Pages

Sunday, February 28, 2010

கோபியர் கொஞ்சும் ரமணா - மோஹனகிருஷ்ணா...

அடுத்தடுத்து ஒரே பெயரில் போஸ்ட்டு போட்டா ரீடர்ஸ் கன்ஃப்யூஸ் ஆயிடுவாங்கன்னு தான் ஒரு போஸ்ட் தள்ளி இந்த போஸ்ட் போடறேன்.

அக்சுவலா கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா தான். ஆனா அப்படிப்போட்டா மஹா சாதுவான கோபாலண்ணாவுக்கு கோபம் வரலாம்.

சரி விஷயத்துக்கு வர்றேன். இவரை ஏன் இப்படி சொல்றேன்னா, எங்கே போனாலும் இவருக்கு ஒரு கூட்டம் கூடிடும். அதுலேயும் முக்கியமா அண்டர்லைன் பண்ணி, போல்டு பண்ணி, ஹைலைட்டு பண்ணி சொல்லிடறேன் - வயதான பெண்கள் கூட்டம். இல்லாட்டி குறைந்தபட்சம் 40 வயசான மாமிகள் கூட்டம். இவர் கிட்ட அப்படி என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, அப்படி ஒரு காந்த சக்தி.. (தூ, இது உனக்கே கொஞ்சம் ஓவராத்தெரீலன்னு என் மனசாட்சி என்னைக் கேக்கறது).ஏதோ ஒரு ஸ்ப்ரே விளம்பரத்துக்கு பெண்கள் துரத்துவார்களே அதே போல இவருக்கும் சிலோன் ரேடியோவில் சொல்வது போல அம்மா அம்மம்மா,அக்கா அக்கக்கா, பாட்டி, சித்தி பாட்டி, அத்தை பாட்டி, அத்தங்கா, அம்மங்கா, மன்னி, சித்தி, மாமி இப்படி இவரைச்சுற்றி ஏகக்கூட்டம்!

சரியாச்சொல்லப்போனா இதை நான் கண்டு பிடிச்சது 2006ல தான். வேணு அண்ணா கல்யாணத்துக்கு முன்னாடி தான் எங்க கல்யாணம் முடிஞ்சிருந்தது. நான் இவங்க குடும்பத்துக்கு புதுசு. எனக்கு யாரையும் தெரியாது. திடீர்ன்னு பார்த்தா இவரைக்காணோம். எங்க நெருங்கிய சொந்த பந்தம் எல்லாம் மேடையில் ஹோமத்துல பிஸியா இருக்க நான் சண்டே சாயந்திரம் சரவணா ஸ்டோர்ஸ்ல தொலைஞ்சு போன சின்ன குழந்தைமாதிரி ஆயிட்டேன். கண்ணா உனை தேடுகிறேன்னு நானும் ரொமாண்டிக்கா பாட்டெல்லாம் பாடிண்டு தேடிப்பார்த்துட்டேன். ஆளைக்காணோம். நடந்து நடந்து கால்வலிச்சு ஒரு லேடீஸ் கும்பல்கிட்டக்க போய் உட்கார்ந்துட்டேன். அவாள்ளாம் இந்த சைட் சொந்தமா அந்த சைட் சொந்தமான்னு கூட எனக்கு தெரியாது. அப்படியே சுத்தும் முத்தும் நோட்டம் விட்டப்போ பளிச்னு எங்கேயோ பார்த்த முகம்! அட, இவர் தான். நடூல உக்கார்ந்து இருந்தார். புதுப்பொண்டாட்டிய அம்போன்னு விட்டுட்டு ஹே ஹேன்னு ஒரெ கூச்சல், கும்மாளம் சிரிப்பு. இவரைச்சுத்தி இவர் அக்கா, மன்னிமார்,சித்தி, அத்தை, சித்தி பாட்டி, அத்தைபாட்டி, மாமி, அத்தங்கா, அம்மங்கா போன்ற சொந்தபங்தங்கள். என்னைப்பார்த்தவுடன் மாமிகளும் என்னை அவர்கள் குரூப்பில் சேர்த்துக்கொண்டார்கள். (நேரம் தான்) இவர் அப்போது கெக்கே பிக்கே என்று எனக்கு நூறு முறை சொன்ன ஒரு பழைய ஜோக்கை 101வது முறையாக மாமிகளை இம்ப்ரெஸ் செய்வதற்கு சொல்லிண்டு இருந்தார். நற நற!

இது ஆச்சு. இது மாதிரி ஒண்ணா ரெண்டா?

2007ல் கோபாலண்ணா பையன் பூணூலுக்கு மேலத்தெருவில் அழைக்கப்போய் இருந்தோம். இரவு சுமார் 7.30க்கு மேல் பாலக்காட்டில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி விடுகிறார்கள். டீவீ சீரியல் ஆதிக்கம் என்ன செய்ய? (எங்கள் ஊரில் எல்லாம் இரவு தான் பெருசுகள் எல்லாம் திண்ணையிலோ சேர் போட்டுக்கொண்டோ வம்பளந்து கொண்டு இருக்கும்.தெருவில் யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் போன்ற CBI வேலை எல்லாம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்). ஊரடங்கிய சமயத்தில் நாங்கள் ஒவ்வொரு வீடாகப்போய் மணி அண்ணா சொல்லிக்கொடுத்த ஸ்கிரிப்டை மனனம் பண்ணிக்கொண்டு, அழைக்க வேண்டும். அவ்வளவு தான் வேலை. மேலத்தெரு முதல் வீட்டில் ஆரம்பித்தோம்.அங்கு கதவைத்தட்டிய உடனே, முதலில் ”ஆராக்கும்?” என்ற கோபமான குரல் தான் கேட்டது. வேகமாக என் கடமையைச்செய்து விட்டு கிளம்பிடணும் என்று நினைத்துக்கொண்டேன். இவர்,” நான் தான் மாமி, மோஹன் வந்திருக்கேன்” என்றார்.(எனக்கு மனதிற்குள் ”பொன்னுரங்கம் வந்திருக்கேன்” போல தோன்றியது!!! அதற்குள் அந்த மாமி கதவைத்திறந்துகொண்டே,”ஆரு மோஹனா?” என்று புல்லரித்து புளகாங்க்கிதம் அடைந்து, ”எங்கிருக்காய்? எப்போ வந்தாய்” போன்ற பல கேள்விக்கணைகளை தொடுக்க இவருக்கோ வாயெல்லாம் பல்! மாமியின் கைகளைக்கோர்த்துக்கொண்டு ரிங்கா ரிங்கா ரோஸஸ் ஆடிக்கொண்டு பேச்சான பேச்சு. மாமியின் ஒன்றுவிட்ட தங்கையின் பெண்ணுக்கு போன மாதம் மும்பாயில் கல்யாணம், அவன் ஓமனில் இருக்கான்,பெண் படித்திருக்கிறாள் ஆனால் வேலைக்கு போகவில்லை போன்ற ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான அப்டேட்டுகளுக்கு அப்புறம் தான் என் கடமையைச்செய்ய முடிந்தது! இதே ரேஞ்சில் எல்லார் வீட்டிலும் இதே தான் ரிப்பீட்டு! சில மாமிகள் இவர் குரலைக்கேட்டு ”மோஹனா?” என்று குதூகலித்தார்கள். சிலர் உருவத்தைப்பார்த்து துள்ளிக்குதித்தார்கள். எல்லார்கூடவும் ரிங்கா ரிங்கா ஆடிவிட்டு வருவதற்குள் போதும்போதும் என்றாகி விட்டது!

சரி, இது ஊர்ல.. இங்கேயும் இதே தானா?

அன்னிக்கி ரொம்ப நாள் கழித்து ரவியை சந்திக்க ஹம்தானில் அவர்கள் வீட்டுக்கு போய் இருந்தோம். ரம்யா டின்னருக்கு அழைத்திருந்தாள். அங்கே போனதுக்கப்புறம் தான் தெரிந்தது ரவியின் நண்பர் ஒருவரும் அவர் அம்மா அப்பா குடும்ப சஹிதம் டின்னருக்கு வரவிருக்கிறார்கள் என்று. ஆச்சு அவர்கள் வந்த உடனே இவர் லக்ஷணமாக ஆபீஸ் விஷயங்கள் பேச வேண்டியது தானே? அந்த நண்பரின் அம்மா மிக பளிச் ரகம். நல்ல குரல் கல கல சுபாவம். முதலில் இவர் தான். “மாமி உங்களுக்கு சொந்த ஊர் ஏதாக்கும்?” அதானேப்பார்த்தேன். நெக்ஸ்டு மாமி, ”நேக்கு சாத்தபுரம் பாலக்காடு.. “ அட்றா சக்கை அட்றா சக்கை.

இவர் கண்களில் பாலக்காட்டு நீர் மல்க, மாமீ.... என்று ஸ்லோ மோஷனில் என் மனக்கண்ணில் இவர் மாமியை நோக்கி ஓட, எனக்கு மெதுவாக பிள்ட் பிரஷர் ஏறியது. மாமிக்கு ஏக குதூகலம். ”ஓ... ஆக்குமா” என்று ஆரம்பித்து, ஹை 5 கொடுத்துக்கொண்டு பிள்ளையாரை தியானித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள். பேசினார்கள் பேசினார்கள். அப்படி ஒரு பேச்சு. பாலக்காட்டில் ஒரு வீடு விடாமல் எல்லார் வீட்டு அப்டேட்டுகளும் பேசியாயிற்று. இவர் விட்டால் அந்த மாமியின் மடியில் ஏறி உட்கார்ந்து விடுவார் போல இருந்த்து. அந்த மாமாவுக்கு காது கேட்காது போல இருக்கு.(குடுத்து வைத்தவர்!) அவருக்கும் என்னை மாதிரி ஒரு கையாலாகாத்தனம்! என்ன செய்வது.? ரவி, நண்பர், ரம்யா, நான், நண்பர் மனைவி, குழந்தைகள், மாமா எல்லோரும் இதை ஒன்றுமே புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். கடைசியில் மாமி நிறுத்திய போது அந்த மாமி இவருக்கு தூ....................ரத்து உறவு என்பது ஊர்ஜிதமாயிற்று. ஸ்ஸ்ஸ அப்பா... முடியலை. மாமி சாப்பிட்டு கையலம்பிய போது ”தால் நன்னாருந்தது கேட்டியா” என்றார். ரம்யா அன்று தாலே பண்ணலை! போனால் போகிறது என்று என்னைப்பார்த்து உன்பேர் என்னம்மா என்றார்..அனன்யா என்றேன். கண்டுகொள்ளவே இல்லை.. மீண்டும் பேசப்போய்விட்டார்! அந்த மாமி பிரியும்போது இவர் 7ஜீ ரெயின்போ காலனி ரவிக்கிருஷ்ணா ரேஞ்சுக்கு கண்ணீர் விட்டார்! கஷ்டம் கஷ்டம்!

