நானும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சு அம்பிகாபதி மாதிரி 99 கண்ணி எழுதியாச்சு. இது நூறாவது கண்ணி. வில்லன் நம்பியார், அந்த படத்துல சிவாஜி கிட்டே போங்காட்டம் ஆடி, “கடவுள் வாழ்த்து கணக்குல வராதுன்னு சொல்லுவாரே, அதே மாதிரி ’ஹலோ வேர்ல்டு’ன்னு ஜாவா புரோக்ராம் அவுட்புட் மாதிரி நான் முதன் முதலா எழுதின போஸ்டை ”செல்லாது செல்லாது ”ன்னு நாட்டாமை மாதிரி சவுண்டு விடுறவங்க போடுற பின்னூட்டத்தை பிரசுரிக்க மாட்டேனாக்கும். சரி இப்போ பதிவுக்கு போகலாம். பாலக்காட்டுத்தமிழ்.
இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதியது அல்ல. என் பார்வையில் இந்த மொழியைப்பற்றிய கருத்து அவ்வளவே
எல்லோரை மாதிரி நானும் பாலக்காட்டு தமிழை முதன் முறையா ரசிச்சது மைக்கல் மதன காமராஜன்ல தான். அப்புறம் நியூகாலனில குடியிருந்த போது ஒரு பாலக்காட்டு மாமி வீட்டுல தான் குடியிருந்தோம். அப்போ கொஞ்சம் அந்த மொழி பரிச்சயம். மத்தபடி ஆராய்ச்சி எல்லாம் பண்ணினதில்லை!
கல்யாணத்துக்கு அப்புறம் தான் இந்த மொழியின் ’சிறப்பு’ கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சது. எதைச் சொன்னாலும் புரியாம நான் ரெண்டு ரெண்டு வாட்டி கேட்டப்போ ரங்க்ஸ் நொந்து போயிட்டார். இருந்தாலும் பொறுமையா இந்த மொழியை எனக்கு விளக்கினார். இப்போ பாருங்க, பாலக்காட்டு மாமியா ஆயிட்டேன்! இதுக்கு முழு க்ரெடிட்டும் ரங்குவையே சாரும்! கீதா மாமி சொல்வது போல.. தாங்கீஸ்ஸ்ஸ்ஸ் ரங்கு டார்லிங்!
முதலில் எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு தெரிய மாட்டேங்கிறது! அவ்வளவு விஷயங்கள்!
1.கல்யாணமான புதிதில் நான் கவனிச்சது, சொல்லின் இடையில் வரும் ச வை இவர்கள் ஷ என்கிறார்கள். நாம் பேசறா என்பதை பேஸறா என்றும் அசடு என்பதை அஸடு என்றும் சொல்கிறோமே, இவர்கள் ’பேஷரா, அஷடு’ என்கிறார்கள்.
2.ஆரம்பத்தில் வரும் ச வை நாம் ஸ என்போம். இவர்கள் அழுத்தி ச்ச்ச்ச என்கிறார்கள்.நாம்: ஸொல்லி இருக்கா, இவர்கள் : ச்சொல்லி இருக்கா,
3.தக்குடு மாதிரி ஆட்களுக்கு தெரியாத ற் போன்ற எழுத்துக்களை இவர்கள் கமலஹாசனை விட அழுத்தியே உபயோகிக்கிறார்கள். கறி என்று சொல்லும்போது நாபிக்கமலத்தில் இருந்து ஆக்ரோஷமாக வரும் இ சத்தம் நாக்கை பல்லில் அ|ளவுக்கதிகமாக் உரசி பலத்த மரத்தை ரம்பத்தால் அறுக்கும் அளவுக்கு இடற வேண்டும். அப்போத்தான் ற்ற்ற் சரியாக வரும். இப்போ மறுபடியும் சொல்லிப்பாருங்க.. சரியா வரும். கறி. இந்த சொல்லின் பயன்பாடு என்னவென்றால் வதக்கி, வேகவைத்து, அரைத்து, கொதித்து, இப்படி எந்த ப்ரொசீஜரில் செய்த காயாக இருந்தாலும் அது கறி என்றே அழைக்கப்படும். குர்மா, கூட்டு, கிரேவி இப்படி எது செஞ்சாலும் அது கறியே ஆகும்!
4. எந்த சொல் சொன்னாலும் அத்துடன் ’ஆக்கும்’ கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். சொல்வதற்கு ஒன்றுமே இல்லாவிட்டாலும் சும்மாங்காச்சுக்கும் ’அதாக்கும்’ என்று சொல்ல வேண்டும். அப்போ தான் ஒரு வரி முடிவடையும். மை.ம.கா படத்தில் அப்பாவிக்கமல் ”அதுல போட்றுக்குமாக்கும் எனவும்”, நாகேஷ் சொல்வாரே,”ஆமா, எல்லாத்துக்கும் ஒரு ஆக்கும் சேர்த்துக்கோ..” என்பாரே.. 100/100 உண்மை!
