டை  போட்டு தள்ளுவாராம் . பயங்கர  sound effect வேறு . தெருவில்  சண்டை  என்றாலே  அன்னம்மா  தான்  hot talk. அன்னம்மாவின் speciality  நிறைய   bad language தெரிந்து வைத்திருந்ததோடு  குரலில்  நல்ல  hightech dolby sound effect, high volume இல்  continuous  ஆக  சண்டை போடக்கூடிய திறன் பெற்று திகழ்ந்தார். அன்னம்மா மாதிரி என்னம்மா சண்டை போடுறா என்பார்கள்.

கயல்விழி:
இவர் அன்னம்மா, பாலாமணி, குட்டியம்மா, சுந்தரக்க போல அவ்வளவு பழைய ஆள் இல்லை .நாங்கள் போடியில் இருந்தபோது இவள் கூட தான் நான் விளையாடுவேன்.
நாங்கள் வாழ்ந்த அரண்மனை அக்கிரகாரத்தில் எனக்கு இருந்த இரண்டு தோழிகளில் இவள் தான் முதன்மையானவள்.    எனக்கு ஒரு மூன்று வயது இருக்கும்போது அவளுக்கு ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் .இன்னொரு பெண்ணின் பெயர் மகேசு.
நாங்கள் ஐந்தலான்தெருவில் விளையாட செல்வோம். அது எங்கள் ஊரை மெயின் ரோட்டோடு இணைக்கும் ஒரு circle. எண்பதுகளில் அங்கு 'Traffic' அடிக்கடி Jam ஆகும்!!! அதுனால அங்கு செல்ல செல்லவ்வா தடை விதித்திருந்தார். இருந்தாலும் ஆர்வக்கோளாறு. நான், கயல், மகேசு மூன்று பேரும் ஐந்தலாந்தெருவிற்கு ஓடிவிட்டோம். ஐந்தலான் தெருவின் attractions யாதெனின் அங்கு ஒரு மிட்டாய் கடை உண்டு. நாங்கெல்லாம் கேட்டால் அந்த கடைக்காரர் மிட்டாய் இலவசமாக வழங்கி விடுவார். அப்புறம் லாரி, பஸ்சுகள் எல்லாம் பார்க்கலாம். எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் இருந்து பார்க்க முடியும் என்றாலும் சாக்கடை நாற்றம் இல்லாமல் நிம்மதியாக வாகனங்களை மிட்டாய் தின்றுகொண்டே ரசிக்கலாம்.(போடியில் அப்போதெல்லாம் open drainage system. இப்போ  எப்படியோ  தெரியாது ) .அன்றும் அப்படிதான் விளையாட ஐந்தலான் தெரு சென்றுவிட்டோம். செல்லவ்வா விஷயமறிந்து பதைபதைப்பில் ஓடி வந்தார். கயலு, அவ எங்கே என்று கேட்ட பொழுது, கயல் சராமாரியாக எடுத்து விட்டாள் பாருங்கள், அவ்வாவிற்கு தலையே சுற்றி விட்டது. "பாட்டி நான் அந்தபுள்ளைய போகாத போகாத னு சொன்னேன். நான் சொல்றதைக் கேக்காமல் அது ரோட்டல ஒடிச்சு பாருங்க லாரி அடிச்சு செத்துபோச்சு" என்றாள் cool ஆக. என்னே கயலின் கற்பனைத்திறன்!பாட்டி அழுது புரட்டிக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக அங்கு ஓடி வந்து பார்த்தாராம். விபத்து ஏதும் நடந்த மாதிரி தெரியவில்லையாம். நான் போடி Municipality அருகே மண்ணில் விளையாடிக்கொண்டு இருந்தேனாம் . ஏதோ கயலின் புண்ணியத்தால் என் அவ்வாவின் BP எக்கசெக்கமாக எகிரியதோடு மட்டுமல்லாமல் இனி அவள் பேச்சு மொத்தத்தையும்  100% தள்ளுபடி செய்து விட வேண்டும் என்று நிர்ணயித்துக்கொண்டோம்.
அய்யப்பா அண்ணா:
அய்யப்பா அண்ணா ஒரு மன நோயாளி. பாவம். அக்கிரகாரத்தில் அவர்கள் வீடு தெருக்கோடியில் இருக்கும். தெரு முழுதும் அய்யப்பா அண்ணா பக்கவாட்டில் திரும்பியே குதித்து குதித்து போவார். கொக்கரிக்கும் சிரிப்பு, இசுக்கு புசுக்கு என்று கூறும் சமிஞ்யை இதையெல்லாம் காட்டிக்கொண்டே தெரு கோடியிலிருந்து ஊரெல்லாம் இதே போல போவார்.  அவருக்கு அடிக்கடி காக்காய் வலிப்பு வரும். தெருவெல்லாம் களேபரம் ஆகும். எனக்கு அவர் மீது மிகவும் அனுதாபம். அந்த பருவத்தில் அவரது உடல் நிலை கஷ்டங்கள் அறியாமல் நான் அவரைமாதிரி செய்து காட்டுவேன். குதித்து குதித்து பக்கவாட்டில் ஓடுவேன், கஷ்கங்களில் கைவைத்து டுர்ர் என்று சத்தம் பண்ணுவேன். குழந்தைகள் எல்லோரும் ரசித்து சிரிப்பார்கள்.  நாங்கள் போடியைக்காலி செய்த சில வருடங்களில் அவர் இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது.