இப்போ சொல்லுங்க நான் ஏதாவது தப்பா சொன்னேனா?

கோபியர் கொஞ்சும் ரமணா, மோஹனக்கிருஷ்ணா!

Saturday, February 27, 2010

துபாய் ரவுண்டப்

இந்த நிகழ்ச்சி நடந்து 2 வாரம் ஆகிவிட்டது. படங்கள் இப்போது தான் கைக்கு கிடைத்தன. படங்கள் தந்தமைக்கு கோபால் அண்ணாவிற்கு ஸ்பெஷல் நன்றிகள்.



4பீ குழுவினரின் 12வது ஆண்டு விழாவையொட்டி துபாய் போயிருந்தோம். அல்பர்ஷாவிலிருந்து

Monday, February 22, 2010

கோபியர் கொஞ்சும் ரமணா - கோபால கிருஷ்ணா !

பெயரைப்பார்த்ததும் என் கணவரைப்பற்றிய பதிவு என்று நினைத்தவர்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இவரது  லீலைகள் இதே பெயரில் விரைவில் வரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.


நேற்று இரவு சோனியில் லட்சத்து பத்தாவது முறையாக லகான் போட்டார்கள். வெள்ளைக்காரி மேல் பொறாமை தாங்கமுடியாமல் கிரேஸி சிங் வாயசைக்கும் ஆஷா போன்ஸ்லே பாடும் ’மதுபன் மே கன்ஹையா கிஸி கோபி ஸே மிலே’ என்ற பாட்டு ஃபுல் சவுண்டில் கேட்டு பார்த்து ரசித்தோம்.'ஙொய் ஙொய்' என்று தூக்ககலக்கத்தில் புலம்பத்தொடங்கி இருந்த இவர், இந்த பாட்டு வந்த உடனே கண்கள் பிரகாசமடைந்து,  வந்து உட்கார்ந்து விட்டார். ஒரு வேளை கிரேஸி சிங் மோஹமாக இருக்கலாம். வாய்கிட்டக்க ஒரு சொம்பு வெச்சுண்டு இருந்திருக்கலாம். அநியாய ஜொள்!

நானும் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு விருந்தாக இந்த பாடல் இருந்தது என்றால் அது மிகையில்லை. அழகான நடனம், நொடிக்கு 100 தரம் மாறுகின்ற கிரேஸியின் முக பாவம், ஆமிரின் சூட்டிகை, கோபிகைகளின் காஸ்ட்யூம், லைட்டிங் எஃபக்டு, பாட்டு, ஆஷாவின் கமகங்கள், இசை, கொரியோகிராஃபி என்று எல்லாமே மிகச்சிறப்பாக அமைந்து இருந்தது.

”கோபியான் தாரே ஹை சாந்த் ஹை ராதா” என்ற வரி ஏனோ மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதாவது கோபியர் எல்லாம் நட்சத்திரங்கள் என்றால் ராதா சந்திரனைப் போன்றவள். கோபியர்களின் சிறப்பை வேளுக்குடியாரின் ஒரு பிரபாஷணத்தில் கேட்டதுண்டு. நெகிழ்ச்சியான இந்த கதையை பகிரத்தான் இந்த பதிவு.

உத்தவன் என்ற கண்ணனின் தோழன், கோபியரின் மகத்துவம் பற்றி கண்ணனிடம் கேட்டாராம். இதை விளக்கும் நோக்கோடு கண்ணன் தனக்கு தீராத வயிற்றுவலி என்று சொன்னாராம். துடித்து போன உத்தவன், பரமாத்மாவிடம், நான் என்ன செய்ய வேண்டும், நீயே சொல் ஜகத்பதி என்று கேட்டாராம். உடனே கண்ணன், ”உத்தவா, உன் பாத தூலிகை (காலடி மண்) எடுத்து பாலில் கலந்து, நான் அருந்த வேண்டும் அப்போது தான் இந்த வயிற்றுவலி தீரும், கொஞ்சமே கொஞ்சம் உன் பாத தூலிகை தருகிறாயா”என்று ஸ்ரீ ஹரி கேட்டாராம். அதிர்ச்சியில், உத்தவன் மறுத்து விட்டாராம். அதெப்படி தன் காலடி மண்ணை எடுத்து பெருமான் உட்கொள்வதா என்று அவருக்கு ஒரே குழப்பமாம். ”இதுதான் பக்தனின் மகத்துவம். இப்போது கோபியரின் அன்பின் மகத்துவம் பார்க்கிராயா?” என்று அவர்களிடம் அழைத்துப்போனாராம்.கோபியரிடம் கண்ணன் கேட்ட மாத்திரத்தில் மூட்டை மூட்டையாக காலடி மண் கிடைத்ததாம்! உத்தவன் அவர்களிடம் கேட்டாராம், ”உங்களுக்கு அறிவில்லையா? பெருமான் உங்கள் பாத தூலிகை உட்கொள்ளக்கேட்கிறார்.இப்படி மூட்டை மூட்டையாக தருகிறீர்களே? நீங்கள் எல்லோரும் மஹா பாவம் செய்கிறீர்கள்.” என்றாராம். கொஞ்சம் கூட கவலையே படாமல் கோபியர்கள் சொன்னார்களாம், ”எங்களுக்கு பாவம் வந்து சேர்வதைப்பற்றிய கவலை இல்லை, கண்ணனின் வயிற்று வலி தீர்ந்தால் அதுவே போதும், எங்களுக்கு வேறெதுவும் வேண்டாம்” என்றார்களாம். இதல்லவோ உண்மையான மெய் சிலிர்க்கும் அன்பு, தாய்மை! கோபியரின் சிறப்பை உத்தவன் உணர எம்பெருமான் கண்ணன் எடுத்துக்காட்டிய விதம் தான் எத்தனை மதுரம்.

கோபிகா ஜீவனஸ் ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா!

Saturday, February 20, 2010

ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா..

டிஸ்க்லெய்மர்: இந்த பதிவிற்கும் ரகு என்ற பெயர் கொண்ட யாருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் குழந்தையாக இருந்தப்போ ”ஆப் ஜைஸா கோயீ மேரி சிந்தக்கீ மே ஆயே தோ பாப்பஞ்சாயே” என்ற பிரபலமான பாட்டைத்தவிர எனக்கும் ஹிந்திமொழிக்கும் பெருசா எந்த சம்பந்தமும் இல்லை. ரொம்ப வருஷம் கழிச்சு தான் அது பாப்பஞ்சாயே இல்லை, பாத் பன்(ban) ஜாயே என்று புரிந்தது. அ, ஆ, இ, ஈன்னு போடில பவானி மிஸ் சொல்லி குடுத்து இருந்தாங்க. அதுக்கே ஓவர் அலம்பல் காட்டிண்டு இருப்பேன். அங்கே அதெல்லாம் அப்போ ரொம்ப பெரிய விஷயம்! அப்பாவுக்கு மாற்றலாகி விஜயவாடா போனப்போ, CBSE ஸிலபஸ்.ஒரேடியா ஹை ஹை தான். சுத்தமாக ஒண்ணுமே புரியலை. சரளா டீச்சரின் க்யூட்டிக்யூரா வாசனை நல்லா இருந்ததேயொழிய, ஹிந்திவகுப்பு சுத்தமா நல்லா இல்லே. வழக்கம்போல எங்கம்மாவுக்கு மூக்குல வேர்த்து, அவசரமா கொண்டு போயி அனுசியாடீச்சர் கிட்டே ஹிந்திக்கு சேர்த்து விட்டுட்டாங்க. மூணாங்கிளாஸ் ல ப்ராத்மிக், நாலாங்கிளாஸ்ல மத்யமா ஆச்சு. ரொம்ப முக்கி முனகி அழுகணி ஆட்டம் ஆடி ராஷ்ட்ராவும் பாஸாகிட்டேன். அடுத்து பிரவேஷிகா. 5வது வகுப்புக்கு பிரவேஷிகா ரொம்ப ஹை ஸ்டாண்டர்டுன்னு யாரொ திரியைக்கொளுத்தி போட, நிம்மதியா ரெண்டு வருஷம் போச்சு.  ஹிந்தியே இல்லாத உலகம் எவ்வளவு இன்பமயமானதுன்னு அந்த கஷ்டத்தை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்.அந்த ஆனந்தம் இருக்கே.. ஆஹாஹா...

நான் எட்டாவது படிக்கும்போது(அக்கான், எட்டாவது ‘படி’ ச்சுட்டாலும்!) சரியா எனக்கு அஷ்டமத்துல சனி குடி கொண்டிருந்துருக்கு. (ஏன் அது இப்போவும் அதே பொஸிஷன்ல இருக்கு? சுப்பையா வாத்தியார் கிட்டே யாராவது  கேட்டு சொல்லுங்கப்பா!) என்னெம்மோ சாக்கு சொல்லியும் அம்மா விடாப்பிடியா என்னை நம்பி பிரவேஷிகாவுக்கு காசு கட்டிட்டாங்க. ஸ்கூல் பாடமே ’ப்ரும்மாண்டமா’ படிக்கற நான், ஹிந்தி பரீட்சைக்கு படிச்சுட்டாலும்!!! அரும்பாக்கம் தாத்தாவின் மேற்பார்வையில் குஜராத்தி வித்யாலயாவுல செண்டர் போட்டு இருந்தாங்க. சுத்தமா விருப்பமே இல்லாம போய், அங்கே வந்திருந்தவங்களை எல்லாம் நோட்டம் விட்டுண்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு பரீட்சையை 1 மணி நேரத்துல முடிச்சுட்டு வந்துட்டேன். மதியம் சாப்டுட்டு மறுபடியும் வேடிக்கை பார்த்துண்டு இருந்தேன். என்னமோ எல்லாரும் திஷ்ய, பிந்துஸார்ன்னு எல்லாம் புலம்பிண்டு இருந்தாங்க. என்ன எழவோ..எனக்கு அதெல்லாம் ஒண்ணுமே தெரியாது.  நான் கண்டுக்கவே இல்லையே! மதியம் பேப்பர் டெட் ஈஸி! பின்னே ஒண்ணுமே தெரியலையே! இந்த வாட்டி இன்னும் கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன். தாத்தா என்னை உள்ளே அனுப்பிட்டு மூக்குப்பொடி டப்பாவில இருந்து பொடி எடுக்கறதுக்குள்ளே, ”முடிச்சுட்டேன் தாத்தா”ன்னு ஈன்னு பல்லிளிச்சுண்டு வெளில வந்துட்டேன். தாத்தாவுக்கு ரொம்ப அதிர்ச்சி! பேப்பர்ல எதாவது எழுதினியான்னு கேட்டார். நானும் ரோல் நம்பர்ல்லாம் எழுதி இருக்கேன்னு சத்தியம்  பண்ணி பெருமையா சொன்னேன். வீட்டுக்கு வந்த உடனே ரொம்ப ப்ராம்டா அம்மாகிட்ட போட்டுக்கொடுத்துட்டார்.