5. இந்த மொழியின் சிறப்பம்சமே வாயில் காற்றை நிரப்பிக்கொண்டு பேசவேண்டும். அதாவது வார்த்தைகளை அழுத்தாமல் பூப்போல ஃப்ரீயாக பேசுதல். நன்றாக கவனித்தீர்கள் என்றால், மை.ம.கா படத்தில் கமல் வாயை திறந்தபடியே தான் படம் முழுவதும் பேசுவார். வாய், மூடவே மூடாது. ”அவா தாஞ்சொன்னா, வரணுங்கிட்டியா” போன்ற சொற்றொடர்களில் ம் என்ற ஒற்றெழுத்து திரிந்து ஞ், ங் ஆகி வருவது முறையாகும்.
6.அடுத்ததாக கேட்டியா, கேட்டேளா இல்லாமல் எந்த ஒரு வாக்கியமும் நிறைவடையாது. எல்லா வரிகளும் கேட்டியா அ கேட்டேளா என்ற சொல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். யேட்டையா என்பது தவறான உச்சரிப்பாகும். ட்டியா என்பதே மிகத்துல்லியமான உச்சரிப்பு அ பேச்சுவழக்கு என்பது எனது நான்காண்டு கால ஆப்ஸர்வேஷனின் ரிசல்டு
7.இந்த பாலக்காட்டு பாஷையில் ஒரு க்ளோஸ் எண்டெட் கேள்வி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ”நாளைக்கு நேரத்தே ஏந்திருக்கணுமா?” அதாவது விடிகாலையில் எழுந்திருக்கணுமான்னு கேட்டால் இவர் ‘ ஏ....ய்’ என்பார். எனக்கு எரிச்சலாக வரும். ஒண்ணு ஆமாம்ன்னு சொல்லட்டும். இல்லே, இல்லைன்னு சொல்லட்டும். அதென்ன ஏ...ய்ன்னு ஒரு பதில்? அப்புறம் தான் தெரிஞ்சது ஏய்ன்னா இல்லைன்னு அர்த்தமாம்! தெலுங்குல ”அபே, அபெபே” மாதிரி மலையாளத்துல ”ஏ...ய்”ன்னு சொல்றது இல்லைன்னு பொருள் படுமாம்! நீங்க பாட்டுக்கு தப்பு தப்பா ஏய்ன்னு சுருக்கிச்சொல்லிட்டு அவாளுக்கு புரியலைன்னு சொன்னா கொம்பேனி பொறுப்பேற்க முடியாது!
8. சில வார்த்தைகள் தமிழிலும் இருக்காது, மலையாளத்திலும் இருக்காது, சமஸ்க்ருதத்துலேயும் இருக்காதாம். ஆனா பாலக்காட்டு தமிழ்ல இருக்குமாம்! உ:அம்படத்தான். தமிழில் அவ்வளவுதான் என்று பொருள்படும்.
9. சில தமிழ்ச்சொற்கள் வேறு அர்த்தத்தில் வழங்கி வருகின்றன. உ: பனி- நமக்கு பனின்னா ஐஸ்கட்டி. இங்கே இவர்களுக்கு பனின்னா ஜூரமாம். மடின்னு நாம் ஆச்சரமா குளிச்சு தனியாக்காயப்போட்ட துணிகளை உடுத்திண்டு சுவாமி கார்யங்கள் செய்வதை சொல்லுவோம்.இங்கே மடின்னா சோம்பேறித்தனம். நான் மடியா இருந்து நிவேத்யம் பண்ணினேன்னு சொன்னா இவங்களுக்கு தப்பர்த்தமாயிடுமே.
10. வரலை, போகலை, இல்லை இந்த வார்த்தயெல்லாம் சாதாரணத்தமிழில் வரல, போகல, இல்ல என்று நாம் கூறுகிறோமே, இவர்கள் வரலைஐஐ, போகலைஐஐ , இல்லைஐஐ என்று அதிகப்படி கர்வேச்சர் கொடுப்பார்கள். அப்படி ரவுண்டாக முடிக்காவிடில் அது பாலக்காட்டு மொழி அல்ல என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது!
11.ஒண்ணு என்று நாம் பேச்சு வழக்கில் சொல்ற ஒன்றுங்கற வார்த்தையை இவங்க எல்லாம் ஒந்நுன்னு தான் சொல்லுவாங்க. அதுவும் ந் சொல்லும்போது இரண்டு பல்வரிசைக்கும் நடுவில் நாக்கை மாட்ட வைத்து, மூக்கை சுருக்கி, முக்கினால் தான் அந்த சவுண்டு எஃபெக்டு வரும். எங்கே இப்போ சொல்லுங்க பார்க்கலாம். ஒந்நு.. சபாஷ்.. குட் கோயிங் கேட்டேளா?

52 comments:
பாலக்காட்டு தமிழ்ல பேசி அசத்துங்கோ மாமி.. நன்னாருக்கு அசத்துறேள்..
100 பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அனன்யா - உன்னுடய நூறாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள். அருமையான பதிப்பு .. உன்னுடைய observation மிகவும் அருமை. நகைச்சுவை கலந்து அழகாக எழுதி இருக்கிறாய்... மேலும் பல பதிப்புகளுடன் இந்த BLOG இனிதே வளர வாழ்த்துக்கள்..
நூறாயிடுத்து கேட்டேளா? ஸ்பஷ்டமா இருக்கு.. நோக்கு ஆத்துல சொல்லி திருஷ்டி சுத்தனுமாக்கும்...
Congratulations Ananya, Keep Rocking. Palakkattu tamil super.
