Pages

Sunday, April 4, 2010

சினிமாப்பக்கம்

இந்த வார இறுதியில் ஏகப்பட்ட படங்கள் பார்த்தோம். ஒரே குழப்பமாக இருக்கு! புதன் இரவே பார்க்க ஆரம்பிச்சுட்டதால, ஓரளவிற்கு கவர் பண்ணிட்டோம்!!! ஹீ ஹீ..

வழக்கம் போல ஒரு சில படங்கள் தான் தேரித்து. அதுல நினைவுல நின்ற படங்கள் இவை.



ஃப்ராஸ்ட் நிக்ஸன்(2008)

இந்த படத்தோட டி.வீ.டீ ரொம்ப நாளா எங்க வீட்டு ட்ராவுல இருந்தது. நான் கூட பேரைப்பார்த்தப்போ ஏதோ கிக் பாக்ஸிங்கு படம் போல இருக்கு.(மைக்டைசன் மாதிரி ஃப்ராஸ்ட் நிக்ஸன்னு பட்டிக்காட்டுத்தனமா நினைச்சுண்டு) மொக்கைன்னு பார்க்காம விட்டுட்டேன். ”இது என் கொலீக்கோட சீ.டீ ரிட்டன் பண்ணனும்”ன்னு இவர் சொல்ற வரைக்கும் அதை தப்பித்தவறி கூட போடலை! படம் ஆரம்பிச்சப்போ தான் தெரிஞ்சது இது ஒரு 1977ன் மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வை வெச்சு எடுக்கப்பட்டதுன்னு. ஆரம்பத்துல நம்ம முதல்வன் கதையோன்னு கொஞ்சம் யோசிக்க வைச்சாலும் போகப்போக படம் சூடு பிடிச்சது. ஆனா க்ளைமாக்ஸுல ரொம்ப சாதாரணமா சொல்லி சப்புன்னு முடிச்சுட்டாப்புல எனக்கு ஒரு ஃபீலிங்கி.

ஒரு ஜனாதிபதி தான் பண்ணிய ஊழலை ஒப்புக்கொள்ளாமல் ஜகா வாங்கிண்டு ராஜினாமா செய்யறார். ஒரு காமடி பீஸாக கருதப்பட்ட டீ.வீ நிருபர் இவரை பேட்டி எடுக்கறதுக்கு 2 மில்லியன் டாலருக்கு 12 எபிசோடுகள் ஒப்புதல் போடுறார். பேட்டியில் ஜனாதிபதி பயங்கர டபுள் கேம் ஆடி, வளவளவென்று பேசிப்பேசியே மரண மொக்கை போட்டு நேரத்தை கடத்துகிறார். ”2 மில்லியன் டாலர்களை முழுங்கி விட்டு, கடைசியில் ஒரு விஷயமும் கிரஹிக்க முடியவில்லையே இந்த மொள்ளமாரியிடம்” என்று ஃப்ராஸ்டு நொந்து போகிற இடம் தூள்! கார்ப்பொரேட் டிப்ளோமசியுடன் (வெளியே சிரிப்பு, உள்ளே கடுப்பு) கூடிய அனல் பறக்கும் வசனங்களுடன் என்ன நடக்கிறது என்பது தான் க்ளைமாக்ஸ்!இந்த படத்தில் முக்கியமானவர்கள் ஜனாதிபதியும் அந்த நிருபரும் தான். இரண்டே நடிகர்களைக்கொண்டு இவ்வளவு விறுவிறுப்பான (நிஜக்)கதை சொன்ன விதத்துக்கு ஒரு ஷொட்டு! ஜனாதிபதி ஜார்ஜ் நிக்ஸனாக நடிச்ச ஃப்ரான்க் லாஞ்செலாவுடன் போட்டி போட்டுக் கொண்டு, பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவிட் ஃப்ராஸ்ட்டாக  மைக்கல் ஷீன் நடிச்சிருக்கிறார். ரொம்ப நேர்த்தியான நடிப்பு. பெரிய அளவில் பேசப்பட்ட படம். நானும் பார்த்தாச்சு.