ரிசல்ட் வந்தது, தர்ம அடி கிடைச்சது. ரெண்டாவது வாட்டி எதிர்பாரா விதமா பிரவேஷிகா ஸிலபஸ் மாத்திட்டாங்க! (மாத்தாம இருந்திருந்தா மட்டும், நாங்க சபாலேயே முதல் மாணவியா தேறி இருப்போம்ல,சிங்கம்ல...) அதுனால் மீண்டும் அஷோக்,சுமன்,திஷ்ய,எல்லாம் படிச்சுண்டு போய் கூட என்னால பாஸ் பண்ணமுடியல!!!

மூணாவது வாட்டி,ஏகப்பட்ட வ்யாகரண், ஏகப்பட்ட எஸ்ஸே எல்லாம் படிக்க சொன்னாங்க! அதுலேயும் லீலா பாட்டி சொன்ன ஃபார்முலாப்படி முதல் பத்து, கடைசிப்பத்துல ஒரு பாடம் கூட பரீட்சைல வரலை. சனி பகவானின் விளையாட்டா இருக்கும்ன்னு அம்மா வெளீல வருத்தத்தோட  சொல்லிண்டாலும்,  கதவை சாத்திட்டு, வீட்டுக்குள்ளே , தன் கடமையை செஞ்சாங்க!

 இவ்ளோ அடி வாங்கியும் மூணாவது வாட்டியும் நான் ஃப்ணால் ஆயிட்டேன்! அம்மா,அவ்வா, புண்ணியத்துல ‘நான் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புத்திசாலி’ங்கற மேட்டர், எங்க சுத்துவட்ட 18 பட்டிக்கும் தெரிஞ்சு போச்சு. ஹஸ்தினாபுரம்,குரோம்பேட்டை,பல்லாவரத்துல எல்லாம் எனக்கு போஸ்டர் ஒட்டினாங்க.” மூணுவாட்டி ஃபெயிலான மூதேவியே”ன்னு அதுல போட்டு இருந்ததா எங்கண்ணா மார்தட்டிண்டு சொன்னான்.வெற்றி தியேட்டர் கிட்டக்க எனக்கு பாராட்டு விழா கூட ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. எங்கம்மாதான்  போக விடலை. திருஷ்டி பட்டுடும்ன்னு அப்படி சொல்லி இருக்கலாம்ன்னு நான் நினைக்கிறேன்.

இருந்தாலும் எங்கம்மாவின் பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் ஒரு எல்லையே இருக்கலை. மறுபடியும் எனக்கோசரம் பிரவேஷிகாவுக்கு பைசா கட்டினாங்க.

ஹிந்தி பிரச்சார சபாவுல என் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பார்த்து, காரித்துப்பி, வார்னிங் குடுத்தாங்களாம். இந்த வாட்டி மட்டும் ஃபெயிலானா இனி எப்போவும் இந்த காண்டிடேட்டால எந்த பரீட்சையும் எழுத முடியாதுன்னு சொல்லி இருக்காங்க. இந்த விஷயத்தை அம்மாவுக்கு என்கிட்டே மறைக்க எப்படித்தான் மனசு வந்ததோ, தெரீல, சொல்லவே இல்ல.இது மட்டும் தெரிஞ்சிருந்தா, நிச்சியமா 4வது வாட்டியும் ஃபெயிலாகி வரலாறு காணா புகழ் பெற்றிருப்பேன்.. ஹிந்தியில இருந்தும் தப்பிச்சிருப்பேன் ஜஸ்ட் மிஸ்.. யாரோ தெரிஞ்சவங்க இன்ஃப்ளூயென்ஸ் பண்ணி, அவங்க கைல கால்ல விழுந்து எனக்கு ஹால் டிக்கெட் வாங்கிக்குடுத்தாங்க.

எனக்கும் 3 வாட்டி பிரவேஷிகா எழுதி எழுதி போர் அடிச்சுடுத்து. அதுனால சரி போனாப்போகட்டும்ன்னு பிரவேஷிகா பாஸ் பண்ணிட்டேன். அதுக்குள்ளே நான் 9த் வந்துட்டேன்.”மேத்ஸ் எல்லாம் ஒண்ணுமே தெரியலைம்மா”ன்னு சொல்லி ஹிந்தியிலே இருந்து ஜகா வாங்கிட்டேன்! ஹை ஜாலி. அடுத்த ரெண்டு வருஷம் பப்ளிக் எக்ஸாம் அது இதுன்னு பொழுது போயிடுத்து. 11வது படிக்கும்போது திருப்பியும் சர்ப்ப தோஷம். விஷாரத் ரெண்டே பார்ட் தான் முடிச்சுடு, உன் தங்கை பாரு, பிரவீண் வந்துட்டா, நீ பெரியவ இல்லையான்னு எல்லாம் வெறுப்பேத்தி, மறுபடியும் ஜெய’த்ரித்திர’ வத், ஜெயஷங்கர் பிரசாத், ப்ரேம்சந்த்ன்னு போட்டு தாளிச்சுட்டாங்க.

இதுக்குள்ளே அம்மாவே டீச்சர் ஆயாச்சு அதுனால டியூஷன் தொல்லை இல்லை. ஜஸ்ட் போய் பரீட்சை எழுதிட்டு வரவேண்டியது தான். அந்த வயசுல எனக்கிருந்த நல்ல கற்பனாசக்தியும்,3 வாட்டி திருப்பியும் திருப்பியிம் படிச்ச க்ராமரும் கைகொடுக்க, டீவீ சீரியல் புண்ணியத்துல மெளக்கிக் கொஞ்சம் நல்லா வர, சிக்கல் இல்லாம விஷாரத் தேறிட்டேன்.

ஸிப்ளிங்க்ஸ் லைக் மைண்டடா இருக்காததுனால எவ்ளோ கஷ்டம் பாருங்க? ”அம்மா, எனக்கு தெய்வம்மா அவ, அவளே எழுதலையேம்மா, நாமட்டும் ஏம்மா எழுதணும்”ன்னு என் தங்கை கண்கள்ல நீர்மல்க ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை கேட்டு இருந்தா எனக்கு அன்னிக்கு அந்த நிலமை வந்து இருக்காது. இது சொன்னத்தையெல்லாம் படிச்சுண்டு இருக்கும். ”பாரு அவ எல்லா பரீட்சையும் முடிச்சாச்சு, நீயும் இருக்கியே”ன்னு இளக்காரமா பேசி, பிரவீணுக்கும் காசு கட்டிட்டாங்க. இருக்கறதுலேயே பிரவீண் தான் ரொம்ம்ப மொக்கை. ஏகப்பட்ட செய்யுள் உரைநடை,காவியம்,காப்பியம்ன்னு கொன்னுட்டாய்ங்க. சின்ன க்ளாஸ்ல எல்லாம் கதை நல்லா இருக்கும், சட்டுன்னு மனசுல பதிஞ்சுடும். ஆனா போகப்போக யுத்தம், கவிதை, வர்ணனை, இப்படி ஆர்ட்டு ஃபிலிம் மாதிரி த்ராபையா இருக்கும். அதுலேயும் பிரவீண் மெகா மொக்கை. ஹப்பா நிம்மதி இதுக்கு மேல படிக்க ஒண்ணுமே இருக்காது.. அம்மாவும் விட்றுவாங்கன்னு அதையும் பாஸ் பண்ணிட்டேன்.

பிரவீண் படிச்சா பீஏன்னு வெளீல சொல்லிப்பாங்க. எந்த லட்சணத்துல படிச்சோம்ன்னு அவங்கவங்க மனசாட்சிக்கு தான் தெரியும். பிரவீண்ன்னா தேர்ச்சி பெற்றன்னு பொருள். எந்த ஒரு பிரவீண் பட்டதாரியை வேணா கேட்டுப்பாருங்க,” ஏம்ப்பா, நீ நிஜம்மாவே ஹிந்தியில பிரவீணா”ன்னு அவன் நெஞ்சுல கைவெச்சு ஆமான்னு சொல்லட்டும் நான் இந்த கீ போர்டை டிஸ்மாண்டில் பண்ணிடுறேன்.
 
ஒரு ரெண்டு மூணு வருஷம் நிம்மதியா இருந்தேன். மறுபடியும் அம்மா காதுல யாரோ திரி கொளுத்தி போட்றுப்பாங்க போல இருக்கு, அன்னிக்கி அப்படித்தான் வேகாத வெய்யில்ல பிரச்சார சபா போயிட்டு வந்து சொல்றாங்க,”தோ பாரு, நிஷ்ணாத்ன்னு ஒரு பரீட்சை இருக்காம். அது படிச்சா எம்.ஏ ஈக்வலெண்ட்டாம்.அது இருந்தா ட்ரான்ஸ்லேஷன் வேலைக்கெல்லாம் அப்ளை பண்ணலாமாம். நான் ஃபார்ம் வாங்கிண்டு வந்தாச்சு. ஸ்வாமி கிட்டக்க வெச்சுருக்கேன், ஃபில் பண்ணிடு” ங்கறாங்க!!.. நான் தலைசுத்தி கீழ விழுந்துட்டேன்!