வாழ்த்துக்கள் அனன்யா அக்கா! கேட்டேளா?....:)
எனக்கு உங்களது இடுகையும் புரியல,எனக்கு முன்னாடி வரிசையில நிற்கிற பின்னூட்டக்காரர்களையும் புரியல:)
100வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டுப் போகிறேன்.
நாங்க ஊரில ஆன்ட்டி அங்கிள் எல்லாம் சொல்லமாட்டோம். மாமா மாமி தான். அதை விட வாங்கோ போங்கோனு தான் சின்னவாளோடையும் பேசுவோம். அப்படி ஆரம்பிச்சாளே, நீங்க பாலக்காடானு கேட்டிருக்காங்க. அழகாக எழுதி இருக்கீங்க. அப்புறம் உங்கள பத்தி சாப்பிட வாங்கோ என்ற ஆக்கத்தின் கடைசில புகழ்ந்திருக்கேன். பாத்து டென்ஷனாகாதீங்கோ. சரியா.
எங்களுக்கும் எல்லாமே கறி தான். *
100a!! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! நல்ல சின்சியரிட்டி. நான் 4 வருஷமா வெச்சுண்டு 50-55 பதிவு தான் போட்டுருப்பேன் ஐ திங்க். சீக்கிரமே துளசீ டீச்சர் மாதிரி 1000 போடுங்க.
//இதுக்கு முழு க்ரெடிட்டும் ரங்குவையே சாறும்! கீதா மாமி சொல்வது போல.. தாங்கீஸ்ஸ்ஸ்ஸ் ரங்கு டார்லிங்!//
போச்சு, இப்போ அத்திம்பேர் இல்ல கத்தணும் - "ஆராவது காப்பாத்துங்கோ!"
ஆத்தா.... நான் surrender ... சொல்ல வார்த்தை இல்லை (நான் எதாச்சும் சொல்ல நீங்க பின்ன பாலகாட்டு தமிழ்ல correction சொல்லுவேள்... என்னத்துக்கு வம்பு.... கேட்டேளா?)
நூறாவது பதிவு கண்ட நுண்ணரசி அனன்யா 1000 வது பதிவும் காண வாழ்த்துக்கள்
அன்பு அனந்யாவிற்கு
வாழ்த்துக்கள். :)
ரொம்ப நன்னாயிட்டு இருந்தது உங்க நூறாவது பதிவு. எனது அக்காவை பாலக்காட்டுகாரருக்கு சம்பந்தம் செஞ்சு கொடுத்துட்டு எங்களுக்கும், அத்திம்பேருக்கும் நடந்த பல தமிழ்ப் போர்கள் நினைவுக்கு வருகின்றன. மை.ம.கா.ராஜன் படத்தில் கமலஹாசனும், ஊர்வசியும் டிபிகல் பாலக்காட் பிராமின்ஸ் ஆக வாழ்ந்து காட்டினார்கள். நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஏ.....ய் அதாவது இல்லை என்பதற்கு பதிலாக தோள்களைக் குலுக்கிக் காட்டும் பாலக்காட்டு பாடி லாங்க்வேஜ் பத்தி நீங்க ஒன்னுஞ்சொல்லலை கேட்டேளா?
சபாஷ்.. குட் கோயிங் கேட்டேளா?
...(p.s.) இதுவரை கிறுக்கல்கள்: 88 என்று காட்டுதே?
ஆஜர், அபாரம், அருமை அநன்யா...
சதத்துக்கு வாழ்த்துக்கள்..
//இதுக்கு முழு க்ரெடிட்டும் ரங்குவையே சாறும்! //
சாரும் - சரி, சாறும் - தவறு.
சாறு - இது Juice இன் தமிழாக்கம்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். பாலக்காடு தமிழ் நன்னாருக்கு கேட்டேளா..
பின்னே, இந்த மடி, பனி இதெல்லாத்துக்கும் நாஞ்சில் தமிழிலும் இதே அர்த்தந்தான் வருமாக்கும் கேட்டேளா.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பெருக வளர அனைவரையும் மகிழ்விக்க வாழ்த்துக்கிறேன்.
*
போனவாரம் ஊருக்குப் போயிட்டு பெங்களூருக்கு ரிட்டர்ன் வந்திட்டிருந்தேன். எர்ணாக்குளம் இன்டர்ஸிடி எக்ஸ்ப்ரஸ்.
கூபேயில் கூட இருந்தவங்க கூட பேசிப் பேசி எனக்கும் அதே பாஷை ஒட்டிக்கொண்ட உணர்வு.
அது பற்றி எழுதலாம் என்று இருந்தேன். நீங்கள் விளாசி விட்டீர்கள்.
*
ஒருமுறை பாலாக்காட்டுக்கு சகலையுடன் போயிருந்தேன். சகலை ஒரு சிற்பி. அக்ரஹாரத்து கோயில் சிலை பிரதிஷ்டை.
தெருவே திரண்டு அந்த புது கணபதி கோயிலுக்கு ஹோமம் வளர்த்து பூஜை பண்ணிட்டிருக்காங்க.