Monday, November 9, 2009

நில் கவனி தாக்கு - சுஜாதா





சுஜாதாவின் இந்த நூற்று இருபத்தேட்டே பக்க நாவலை நான் இன்று சில மணிநேரங்களுக்குள் இடை விடாமல்(எனது வயலைக்கூட உதாசீனப்படுத்திவிட்டு டாஷ்போர்ட் பக்கம் செல்லாமல் டி வீயையும் ஆப் பண்ணி விட்டு ) படித்து முடித்து விட்டேன். இப்படி கூட கதைகள் எழுத முடியுமா என்று ஆச்சர்யப்பட்டேன். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த கதை எழுபதுகளில் எழுதப்பட்டதாம். நம்பமுடியவில்லை. அந்தக்காலத்திலேயே எவ்வளவு பெரிய  Trend Setter ஆக இவர் செயல்பட்டு இருக்கிறார் என்பதை நினைக்கும்போது ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.



தேசிய பாதுகாப்பு - இதான் கதையின் முக்கிய crux. அது எப்பேர்ப்பட்ட அபாயத்தில் இருக்கிறது என்பதை என்னைபோன்றவர்களுக்கும் விளங்குமாறு தெளிவாக விளக்குகிறார்.கதை தில்லியின் பாலம் விமான நிலையத்தில் ஆரம்பித்த உடனேயே சூடு பிடிக்கிறது. சுஜாதாவின் அக்மார்க் ரக 'நச்' வசனங்களுடன் கதை ஒரு ரோலர்  கோஸ்டர் போல விறுவிறுப்பாக நகர்கிறது. அந்தக்காலத்துலேயே இவ்வளவு போல்டா எழுதி இருக்காரே . அடேயப்பா..

Fight Sequences எல்லாம் பழைய ஜெயஷங்கர் படங்கள் பார்ப்பது போல இருந்தது. எழுத்தில் என்ன ஷங்கர் பட ஸ்பெஷல் EFX ஆ கொண்டு வர முடியும்? அதுவும் ரசிக்கும்படியாக தான் இருந்தது. Deadline கொடுத்து ஒரு அரசாங்க சொதப்பலை சரியாக்க பாடுபடுவது மட்டும் 'விக்ரம்' 'திருடா  திருடா' படத்தை தவிர்க்க முடியாமல் நினைவு படுத்தியது. கதையில் அதிகம் கதாபாத்திரங்கள் இல்லை. வழக்கம் போல mysterious கதைகளில், நாமெல்லாம் யாரை சந்தேகப் படுகிறோமோ  அவர்களுக்கு நேர் எதிரான கதாபாத்திரங்கள் தான் இந்த தில்லு முல்லு திரிசமுல் வேலை எல்லாம் பண்ணுவார்கள். அதுவும் அந்த எழுபதுகளில் வந்த திரைப்படங்களில்  வருவது போல நாம் சரியாக யாரு culprit  என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். சந்தேகமில்லாமல் நாம் நமது முதுகை தட்டிகொடுத்தும், Self shake hand கொடுத்தும் மெச்சிக்கொண்டே கடைசி சில பக்கங்கள் படித்தால் நமக்கு ஒரு மெகா பல்பு கிடைக்கிறது.
கதையை படித்து முடிக்கும் தருவாயில் நமது முகத்தில் ஒரு mysterious புன்னகை தவழப்போவது நிச்சயம்.

Sunday, November 8, 2009

Farm Ville - The Farmer's Delight

It was Vishakha who introduced me to this Farm Ville Game in Facebook. I am not so active in facebook inspite of having a few important people in it. However, after I started playing farmville, I am mostly hooked up to this page,  looking at my farm, harvesting crops and buying new animals, trees and other stuff for my farm. The game is deadly addictive apart from being very interesting. It increases a sense of commitment within and is a great stress buster.