Tuesday, February 16, 2010

நானும் பாலாமணித்துவமும் - தொடர் பதிவு

இந்த மாதிரி தொடர்பதிவு போட,முதன்முறையாய் என்னை(

எல்லாம் மதிச்சு ) அழைத்த புதுகைத்தென்றலுக்கு நன்றிகள் பல

ஓக்கே ஸ்டார்ட்- ஜ்வா..........ன்


நான் பதின்ம வயதில் மிக அதிகமாக செய்தது- என் அம்மாவிடம் அடி வாங்கியது தான். எப்போவும் அம்மா மார்க் வாங்காததற்குத்தான் என்னை அடிப்பார். அடிக்கடி, உன்னை விட சின்னவ தானே? அவ படிக்கலை? நீ மட்டும் ஏண்டீ இப்படி இருக்கேன்னு கேட்டுண்டே அடிப்பார். அந்த ’அவ’ வேறு யாரும் அல்ல என் ஜென்ம விரோதி என் அருமைத்தங்கை. அது மட்டும் அப்படி படிக்கும். எப்போதும் ஃப்ரஸ்ட் ராங்க் வாங்கிடும். 1988ல் வந்த சுஹாசினி எடுத்த 'பெண்' என்ற சீரியலில் ரேவதி-ஸ்ரீவித்யா நடித்த ஒரு காட்சி என்னால் மறக்க முடியாதது. அதிலும் பாவம் ரேவதிக்கு என்னை மாதிரி ஒரு பாடாவதி அக்கா, அதுவும் என் தங்கை மாதிரி டக்கர் படிப்ஸ் கேண்டிடேட். சொல்லிவைத்தார்போல எங்கம்மாவின் டயலாக் ஸ்ரீவித்யா சொல்ல, (அவ படிக்கல?, நீ மட்டும் ஏன் இப்படி இருக்கே?) நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல ரேவதியின் பதில் - ”அம்மா, அவளால முடியும், என்னால முடியாது”. எவ்வளவு எளிமையான உண்மையான பதில்? ஆஹா, இனி நாம பொழைச்சுக்கலாம், அம்மா கேக்கும்போது இதே பதிலைச்சொல்லி சமாளிச்சுடலாம்ன்னு மைண்டு மில்க் குடிச்சேன். (அதான் மனப்பால்.) அதற்கான சந்தர்ப்பமும் மிக விரைவிலேயே அமைந்தது. அம்மா அதே கேள்வி கேட்க, நானும் ரெடியாக வைத்திருந்த ஆன்ஸரை சுஹாசினி புண்ணியத்தில் எடுத்து விட அம்மா பளார் என்று விட்டார் ஒரு அறை. எதித்து பேசுறயா எதித்து? என்று வெளுத்து வாங்கி விட்டார். சே, இவ்ளோ ப்ரிப்பேர் பண்ணியும் 'வட போச்சே' ன்னு ரொம்ப வருந்தினேன்.

இன்னொண்ணு மறக்க முடியாத விஷயம்-அம்மாவிடம் 12வது வரை அடி வாங்கி இருக்கிறேன். வழக்கமாக அடி வாங்கும் போது அது ஏன்னு தெரீல, ஏதாவது ஒரு ரூம்ல ரெண்டு சுவர் சந்திக்கற ஓரமா போயிண்டே இருப்பேன் அம்மா அந்தக்கால சினிமா வில்லன் மாதிரி அடிச்சுண்டே வருவாங்க. அடிச்சு முடிச்சுட்டு கைவலிச்சு அம்மா தோல்வியடைஞ்சு போனதுக்கப்புறமா கன்னத்தையோ கையையோ தேய்ச்சுண்டே 10 நிமிஷம் டைம்பாஸ் பண்ணிண்டு இருப்பேன்,(நல்லா இருக்கே, உடனே எல்லாம் படிக்க முடியுமா என்ன?) அதுக்கும் ஒரு ஸ்பெஷல் அடி கிடைக்கும். கொஞ்சம் கூட ஃபீல் பண்ணவே மாட்டேனே. எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி ’ஞ’ன்னு ஒரு எக்ஸ்ப்ரஷன் குடுப்பேன். அம்மா வெறுத்துடுவாங்க. உன்னை அடிச்சு கைதாண்டி வலிக்கறதும்பாங்க.



அடுத்தது கூந்தல் சண்டை.எனக்கு நீளமான அடர்த்தியான முடி இருந்தது.(யார் நம்பப்போறா?) அப்போ புதுசா மார்க்கெட்டு ல சன்சில்க், வெல்வெட் ஷாம்பூ எல்லாம் வந்திருந்தது. அந்த விளம்பரம் எல்லாம் பார்த்து எனக்கும் என் தங்கைக்கும் ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா அவ்வா விடவே மாட்டாங்க. சீக்காப்பொடி அரப்பு தான் போட்டுக்கணும்ன்னு சொல்லி வற்புறுத்துவாங்க. தலையில் சைடு க்ளிப் வெச்சுக்கணும்னு எனக்கு ஆசை, ஆனா முடி சிக்காகும் அதெல்லாம் கூடாதும்மாங்க. இது போக நேர் வகிடு எடுத்துக்க, முடி கொஞ்சம் ஸ்டைலா தூக்கி பின் பண்ண எல்லாம் அவ்வா தடா தான். இதுனாலேயே அவ்வா ஒரு சர்வாதிகாரியா தெரிஞ்சாங்க. இதுக்கெல்லாம் சேர்த்துவெச்சு பழி வாங்க ஒரே ஒரு வழி தான் இருந்தது. அது படிக்காம பாலாமணித்தனம் பண்றது.



எனக்கும் படிப்புக்கும் ஏழாம் பொருத்தம்ன்னு முன்னாடியே சொல்லி இருக்கேனே. அதுனால படின்னு சொன்ன உடனே பாலாமணி மாதிரி வேற வேலைக்கு போயிடுவேன். பேனா ரிப்பேர் பண்றது, நோட்டுக்கு அட்டை மாத்தி போடுறது, பென்ஸில் சீவுறது, (படிக்காமலேயே)கிழிந்த புஸ்தகத்தை செல்லோ போட்டு ஒட்டுறது(செல்லோ போட்டா இன்னும் நிறைய நேரம் விரயம் பண்ணலாமே, கத்தரிக்கோல் எடுத்து - வெச்சு, மத்த காயிதங்களை வெட்டி குப்பை போட்டு, அடி வாங்கி இத்யாதி வேலைகளால இன்னும் நேரம் போகுமே) இன்க் பேனா எனக்கு ரொம்ப பிடிக்கும். ரிப்பேர் பண்ண நிறைய ஸ்கோப் இருக்கும்.

நிப், நாக்கு, பேனா கழுத்து, உடம்பு இதையெல்லாம் கழட்டி, சர்வீஸ் பண்ணி இன்க் ஊத்தறது, அதுக்கு பேனாவைக்கவிழ்த்தி, கழுத்தைத்திருகி இங்கை நாக்கு வழியாக மீண்டும் இங்க்ஜாடியில் ஊற்றும்போது கிடைக்கும் சந்தோஷம் இருக்கே.. அடாடா.. சொல்லி மாளாது..
 
 பால் பாயிண்டு அவ்ளொ ஸ்கோப்  இருக்காது. இருந்தாலும் அந்த பால் ரோலரை எடுத்துட்டு (சும்மாங்காச்சுக்கு) வெளிப்புறத்திலிருந்து உள்புறம் ஊதறது, இங்க் மெதுவா இந்த கடைசிக்கு வந்த உடனே அவசரமா இந்த பால் ரோலரை பொருத்தி எழுதறதான்னு பாக்கறது. இப்படி ரொம்ப உருப்படியா நேரம் கடத்தி இருக்கேன்.

சதா சர்வ காலமும் சினிமாப்பாட்டு கேக்கறது, முடிஞ்சா பாடுறது இதான் வேலையா இருப்பேன். காலையில எழுப்பி படின்னு சொல்வாங்க. நான் என்னிக்கு எழுந்திருக்கேன். அப்படியே எழுந்தாலும், ஒரு 5 நிமிஷம் படிச்சுட்டு, நேரா கிச்சனுக்கு போய், அம்மா தண்ணி வருதான்னு பார்க்கட்டுமா?ன்னு கேப்பேன். ஓட ஓட விரட்டுவாங்க. நான் படிச்சாத்தானே? மறுபடியும் ஒரு பத்து நிமிஷம் படிச்சுட்டு, மீண்டும் கிச்சன், ”அம்மா 2 சாப்டர்(!!!!) படிச்சுட்டேன், கேள்வி கேக்கறீங்களா”ம்பேன். (எனக்கு தான் தெரியுமே, அம்மாவுக்கு அது பிஸி டைம் நான் எஸ்கேப்புன்னு) ”அம்மா செகண்ட் காப்பிம்மா”ன்னு செண்டிமெண்டா மடக்கி, பேச்சை திசைதிருப்பி குடத்தை எடுத்துண்டு தண்ணி பிடிக்க போயிடுவோம்ல?

தென்றல் அக்கா பதிவு படிச்சப்போ எனக்கும் நினைவு வந்த்து வயசுப்பெண்கள், ரோட்ல குனிஞ்சுண்டே போகணும்ங்கற கான்செப்டு. என் தோழி ஆனந்தி அப்படித்தான் நடப்பா. எதிர்ல அரசு ஆண்கள் பள்ளி. எல்லாம் குரங்குபசங்கள். கன்னாபின்னான்னு பாடும், பேசும். அதுனால ஆனந்தி எப்போவும் குனிஞ்ச தலை நிமிராம வருவா போவா. அம்மா இதை கவனிச்சுட்டு, அப்படி எல்லாம் நீயும் இருக்கவேண்டாம். பாரதி சொன்னாப்ல நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் திமிர்ந்த காலிமண்டைச்செருக்கும்..ச்சே, சாரி ஞானச்செருக்கும் ஞாபகத்துல வெச்சுக்கோன்னு சொல்லிட்டாங்க. அதுல இருந்து நான் குனியரதே இல்லை. வின்னர் வடிவேலு தான் நம்பள்க்கீ குரு.