ஓடுகள் சரிந்த வீடுகள், மஞ்சள் பாலாக்காட்டு பெண்கள், சரசர பட்டுப்புடவைகள், விசிறியால் முதுகு சொறிந்து கொள்ளும் மாமாக்கள், கொள்ளைப் பச்சையாய் பக்கத்தில் வாழைத்தோப்பு, கூப்பிடுகிற தூரத்தில் சலசலத்து ஓடும் வாய்க்கால் / ஆறு, வெயிலை கிழித்துக்கொண்டு வரும் உணவின் வாசம், அதில் எனக்குப் பிடித்த பாலாடைப் பிரதமனைத் தேடிக்கொண்டிருந்தேன்.
எப்படியும் ஒரு பாலாடைப் பிரதமனை ஒரு வாய் சாப்பிட்டுத்தான் பாலாக்காட்டை விட்டுக் கிளம்புவோம் என்றிருந்தேன். ஆனால் அவர்கள் வற்புறுத்தியும் பணிநிமித்தமாக சாப்பிட முடியாமல் போயிற்று.
அன்று உற்றுக் கவனித்த பாலாக்காட்டுத் தமிழ் இன்னும் நினைவின் காதுகளில் பதுங்கியிருக்கிறது.
ஒரு இனிய கடிதத்தைஅனுப்பும் போது என்வலப்பில் நாமே வரைந்துவிடுகிற ஸ்மைலி போல அந்த 'கேட்டையா' ஒவ்வொரு வாக்கியத்தையும் அடுத்தவரிடம் டெலிவரி செய்கிறது.
*
பாலக்காட்டுத் தமிழ் சுந்தர ராமசாமி, நீல. பத்மநாபன் எழுத்துக்களில் கொஞ்சம் வாசித்ததுண்டு.
*
நீங்கள் இங்கு பாலக்காட்டுத் தமிழை ஆய்ந்திருக்கிற விதம் பெரும் அட்டகாசம். வரிக்கு வரி வரும் நையாண்டி தரையில் உருட்டிவிடும் போல (ROFL). ஒரு தேர்ந்த அனுபவ எழுத்தாளரை வாசித்ததுபோல இருக்கு.
நகைச்சுவை உணர்ச்சிதான் எல்லா படைப்பிலும் மிகச்சிறந்துன்னு சொல்வேன்.
முக்கியமாக, ஒரு விஷயத்தை நீங்கள் பிடிக்கிற உவமைகள் சிரிப்பின் கனத்தைக் கூட்டிவிடுகின்றன (உம்: வரலைஐஐஐ போன்ற கர்வேச்சர்கள், எந்த ப்ரொசீஜரில் செய்த காயாக இருந்தாலும் அது கறி.., ஒந்நு...)
*
உங்களிடம் ஆய்வுக்குணம் நிரம்பியிருக்கிறது. டிவி சீரியல்கள், நியூஸ் சேனல் பட்டைகள், பேச்சு வழக்கு என எல்லாவற்றையும் உற்று நோக்கி ஆய்ந்துவிடுகிற திறன் இருக்கிறது. இதை மென்மேலும் சீர்படுத்திக் கொள்ளுங்கள். ரங்க்ஸ் மூலம் அறிமுகமானதால் பாலக்காட்டுத் தமிழைச் சிறப்புக் கவனம் கொண்டு அவதானித்திருக்கிறீர்கள் போல!
*
இந்தமாதிரியான மொழிசார்ந்த அணுகுமுறைகள் (விமர்சனம், நையாண்டி கலந்திருந்தாலும்) ஒரு சமூக அடையாளத்தின் பதிவாகக் கொள்ளப்படவேண்டும். பாலக்காட்டுத் தமிழ் கமல் காண்பிக்கும் முன்பே நமக்கு பரிச்சயமான ஒன்று. கொஞ்சம் நினைவுகளைச் சுரண்டினால் ஒரு டீக்கடை நாயரோ, 5ம் வகுப்பு டீச்சரோ, பள்ளித் தோழனோ / தோழியோ, ஒரு போஸ்ட்மாஸ்டரோ அல்லது பழைய பக்கத்து வீட்டுக்காரரோ நினைவுக்கு வரக்கூடும்.
அப்படி நினைவுக்கு வரும் நிகழ்வுகள் அந்த கணம் மிக அலாதியானது. இதுபோன்ற மென்னுணர்வுகளை மீட்டெடுக்கவாவது இம்மாதிரியான பதிவுகள் வரவேண்டும்.
*
பிரமிப்போடு முடிக்கிறேன்!
அம்படத்தான் என்பது முடிதிருத்துபவரைக் குறிக்கிறது என்றால்.. அதே பதம் இங்கு மதுரை வட்டாரங்களில் பயன்பாடு உண்டு.
-
பனி என்பது ஜலதோஷம் அல்லவா?
-
இதுக்கு முழு க்ரெடிட்டும் ரங்குவையே சாறும்!
சாரும்.
வெகு சீக்கிரமே
1000 தொடணும்.
வாழ்த்துக்கள்.
கமலும்,மாதவனும்
பேசிக்கேட்டமாதிரி
இர்ந்தது.
வாழ்த்துக்கள் அனன்யா..
அசத்திட்டே கேட்டியா..
nice and wishes for 100th post
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் மாமி...
நீங்க இன்னும் இது மாதிரி பல நூறு பதிவுகள் போடணும், கேட்டேளா??