 We derive great sense of accomplishment as we step up the levels and I personally loved this as it made me feel like a real time farmer. May be it is because I am from a village background. Once we plough the land, sow the seeds we have to wait untill the particular crop is grown.(They have set a gestation time for each type of crop. If we delay harvesting then the crop gets withered. :-( . Before understanding this game, my farm fresh strawberries got withered due to my forgetfulness.. not anymore you see)

 Once it is fully grown, we gotta harvest the crop.  We can grow veggies, fruits, grains and flowers in our farm! Whats more, we can also plant fruit bearing trees .



I bought livestock like cattle, sheep, goat and chicken in my farm. There is also a special provision to pet them. How cuuute..

We can buy  and gift accessories for the livestock like water trough, bird bath and fences for the farm. The game tries to evoke sense of responsibilty and also helping tendency.If our neighbours ask for help, we can go and help them out. Inturn they will come and help us in our farm by fertilizing our crops and getting rid of the insects. We can send gifts to our friends like fence, trees etc.

Sounds good? What are you waiting for ? Try it out. I bet you are all gonna have fun playing this game.
Dont forget to send me gifts!!!

Happy Birthday Balaji

1987 ஆம் ஆண்டு  நவம்பர்  மாத  குளிரில்  எட்டாம்  தேதி அயனாவரம் பகுதியில்  பாலாஜி  பிறந்தான் . மாமாவின்  மகன் என்றாலும், நாங்கள் வளர்த்த பையன், எங்களுக்கு தம்பி.குழந்தையில்  இருந்தே  எங்களிடம்  மிகவும்  அன்பாக  இருப்பான் . எங்கள்  வீட்டு  செல்ல  பையன் . சின்ன   குழந்தையாக   இருக்கும்போது   அவன்   பெரிதாக   துஷ்டத்தனம்   எல்லாம்   பண்ண   மாட்டான் .  ஆனால்  நச்சு  ஜாஸ்தி .யாரும்  புதிய  மனிதர்கள் வீட்டிற்கு  வரக்கூடாது  என்பான் .
எங்கள் சொந்தக்காரர் ஒருவர் பார்ப்பதற்கு Star Trek - Spark மாதிரி இருப்பார். அவரைக்கண்டால் ஒரே allergy இவனுக்கு. அழுது தீர்ப்பான்.




 சின்ன வயசில் மிகவும் cute ஆக இருப்பான். அப்புறம்  இப்போ தான் பாவம்  இப்படி ஆயிட்டான்.. ஹி ஹி
பாலாஜி சமத்தா ஸ்கூல் போவான் நல்லா படிப்பான்.எல்லாரையும் நக்கல் அடிப்பான்.செல்லவ்வா தான் அவனோட நல்ல கம்பெனி.அவங்க இல்லாம பொழுதே போகாது.படிப்ஸ் மட்டுமே இல்லாமல், மிமிக்ரி, ADZAP போன்றவற்றிலும் நிறைய பரிசுகள் வாங்கி இருக்கான்.இவனுடைய ஒரே ஒரு weakness சாப்பாடு.
வசந்த பவன், சரவண பவன்,Pizza Hut, Dominos  பக்கம் எல்லாம் போனால் ஜொள்ளு ஊற்றெடுக்கும் .
இவனுக்காக அத்தையும் அவ்வாவும் வேலை மெனக்கெட்டு யோசித்தும், செல்லவ்வா வீட்டிற்கு வரும் டியூஷன் குழந்தைகளின் தாயார்களிடம் எல்லாம் CBI  ரேஞ்சில் enquiry  நடத்தியும் விசாரித்தும்  பிரைடு ரைஸ், மசாலா ரைஸ் எல்லாம் பண்ணி கொடுத்தால், கூலாக சாப்பிட்டுவிட்டு அதில் தப்பு சொல்லுவான்.பெண்கள் வீட்டில் இருக்கும்போது பேசத்தானே செய்வார்கள்.அத்தையும் அவ்வாவும் ரொம்ப தேவை இல்லாம discuss  பண்ணறாங்க என்று ஒரு முறை புலம்பினான்.ஐந்து வயதிருக்கும்போதே அத்தை அவ்வா மாதிரி மிமிக்ரி பண்ணி காட்டியவன் இவன். இப்போ நக்கலுக்கா பஞ்சம்???

தசாவதாரம் படம் வந்த புதிதில், இவன் பலராம் நாயுடு  கமல் மாதிரி பேசிக்காட்டி இவனை என் கணவர் 'அப்பாராவா?' என்று தான் அழைப்பார்.