ஒரு வழியா முட்டி மோதி அருள் சார் கிட்டே டியூஷன் வெச்சுண்டு 9வது பாஸ் பண்ணிட்டேன். பத்தாவது ஒரே காமெடி. நான் படிச்ச ஸ்கூல்ல கால்நடையெல்லாம் ஃப்ரீ நடை போடும். ஆடு, மாடு,எருமை,கோழி, நாய், பூனை, பன்றி எல்லாம் வரும் போகும், யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஒரு வாட்டி சயின்ஸ் டீச்சர் ரொம்ப சுவாரஸ்யமா க்ளாஸ் எடுத்துண்டு இருந்தப்போ ஒரு பொண்ணு ‘மெய் மறந்து’ லயிச்சு பாடம் கேட்டுண்டு இருந்தா. ஒரு ஆடு எதிர்புறமா வந்து நின்னு இந்தப்பொண்ணு தலையில் வெச்சிருந்த பூவை தின்னுடுத்து. எல்லா பெண்களும் கொல்லுன்னு ஒரே சிரிப்பு.



வெட்டித்தனமா எப்படி பொழுது போக்கறதுன்னு ஒரு புஸ்தகம் எழுதற அளவுக்கு நான் தேறி இருந்த கால கட்டத்துல தான் என் குல தெய்வம் எஸ்.பீ.பி பாடிய மண்ணில் இந்த காதலன்றி பாட்டு வந்தது. ஆஹாஹா... அந்த பாட்டு மேல அப்படி ஒரு இஷ்டம் எனக்கு. ஒரு வாட்டி வழக்கம்போல மிஸ் வராத ஒரு க்ளாஸ்ல உக்காண்டு தோழிகளுக்கு என் சங்கீத வித்வத்தை காட்ட முற்பட்டப்போ, கண்ணை மூடிண்டு ரொம்ப கான்ஃபிடண்டா நான் அந்தப்பாட்டை பாடி முடிக்க ஒரே கைத்தட்டு. கண் தெறந்து பார்த்தா, சீனியர் பெண்கள் எல்லாம் வந்து உக்காந்திருந்தாங்க. அவங்க மிஸ்ஸூம் வரலையாமே?

சயின்ஸ்ன்னாலே எனக்கு அலர்ஜி. தாயம்மா மிஸ்ன்னா ரொம்ப பயமும் கூட. அவங்க பயங்கர ஸ்ட்ரிக்ட். ஒழுங்கா க்ளாஸ் எடுத்து டெஸ்டெல்லாம் வைப்பாங்க. அவங்களுக்கு ரொம்ப ’பவர்ஃபுல்’ கண்ணாடி இருக்கும். இந்த லஷ்மின்னு என் ஃப்ரெண்டுக்கு அப்படி ஒரு கொழுப்பு. ஏதோ ஒரு பரீட்சைக்கு அவ சொல்றா, ”இன்னிக்கி நமக்கு தாயம்மா மிஸ் தான் சூப்பர்விஷன், தாயம்மா மிஸ்ஸூக்கு சூப்ப்ப்ப்ப்...பர் -விஷன் தெரியுமோல்யோ”ன்னு. துஷ்ட ராட்சசி. இப்படி எல்லாம் குரு நிந்தனை பண்ணிப்டு, அந்த பிரஹஸ்பதி சயின்ஸ் குரூப் எடுத்துண்டு என்ஜினீயர் ஆயிடுத்து. எங்கே இருக்கோ என்னமோ. ரொம்ப தேடிண்டு இருக்கேன். அந்த ராட்சசி மட்டும் கிடைச்சா, நான் அவள் கிட்ட டிஸ்க்கஸ் பண்ணி இன்னொறு கொசுவத்தி போஸ்ட் போடுவேன்.

இன்னும் என்னோட டீனேஜ் கொசுவத்தி இங்கே காண்க.
 

ஜிகர்தண்டா கார்த்திக்

மஹேஷ்வரன்

சேட்டைக்காரன்

தக்குடுபாண்டி

Sunday, February 14, 2010

மோஹனின் மொக்கைகள்

இந்த வார இறுதி ரொம்ப நாள் கழித்து துபாய் செல்ல நேர்ந்தது. சனியன்று மத்தியானம் ஜெயாக்கா சாப்பிட அழைத்திருந்தார். ஜெயாக்கா சமீபமாகத்தான் வீடு மாற்றி இருக்கிறார். இவரும் அத்திம்பேரிடம் இடம் விசாரித்துக்கொண்டு, ஷார்ஜா போஸ்டாபீஸ் பக்கத்தில் இருந்த சந்தில் திரும்பி கார் பார்க்கிவிட்டு பில்டிங் தேடி போனோம்.

இதாத்தான் இருக்கும்ன்னு இவர் சொன்ன ஒரு பில்டிங்ல சுமார் 15 பேர் போகக்கூடிய பெரிய லிஃப்ட். லிஃப்ட் பட்டனை அமிழ்த்திவிட்டு காத்திருந்தோம். கதவு திறந்ததும் ஒரு ஆள் அவசரமாக வெளியே ஓடினார். பெரிய லிஃப்டாச்சே, கதவுக்கு சைடில் ஆள் நிற்கும் அளவுக்கு இடம் இருந்திருக்கிறது. வெளியில் தெரியவில்லை. இவர் வேகமாக லிஃப்டுக்குள் நுழைய, கதவருகே நின்றுகொண்டிருந்த ஒரு (இளம்)பெண் வெளியே வரமுயல, ரெண்டு பேரும் தமிழ் சினிமாவுல வர்ற மாதிரி ஒரு டிங்கு!!! இதைச்சற்றும் எதிர்ப்பார்த்திராத என் கண்வர், மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டார். அந்தப்பெண் நம்மூர் மாதிரி தான் தெரிந்தது, சற்றே அவமானத்துடன் ஓடிவிட்டாள்.

இவர், லிஃப்டுக்குள் புகுந்து வழிந்துகொண்டு இருந்தார். நான் முறைத்தேன் என்று சொல்லித்தெரியவேண்டாமே. கெக்கே பிக்கே என்று சிரித்துக்கொண்டே, இனி, 1 வாரம் அவள் தூங்கவே மாட்டா, என்னையே நெனைச்சுண்டு இருப்பா என்றாரேப்பார்க்கலாம்! G யிலிருந்து 7வது மாடி போவதற்குள் லிஃப்டிற்குள் டிஷ்,டிப்ஷ்,டுக்‌ஷ் என்று ஒரெ சத்தம் தான். 7வது மாடியில் வெளியே வந்த போது இவர் தலைக்கு மேலெ கார்ட்டூன் மாதிரி ஒரே நட்சத்திரங்கள். அங்கங்கே முகத்தில் கருப்பு காயங்கள். சரி, ஆச்சு, ஜொள்ளியாச்சு, மறந்து இருக்கலாம் இல்லையா?

சாயந்திரம் கோபாலண்ணா வீட்டில் பூரி பண்ணிக்கொண்டு இருந்தேன். சமயலறையில் வந்து, ஹிக், ஹிக் ஹிக்ன்னு ஒரே விக்கல். அச்சிச்சோ, என்ன இவ்ளோ விக்கல், தண்ணி எடுத்துக்கோங்கோன்னு டம்ளர் எடுக்கப்போன போது, என்னமோ தெரீலம்மா, ஆரோ என்னையே நினைச்சுண்டு இருக்கான்னு ஒரு திருட்டு முழி.. புரீல?அதான் அந்த லிஃப்டு பொண்ணு, இவரையே நினைச்சு நினைச்சு உருகறாளாம், அதான் விக்கலாம்..

 இப்போது மீண்டும் சமயலறையில் டிஷ், டுப்ஷ், டஷ்,
சத்தங்கள் கேட்டன. கொஞ்சம் விட்டா பிஷ்க்யூன்,டும்க்யூல், டுமீல்,சரக், சதக்ன்னெல்லாம் சத்தம்  கேட்டிருக்கும்!!!

Thursday, February 11, 2010

பாலக்காட்டு ஹாஸ்யங்கள்

நிறைய தான் சீரியஸா எழுதியாச்சு, செண்டிமெண்டும் ஜாஸ்தியாயிடுத்து.
எல்லாரும் மூக்கை நன்னா சிந்திட்டு கண்ணை துடைச்சுக்கோங்கோ.
போலாமா? ரெடியா?

இவரிடம் (என் கணவரிடம்)ஒரு வினோத பழக்கம். நம்ம ஊர் பொதிகை தொலைக்காட்சியில அந்தக்காலத்துல மறுஒளிபரப்புன்னு போர்டு போட்டுட்டு போட்ட நாடகங்களே திருப்பி திருப்பி போட்டுண்டு இருப்பாங்க. சமீபமா கூட துபாய்ல இருக்கும்போது 25 வருஷம் முன்னாடி நாங்க பார்த்த ‘பப்பெட்’ ஜோக் நாடகத்தை போட்டாங்க. என்ன ஒரு செட்டிங்ஸ், என்ன ஒரு தெளிவு படம், ஆஹா.. அஸாத்யம் போங்கோ.. அட்லீஸ்ட் பொதிகையாவது போர்டு போட்டுட்டு பண்ணினா. இப்பெல்லாம் முக்கால்வாசி தொலைக்காட்சிகள் போர்டெல்லாம் போடாமலேயே போட்டதையே தான் திருப்பி திருப்பி  போடுறாங்க.

இதே ரேஞ்சுல இவர் ரொம்பத்தான் மொக்கை போடுவார். கல்யாணத்துக்கு முன்னாடி என்னை இம்ப்ரஸ் பண்றதுக்கு ஊரில் நடந்த காமெடிகள் சொல்லுவார். தூர்தர்ஷன் மாதிரி சொன்னத்தையே சொல்லிண்டு இருப்பார்.
அதுனால் இவரை தூர்தர்ஷன்னு தான் கூப்பிட்டுண்டு இருந்தேன்.
என்னதான் சில விஷயங்கள் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காது இல்லையா? அந்த மாதிரி சில ஜோக்ஸ் இங்கே.

கோவிந்தராஜபுரம் வரதராஜர் கோவில்ல, பிரஹாரம் எல்லாம் கிரானைட்டால இழைச்சு வெச்சிருக்கா. மழை நாள்ல அங்க ஒரு வயசான பாட்டி வந்திருக்கா. இவர்(என்னவர்) கோவில் வாசல்ல வழக்கம்போல யார் கிட்டையோ நின்னு பேசிண்டு இருந்துருக்கார். அந்த மாமி இவர் கிட்டே பேசிட்டு உள்ளே போயி, பலம்மா, “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”   ன்னு ஜபிச்சுண்டே பிரஹாரம் சுத்தி இருக்கா. இவா வெளீல நின்னுண்டு கேட்டுண்டு இருந்திருக்கா, திடீர்ன்னு மந்திரம் பாதியிலேயே நின்னுடுத்து, மாமி “ஹரேஏஏஏஏஏஏய்” ந்னாளாம்.இவாள்ல்லாம் வெளீல நின்னுண்டு கேட்டுண்டு இருந்திருக்கா. என்ன கொழுப்பு பார்த்தேளா?