நான் நகைச்சுவை பதிவர் விருது குடுத்தது சரிதான்
பேஸ் பேஸ் ரொம்ப நன்னா எழுதி இருக்கேள்...
'அம்படத்தான்' என்பது 'அம்புட்டுதான்'?
இருக்கு, ரசித்தேன்.
Congratulations anans.....we are proud of you! I imagined your expressions while reading the post..sirichu sirichu vayatha vali thaanga mudiyalai....
பிரமாதம் கேட்டேளா
ஒரு ராகமாவேறு பேஸுவாளே . அத எழுத முடியாது இல்லையா?
பேச்சு வழக்கோட நிறுத்தாம இந்த மிளகூட்டல் (மொளகூட்டல் ), அரச்சுகலக்கி மாதிரி இந்த பாலக்காட்டு உணவு பத்தியும் எழுதி ஜமாயுங்கோ
http://www.virutcham.com
அநன்யா, உங்க ஃபீலிங்க்ஸ் புரியுது; அதுவும் அந்த “ஏஏஏஏ....ய்”!! நானும் கேட்டு (அனுபவிச்சு) குழம்பியிருக்கேன்!!
நானும் இதேபோல ஒரு பதிவு சகாயம் வேணுமான்னு எழுதுனேன் முன்னாடி, முடிஞ்சாப் பாருங்க!!
அப்புறம், நூறுக்கு வாழ்த்துகள்!!
அப்புறம், போன வெள்ளி, அபுதாபி மால், கோ-ஆப்ல, உங்களை மாதிரியே ஒருத்தரை (வெள்ளை சுடிதார்) பார்த்தேன்; ப்ரொஃபைல் ஃபோட்டோ தெளிவில்லாத்தால, ஒரு சந்தேகம். அதனால எதுவும் கேக்கலை.
அடேடே, அநந்யாக்கா லிங்விஸ்ட் ஆக்கும், கேட்டேளா? இந்த கேட்டேளா அந்த காலத்து வயர்லெஸ் பேச்சு ரோஜர் மாதிரி இருக்காக்கும்! அப்பறம் .... அம்படத்தான்!
Vaa maaa vaaa... engeyy ponaaalum kadaisiyaaa engakitta thaan varanum... appo vekkaroommm paaru... AAAAAAAAAAAAAAAAAAAAPPU.
வாழ்த்துக்களாக்கும்... அப்படியே சீக்கிரம் ஐநூறு, ஆயிரம்ன்னு அடிச்சு ஆடணுமாக்கும். கேட்டேளா.. :))
//நாக்கை பல்லில் அ|ளவுக்கதிகமாக் உரசி பலத்த மரத்தை ரம்பத்தால் அறுக்கும் அளவுக்கு இடற வேண்டும்.//
ரத்தம் வந்துடாது?? கேட்டேளா???
//இல்லைன்னு சொல்லட்டும். அதென்ன ஏ...ய்ன்னு ஒரு பதில்? அப்புறம் தான் தெரிஞ்சது ஏய்ன்னா இல்லைன்னு அர்த்தமாம்! தெலுங்குல ”அபே, அபெபே” மாதிரி மலையாளத்துல ”ஏ...ய்”ன்னு சொல்றது இல்லைன்னு பொருள் படுமாம்! நீங்க பாட்டுக்கு தப்பு தப்பா ஏய்ன்னு சுருக்கிச்சொல்லிட்டு அவாளுக்கு புரியலைன்னு சொன்னா கொம்பேனி பொறுப்பேற்க முடியாது!//
அந்த ஏ..ய்ய்ய்ய்ய்ய்... ஒரு ராகத்தோட வருமே?? அதைச் சொல்லாண்டாமா??? கேட்டேளா??
நான் மடியா இருந்து நிவேத்யம் பண்ணினேன்னு சொன்னா இவங்களுக்கு தப்பர்த்தமாயிடுமே
//அதுவும் ந் சொல்லும்போது இரண்டு பல்வரிசைக்கும் நடுவில் நாக்கை மாட்ட வைத்து, மூக்கை சுருக்கி, முக்கினால் தான் அந்த சவுண்டு எஃபெக்டு வரும்.//
ரொம்ப முக்கினாலும் கஷ்டம் தான். வேறே என்னமோனு நினைப்பாங்க. சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாயிடுத்து, கேட்டேளா??? இன்னிக்கு மின் வெட்டு கோபம் கூடப் போயிடுத்தாக்கும்! :)))))))))
ஹிஹிஹி, என்னை நினைவு கூர்ந்ததுக்கு நன்னிங்கோ கேட்டேளா??
அப்புறம் அந்தப் பட்டமெல்லாம் கொடுத்தீங்களே? ஓர்மையில்லையோ??? இப்போப் போட்டிக்கு ஏகப்பட்ட கீதா வந்துட்டாங்களா?? ஒரு அடையாளத்துக்காக்கும் கேட்டேன்! எனக்கொந்நும் அதிலே ஆஷையெல்லாம் இல்லையாக்கும், கேட்டேளா???