கேரளா கஃபே:

நாங்க மிடில் ஈஸ்ட் இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவெலுக்கு போனப்போ இந்த படம் ஃபீச்சர்டுன்னு போட்ட ப்ரோஷர் பார்த்ததிலிருந்து, இந்த படத்தை பார்த்துடணும்ன்னு  எனக்கு பயங்கர ஆசை. தியேட்டரில் வந்தப்போ அபுதாபியில் ரிலீஸ் பண்ணலை.எனக்கு ரொம்ப வருத்தம். டாரண்டுல ஐலண்டு எக்ஸ்ப்ரஸ் மட்டும் டவுன்லோடு பண்ணி பார்த்தேன். அப்படி ஒண்ணும் இம்ப்ரெஸிவா இல்லே. உண்மை சொல்லப்போனா, பாதி புரியவே இல்லை. ரொம்ப கவிதை நடை வசனம். பேச்சே கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான்  புரியும், கவிதை நடை வசனங்கள் எல்லாம் புரியறது பிரும்ம ப்ரயத்னமாச்சே. அதுனால சீ டீ வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுவது தான் உத்தமம்ன்னு நினைச்சு விட்டாச்சு. படம் பார்த்தப்போ நிச்சியம் ஏமாத்தலைன்னு தோணித்து. இது மாதிரி எல்லாம் தமிழ்ல முயற்சி கூட பண்ண முடியுமான்னு தெரியலை!

10 இயக்குனர்கள், 10 கதைகள். அதுல 7 அருமை! மலையாள திரையின் எல்லா (அ) முக்கால்வாசி நடிக நடிகையர்களை பயன்படுத்தி(மோஹன்லாலைத்தவிர) ஒரு அருமையான கலவை சாதமாக உருவாக்கி இருக்கிறார்கள். பத்துக்கு ஏழு என்பதே இந்த படத்துக்கு என்னுடைய ரேட்டிங்க்.

என் கருத்துப்படி முதல் 7 இடங்கள் தருவது இவற்றுக்கே:



1.தி பிரிட்ஜ் - நெகிழ்ச்சியோ நெகிழ்ச்சி. இந்தக்கதையின் எதிரொலி தான் மனதில் ஓடிண்டே இருக்கு. ஒரு அதிர்வு ஏற்படுத்தித்துன்னு சொன்னா அது மிகையில்லை.

2.புறம் காழ்ச்சகள் - மம்முட்டியின் ஆஹா நடிப்பு

3.மகள்- மனதைத்தொடும் கதை, இயக்குனர் ரேவதிக்கு ஷொட்டு!

4.ஹேப்பி ஜர்னி - ஜொள்ளர் ஸ்பெஷல்

5.அவிராமம்-குடும்ப பிணைப்பின் முக்கியத்துவம்

6.நாஸ்டால்ஜியா - கல்ஃப் மலையாளியின் யதார்த்த முகம்

7.ஐலண்டு எக்ஸ்பிரஸ்-ஹை ஸ்டாண்டர்டு மொழி, கதை ஓக்கே

8.ஆஃப் ஸீஸன்-சுராஜின் கலகலப்பு

9.ம்ருத்யுஞ்சயம்-புரியலை (அ) அப்படி பெருசா என்னை இம்ப்ரெஸ் பண்ணலை! ஹாரராம். சொல்லிட்டு எடுத்தா பரவாயில்லை!

10.லலித ஹிரண்மயம்- இதான் இந்த படத்தின் மொக்கை(யஸ்ட்டு) கதை!

கண்டிப்பாக சப்டைட்டில்ஸுடன் கூடிய டீவீடீ எடுத்துப் பார்க்கவும். ஹைலி ரெக்கமெண்டட்.

வைரம்:

இந்த படம் ஆஹா ஓஹோ என்று சில மாதங்களுக்கு முன் பேசப்பட்டது. ரொம்ப எதிர்ப்பார்ப்புகளுடன் எடுத்துண்டு வந்தோம். அப்படி ஒண்ணும் பெருசா தெரியல. நிறைய நெருடல்கள். கதை ஓரளவுக்கு டீவியில் பார்த்த காட்சிகளிலிருந்து ஊஹிக்க முடிவதா இருந்ததுகூட ஒரு காரணமா இருக்கலாம்.

உண்மைக்கதையை எடுத்ததுக்கு ஒரு பாராட்டு தரலாம்.