கொஞ்சம் Optimism, கொஞ்சம் Hope இன்னும் கொஞ்சம் Confidence எல்லாம் கடவுள் அருளால் அவனுக்கு கிடைக்க பெற வேண்டும். சீக்கிரமே அவன் நினைப்பதெல்லாம் கைகூட வேண்டும் . மத்யானம் lunch unlimited ஆ serve  பண்ணறா  மாதிரி   ஒரு   நல்ல  company ல  அவனுக்கு  வேலை   கிடைக்க  வேண்டும் . 


சீக்கிரமே அவன் கனவுகள் எல்லாம் நிறைவேற அவனை ஆசீர்வதிக்கிறோம்.
- அக்கா அத்திம்பேர்.

Saturday, November 7, 2009

சில சுவையான மனிதர்கள்

சில சுவையான மனிதர்கள்.

எங்கள் சொந்த ஊர் மதுரை மாவட்டம் போடிநாயக்கனூர். நான் அங்கு அதிகம் இல்லாவிட்டாலும் அம்மாவும் மாமாக்களும், செல்லவ்வாவும்,GK தாத்தாவும்  சரோஜி அத்தையும், சுப்பி அவ்வாவும் அங்கே தான் பல ஆண்டுகள் வாழ்ந்தார்கள் .

எனக்கு 7 - 8 வயதிருக்கும்போது நாங்கள் அப்பாவுடன் விஜயவாடா சென்று விட்டோம். போடியின் தொடர்புகள் அறுந்து போயினும், அங்கு வாழ்ந்த சுவையான மனிதர்களை மட்டும் மறக்க முடியாது.

இப்போது நான் எழுதும் மனிதர்களை நான் பார்த்ததோ பேசியதோ இல்லை. எங்கள் அப்பா வழி பாட்டி சுப்பி அவ்வாவிற்கு  உவமை சொல்லாமல் பேசத்தெரியாது. வரிக்கு வரி அவனை போல இவனைப்போல என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படி அவர் மிக அதிகமாக உவமை கூறியது இங்கே கூறப்பட்டுள்ள இவர்களைத்தான்.

குட்டியம்மா

இவர் ஒரு மூதாட்டி. வறுமையுடன் முதுமை எய்திய குட்டியம்மா மிகவும் சுவாரஸ்யமான பாட்டி. கையில் காசு இருக்காது. ஆனால் சினிமா மோகம் அதிகம். அந்தக்காலத்தில் போடி பொன்னு சினிமாவில் எந்தப்படம் எத்தனை வாட்டி போட்டாலும் குட்டியம்மா பாட்டி சென்று விடுவாளாம். காசு தான் இருக்காதே எப்படி படம் பார்த்து இருப்பாள்? குட்டியம்மா பாட்டியிடம் ஒரு தங்கச்சங்கிலி இருந்தது. அதில் ஒவ்வொரு கண்ணியாக எடுத்து விற்று வந்தாள். ஒவ்வொரு முறையும் விற்ற பணத்தில் காப்பிப்பொடி   வாங்குவாள்  டிகாஷன்  போட்டு  காபி குடித்து  விட்டு  ஒரு  சினிமாவும்  பார்த்து   விடுவாளாம் . இப்படியே  தன்னிடம்  உள்ள  மொத்த   சங்கிலியும்  விற்று  சினிமாக்கள்   பார்த்தே   தீர்த்தாளாம்.ஒரே படத்தை பலமுறை பார்த்தும், பற்பல படங்களை பலமுறை பார்த்தும் ஒரு சினிமா encyclopedia ஆகிவிட்டாள், இந்த பாட்டி. இந்த  காரணத்தினால்  அந்த  பாட்டிக்கு  எந்த  படத்தில்,  எந்த  சீனில்,  என்ன  டயலாக்,  என்ன  பாட்டு  என்ற  information எல்லாம்  finger tips இல்  இருக்கும் . இதனால்  போடி  அக்கிரகாரத்தில்  யாருக்கு  என்ன  சந்தேகம்  என்றாலும்  இவளிடம்  தான்  போவார்களாம் . பாட்டி  bulls eye போல  பதில்  சொல்லுவாளம் .
இந்த  பாட்டியின்  புகழ்  காரணமாக  சினிமா  பார்க்கும்  அதிக  ஆர்வலர்களுக்கு  குட்டியம்மா  என்ற  நாமகரணம்  ஆயிற்று . குட்டியம்மா  மாதிரி  எப்போ  பாரு  சினிமா  பாக்கறான் , குட்டியம்மா  மாதிரி  எந்த  படம்  எப்போ  ரிலீஸ்  னு ,கரக்டா   சொல்ரா  என்றெல்லாம்  எங்கள்  குடும்பத்தில்  பேசுவது  சர்வ  சாதாரணம் .
இதே ரேஞ்சில் மித மிஞ்சிய குட்டியாம்மாத்தனம் உடையவர்களானால் அவர்களை ஒரு படி மேலே போயி குட்டிக்கு அடுத்த adjective மினியம்மா என்றும், அதைவிட அதிகமான   சினிமா பைத்தியங்களுக்கு micromma என்றும் நானும் என் தங்கைமணியும்  வழங்கி வந்தோம். அடுத்த லெவல் என்ன தங்கைமணி? 'நாநோ'ம்மா ('Nano'ma) வா?