சென்ச்சுவரிக்கு வாழ்த்துக்கள். பாலக்காட்டு பாஷை அலசல் அருமை! பதிவுலகில் நீங்கள் சீனியர் என்பதால், எம்மைப் போன்ற ஜூனியர்களுக்கு எப்போதும் ஆதரவு தருமாறு அனைத்து ஜூனியர்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு இத்துடன் இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்! (சாரி! வெளியில கட்சி மீட்டிங் போயிட்டிருக்கு...! அதான் பாலக்காட்டு பாஷைக்கு பதிலா அரசியல் மேடை பாஷை வந்துடுச்சு)
வாழ்த்துக்கள்!
-
DREAMER
100ஆ.. வாவ்
வாழ்த்துக்கள் அனந்யா. மும்பை அந்தேரி ஸ்ரீராம் நகர் காலனியில் மொத்தமும் பாலக்காட்டுக்காரர்கள் தான். என் தாத்தா மட்டும்தான் விதிவிலக்காக அங்கே தெலுங்கு. தாத்தா வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஏதோ பாலக்காட்டுப்பக்கம் போய்வந்த எஃபக்ட் இருக்கும்.
யாராவது என்னிடம் பேசினால்தான் பிரச்சனையாகும். எனக்கு அவ்வளவாக புரியாது. ராமநவமி கோலகலாமாக நடக்கும். அந்த நினைவுகள் வந்தச்சு.
when i start reading yr blogs i thought u r from palakad... and was thinking how its possible from a metro city bodi... :P
Later when i came to konw that your mother tongue is telugu... i was surprised how u r speaking very fluently in palakad slang... when i read this blog, all my doubts are answered ...
ungaluku hasya unarvu rombha jaasthi... its a gods gift... keep it up and keep your surrounding happy
சச்சும்மா ச்ச்ச்சொல்லப்படாது நல்லாவே ரிஷர்ச் பண்ணியிருக்கேளாக்கும்!
வாழ்த்துக்கள் அக்கா... நீ இன்னும் 1000 பதிவுகள் எல்லாம் அனாயாசமா தாண்டுவே.. அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நல்லா யோசித்து, ஆராய்ச்சி செய்யப் பட்டு அனுபவித்து எழுதப் பட்டுள்ளது. என்னுடைய அனுபவ நினைவுகளையும் கிளறி விட்டது..! ஜெகனின் பின்னூட்டம் அவர் எந்த அளவு இதை உள்வாங்கி ரசித்துப் படித்தார் என்பதைக் காட்டுகிறது...
Amazing research! I am stunned by your observation. My husband is from Madurai, but I cannot even say a couple of words in his accent.
I am so proud of Kamal of being so sincere in whatever he does.
Congratulations on your 100th post. We will be looking forward to your 1000th post as well..Good going...
அற்புதம் அநன்யா .... 100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் . அதிலும் இந்த பதிவு நகைச்சுவை உச்சகட்டம். அதையும் தாண்டி , குறிப்பாக ஒரு வட்டார தமிழ் மொழியை தொழில் நுட்பமாக ஆராய்ச்சி செய்த விதம் அருமை. சொல் அமைப்பு ,உச்சரிப்பு விதங்கள் இப்படி பலரும் மற்ற வட்டார தமிழ் மொழியை , ஆராய முயற்சி செய்ய இப்பதிவு வித்தாக அமையும். வாழ்த்துக்கள் . அப்புறம் ஏ.....ய் எரிச்சல் எல்லாரையும் போல நானும் பட்டிருக்கிறேன்..நெருக்க நண்பர்களிடம் இதை தவிர்க்க புத்திமதி சொல்லப்போய் அதற்க்கும் அவர்கள் ஏ.....ய்
100 poataalay epect straanga thaan irukum nenakren :) wonderful post. Lovely writeup. Came here thru pork kedi's post :) kalakala ezhuthareenga.
வாழ்த்துக்கள் அநன்யா! கலக்கலான 100வது பதிவு. அதுவும் அந்த 11வது அருமையோ அருமை. உங்கள் பதிவுகள், 100லிருந்து விரைவில் 200 ஆக வாழ்த்துக்கள்.
@மின்மினி,
ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ப்ரியா,
ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும். உன்னை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் எனக்கு எப்போவும் வேணும்!
@அண்ணாமலையான்,
ரொம்ப நன்னா பேஷரேளே? பேஷ் பேஷ்ட்டேளா?
@முகுந்தம்மா,
ரொம்ப நன்றிபா
@தக்குடுபாண்டி,
டான்க்கீஸ்
@ராஜ நடராஜன்,
பாலக்காட்டு மொழி வழக்கு பத்தி எழுத முயற்சி பண்ணி இருக்கேன். உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சார்.
@அனாமிகா துவாரகன்,
ரொம்ப நன்றீஸ். உங்க ப்ளாக் பார்த்தேன்.. மஹா ரகளை. எனக்கு ஃப்ரீ பப்ளிசிட்டி.. டாங்க்கீஸ் பா.நீங்க எந்தூர்ப்பா? திருவனந்தபுரம் பக்கத்துலேயா இருக்கும்.