பசுபதி தமிழிலேயே பேசி நடிச்சு இருக்கலாம்.” எண்டே மோல்(மோள்)” என்று ஒய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சில் மலையாளம் பேசியே அந்த வைரமணியை கொலை பண்றாரோன்னு எனக்கு டவுட்டு! நடிப்புன்னு பார்த்தா நாம் இதுக்கு முன்னாடியே இதெல்லாம் நாயகன்ல பார்த்தாச்சு. ஒரு டே ஜாவூ எஃபெக்டு. பத்தாக்குறைக்கு நம்ம சுரேஷ் கோபி டயலாக் பேசிப்பேசியே ரவுடிகளை நொறுக்கி எடுக்கும் காட்சிகள்! முடியல. ஓவராக்‌ஷன் கம்மி பண்ணாட்டி சுரேஷ் கோபியின் கரீயர் ஓவர் தான்.. யாராவது சொல்லுங்கப்பா.. எல்லாப்படத்துலேயும் ஒரே மாதிரி வக்கீல் வேஷம் தான் இவருக்கு. இந்த வாட்டி சம்பந்தமே இல்லாமல் முகேஷ் வருகிறார். ரொம்ப நேரம் வெட்டிப்பேச்சு பேசி கடுப்படிக்கிறார். ஆடியன்ஸ் பதபதைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் சுரேஷ் கோபியும் முகேஷும்,  இவர்கள் பழைய நட்பைப்புதுப்பிக்கும் வசனங்கள் எல்லாம் நற நற டைப்பாக எனக்கு தோன்றியது.

ஷங்கர் மஹாதேவனின் நாட்டு பாட்டு கேட்டோ பாட்டு கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ’காற்றே’ங்கற வரியில ஒரு சாஃப்ட் ’ட’ போட்டு பாடாம,’ நாஞ்சி நாட்டு காட்டே’ன்னு அப்பட்டமா அழுத்திப்பாடி இருக்கறது பயங்கர சொதப்பல். நம்ம தமிழ் மாதிரி இவங்க பேசும் போது தப்பு செய்யறதில்லை. இருந்தாலும் இதை இவங்க அனுமதிச்சது எனக்கு பயங்கர ஆச்சிர்யம்! ரொம்ப ரொம்ப சுமார். ப்ளாட் மட்டும் ஓக்கே. திலகனும் கேபிஏசீ லலிதா நடிப்பும் படா தூள்!

டூப்ளிக்கேட்:

அதே எங்க வீட்டுப்பிள்ளையின் (2009?) ரீமேக். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,.. முடியல! இன்னும் எத்தனை வருஷ காலம் இதே மாதிரி எடுக்க போறாங்க? மலையாள காமெடி நடிகர் சுராஜை இப்படி எல்லாம் நடிக்க வைக்க வேண்டி இருக்கலை. மொக்கை படம். எல்லாத்துக்கும் மேல இந்த படத்தை இங்கே மென்ஷன் பண்ண ஒரு காரணம் இருக்கு. கோடீஸ்வரனான சுராஜின் கார் ஒரு விபத்துக்குள்ளாகுது. அது அப்படியே ஒரு பாலத்திலிருந்து தொபுக்கடீர்ன்னு தண்ணீருக்குள் விழறது! தூரத்துல இருந்து ஒரு வெள்ளைக்கார்ன்னு மட்டும் தெரியுது. இன்னொசெண்டும் இன்னொரு சுராஜும் உதவப்போறாங்க. பக்கத்துல போய் பார்த்தா, கோடீஸ்வரன் ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு அம்பாஸிடர் கார்! என்னால முடியல! என்னதான் லோ பட்ஜட் ஃபில்ம் மேக்கிங் என்றாலும் இப்புடியா? டூமச்! தயவு செஞ்சு இந்த படத்தை அவாய்டு செய்யவும். மெகா மொக்கை!

ஸ்டேட் ஆஃப் ப்ளே:

இந்த படத்த்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு அபிப்ராயமும் இருக்கலை. பார்த்தப்புறம் ரொம்ப பிடிச்சது. ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர்ன்னு சொல்லலாம். ரொம்ப வித்தியாசமா இருந்தது. ரஸல் க்ரோ இருக்கறதுனால இவர் கொண்டு வந்தார். பென் அஃபெலக் என்ற நடிகரின் இறுக்கமான நடிப்பும், ரஸல் க்ரோவின் கண்டுபிடிப்புகளும் படத்தின் க்ரிப்பை அதிகரிக்க வைக்கின்றன.அருமையான திரைக்கதை. சஸ்பென்ஸை ஊஹிக்க முடியவில்லை! நாங்கள் இருவரும் இந்த படத்தை சோஃபா நுனியில் உட்கார்ந்து பார்த்தோம். ஸ்டேட் ஆஃப் ப்ளே ஸ்டேட் ஆஃப் டோட்டல் கேயோஸ் அண்ட் த்ரில்ன்னு சொல்லலாம். கண்டிப்பாக பார்க்கவும்.

22 comments:

அண்ணாமலையான் said...

ரொம்ப கஷ்டப்பட்டு பாத்துருக்கீங்க....

R.Gopi said...

அடடா....

எம்புட்டு படம் பார்த்து இருக்கீக!!

ஆமாம்..... இந்த லிஸ்ட்ல ஒரு தமிழ் படம் கூட இல்லையே, ஏன்?