அடுத்து, கல்பாத்தி மந்தக்கரை கோவில்ல ஸ்பெஷல் நெய்வேத்யம் மைசூர் பாகு பண்ணிண்டு இருந்திருக்கா. நெய் விட்டு கிளரி, பாகு வந்த நேரத்தில், தெருவுல ஏதோ சண்டை சச்சரவு, உடனே கிராம வழக்கம்படி ’வம்பு உந்துதலால்’ சமயல் மக்கள் எல்லாரும் மை.பா வை விட்டுட்டு வெளீல போய் பார்த்திருக்கா. அதுக்குள்ள அந்த மைசூர்பாகு ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரி ஆயிடுத்து. உள்ள போயி இந்த விஷயத்தை டிஸ்கஸ் பண்றதுக்குள்ள வெளீல நோட்டீஸ் போர்டுல யாரோ ஒரு விஷமி, இன்றைய நிவேத்யம் - மைசூர் பாகுன்னு எழுதி  இருந்ததை அழிச்சுட்டு, மைசூர் ’பாறை’ன்னு மாத்தி எழுதிட்டு ஓடிட்டானாமே? பேஷ் பேஷ்..

இவரும் இவருடைய சேட்டை குரூப்பும் சேர்ந்தால் ஒரே ரகளை தான். நண்பர்களுடன் ஹாஹாகாரம் அடிச்சுட்டு விஷேஷ நாட்கள்ல சாப்பாட்டு நேரத்தில எல்லாரும் வேலை செய்யற மாதிரி பில்டப் குடுத்துண்டுருப்பாங்களாம். அதெல்லாம் முடிஞ்சதும் கடைசிப்பந்தியில நம்பியார்க்குழு ச்சே சாரி, நண்பர்க்குழு சாப்பிட உட்காருமாம். சரியாக சாதம் பரிமாறுரச்சே, வேணும்ன்னே என்னமோ ரொம்ப முக்கியமா டிஸ்கஸ் பண்ணற மாதிரி அடுத்தவன் கிட்டே திரும்பி பேச வேண்டியது. பரிமாறரவா, புரியாம போட்டுண்டே இருப்பாளே, ஒரு 3-4 நிமிஷம் கழிச்சு மெதுவா திரும்பி, அச்சிச்சோ, நிறைய போட்டுட்டேளே, (இத, இத இதத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்னு மனசுக்குள்ள சிரிச்சுண்டு)சரி, வீணாக்க முடியுமா என்னன்னு ஃபுல் கட்டு கட்டுறது. என்னா பக்கித்தனம்!!!

உஷா மன்னிக்கு ஸ்கூட்டி ஓட்டும்போது கொஞ்சம் கான்ஃபிடன்ஸ் கம்மி. அதுக்கோசம் இந்த வாண்டு இப்படி எல்லாம் பேசறதா? ரொம்ப தெளிவா சஞ்சய் அப்படி என்ன சொன்னான்? ”உங்களுக்கெல்லாம் ஸ்பீடோமீட்டரே ஆவஷ்யமில்லை(அவசியம் இல்லை), இந்த பூலோகத்துக்கே தெரியும் நீங்கள்ளாம் 15 ல தான் போவேள்ன்னு, நடந்து போறவாகூட உங்களை கடந்து போறா பாருங்கோ”.



இன்னும் வரும் பாலக்காட்டு ஹாஸ்யங்கள்....

Tuesday, February 9, 2010

உன் காலடி மட்டும் தருவாய் தாயே .. ஸ்வர்க்கம் என்பது பொய்யே...

உன் காலடி மட்டும் தருவாய் தாயே .. ஸ்வர்க்கம் என்பது பொய்யே...


லக்ஷ்மி என்ற பெண், மும்பயில், புதிதாக அந்த குடியிருப்பில் வந்திருந்தார். அக்கம்பக்கம் யாரையும் அவ்வளவாக பரிச்சயம் இல்லை.கணவரின் ஆஃபீஸ் குவார்ட்டர்ஸில், ஏழாவது மாடியில் அந்த பெரிய வீடு. டபுள் பெட்ரூம் வீட்டில் தனித்து இருந்த ஒரு மதிய வேளையில் வெளியில் அழும் குரல் கேட்டு கதவைத்திறந்து பார்த்தார். அங்கு அதே பக்கம் படிகளுக்கு அப்பால் இருந்த வீட்டின் பெண் மிகவும் பயந்து அழுதுகொண்டிருந்தார்.



மொழி தெரிந்ததால், என்ன ஏது என்று அந்தப்பெண்ணிடம் விசாரித்தார். அவருடைய 7 வயது மனநிலை குன்றிய மகனை வீட்டில் விட்டு விட்டு இவர் காய்கறி வாங்க இறங்கி இருக்கிறார். ஆனால் சாவியை உள்ளே வைத்து கதவை வெறுமனே சாத்தி இருக்கிறார்.அது ஆட்டோலாக் ஆகிவிட்டது. இனி அந்த சிறுவன் எழ வேண்டும். அவன் எழுந்தால் எழலாம், இல்லாவிட்டால் இல்லை, பால்கனி கதவு திறந்து இருந்தது. அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் நான் என்ன செய்வேன். அவனுக்கு ஒண்ணும் தெரியாதே என்று பரிதாபமாக அழுதார் அந்தப்பெண். இன்னொறு சாவி அவள் கணவனிடம் இருந்த்து அவர் மும்பாயின் இன்னோர் கோடியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் வரும்வரை இந்தச்சிறுவன் எழாமல் இருக்க வேண்டும். கதவை வெளிப்புறம் சாத்தி தவறு செய்துவிட்டேன் என்று அந்தப்பெண் அழுது புரண்டாள். அனைவரும் கூடி, வாட்சுமேனைக்கூப்பிட்டு என்ன செய்யலாம் என்று புலம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் லக்ஷ்மி மட்டும் எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய்விட்டார்.

தனது பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தார். ஏழாவது மாடியில் இந்தப்பக்கம் இவர் வீட்டின் பால்கனி, அந்தப்பக்கம் அந்த மனவளம் குன்றிய சிறுவன் தூங்கிக்கொண்டிருக்கும் வீட்டின் பால்கனி. இடையில் ஒரு அடி அகலமேயுள்ள ஒரு குறுகலான ஒரு கான்கிரீட் பாத்தி இணைத்தது. கீழே பார்த்தால் தலை சுற்றும், தடுக்கி விழுந்தால் கோவிந்தா தான். ஆனால் லக்ஷ்மியோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த சிறுவனை நினைத்தபடி அந்த குறுகலான பாத்தியின் மேல் நடந்து சென்று அவர்கள் வீட்டு பால்கனியில் இறங்கி, உள்ளே சென்று உட்புறமாக பூட்டி இருந்த கதவைத்திறந்தார்.

 வாசலில் குழுமி இருந்த அனைவரும் ஸ்தம்பித்தனர். அழுதுகொண்டிருந்த அந்த தாயின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ஓடி வந்து லக்ஷ்மியைக் கட்டித்தழுவினார். அந்தச்சிறுவன் அமைதியாய் உறங்கிக்கொண்டு இருந்தான். ஒரு ஆபத்தும் இல்லை. விஷயம் குடியிருப்பு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இந்த வீர பெண்ணின் கணவருக்கு வெவ்வேறு கிளைகளிலிருந்து போன்கால்கள் வந்தன. எல்லோரும் வீரப்பெண்ணின் புகழ் பாடினர். பில்டிங் முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் பக்கத்து வீட்டுப்பெண் கண்ணீர் விட்டார். நன்றியுடன் அவர் ஒரு அழகான ஒளிநீரூற்று (Light fountain) பரிசளித்தார்.


சரி இப்போ விஷயத்துக்கு வர்றேன். அந்த வீரப்பெண் வேறு யாருமல்ல, என் அம்மா திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தான். யாரோ ஒரு சிறுவனுக்காக தாய்மையின் உந்துதலால் தன்னுயிரையும்  துச்சமாக நினைத்த இவர்,  பெற்ற குழந்தைகள் எங்களை எப்படி பார்த்துக்கொண்டிருப்பார்?

பதினாறே வயதில் திருமணம், வாழ்க்கையை ரசிக்கவேண்டிய வயதில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக சென்னையில் வாசம். தனியாக குடும்ப நிர்வாகம்,பொருளாதார தட்டுப்பாட்டிலும் ஒரு நிறைவு, இப்படித்தான் வளர்ந்தோம். சமயல்திறன்,பாட்டு, கோலம், தையல்,ஹிந்தி, இப்படி இவருக்கு பன்முகம். முழுக்க முழுக்க இவர் ஒரு செல்ஃப் மேட் வுமன். வாழ்க்கையில் தனக்கும் ஒரு மதிப்பு வேண்டும் என்று வயதுத்தடையின்றி பலவற்றைக்கற்றார். அதில் மிக முக்கியம் ஹிந்திப்பயிற்சி. எங்களுக்கு சொல்லித்தர படிக்க ஆரம்பித்தார். எங்களை விட முன்னேறி, பல குழந்தைகளுக்கு பிரியமான ஹிந்தி மிஸ் ஆனார். அம்மாவின் பயிற்சித்திறமையும் அன்பான கண்டிப்பும் பலரை கட்டிப்போட்டது.