பொற்ஸ்,
அடிக்கடி நீ கட்சி மாறிண்டே இருக்கே.. இது உனக்கு நல்லதில்லைட்டியா? சமர்த்தா என் கட்சில மட்டும் இருக்க முயற்சி பண்ணு. வாழ்த்துக்கு நன்றீஸ்
@அப்பாவி தங்கமணி,
டாங்கீஸ்பா.. உங்களை மாதிரி டெடிக்கேட்டட் வாசகர்கள் இருக்கறதுனால தான் என் ப்ளாக் ஓடுது! :P
@LK,
நன்றீஸ்
@அஷ்வின் ஜி,
அந்த மாதிரி தோளை குலுக்கி யேய், இல்லைன்னு நான் கவனிச்சதில்லை. மே பீ, அது வேறு இடங்கள்ல வழக்கமாக இருக்கலாம். இவங்க ஸ்டையில் தலை சாய்த்து ஓ... ஷெரி தான்..
@சித்ரா,
நன்றீஸ் பா..
P.S : ஒரு சின்ன கன்ஃப்யூஷன் ஆயிடுத்து.ப்ளஸ் போன வருஷம் சில பதிவுகள் ஓவர் ரவுசில் எழுதி பிரசுரிச்சு, ரங்க்ஸ் கோவிச்சுண்டு, மூஞ்சி சுழிச்சு தூக்கப்பட்டது! அதான் அப்படி ஏறத்தாழ காட்டுது.. ட்ராஃப்டுல இருக்கறதெல்லாம் போட்டுடறேன்.. அப்போ சரியா வரும்ல..
@ஸ்ரீராமண்ணா,
அட்டெண்டென்ஸ் மார்க் பண்ணியாச்சு.
பிழை திருத்தப்பட்டது. நன்றீஸ்.
@அமைதிச்சாரல்,
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றீஸ் கேட்டேளா? ஆமா தலை சொல்லித்து. திருவனந்தபுரம் பக்கதுலயாச்செ.. அதான் மலையாள மொழி வாசம் அடிக்கும்.
ஜெகன்னாதன்,
இவ்ளோ விளக்கமான பின்னூட்டம் போட்டு என்னை பயங்கரமா இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றீஸ். இதை எல்லாம் பத்தி பஸ்லே டிஸ்கஸ் பண்ணியாச்சு. அதுனால அப்டியே ஸ்கிப் பண்ணிக்கறேன் கேட்டேளா?
@மதுமிதா,
ரொம்ப ரொம்ப நன்றி.நள தமயந்தியில மாதவன் சொதப்பி இருப்பான். ரொம்ப ஆர்ட்டிஃபீஷியல் ஆக்ஸெண்டு. கமல் கமல் தான்.. யாராலையும் டச் பண்ண முடியாது.
@முத்துலெட்சுமி,
ரொம்ம்ப நன்றிங்க !
@ராம்ஜி யாஹூ,
மிக்க நன்றி சார்.
@கோபி,
டான்க்கீஸ் பா.. முயற்சி பண்ணுறேண்ட்ளா?
@மலர்,
நன்றிங்க ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@மாதவன்,
மிக அருமையான ஒரு நினைவு கூர்தல். அம்புட்டுதேன்னு சொல்லுவா ஊர்ல .. சரிதான் போல் இருக்கு.
நன்றி.
@வெட்டி,
நன்றீஸ் டியர்.
@ஹூஸைனம்மா,
ரொம்ப நன்றிங்க.. கண்டிப்பா படிக்கறேன்..
@திவா அண்ணா,
சூப்பர்.. அப்புரம் அம்படத்தான்.. ஜோர்., டான்க்கீஸ்
@ரகு,
ஏன் இந்த கொலை வெறி? இந்த பகுதியே உங்க நண்பர்கிட்டே கேட்டுட்டு படிச்சு காட்டி அப்ரூவல் வாங்கி தான் பிரசுரம் பண்ணினேன். ஆப்பு வெக்கறதா இருந்தா உங்க நண்பருக்கு (அதான் என் ரங்கு) வைக்கவும். நான் ஒரு அப்பாவி தங்கமணியாக்கும்!
@துபாய் ராஜா,
டாங்கீஸ்...
@கீத்தா மாமி,
நாக்கை பல்லில் இடறத்தானே சொன்னேன். என்னமோ கத்தியில் வெச்சு தீட்ட சொன்னாப்ல ரத்தம்ன்னு எல்லாம் கேக்கறேளே? லேது. ரத்தமெல்லாம் வராதுட்டேளா?
பின்னே, ராகம் தானம் பல்லவி எல்லாம் அடுத்த எபிசோடுல கவர் பண்றேண்ட்டேளா?
ரொம்ப ரொம்ப நன்னீஸ் மாத்தா கீத்தானந்த மயி! ஜெய் ஜெய் மாத்தா ஜெய்ஸ்ரீ மாத்தா.. (காதலா காதலா படத்துல வர்ற மாதிரி ஜெய் ஜெய் விகடா ஜெய்ஸ்ரீ விகடான்னு நீங்க படிச்சா நான் பொறுப்பல்ல)
@ட்ரீமர்,
ரொம்ப நன்றிங்க. நான் சீனியர்ன்னு எல்லாம் கேலி பண்ண வேண்டாம். உங்களுக்கு, ஒரு மூணு மாசம் முன்னாடி தான் எழுதறேன். அதுக்குன்னு இப்படி எல்லாம் கேலி பண்ணக்கூடாது கேட்டேளா?
எந்த மீட்டிங்கா இருந்தாலும் பரவாயில்லை.. என்னை புகழ்ந்தா எனக்கு ஹீ ஹீ.. பிடிக்காது..அதனால் அநன்யாஷ்டகம் ஜபித்து இந்த பாவத்தை கழுவிக்கொள்ளவும்”!