அடுத்த தபா, நெறைய தமிழ் படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க...

துபாய் ராஜா said...

பொழுதுபோக்குக்கு படம் பார்க்கலாம். படம் பார்த்தே பொழுதை போக்கக் கூடாது. :))

Ahamed irshad said...

கல்ஃப்ல மலையாளிகள் ஜாஸ்தி,அதனால் மலையாளப் படங்கள் அங்கு அதிகம் வெளியிடப்படும். எப்பவும் போல தமிழுக்கு புறக்கணிப்புதான்.

அலசல் நலம்...

எல் கே said...

riteu :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அநன்யா நீங்கள் குறிப்பிட்ட தொடர்பதிவு எழுதி வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான படங்கள்.. நீங்களும் அத்திம்பேரும் ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்திருக்கீங்க போல.. இங்கே தியட்டர்ல படம் பாக்கமுடியாது.

நல்ல விமர்சனம், பார்ககணும் போல..

Ananya Mahadevan said...

@அண்ணாமலையான்,
ஆமாங்க, ஒண்ணோ ரெண்டோ தான் தேரிச்சு. மஹா கொடுமை!

@கோபி,
தமிழ் படம் பாக்குற மாதிரி ஏதாவது வந்திருக்கா என்ன? ஐ மீன் கொஞ்சம் சென்சிபிளா?

@துபாய்ராஜா,
அதான் மாசம் ஒரு சினிமாப்பதிவு போடுறேன். தனித்தனியா போடுற அளவுக்கு சினிமா அறிவு இல்லை. ஒரு சராசரி பார்வையாளனின் கருத்துக்கள் தான் நான் சொல்றது. அதுக்கும் கண்டனமா? ரொம்ப மோசம்ங்க!

@அஹமது இர்ஷாத்,
வாங்க, கருத்துக்கு ரொம்ப நன்றிங்க. நான் தமிழ்ப்படங்களை வேணும்ன்னு புறக்கணிக்கலை.உருப்படியான படம்ன்னா பார்ப்போம்ல?

@Lk,

வருகைக்கு நன்றி. எனக்கு தெரியும் உனக்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தம் இல்லைன்னு. :-)

@ஸ்டார்ஜன்,
தொடர்பதிவு ஜோர்! படிச்சாச்சு, கருத்தும் போட்டாச்சு!எல்லாமே வீட்டில் பார்த்த படங்கள் தான். நாங்கள் தியேட்டர் போவதில்லை! அந்த அளவுக்கு சூப்பர் படம் இதுவரை வந்ததா தெரியல!கடைசியா பார்த்தது, கமலஹாசனின் தசாவதாரம்.

Prathap Kumar S. said...

இத்தனை படங்களா??? எனக்கே போட்டியாவா??? பாத்துருவோமா??? அடுத்த வாரம் பாப்போமோ????

புறம் காழ்ச்சகள், ஹேப்பி ஜர்னி மட்டும் பார்த்திருக்கேன்.... வைரம் படம் பாத்தீங்களா??? யப்பா....சரேஷ்கோபி வசனம்னாலே எனக்கு அலர்ஜீ....

Ananya Mahadevan said...

ச்சே ச்சே என்ன நாஞ்சில் உங்களுக்கு போட்டியா எல்லாம் பார்க்க முடியுமா? நீங்க தான் விட்றுவீங்களா? :))

அதெப்படி பாக்கி கதைகளை மிஸ் பண்ணி இருக்கீங்க? தி பிரிஜ் அவசியம் பாருங்க. மகள் கூட ரொம்ப சூப்பர்!

முகுந்த்; Amma said...

அம்மாடியோவ்! எம்புட்டு படம் :))

Frost/Nixon நான் இன்னும் பார்த்ததில்லை. ஆனா இது உண்மையா அமெரிக்காவில நடந்த கதைய பேஸ் பண்ணி எடுக்கப்பட்டது. நிக்சன் இந்த ஊழலுக்கு பின் பதவி விலகினது உண்மை.

மலையாள படம் நெறைய பார்பீங்க போல. எனக்கு அது கொஞ்சம் தான் புரியும்.

Ananya Mahadevan said...