இதே மாதிரி தன் போக்குவரத்தை பார்த்துக்கொள்ள தானே சைக்கிள் கற்றார். நான், என் தங்கை, அம்மா வீட்டைச்சுற்றி ஒரு ரவுண்டு போய்விட்டு வந்து அடுத்தவருக்கு தரவேண்டும். நாங்கள் மூவரும் இப்படித்தான் தெருவைச்சுற்றி ஓட்டி, சைக்கிள் கற்றுக்கொண்டோம். அது அம்மாவின் முறை. அம்மா போனார், இந்தப்பக்கமாக வருவார் என்று காத்திருந்தோம் அம்மாவைக்காணவில்லை. அபிரத்க்ஷிணமாகப்போய் தேடிப்பார்த்தால், அம்மா தெருவிற்கப்பால் இருந்த ஒரு மேட்டில் விழுந்து காலில் ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது. அப்படியாவது சைக்கிளை விட்டாரா? விழுந்துட்டா சைக்கிளை விட்டுடக்கூடாது, முயற்சி பண்ணித்தான் எல்லாம் கத்துக்கணும்ன்னு அட்வைஸ் பண்ணுவார்.மீண்டும் பயிற்சிதான். கலக்கோ கலக்கென்று கலக்கி, நான்கு வருடத்தில்  அம்மாவிற்கு பிரமோஷன் கிடைத்தது.அப்பா டிவிஎஸ் 50 வாங்கித்தந்தார்.

மற்றவர்களுக்காக பிரார்த்திப்பது, சிரித்தமுகத்துடன் இருப்பது, தைரியமாக எதிலும் களமிறங்குவது, எதுவும் சாத்தியம் என்ற தீவிர நம்பிக்கை வைப்பது,விருந்தினர் வந்தால் உபசரிப்பது இப்படி எல்லா விஷயங்களுக்கும் எங்கம்மா தான் எங்களுக்கு முன்னோடி.

நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன், அம்மா. என்னைப்பற்றிய என் கணவரின் புகழ்மொழிகளெல்லாம் உங்களைச்சார்ந்தவையே.

எனக்காக நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கும் சிந்திய கண்ணீருக்கும் நான் என்ன செய்துவிடப்போகிறேன் அம்மா? நான் இதுவரை தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னியுங்கள் மா. இதற்குமேல் என்னிடம் வார்த்தைகள் இல்லை மா. I love you ma, always..


பிறந்த்நாள் வாழ்த்துக்கள் மா...

Monday, February 8, 2010

கோவிலுக்கு போகலாம் கைவீசு

கோவிலுக்கு போகலாம் கைவீசு

அதான் கல்யாண நாளாச்சே, ரெண்டு பேரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தோம். அபுதாபில எப்படி மதுரை மீனாட்சியம்மனா? முடியும்ங்றேன். 
நீங்களும் கோவிலுக்கு போயிட்டு வாங்களேன்.இதோ இங்க தான் க்ளிக்கணும். இன்னும் இங்கே, வேறென்ன இடங்கள் எல்லாம் பார்க்கலாம்ன்னு போட்டு இருக்காங்க.

360 டிகிரி லென்ஸ் வெச்சு என்னமா எடுத்து இருக்காங்க. அடேயப்பா. இதே மாதிரி தஞ்சாவூர் கோவில் படம் ஒண்ணு சில ஆண்டுகளுக்கு முன்னாடி எனக்கு ஃபார்வார்டு ஆயி வந்த்து. அப்படியே கோவில்ல இருக்கற உணர்வு. பிரமிப்பா இருக்கு. வாழ்க அறிவியல் வளர்ச்சி.

Sunday, February 7, 2010

ரகசியமாய்...

ரகசியமாய்...

இன்னைக்கு எங்க திருமண நாள். நல்ல நாளும் கிழமையுமாய் ஒரு நல்ல விஷயம் பண்ணலாமேன்னு தான் இந்த போஸ்ட் போடறேன்.

வழக்கமா புண்யகாரியங்கள் எல்லாம் பண்ணனும். இங்கே அதெல்லாம் முடியாது. அதான் நம்ம பட்ஜெட்டுக்குள் அடங்கும்படி சிம்பிளா இந்த போஸ்ட்.


நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்ன்னு நம்ம மதங்கள் நமக்கு போதிச்சிருக்கு. ஆனா மனித மனத்தின் கன்விக்‌ஷன் இவ்வளவு முக்கியம்ன்னு எனக்கு புரிய வெச்ச வீடியோ இது.

மக்களே, ப்ளீஸ், தயவு செஞ்சு இந்த வீடியோவை பாருங்க. 20 நிமிஷம் ஆகும் ஆனா நிஜம்மாவே வொர்த் வாச்சிங்.


இதை பரிந்துரை செய்த ஜிகர்தண்டா கார்த்திக்குக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Friday, February 5, 2010

அத்திதி தேவோ பவ

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் என்றார் வள்ளுவர். அதாவது, விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா? என்பது பொருள்.

வீ.எம்.ஸீ ஹனீஃபா இறந்த செய்தியை மலையாள தொலைக்காட்சிகள் பரபரப்பாக ஒளிபரப்பிக்கொண்டு இருக்கையில் இடையிடையே ஜோஸ் ஆலுக்காஸ்,சுங்கத்,மலபார் கோல்டு,பீமா கோல்டு போன்ற சம்பந்தமே இல்லாத ஹைடெசிபல் விளம்பரங்களின் நடுவே என்னை மிகவும் கவர்ந்தன இந்தியா டூரிஸம் வழங்கிய இந்த அத்திதி தேவோ பவ விளம்பரம்.

முதலில் அத்திதி என்றால் என்ன என்று பார்க்கலாம். அ - த்திதி அதாவது அ =இல்லை, த்திதி-நாள், அல்லது டேட், முன்னறிவிப்பு இல்லாமல் வருபவர்கள் அத்திதி.(இங்கெல்லாம் ஃபோன் செய்யாமல் யாரும் யார் வீட்டுக்கும் வருவதில்லை- இன்னிக்கி வரலாமா?, உங்களுக்கு செளகரியப்படுமா? போன்ற சம்பிரதாயக்கேள்விகள் கேட்டு உறுதி செய்துகொண்ட பின்னரே வருவார்கள், நாமும் அப்படியே) அவர்களை உபசரிப்பது பொதுவாக இந்தியர்களின் ரத்தத்தில் ஊரிய ஒரு விஷயம். இருந்தாலும் வெளிநாட்டவரை கேவலமாக நடத்தியும் சமீபத்தில் நடந்த கோவா கற்பழிப்பு போன்ற முகம் சுளிக்கவைக்கும் வெட்கப்படவேண்டிய செயல்களினாலோ என்னமோ இந்தியா டூரிஸம் விழித்துக்கொண்டு நிறைய புதிய விளம்பரங்கள் போடுகிறார்கள்.

இங்கே காணும் வீடியோ அதில் ஒன்று தான்.

என்னைக்கவர்ந்த இவர்களுடைய இன்னொரு விளம்பரம், ஒரு வெளிநாட்டுப்பெண் ஏதோ ஒரு கடையில் பேரம் பேசுகிறாள், விலை ஒத்து வராத படியால் கிளம்பிப்போய்விடுகிறாள். பின்னாடியே ஓடிவரும் கடைக்காரரை எரிச்சலுடன் திரும்பிப்பார்க்கும் அப்பெண், அந்த கடைக்காரர் கையில் அவள் பை இருப்பதை பார்க்கிறாள். இதை தருவதற்காகத்தான் உங்களை பி்ந்தொடர்ந்து வந்தேன் என்று சினேகமாக சிரிக்கும் இந்த கடைக்காரருக்கு சிறப்பு விருது கொடுத்து கெளரவித்திருக்கிறார்கள்.

இதே போல இன்னொறு நெஞ்சைத்தொடும் விளம்பரம் சீன சுற்றுலாப்பயணி தன் பஸ்ஸை விட்டுவிட்டு தவிக்கும் நேரத்தில் ஒரு மேகாலய மூதாட்டி, அப்பெண்ணுக்கு அடைக்கலம் தந்து அவளை பத்திரமாக பார்த்துக்கொண்டு, உரிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, அந்த சுற்றுலாப்பயணியை பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறாள். ஆஹா, இதல்லவோ உண்மையான இந்தியப்பண்பின் பிரதிபலிப்பு!!ஐ ஆம் ப்ரவுட் ஆஃப் யூ பாட்டி :)

இங்கே இந்த வீடியோவில் காண்பதைப்போல நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். மிகவும் வெட்கி வேதனைப்பட வேண்டிய விஷயம் இது. அமீர் சொல்வது நிஜம் தான்.வெளிநாட்டவரை இப்படி நடத்தினால், அவர்கள் திரும்பி வரவே மாட்டார்கள்.

என்னாலான உபகாரம் முடிந்த வரையில் அவர்களுக்கு ஒரு நல்ல மொமெண்ட் ஆஃப் ட்ரூத் தர முற்படுவேன். குழப்பத்துடன் விழிக்குல் சிலரிடம் சென்று ஏதாவது உதவி தேவையா என்று கேட்டு செய்திருக்கிறேன். மகாபலிபுரத்துக்கு என் மாணவ மாணவியருடன் பிக்னிக் சென்ற போது, சில சுற்றுலாபயணிகளிடம் பேசி அவர்களுக்கு நம் நாட்டைப்பற்றி ஒரு பாஸிடிவ் உணர்வு தர முயற்சித்திருக்கிறேன். நான் எவ்வளவு தான் முயன்றாலும் நம் நாட்டில் இது போன்ற துஷ்டர்கள் இருக்கும்வரையில் அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கை வராது, வரவே வராது.

Thursday, February 4, 2010

வேலை வாங்கலியோ வேலை

கேட்டவரம் தரும் கண்கண்ட தெய்வமாம் கூகிளாண்டவரிடம் அடிக்‌ஷன் அதிகரித்து, சதாசர்வகாலமும் டாஷ்போர்டும் கையுமாக இருக்கும் எனக்கு இந்த நோய் தீர வலைத்தள வைத்தீஸ்வரனிடம் வேண்டிக்கொண்டேன். ஏதாவது ஒரு வேலைக்கு போவது தான் ஒரே வழி என்று அதிகாலைக்கனவில் ஆதிபகவான் அசரீரியாக வந்து அதிரவைத்தார். ரிசஷன்ல் வேலைக்கு போகணுமாம்ல வேலைக்கு.. நல்லா சொல்றாங்கய்யா ஜோக்கு என்று நினைத்தவாறே இருந்தேன். விஷாகா விளித்து, ஜாப்ஃபேர் நடக்கபோகுது, நீ வர்றியா என்றாள். சரி சரி , அசிரீரி இன்ஃபோ கன்ஃபோர்ம் ஆகிவிட்டதென வேலைப்போருக்கு(ஃபேர் இல்லை போர் தான்) வயிற்றில் புளி கரைய புறப்பட்டேன். கூகிளாண்டவரிடம் எவ்வளவு கேட்டும் ஜாப்ஃபேர் பத்தி ஒரு தகவலும் தெரியலைன்னு கைவிரித்துவிட்டார். ஒரே ஒரு நியூஸ்ப்பேப்பரில் குட்டியூண்டு பெட்டிச்செய்தி அதுவும் எப்படி ஜாப்ஃபேரில் தப்பு தப்பா வேலை கொடுக்கிறார்கள் என்பதைப்பற்றி தான் இருந்தது.