பாலாமணி

போடியில் தமிழ்பண்டிதர் வீட்டு பையன் இவர். வாத்தியார் புள்ளை மக்கு என்ற  பழமொழியை பொய்யாக்காமல் தன் பணியை செவ்வனே ஆற்றிய சிகாமணி. இவருக்கு சுத்தமாக படிப்பில் ஆர்வமே இல்லை. இருந்தாலும் பெற்றோர் தொல்லை தாங்காமல் பல இம்சைகளுக்கு ஆளானார். படிக்காமல் எப்படி நேரத்தை கடத்துவது என்ற டாபிக்கில்   இவர் PHD வாங்கி இருக்கிறார் அந்த அளவுக்கு இவருடைய நொண்டிச்சாக்குகள்  பிரபலம். "பாலாமணி,  படிடா"  என்று  சொன்னால்  உடனே  பேனாவை  ரிப்பேர்  பண்ண  ஆரம்பித்து  விடுவாராம் . அதும்  ink  பேனா  . nib, கழுத்து,  உடம்பு  எல்லாவற்றையும்  தனித்தனியா   அவிழ்த்து,   கழுவி,   ink fill பண்ணி,  nib மாற்றி  எழுதுகிறதா,  என்று  test பண்ணி  பொழுதைக்கடத்துவதில்  வல்லவராம் . படி படி என்று தொல்லை பண்ணினால் அவர் அம்மாவிடம் சென்று "அம்மா நான் வேணும்னா கடைக்கு போயிட்டு வரட்டுமா. மளிகை எதாவது வாங்கணுமாம்மா?" என்று கேட்பாராம். இவர் "படிக்காமல் டபாயிப்பதற்கு 1008  வழிகள்" என்று ஒரு புஸ்தகம் போட்டு இருந்தால் எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று நாமும் அறிந்து வாழ்க்கையில் படிப்பிற்கு   டிமிக்கி கொடுத்து இருக்கலாம். எங்கள் குடும்பத்தில் இவரை தீவிரமாக பின்பற்றியது நான் மட்டுமே. பாலாஜி கூட நெக்ஸ்ட் தான். அந்த அளவுக்கு சிறப்புடன் டிமிக்கி கொடுத்து வந்தேன். பாலாமணியாவது பள்ளிக்கு சென்று கொண்டு படிக்காமல் இருந்தார். நானோ காலேஜ் போறதுக்கே 1008 சாக்கு சொல்லுவேன். சைகிள்ளை  எடுக்கும்போதே முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அம்மாவிடம் கேட்பேன். அம்மா , are you sure? நான் போய்த்தான் ஆகணுமா ? னு. அடிங்.. னு அம்மா கல்ல எடுத்துண்டு அடிக்க வர்ற வரைக்கும் சைக்கிளில் ஏற மாட்டேன். அதுக்கப்றம் தான் ஒரே அழுதது அழுத்திண்டு காலேஜ் போவேன். .

Friday, November 6, 2009

விளம்பரங்கள்

விளம்பரங்கள்


நாளின் முக்கால் வாசி நேரம் டி வீ முன்னாடி அமர்வதால் இந்தப்பதிவை எழுத தூண்டப்பட்டேன்.பாடல்களைப்பத்தி எழுதியாச்சு.சினிமாவா?மூச்.... கொன்னுடுவாங்க.இனி பாக்கி இருப்பது விளம்பரங்கள் மட்டும் தான்.

சில விளம்பரங்கள் பார்க்க தூண்டும். சில விளம்பரங்கள் எரிச்சல் மூட்டும். சில  விளம்பரங்கள்  சிரிப்பு  மூட்டும் .சில விளம்பரங்கள் இசையால் அழியாப்புகழ் பெறும்.  அனேக  விளம்பரங்கள்  வெற்றி  அடைவது  இந்த  ஹியூமர் கான்சப்டில்  சில விளம்பரங்கள் தமிழிலேயே இருந்தாலும் நாராசமாக இருக்கும். why blood same blood என்னும் அளவிற்கு அலறுவார்கள். For eg:" பாக்குகளில் சிறந்த பாக்கு நிஜாம் பாக்கு, வாய் மணக்க, தாம்...பூ...லம் சிறக்க நிஜாம் பாக்கு. உனக்கு எனக்கு என்று அனைவரும் போட்டி போட்டு கேட்டு வாங்கும் பாக்கு நிஜாம் பாக்கு." இது ரேடியோ விளம்பரம் என்றாலும் இதையே TV யிலும் காட்டி கழுத்தறுத்தார்கள்.தான். சில விளம்பரங்கள் மகாகேவலமாக தமிழில் டப் செய்து உயிரை வாங்குவார்கள்.(shahrukh khan மலையாளத்தில் airtel network கிற்கு ஒரு கொடூரமான மொழியில் பேசி கதி கலங்க வைக்கிறார்.. முடியலைங்க!)