@தென்றல் அக்கோவ்,
டாங்கீஸ், கமெண்டு பாக்ஸுக்குள்ளேயே ஒரு குட்டி பதிவு போட்டுட்டீங்களே.. கலக்கல்ட்டேளா..
@பாலாஜி வெங்கட்,
தான்க்ஸ்.. நிண்ட ஃபீலிங்ஸு...
புல்லரிச்சுதுந்தி :P
@ஜனார்த்தனன்,
நன்றீஸ்.. உங்க ஆதரவு இனியும் வேணம்ட்டேளா?
@மஹேஷ்,
நீ தானே டா இதுக்கெல்லாம் காரணம். எழுத தூண்டிய்வனே நீ தானே. டாங்கீஸ்..
@ஸ்ரீராமண்ணா,
நன்றீஸ். ஜகன் ஒரு தனி உலகம். அவர் ப்ளாக் பக்கம் போனால் தெரியும் அவருடைய ஆக்கங்கள் பத்தி! கிரேட் மேன்.. ஹைலி கிரியேட்டிவ்! அவருடைய நட்பு கிடைச்சது எனக்கு ரொம்ப பெருமை தான்.
@சரண்யா,
நன்றி. ஆமாம்.. நான் தீவிர கமல் விசிறியாக்கும் கேட்டேளா?
@விஜய்,
நன்றி பா.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@பத்து அண்ணா,
டாங்கீஸ். இதுக்கும் ஏ.....ய்ன்னு நான் சொன்னா நீங்க என்னை அன்ஃபாலோ பண்ணிட்டீங்கன்னா? அதான் பயமாக்கும்.
@கில்ஸ்,
ரொம்ப நன்றிமா.. அங்கே இருந்து இவ்ளோ தூரம் வந்து படிச்சதுக்கு. கொடி, ஸ்பெஷல் டாங்கீஸ்...
@அண்ணாமலை சாமி,
ரொம்ப ரொம்ப நன்றி பா.. அடிக்கடி வா கிட்டியா கோந்தே!
அநன்யா,
முதல் சதத்துக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய சதமடிக்க வேண்டும்.
ஸ்ரீ....
ஆனந்த விகடனில் வந்த பி.வீ.ஆரின் "ஆடாத ஊஞ்சல்கள்", நோவல் படிச்சுருக்கேளோ?
அது பாலக்காட்டுக்காரா பாஷைக்கு ஒரு பெஸ்ட் எக்ஸாம்பிளாக்கம்! கேட்டேளா.
- சிமுலேஷன்
@ஸ்ரீ,
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
அடிக்கடி வாங்க
@சிமுலேஷன்,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.
ஆனந்த விகடன்ல எப்போ வந்தது அந்த தொடர் கதை? நான் கேட்டுட்டே இல்லைஐஐ.
ஒருக்கா கூடி சொல்லுங்கோட்ளா? நான் திரைஞ்சு எடுக்கணுமாக்கம். ஆரையாக்கும் கேக்கலாம்ன்னு ஆலோச்சுண்டு இருக்கேன்.
நன்றி!
May be, amabadathan, came from Ambuttuthaan in Chennai Tamil?
யாராக்கும் அது, அம்புட்டு, இம்புட்டு எல்லாம் சென்னைக்குச் சொந்தம்னு சொந்தம் கொண்டாடிண்டு!
அதெல்லாம் மதுரைத் தமிழாக்கும். எங்க ஊருங்கோ. அம்மூரு, விடுவோமா!
கோந்தாய்.....நந்ந்நா இருக்கு...கேட்டெயா! ஒரு ஸங்ஙதி சொல்றேன்.... நான் இந்த பாஷயிலெ க்கேமனாக்கும்!
பாண்டிக்காறா ஒரு ஜோக்கு சொல்லி நம்மெ களியாக்குவா...தெரீமோ?
ஒரு பஸ் ஸ்டான்டிலெ ஒரு நம்மடவா ஆம்டையான் பொண்டாட்டியும், ஒரு தஞ்சாவூர் ஆம்டையான் பொண்டாட்டியும் பஸ்ஸுக்காக நிந்நுண்ட்ரிந்தா ....ஆளுக்கொரு கொழந்தய வெச்சுண்டு. தஞ்சாவூர் கொழெந்தெ அழ ஆரம்பிச்சுது. ஆம்டையான் ‘அடியே...அழறது..பாரு....எடுத்துவிடு!’ந்நானாம்..
அஞ்சு நிமிஷத்துக்கப்றம் நம்டவா கொழந்தெ அழறது. நம்ப வெங்கிடி ஒடனே சத்தம் போட்டு, ‘அடியே.....பாகீஈரதீ.....கொழந்தை அழறது பாரு.....மொலை குடுக்கலியா.... மொலை குடூ!’ என்று பஸ் ஸ்டாண்ட் ஸ்பீக்கருக்கு மேலெ கத்தினானானாம்!
தாத்பர்யம் என்னந்நா பாலக்காட்டுக்காறாளுக்கு அத்தறை ‘இங்கிதம்’ போராதாம்....கேட்டுக்கோ~”
Post a Comment