போதாக்குறைக்கு நாம் எங்கு போனாலும் ஃபிலிப்பினோக்கள் போட்டிபோடுவார்கள்.ஆங்கில உச்சரிப்பு கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் அடிமாட்டு விலைக்கு உழைப்பும், முகமெல்லாம் சிரிப்புடன், அதிக நேரம் உழலும் வேலைகளையும் அனாயாசமாய் செய்துவிடுவதால் இங்கு அவர்கள் காட்டில் தான் அதிக மழை.

10.30க்கு புறப்படுவதாக ஏற்பாடு. பெருந்தன்மையுடன் என்னை வீட்டில் வந்து பிக்கப் செய்தார்கள். விஷாகாவின் ஒன்றரை வயது மகள் திஷித்தா காருக்குள் உருண்டு பிரண்டு கொண்டே வந்தாள்.அவள் செய்யும் ரகளையைப்பார்த்து என் கலங்கிய வயிறு இன்னும் வேகமாக கலங்கியது. அவளை இவர்கள் இருவரும் கண்டு கொள்வதாக இல்லை. முன்பக்கத்திலிருந்து பின்பக்கம், பின்பக்கத்திலிருந்து முன்பக்கம் தாவியவாறே இருந்தாள். ரெண்டு முறை டொம்மென்று விழுந்த போதிலும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்.

கார் பார்க்கிங் எல்லாம் ஃபுல்லானபடியால் சுற்றித்திரிந்து ஒரு வழியாக ஹாலுக்கு போன போது மணி 11.30 உள்ளே நுழைய எல்லோருக்கும் ஒரு விசிட்டர் பாஸ் தந்தார்கள். நம்ம நந்தம்பாக்கம் சென்னை டிரேட் செண்டர் போல ஒரு 10 மடங்கு பெரிய இடம். எக்ஸிபிஷன் ஹால் ஏகப்பட்ட அலங்காரங்களுடன் ஒவ்வொரு கம்பெனியும் அவர்கள் லோகோ உட்பட பெரிதாகப்போட்டுக்கொண்டு கடை விரித்திருந்தார்கள். கல்லாவில் அனேகமாக பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். நிறைய கன்சல்டன்சிக்களும், வெப்போர்டல் நடத்தும் ரெக்ரூட்டர்களும் வந்திருந்தார்கள். எத்திசலாத், டூ, முபாத்லா, யூனியன் நேஷனல் பேங்க்,அபுதாபி இஸ்லாமிக் பேங்க் போன்ற வங்கிகளும், அபுதாபி போலீஸ், நேவி, இன்வெஸ்ட்மெண்டு அத்தாரிட்டி, அர்பன் கவுன்சில் போன்ற சர்க்கார் நிறுவனங்களும் ஆளெடுத்துக்கொண்டிருந்தார்கள்.


முதலில் நாங்கள் பல்பு வாங்கியது எத்திஹாத் ஸ்டாலில் தான். வேகமாகப்போய், என்னென்ன வேலைவாய்ப்பு உள்ளது உங்களிடம்ன்னு விஷாகா கொஞ்சம் பெரிய தொண்டையில் கேட்க, நீங்கள் சைட்டில் அப்ளை செய்யவும் என்றாள். சரி பண்ணிக்கறோம், விஷயத்துக்கு வான்னு கேட்டபோது தான் தெரிந்தது, அநேகமாக எல்லா வேலையும் அரபு நாட்டவர்களுக்குதானாம். செம்ம பல்பு. சரி, கொஞ்சம் நிதானிச்சுக்கலாம் என்று, அடுத்த கடைகளில் எல்லாம், முதல் கேள்வி -”Expatriates????" (அதாவது வெளியூர்வாசிகளுக்கு வேலை இருக்கா) என்று கேட்டு ஆரம்பித்தோம். முக்கால் வாசி பல்பு தான். கால்வாசி கடைகளில், யெஸ் என்று அரைமனதுடன் எங்கள் சீ.வீ வாங்கப்பட்டது. வீ வில் காண்டாக்ட் யூ என்றார்கள். எத்தனை இண்டர்வியூ பார்த்திருப்போம்? எங்க கிட்டையே வா?



அரபியில் வடாம் பிழிந்து எழுதி இருந்த ஒரு கடையில் விடாமல் நச்சு பண்ணிய விஷாகாவுக்கு மீண்டும் பல்பு, அது தனியாக தொழில் தொடங்கும் அரபியப்பெண் ஆன்ட்ரபென்யூர்ஸ்க்காம். விமென் கவுன்சில் என்று அரபியில் எழுதி இருக்கிறார்களாம்.

நாங்கள் தான் ஆயிரம் பல்பு வாங்கும் அபூர்வ சிந்தாமணிகளாயிற்றே.



பல்புக்கெல்லாம் அஞ்சமுடியுமா? அழுத குழந்தைக்கு தானெ பால்? சூனாப்பானா, போ போ போயிக்கிட்டே இருன்னு அசராம பல்பு வாங்கியபடியே நடந்தோம். சில இடங்களில் வெப்சைட்டு முகவரி கார்டு கொடுத்தார்கள். சில இடங்களில் ஆன்லைனில் அப்ளை செய்யச்சொன்னார்கள். அதுக்கென்ன பண்ணிட்டாப்போச்சு. சிலர் அங்கேயே 10 லாப்டாப்களை வைத்து நெட் அப்ளிக்கேஷன் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். பக்கித்தனமாக நம்மவர்களும், ஃபிலிப்பினோக்களும் ரஜினிபடத்தின் ஃப்ர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோ டிக்கட்டுக்கு நிற்பது போல க்யூவில் நின்று அப்ளை செய்துகொண்டிருந்தார்கள்.


எல்லாக்கடைகளிலும் ஒரு ரவுண்டு முடிந்த பின், திரும்ப முற்பட்டோம்.கூட வந்த பிரவீண் அண்ட் திஷுவை காணவில்லை. திடீரென்று முன் தோன்றிய அப்பாவும் பெண்ணும் பார்த்து எங்களுக்கு ஒரே சிரிப்பு. திஷூ வாயெல்லாம் ஒரெ சாக்லெட்டு ஈஷிக்கொண்டு சிரித்தாள். ஆமாம் எல்லா கடைகளிலும் ஒரே சாக்லெட் மழை தான். வேலை இருக்கோ இல்லையோ நிறைய திங்கலாம். யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டர்கள் என்று சகட்டு மேனிக்கு பிரவீண் திஷுவுக்கு சாக்லெட்டுகளை அள்ளி திணித்திருக்கிறார்.






சுற்றித்திரிந்த களைப்பில் நானும் ஒரு கடையில் கன்னாபின்னா ஷேப்பில் இருந்த சாக்லெட் ஒன்றை எடுத்து விஷுவுக்கும் கொடுத்தேன். அது கடைசியில் சாக்லெட் அல்ல.பேரீச்சம்பழம். நம்மூர்ல வாழைப்பழம் மாதிரி இங்கே இவர்களுக்கு பேரீச்சை. இதுல கூட நமக்கு பல்பா என்று இருவரும் ரசித்து சிரித்தோம்.


ரெண்டு போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினோம். இதோ இன்றோ நாளையோ கால் வரலாம். ஆவலா இருக்கேன்... அடுத்த பல்பிற்கு.

Monday, February 1, 2010

சுட்ட பழம் வேண்டுமா?

நெட்டில் சுட்ட பழம்.




பல முறை ஃபார்வார்டு ஆகி வந்த மெயில் தான் என்ற போதிலும் படிக்க சுவையாக தான் இருக்கிறது.

அதான் இன்னொறுமுறை படிக்க, ரசிக்க


WIFE VS. HUSBAND

A couple drove down a country road for several miles, not saying a word.

An earlier discussion had led to an argument and

neither of them wanted to concede their position.

As they passed a barnyard of mules, goats, and pigs,

the husband asked sarcastically, "Relatives of yours?"

"Yep," the wife replied, "in-laws."


அப்புடி போடு அருவாள....



W O R D S

A husband read an article to his wife about how many words women use a day....

30,000 to a man's 15,000.

The wife replied, "The reason has to be because we have to repeat everything to men...

The husband then turned to his wife and asked, "What?"

இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறது.. கிவ் அண்ட் டேக் பாலிஸி.




CREATION

A man said to his wife one day, "I don't know how you can be

so stupid and so beautiful all at the same time..

" The wife responded, "Allow me to explain.

God made me beautiful so you would be attracted to me;

God made me stupid so I would be attracted to you!

அதானே...






WHO DOES WHAT

A man and his wife were having an argument about who

should brew the coffee each morning.

The wife said, "You should do it, because you get up first,

and then we don't have to wait as long to get our coffee."

The husband said, " You are in charge of cooking around here and

you should do it, because that is your job, and I can just wait for my coffee."

Wife replies, "No, you should do it, and besides, it is in the Bible

that the man should do the coffee."

Husband replies, "I can't believe that, show me."

So she fetched the Bible, and opened the New Testament

and showed him at the top of several pages, that it indeed says.........."HEBREWS"

அட்றா சக்கை, அட்றா சக்கை..




The Silent Treatment

A man and his wife were having some problems at home and were giving each

other the silent treatment. Suddenly, the man realized that the next day,

he would need his wife to wake him at 5:00 AM for an early morning business flight.

Not wanting to be the first to break the silence (and LOSE), he wrote on a piece of paper,

"Please wake me at 5:00 AM ." He left it where he knew she would find it.

The next morning, the man woke up, only to discover it was 9:00 AM

and he had missed his flight. Furious, he was about to go and

see why his wife hadn't wakened him, when he noticed a piece of paper by

the bed. The paper said, "It is 5:00 AM . Wake up."

Men are not equipped for these kinds of contests.
 
எப்பூடீ? பேசுறாங்கைய்யா பேச்சு..
Related Posts with Thumbnails