நல்ல இசை நல்ல கான்செப்ட் நல்ல punchline இது  இருந்தால்  போதும்  அந்த  product நன்றாக  விற்க  ஆரம்பித்து  விடும்.

மனதை நெருடும் படியாக இருந்த சில விளம்பரங்களை பற்றிய பதிவு தான் இது.

சிகப்பழகு  கிரீம் போட்டுக்கொண்டால் நேர்முகத்தேர்வில் வேலை கிடைத்து விடும், அழகிப்போட்டி ஜெயிக்கலாம், கல்லூரியில் admission கிடைத்துவிடும்  சினிமா நடிகை ஆகலாம்,  சிகப்பழகு இருந்தால் ஒப்பனை தேவையே இல்லை , பழைய நடிகையின் ஜாடை இருந்தாலும் சிகப்பழகு இல்லாமை காரணத்தினால் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை, உபயோகிக்கும் அதே நாள் பாய்பிரெண்டு கிடைப்பான்  போன்ற பேத்தல் விளம்பரங்களின் தொல்லை தாங்கவில்லை. இதில் காமடி என்னவென்றால், இதே நிறுவனம் செயற்கை ரசாயனங்களால் செய்யப்பட கிரீம்கள் தயாரிப்பதோடு ஆயுர்வேத முறைப்படி குங்குமப்பூ எல்லாம் போட்டு தயாரிக்கிறார்கள். அதற்கு தனி விளம்பரம்!!! என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திபன் முதன் முதலாக புதிய பாதை என்ற படத்தை எடுத்த போது, வழக்கம் போல விகடன் ஜால்ரா அடித்து அவரை ஒரு தொடர் எழுதுமாறு வேண்டிக்கொண்டார்கள். பார்த்திபனின் novelty யை ரசித்து நான் படித்தது  நன்றாக நினைவு இருக்கிறது. அவர், தம் கல்லூரி நாட்களில் பலமுறை டியூப் டியூபாக இந்த சிகப்பழகு கிரீம்களை உபயோகித்ததாகவும், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்து இருந்தார். இதெல்லாம் இவர் சொல்லிதான தெரிய வேண்டுமா ? அவர்களது பேத்தல் விளம்பரத்தை பார்த்தாலே தெரியாது? நான் பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கும் போது, 6 வாரங்களுக்கு பின்னர் நல்ல பலன் அளிக்க வல்லது என்று நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி வாங்கினேன். ஒவ்வொரு வாரமும் எங்கம்மாவிடம் போய் கேட்பேன். பல்பு தான் கிடைத்தது. சிகப்பழு ஒன்றும் கிடைத்ததாக  தெரியவில்லை. எல்லாரும் என்னை பார்த்தாவது திருந்துங்க..

அடுத்து இந்த டியோடரண்ட் அல்லது உடம்பில் போட்டுக்கொள்ளும் பவுடர். எங்கள் வாசனைப்போருளை உபயோகப்படுத்தினால் பெண்கள் எல்லாரும் (பிகினி உடையில்) உங்களை பின்தொடர்வார்கள் என்ற விளம்பரத்தை பார்த்து அதிர்ந்தேன். இந்தியாவில் இத்தனை கேவலமான விதத்தில் ஒரு விளம்பரமா என்று என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அக்கிள்களில் பவுடர் போட்டுக்கொண்டால் தன்னம்பிக்கை மேலோங்கும்  போன்ற பிதற்றல்களும் உண்டு. எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு ஒரு விதமான பவுடர், கிரீம், சோப்பு, Face Wash போன்றவை என்னைப்போன்ற எண்ணெய்ப்பசையுள்ள சருமம் படைத்தவர்களை ஏதோ மகபாவிகள் போல நடத்தினார்கள்.

இருப்பதிலேயே மெகா பிதற்றல் ஷாம்பூ விளம்பரங்கள் தான். சத்தியமாக சொல்கிறேன், இந்த மார்க்கட்டிலுள்ள எந்த  ஷாம்பூவை  உபயோகித்தாலும் அவர்கள் விளம்பரத்தில் காட்டுவது போல முடி ஆகாது . ஆகவே ஆகாது. ஆனால் நிமிடத்திற்கு நூறு முறை கூந்தல் உடையாது, செதில்கள் இருக்காது போன்ற டுபாக்கூர் விளம்பரங்கள் மட்டும் நின்ற பாடில்லை.