முகுந்தம்மா,
வருகைக்கு நன்றி! ஃப்ராஸ்டு நிக்ஸன் பார்த்ததுக்கப்புறம் தான் விக்கியில் வாட்டர்கேட் ஊழலைப்பத்தி தேடித்தேடி படிச்சேன். ஜார்ஜ் நிக்ஸன், டேவிட் ஃப்ராஸ்டு இவர்களின் தோற்றம் பார்த்தபோது படத்தின் இம்பாக்ட் அதில் தெரிந்தது! :)
மலையாளம் குத்து மதிப்பாகத்தான் தெரியும். ஹெவி ஆக்ஸண்டெல்லாம் புரியாது!இந்த கேரளா கஃபேயில் ஐலண்டு எக்ஸ்ப்ரஸ் சுத்தமாக புரியவில்லை!

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

vimarsanamlam ok thaan. Aana oru tamil padam kooda pakkalaiya, kupungapa tamil amaippai sarthavangala..................

pudugaithendral said...

நல்லா எஞ்சாய் செஞ்சிருக்கீங்க போல. குட்

R.Gopi said...

//@கோபி,
தமிழ் படம் பாக்குற மாதிரி ஏதாவது வந்திருக்கா என்ன? ஐ மீன் கொஞ்சம் சென்சிபிளா?//

*******

ஆஹா... என்னே தமிழுக்கு வந்த சோதனை!!??

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இங்கே தியட்டர்ல படம் பாக்கமுடியாது.//

சவுதியில தியேட்டரே இல்லன்னு கேள்விபட்டேன்...

ஸ்ரீராம். said...

பொறுமைசாலிதான்..

Madhavan Srinivasagopalan said...

நா இப்பல்லேலாம் சினிமாவே பாக்குறது இல்லீங்கோ.. என்னைய வுட்டுடூங்கோ..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இந்த வார இறுதியில் ஏகப்பட்ட படங்கள் பார்த்தோம். ஒரே குழப்பமாக இருக்கு! புதன் இரவே பார்க்க ஆரம்பிச்சுட்டதால, ஓரளவிற்கு கவர் பண்ணிட்டோம்!!! ஹீ ஹீ.. //

வீட்டுக்கு வீடு வாசப்படி (நம்மள மாதிரி நாள் கணக்கா உலகத்துல யாரும் டிவிய கட்டிட்டு இருக்கா மாட்டாங்கன்னு ரங்கமணி சொன்னா இனி இந்த பதிவ forward பண்ணிடலாம்)

Ananya Mahadevan said...

@குட்டிச்சாத்தான்,
கோவிச்சுக்காதே, பயபுள்ளைக்கி ரோசத்தை பாரு! அக்கான்!

@புதுகை அக்கா,
இந்த சினிமாப்பக்கமே மாதம் ஒரு முறை தான் போடுறேன், அதுனால இந்த மாதம் பார்த்த எல்லாப்படங்களுக்கும் இதான் ரிவ்யூ பக்கம்

@கோபி,
ஆமா தமிழுக்கு பயங்கர சோதனை தான் வந்திட்டுது! சவுதியில் தியேட்டர்களே இல்லையா? தகவல் புதுசு.

@’எங்கள்’ ஸ்ரீராமண்ணா,
சில படங்கள் நிஜம்மாவே பொறுமையை சோதிச்சுட்டுது. முடியல!

@மாதவன்,
வருகைக்கு நன்றி, நாங்களும் முன்னே மாதிரி பார்க்கறதில்லை, ஹீ ஹீ!

@அப்பாவிதங்கமணி,
நோட் தி பாயிண்ட் யூவர் ஆனர், நான் சொன்னது டீவீடீல படம் பார்க்குறது, எனக்கும் டீவீக்கும் சுமுகமான உறவு இருக்கறதில்லை. குறிப்பா, சன் நெட்வொர்க்! எழவெடுத்த மாதிரி போட்டதையே போட்டுண்டு இருப்பாங்க! மொக்கை சானல்!

Unknown said...

//* கோடீஸ்வரன் ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு அம்பாஸிடர் கார்! ...... என்னதான் லோ பட்ஜட் ஃபில்ம் மேக்கிங் என்றாலும் இப்புடியா? *// - இது தான் அனன்யாவோட பஞ்ச்...

ஹுஸைனம்மா said...

ஒரு மாசத்துக்கு மொத்தமா மளிகை வாங்கிற மாதிரி, மொத்தமா ஒரு மாசத்துக்கான ரிவ்யூவா?

நானும் படம்லாம் பாப்பேன், ஆனா எப்பேர்ப்பட்ட படமானாலும், ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணி அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள்ளாகப் பாத்து முடிச்சுடறதால விமர்சனங்கள் எழுத மனசாட்சி இடம் கொடுக்கல!!

பனித்துளி சங்கர் said...

அதிக தகவல்களை திரட்டி தந்து இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் .
மீண்டும் வருவேன் !

Related Posts with Thumbnails