இப்போது நான் அடிக்கடி காண்பது குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்து பானங்களைப்ப்  பற்றியதாகும். எல்லா பெற்றோருக்கும் தம் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்படவேண்டும்  என்ற தீராத (பே)ராசை தான் என்றாலும் அதற்கோசம் வெறும் நீராகாராம் போன்ற இந்த கஞ்சி மாவை மட்டும் தந்தால் போதும் உங்கள் குழந்தைகள்  சக்திவாயிந்தவர்களாக, உயரமானவர்களாக , கூர்மைநிறைந்தவர்களாக மாறுவார்கள் என்று (துஷ் ) பிரச்சாரம் செய்கிறார்கள்.


இதைவிட கொடுமை சின்னஞ்சிறு குழந்தைகள் இவர்களுடைய பானத்தை குடித்தாலே போதுமாம். முழுமையான ஊட்டச்சத்து மொத்தமும் கிடைத்து விடுமாம். என்ன ஒரு கண்றாவி. நான் கேட்கிறேன், பெற்றோர்கள் என்ன அவ்வளவு தத்தியா?

ஆங் சொல்ல மறந்துட்டேன். நம்ம teleshopping விளம்பரங்களை மறந்துவிட்டோமே.  ஈஈஈ என இரத்தல் இழிந்தன்று என்று நாலடியார் சொன்னாலும் கேட்காமல், ஈஈஈ என்று பல்லைக்காட்டி கண்டத்தையும் பற்றி பித்றோ பிதற்றேன்று பிதற்றினால் அது மகிழ்ச்சி என்று பொருள் கொள்ள வேண்டுமாம். பல்லு மஞ்சளா  இருக்கும், சோபா சரியில்லாமல் இருக்கும், வயறு பெருத்து இருக்கும், காய்கறி நறுக்க முடியாமல் உழல்வார்கள். அப்பெல்லாம் சோகமே உருவாகி, ஏதோ உணவில்லாமல், உடையில்லாமல், வீடில்லாமல் வேற்று கிரகத்தில் வாழ்பவர்கள் போல முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு இவர்கள் வெட்டிப்பேச்சு பேசுவார்கள். பேட்டி எடுக்கறாங்களாம். அப்புறம் பல் வெண்மையாக்கும் பசை உபயோகபடுத்தியோ, ஒரு டுபாகூர் சோபா (காற்று ஊதி பெருசாக்குவது) வில் அமர்ந்தோ, வயிறு கன்னா பின்னா என்று அநியாயமாக குறைந்தோ(ஜட்டி போட்டுக்கொண்டு side இல் நிற்பார்கள் before and after னு திரி கொளுத்தி போடுவார்கள் நாமும் ஞ என்று நம்புவோம்!!) அல்லது sandwich கோசம் காய் நறுக்கும் சீவல்  மிஷின் உபயோகித்தோ அவர்களது 32 பற்களையும்  காட்டி சிரியோ  சிரி என்று  சிரித்து  தள்ளுவார்கள் . ஏனா? அட அதாங்க மகிழ்ச்சி. பல்லைக்காட்டினா மகிழ்ச்சி.உடனே நாமும் தொலைபேசி எடுத்து அங்கே காட்டப்படும் நம்பரை டயல் செய்ய வேண்டுமாம் !!! டிங் டிங் டிங் !!!(சுவத்துல இடிச்சுக்கறேங்க!)

மொத்ததுல எங்க ரவி மாமா சொல்லுவதைப்போல எப்போ பாரு வாய் நாற்றம் அக்குள் நாற்றம்,தொடை இடுக்கில் சொறி , சிரங்கு இதே தான் விளம்பரங்கள். உஷா techniques , Monaco போன்ற விளம்பரங்கள் கிச்சு கிச்சு மூட்டி மனதில் பச்சக் என்று ஒட்டுகின்றன . யாராவது docomo புதிய விளம்பரம் பார்த்தீர்கள? ரயிலில் பயணிக்கும் பயணிகள் பாடுவது போல அமைத்திருக்கிறார்கள். Very Catchy...

Tuesday, November 3, 2009

மருமகனே மருமகனே வா வா

மருமகனே மருமகனே வா வா

நேற்றைக்கி வெகுநேரம் போனில் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு விசாகாவின் அழைப்புக்கு செவி சாய்த்துவிட்டு சமயலறைக்கு போய் விட்டேன். மதிய உணவு கழித்து சுமார் 5.30 மணி அளவில் பார்த்தால் மகேஷின் offliner வந்திருப்பது தெரிந்தது. அகிலாவிற்கு  வலி எடுத்துவிட்டதாகவும் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் கூறியிருந்தான்.
எனக்கென்னமோ ஒரு இனம் புரியாத tension, excitement எல்லாம்  தொற்றிக்கொண்டு  விட்டது. என் தங்கையின் டெலிவரியின் போது அழுதே விட்டேன்.தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடுமே. ஜிங் என்று ரெண்டு கதாநாயகர்கள் இந்த பூமியில் வந்து குதித்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை குதூகலமும் கொண்டாட்டமும் எங்கள் வீட்டில் தொடர்கிறது. 
இருந்தும் அகிலாவிற்கு இவ்வளவு சீக்கிரம் வலி வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை என்பதே உண்மை. சட், ஒரு முக்கியமான நேரத்தில் online னில் இல்லாமல் போய் விட்டோமே என்று வருந்தினேன். ராத்திரி எல்லாம் யோசித்துக்கொண்டே இருந்தேன். எதிர்பார்த்து போலவே காலையில் sms அனுப்பி இருந்தான்
Double Treat  போல மெயில் திறந்து பார்த்தால் குழந்தையின் படத்தோடு அகிலாவையும் எடுத்து எங்கள் எல்லோருக்கும் அனுப்பி இருந்தான். குழந்தையை பார்த்த பொழுது அகிலா பட்ட கஷ்டம் எல்லாம் பரவாயில்லை என்றே தோன்றியது. குழந்தை ஆஜானுபாகுவாக அழகோ அழகு. ஆதித்யா என்ற நாமகரணமும் ஆகிவிட்டது.
Phone பேசுவதை விட படங்கள் இருப்பதால் SMS, Email, Phone பேச்சை விட 1000 விஷயங்கள் கூடுதலாக சொல்லியது. பார்த்தாலே பரவசம். ஆதித்யா பாப்பா முதன் முதலில் நானும் பார்த்துவிட்டேன் என்று ஒரே மகிழ்ச்சி.
Congratulations Mahesh - Akila on the birth of Adithya.
இனி அய்யா ப்ளாக் பக்கம் வருவாரா என்று எனக்கு சந்தேகமாதான் இருக்கு. Adithya is extremely attractive.
Welcome to this world Aadithya.

Happy Anniversary Vishakha


I wanted to deliberately write a seperate post in english for wishing Vishakha on her third wedding anniversary yesterday. I was so lost in my own world that I totally forgot the occassion. Thankfully she had to invite me for a party at India Palace Hotel here in Salam St. I was first hesitant because my husband had been to Dubai yesterday and was really wondering if he might be ok with this plan. Somehow he whole heartedly agreed to go for the party.


Vishakha is a very special friend of mine and one soul who is sinecerely there for me when I need her the most. She made a lot of difference in my life in Abudhabi. We used to work together earlier thankfully we are now thick friends and remain in touch. I had never been able to attend any special occasion of hers. Now was the chance to honor her invite.


Normally when it is a gathering of a friend's friends, it might not be that entertaining as first time meetings are not always that very easy going. Especially we Indians, take some time to get acquainted with people. But Vishakha and Praveen made all of us totally at home and we had a memorable time. The crowd was a blend of cultures and I was quite worried if we could really gel. But the gathering was more than what we really expected. It was fun filled with little Dishita, Yasmeen , Pruthvi  and another toddler crying, spilling, trying be naughtiest at their maximum levels.

To my sheer delight, Vishakha sat next to me and she was chatting with me while entertaining the other guests.  My husband was busy getting introduced to the other guys in the gathering. We ate the finest Indian food and had a gala time.


In my earlier posts, I had mentioned much about her. To refresh your memories, when I had severe acidity issues, it was Vishakha who rushed to my place with a pill (from India) without any delay to help me. I realised how she acted on just a stimulus. This is what I call empathy. Acting to help someone is exactly what empathy is and being empathetic is an inbuilt quality in her. I admire many of her qualities. One of them is her cookery styles. She would just prepare food in minutes. It would seem to us as if she dint put any effort in cooking but actually it is her expertise in cookery.. She would casually go into the kitchen and come back  with with delicious hot chapatis and bhaji in no time!. I have learnt quite a few recipes from her and all of them are instant success stories at my place.   She is very generous, forgiving, motherly towards me. If I have someone to lean on here, It would be her. Thanks Vishu for being my friend.

Ladies and Gentlemen, Let me take this opportunity to wish Vishakha and Praveen a very happy Anniversary and many more happy returns.








Related Posts with Thumbnails